Thursday, February 28, 2013

தமிழ் வளர்ச்சித் துறைக்காக உருவாக்கப்பட்ட 

www.tamilvalarchithurai.org 

என்ற புதிய வலைத்தளத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் தமிழ் வளர்ச்சித் துறைக்கென தனி வலைத்தளம் இல்லாத குறையினைப் போக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறைக்கென புதிய வலைத்தளம் உருவாக்கிட ஆணையிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் 2012-2013ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையில், தமிழ் வளர்ச்சித் துறைக்கென 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தனியாக ஒரு வலைத்தளம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தமிழ் வளர்ச்சித் துறைக்காக உருவாக்கப்பட்ட புதிய வலைத்தளத்தை தமிழக முதல்வர் இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.  

இந்த வலைத்தளத்தில், 

தமிழ் வளர்ச்சித் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கப் பணிகள், 

தமிழ் வளர்ச்சி தொடர்பான திட்டங்கள், நாட்டுடைமை ஆக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள் விவரம், 

ஆட்சிச் சொல்லகராதி, 

தமிழ் வளர்ச்சித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு, 

தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் விருதுகள் 

மற்றும் அவற்றைப் பெற்ற தமிழறிஞர்கள் விவரம் 

உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் 

அனைவரும் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இடம்பெற்றுள்ளன. 

மேலும், தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் சிறந்த நூலுக்கான பரிசு, 

நூல் வெளியிட நிதியுதவி, 

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி, 

தமிழறிஞர்களுக்கு நிதி உதவி போன்ற திட்டங்களுக்கான விண்ணப்பப் 

படிவங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் 

இந்த வலைத்தளத்தில்ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புுகி :-

    தமிழ் வளர்ச்சி இயக்ககம்
    தமிழ் வளர்ச்சி வளாகம். முதல் தளம்,
    ஆல்சு சாலை, எழும்பூர், சென்னை – 600008 

( எழும்பூர் ுழந்தைகள் மத்ைக்கு அடத் கட்டிடம் )
    
    info@tamilvalarchithurai.org
    
     044 28190412 / 13        

ன்றி:- ினி  , 21-02-2013                                                      

தமிழ் வளர்ச்சித் துறைக்கான இணையதளம் துவக்கம் !

கல்வி, தொழில்நுட்பத்தில் சாதனை: வெளிநாடுவாழ் இந்தியருக்கு ரூ.5.4 கோடி பரிசு

குடிசைப் பகுதிவாழ் குழந்தைகள் சுயமாகக் கணினி கல்வி கற்கும் புதுமையான முறை மூலம் புகழ்பெற்ற வெளிநாடுவாழ் இந்தியருக்கு ரூ.5.4 கோடி மதிப்பிலான டி.இ.டி. விருது வழங்கப்பட்டுள்ளது.
 !

டி.இ.டி. ஒருலாபநோக்கமற்ற அமைப்பு ஆகும். உலகம் முழுவதும் தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, வடிவமைப்பு (டி.இ.டி.) ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் வல்லுநர்களை ஒருங்கிணைக்கும் வகையில் ஆண்டுதோறும் கருத்தரங்கம் நடத்தி வருகிறது. இத்துறை சார்ந்த புதுமையான கருத்தாக்கங்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான டி.இ.டி. விருது வெளிநாடுவாழ் இந்தியரும் சிறந்த கல்வியாளருமான டாக்டர் சுகதா மித்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர், இங்கிலாந்தில் உள்ள நியூகேஸ்டில் பல்கலைக்கழகத்தில் கல்வி தொழில்நுட்பப் பிரிவு பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்த விருதைப் பெற்றுக் கொண்ட பின்னர் மித்ரா கூறியது:

எனக்குக் கிடைத்த இந்த பரிசுத் தொகையை, பள்ளிகள் மற்றும் குடும்பத்தினருக்குத் தாமாகவே கல்வி கற்கக்கூடிய சாதனங்களை உலகம் முழுவதும் அறிமுகம் செய்வதற்காகப் பயன்படுத்துவேன். இதன்மூலம் தாமாகக் கல்வி கற்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதுதான் என் குறிக்கோள். உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் தனித்திறமையை வெளிக் கொண்டுவந்து, அவற்றை ஒருங்கிணைக்க உதவுவதன் மூலம், எதிர்காலத்துக்கான சிறந்த கல்வி முறையை வடிவமைக்க உதவ வேண்டும் என்பதுதான் என் விருப்பம் என்றார் மித்ரா.

சுவரில் ஓட்டை: கடந்த 1999ஆம் ஆண்டு "சுவரில் ஓட்டை' என்ற புதிய கருத்தாக்கத்தை மித்ரா உருவாக்கினார். இதன்படி, தில்லியில் குடிசைப் பகுதிக்கு அருகே உள்ள தனது ஆராய்ச்சி மையத்தில் உள்ள ஒரு அறையின் சுவரில் ஓட்டை போட்டு அதில் ஒரு கணினியை மாட்டி வைத்தார். அதை அப்பகுதி குடிசைவாழ் குழந்தைகள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தார்.  எந்தவித கணினி அறிவும், ஆங்கில மொழி அறிவும் இல்லாத குழந்தைகளும் தாங்களாகவே கணினியை இயக்க கற்றுக் கொள்ளும் வகையில் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, டி.இ.டி. அமைப்பின் இயக்குநர் லாரா ஸôடெய்ன் கூறுகையில், ""குழந்தைகள் சுயமாக கற்றுக் கொள்வதற்கான சுகதா ஆராய்ச்சி மிகவும் பாராட்டுக்குரியது. அவரது முயற்சி உலகம் முழுவதும் பரவ ஆதரவு அளிப்போம்'' என்றார்.

நன்றி :- தினமணி, 28-02-2013

"சுவரில் ஓட்டை' குடிசைப் பகுதிவாழ்க் குழந்தைகள் சுயமாக கணினி கல்வி கற்கும் புதுமையான முறை ! இந்தியருக்கு 5.4 கோடி விருது !

Wednesday, February 27, 2013

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி 28-வது நாளாக காந்தியவாதி சசிபெருமாள் உண்ணாவிரதம்

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, சென்னை மயிலாப்பூரில், உண்ணாவிரதம் இருந்து வரும் சசிபெருமாளை நேரில் சந்தித்துப் போராட்டத்தைக் கைவிடக் கோருகிறார்  நடிகர் சிவகுமார்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி காந்தியவாதியான சசிபெருமாள் 28-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

மதுவின் கொடுமைகளில் இருந்து இளைஞர்களைக் காப்பாற்றத் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சேலத்தைச் சேர்ந்த காந்தியவாதியான சசிபெருமாள் மகாத்மா காந்தியின் நினைவு நாளான ( சர்வோதய நாள் ) கடந்த ஜனவரி 30-ம் தேதி மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

உண்ணாவிரதம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாகக் கூறி அவரை கைது செய்த போலீஸார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சிறையிலும் உண்ணாவிரதத்துடன் மௌன விரதத்தையும் தொடர்ந்த அவரது உடல்நிலை மோசமானது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 19-ம் தேதி ராயப்பேட்டை அரசு பொதுமருத்துவமனையில் அனுமதித்தனர்.

காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் ஆகியோர் மருத்துவமனையில் அவரைச் சந்தித்து போராட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் உடல் நலம் கருதி உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.

ஆனாலும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்த சசிபெருமாள் பிப்ரவரி 23-ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அங்கிருந்து மீண்டும் மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே உண்ணாவிரத்தைத் தொடர்ந்தார்.

அங்கிருந்த அவரை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து 25-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர், மயிலாப்பூரில் உள்ள தியாகி நெல்லை ஜெபமணியின் இல்லத்தில் 28-வது நாளாக செவ்வாய்க்கிழமையும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகிறார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், நடிகர் சிவகுமார் ஆகியோர் சசிபெருமாளை செவ்வாய்க்கிழமைச் சந்தித்து ஆதரவு தெரிவித்ததுடன், உடல் நலம் கருதி உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறும் கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், சசிபெருமாளுக்கு ஏதாவது நேர்ந்தால் தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். உடல் நலம் கருதி அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்றார்.

இல. கணேசன்: பூரண மதுவிலக்கு வேண்டும் என்ற மிக முக்கியமான கோரிக்கைக்காக 28-வது நாளாக உண்ணாவிரதம் இருந்துவரும் சசிபெருமாளுக்கு நேரில் ஆதரவு தெரிவித்தேன். உடல் நலம் கருதி அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும். தமிழக அரசு அவரது கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தனது கோரிக்கையைக் கடிதம் மூலம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சசிபெருமாள் அனுப்பியுள்ளார்.

நடிகர் சிவகுமார்: பூரண மதுவிலக்கு சாத்தியமல்ல என அரசியல்வாதிகள் கூறுவதை ஏற்க முடியாது. சசிபெருமாளைச் சந்தித்து ஆறுதல் கூறினேன்.

உண்ணாவிரதத்துடன் அவர் மௌன விரதமும் இருப்பதால் அவரிடம் மேற்கொண்டு எதையும் பேச முடியவில்லை. உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு அவரிடம் கேட்டுக்கொண்டேன்.

சசிபெருமாள் சார்பில் நான் கூற விரும்புவது ஒரே விஷயம்தான். இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

குறிப்பாகத் தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் இழுத்து மூட 

வேண்டும் என்றார்.  

நன்றி :-தினமணி, 27-02-2013                                                

காந்தியவாதி சசிபெருமாள் பூரண மதுவிலக்குக்கோரி 28-வது நாள் உண்ணாவிரதம் !

ஆசாரக்கோவை ஓர் அறிமுகம் ! ( புதியவர்களுக்கு )

ஆசாரக்கோவை என்பதற்கு நன்னடைத்தகளின் தொகுப்பு என்பது பொருள். அச்சமே கீழ்களது ஆசாரம் என்பார் திருவள்ளுவர் ( 1073 ) இந்நூலின் முதல் பதிப்பாசிரியர், திருமணம் செல்வ கேசவராய முதலியார் ஆவார். இந்நூலில் உள்ளவற்றில் பெரும்பாலானவை சமஸ்கிருத சுக்கர ஸ்மிருதி-யில் இருந்து தொகுக்கப்பட்டவையாக அவர் எடுத்துக் கூறுகிறார். இந்நூலில், வேறுபல சமஸ்கிருத நூல்களிலிருந்தும் பல செய்திகள் எடுத்தாளப்பட்டுள்ளன என்று பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை கூறுகிறார்.

இயற்றியவர் பெருவாயின் முள்ளியார். முள்ளியார் என்பது இவரது இயற்பெயர். இவருடைய ஊர் கயத்தூர் என்பது பாயிர அடிகளால் அறியப் பெறுகிறது. இவரது ஊர், புதுக்கோட்டை, நாட்டுக் குளத்தூர் வட்டத்தில் உள்ள பெருவாயில் என்று தமிழறிஞர், தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் கூறுவார்.

இந்நூலில் இயல், அதிகாரம் போன்ற எப்பகுப்பும் இல்லை. சிறப்புப் பாயிரம் நீங்கலாக நூறு பாடல்கள் உள்ளன. இந்நூலுள் ஈரடி, மூவடி, நான்கடி, ஐந்தடி வெண்பாக்கள் விரவி உள்ளன. மிகுதியாக மூவடி வெண்பாக்கள் இடம்பெற்றுள்ளன.இந்நூலின் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி.

சைவ சமயத்தைச் சார்ந்த இந்நூல், அந்தணரையே பல இடங்களில் முன்னிருத்துகின்றது. இவ்வளவு தகவல்களையும் நமக்கு எடுத்துச் சொல்பவர், தமிழறிஞர், க.ப.அறவாணன். ஆசாரக்கோவையின் 65-வது பாடலில் இடம்பெறும், “ ஐம்புலனும் தாங்கற்கு அரிது “ என்பதையே இந்நூலின் குறிக்கோளாகவும் சுட்டுகின்றார். இவர்,

புதிய பார்வையில் பதினெண் கீழ்க்கணக்கு என்னும் தலைப்பில் அனைத்து நூல்களையும் வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு நூலுக்கும்

 கருத்தடைவு,

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுக்கு முழுமையாக ஆராய்ச்சி முன்னுரை,

ஆறு அக நூல்களுக்கும் தனித்தனியே இணைக்கப்பெற்ற ஆராய்ச்சி முன்னுரை,

ஒவ்வொரு பாடலிலும் கருத்தை உள்வாங்கி எழுதப்பெற்றுள்ள தெளிவுரையும், சிறப்புரையும், சில செய்யுளுள்களுக்கு மேற்கோள் விளக்கமும்,

 பாடல்தோறும் பொருத்தமாக முகப்பில் வழங்கப்பெற்றுள்ள தலைப்புகள்

என்பனவற்றைக் கொண்டு முற்றிலும் புதிய முயற்சி என்பதையும், 

தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தோர் புலவர்களின் துணையின்றியே புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான தமிழில் எழுதப்பட்டுள்ளது என்பதையும்  படிப்போர் எல்லோரும் ஏற்றுக்கொள்வர்...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் படித்துப் பயன்பெற விழைவோர் அணுக வேண்டிய முகவரி:-

தமிழ்க் கோட்டம்
2,முனிரத்தினம் தெரு,
அய்யாவு குடியிருப்பு,
அமைந்தகரை,
சென்னை- 600 020

ஆசாரக்கோவை
108 பக்கங்கள்
விலை ரூ.50/-

 ஆசாரக்கோவை-96

நந்து எறும்பு, தூக்கணம்புள், காக்கை, என்று இவைபோல
தம் கருமம் நல்ல கடைப்பிடித்து, தம் கருமம்
அப் பெற்றியாக முயல்பவர்க்கு ஆசாரம்
எப் பெற்றியானும் படும்.
                                      
               சுறு சுறுப்புடைய எறும்பு,

          தூக்கணங் குருவி,

          காக்கை

 ஆகியவற்றைப்போல, தம் கருமமே கண்ணாக இருந்து, தம் கருமம்

 வெற்றி அடைய அயராது முயல்பவர்க்கு ஒழுக்கம் எந்த நிலையிலும்

செழிக்கும்.

கருத்துரை :- உணவு சேர்த்தலில் எறும்பாகவும், இருப்பிடம்

கட்டிக்கொள்வதில் தூக்கணங்குருவியாகவும், உறவினருடன் பகிர்ந்து

அழைத்து உண்ணுதலில் காக்கை ஆகவும் இருத்தல் வேண்டும்.

எறும்பு , தூக்கணங்குருவி, காக்கை -ஆசாரக்கோவை

Tuesday, February 26, 2013

அதிகம் பேசினால் அமைதியை இழப்போம்!

ஆணவமாகப் பேசினால் அன்பை இழப்போம்!

வேகமாய்ப் பேசினால் அர்த்தத்தை இழப்போம்!

கோபமாய்ப் பேசினால் குணத்தை இழப்போம்!

வீணாகப் பேசினால் வேலையை இழப்போம்!

வெகுநேரம் பேசினால் நட்பை இழப்போம்!

நம்மை நாமே,

பெருமையாய்ப் பேசினால் புகழை இழப்போம்!

                              -  சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்

மெளனமே பேரின்பம் !

அதிகம் பேசினால் அமைதியை இழப்போம்!

ஆணவமாகப் பேசினால் அன்பை இழப்போம்!

வேகமாய்ப் பேசினால் அர்த்தத்தை இழப்போம்!

கோபமாய்ப் பேசினால் குணத்தை இழப்போம்!

வீணாகப் பேசினால் வேலையை இழப்போம்!

வெகுநேரம் பேசினால் நட்பை இழப்போம்!

நம்மை நாமே,

பெருமையாய்ப் பேசினால் புகழை இழப்போம்!

                              -  சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்
நெய்வேலியில் அமைக்கப்பட்டுள்ள ஜம்புலிங்க முதலியார் சிலையை திறந்துவைத்து மாலை அணிவிக்கிறார் என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகன்
.
என்எல்சி நிறுவனம் உருவாகக் கருவியாக இருந்த ஜம்புலிங்க முதலியாருக்கு  நெய்வேலி நகரில் இரட்டைப் பாலத்தில் முழுவுருவச் சிலை அமைக்கப்பட்டு, அதை என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகன் திங்கள்கிழமை திறந்துவைத்தார்.

அன்றையத் தென்னாற்காடு ஜில்லா கடலூர்- பண்ருட்டி நெடுஞ்சாலையில் உள்ள திருகண்டேஸ்வரம் கிராமத்தில் 1890-ல் பிறந்த ஜம்புலிங்க முதலியார், பெரும் நிலக்கிழாராக திகழ்ந்தவர்.

1934-ஆம் ஆண்டு தனக்குச் சொந்தமான நிலத்தில் ஆழ்துளைக் கிணறு தோண்டும்போது கருப்பு நிற திரவப் பொருள் தண்ணீரோடு கலந்து வருவதைக் கண்டறிந்தார்.

பின்னர் அதை அப்போதைய ஆங்கில அரசின் நிலயியல் துறைக்கு அனுப்பிவைத்ததைத் தொடர்ந்து, அவர்கள் முதலியாரின் நிலத்தடியில் பழுப்பு நிலக்கரி இருப்பதை உறுதி செய்தனர்.

பின்னர் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட்டபோது முதலியார் தனக்குச் சொந்தமான 600 ஏக்கர் நிலத்தை நிறுவனத்துக்குத் தானமாக வழங்கியுள்ளார்.
இதையடுத்து ஜம்புலிங்க முதலியாருக்கு முதலில் 2-ம் சுரங்க வாயிலில் சிலை அமைக்கப்பட்டது.÷ஆனால் அவை போதிய பராமரிப்பின்றி சிதைந்து போனதையடுத்து, பொதுமக்கள் அதிகம் புழங்கும் நெய்வேலி நகரினுள் இரட்டைப் பாலத்தின் மீது முழுவுருவ வெண்கல சிலையை நிறுவியது.

அச்சிலையை என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகன், இயக்குநர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரமுகர்கள் முன்னிலையில் திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஜம்புலிங்க முதலியாரின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.
விழாவில் கலந்துகொண்ட ஜம்புலிங்க முதலியாரின் மகள் வழி பேரனான அமரன் தற்போது கடலூரில் வசித்து வருகிறார். அவர் பேசுகையில் "நாங்கள் தற்போது நலிவடைந்த நிலையில் உள்ளோம். எங்கள் பிள்ளைகள் நல்ல நிலையில் படித்துள்ளனர். அவர்களுக்கு இந்நிறுவனத்தில் வேலை வேண்டும் என்று இதுவரை நாங்கள் கோரவில்லை.நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்கினால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்றார் அவர்.

இதுகுறித்து நிறுவனத் தலைவர் பி.சுரேந்திரமோகனிடம் கேட்டபோது, "அவர்கள் மனு கொடுத்தால் பரிசீலித்துத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.என்றார் .                                                                                                      
நன்றி :- தினமணி,  26-02-2013  

 ஒன்பது லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ஜம்புலிங்க முதலியாரின் முழுஉருவச் சிலையையும், வட்டம் 22ல் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில், 20 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள நவரத்னா பூங்காவையும், என்.எல்.சி., சேர்மன் சுரேந்தர் மோகன் திறந்து வைத்தார்.

நவரத்னா பூங்காவில் 54 வகை அரிய வகை மூலிகைகள் அடங்கிய மூலிகைப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், 54 வகை அறிவியல் உபகரணங்கள் அடங்கிய அறிவியல் பூங்காவும் விரைவில் திறக்கப்படஉள்ளது.
                                                                                               
நன்றி :- தினமலர்,  26-02-2013                                                                                                    

நெய்வேலிச் சுரங்கத்திற்கு 600 ஏக்கர் நிலம் கொடுத்தவருக்கு வெண்கலச்சிலை !

Sunday, February 24, 2013

கவிராஜ பண்டிதரான ஜெகவீர பாண்டியனார் கி.பி.20-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகச்சிறந்த புலவர். இவர் இயற்றிய நூல்களுள் எல்லாம் மகுடம் வைத்தாற்போல் அமைந்தது "திருக்குறள் குமரேச வெண்பா' என்ற நூல்.

இது ஒவ்வொரு திருக்குறளுக்கும் ஒவ்வொரு வெண்பாவாக இயற்றப்பட்டுள்ளது. இந்நூல் ஜெகவீர பாண்டியனாரின் 14 ஆண்டு கால உழைப்பில் உருவானதாகக் கூறுவர்.

÷ஒவ்வொரு வெண்பாப் பாடலிலும் தாம் வழிபடும் முருகப்பெருமானை விளித்து, வினா ஒன்று தொடுத்து, அதற்குத் தாமே விடையும் தந்துள்ளார். வெண்பாவில் முதல் இரண்டு அடிகளில் ஒரு கதையைக் கூறி, அடுத்த இரண்டு அடிகளில் திருக்குறளை அமைத்திருக்கிறார்.

பல இலக்கியங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மேற்கோள் பாடல்களை எடுத்துப் பொருத்திக் காட்டியுள்ளார். ஒவ்வொரு வெண்பாவுக்கும் உரை விளக்கம், கதை, மேற்கோள் எனச் சொல்லிவிட்டு இறுதியில், கூறப்பட்ட குறளுக்கு ஒப்பாக வேறொரு குறளைத் தானே இயற்றியுள்ளார். அறத்துப்பாலில் (வான்சிறப்பு) ஒரு வெண்பாவைக் காண்போம்:

""உண்டிதரு நீரே உணவாக சீதை பண்டு

கொண்டிருந்தாள் என்னே குமரேசா! உண்டிதனை

துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை'' 

"குமரேசா! நீரையே உணவாகக் கொண்டு சீதை ஏன் முன்பு உறைந்திருந்தாள் எனின், துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை என்க. உண்பார்க்கு நல்ல உணவுகளை உணவாக்கி, உதவி அவற்றை உண்ணுங்கால் தானும் உணவாய் உள்ளது மழையே என்பதாகும். உண்ணும் உணவாலும், பருகும் நீராலும் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த இருவகைப் பயன்களுக்கும் மூலகாரணமாய் உள்ளது மழையே ஆதலால், அதன் விழுமிய மகிமை விழி தெரிய விளக்கியது. உயிர்களும் பயிர்களும் வாழ அது அருள்கிறது' - இவ்வாறு பொருள் தரும் பாண்டியனார், வெண்பாவின் முதலடியில் சீதையைப் பற்றிய கதையைக் கூறியுள்ளார்.

அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதை உணவும் உறக்கமுமின்றி தன் கணவனையே நினைந்து வாடுகிறாள். தன் உயிரைக் காக்கும் பொருட்டு அங்கே இருந்த தண்ணீர் தடாகத்துக்குச் சென்று சில சமயம் நீர் பருகி வருகிறாள்.

""தீர்விலேன் இது ஒரு பகலும் சிலை

வீரன் மேனியை மானும் இவ்வீங்குநீர்

நார நண்மலர்ப் பொய்கையை நண்ணுவேன்

சோரும் ஆருயிர் காக்கும் துணிவினால்''

(இராம; சூளா-25) 

என்பது இராமாயணம். ""அனும, இந்த இடத்தைவிட்டு நான் எங்கும் செல்வதில்லை. எனது பிராண நாயகனை மீண்டும் காணலாம் என்னும் ஆசையால் அதோ அந்த மலர்ப் பொய்கைக்குச் சென்று சிறிது நீர் அருந்தி சாகாமல் இருந்து வருகிறேன்'' என மொழிந்துள்ளமையால், சீதை உயிர் வாழ்ந்துள்ள நிலையைத் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. "நீர் உணவாகவும் இருந்து காக்கும் என்பதை உலகம் காண இக்குலமகள் நலமா உணர்த்தி நின்றாள்' என்கிறார் பாண்டியனார். அதுமட்டுமல்ல, "துப்பார்க்கு' என்ற குறளுக்கு ஒப்பான ஒரு குறளை இந்த வெண்பாவின் இறுதியில்,

""எங்கும் இறையருள்போல் எல்லாமுமாய் நின்றுமழை

தங்குமுயிர் இன்பமுறத் தான்''  

எனப் படைத்திருக்கிறார்.                                                                                                  

நன்றி :- தமிழ்மணி, தினமணி, 24-02-2013

"திருக்குறள்" குமரேச வெண்பா! -இளவேலங்கால் க.நல்லையா .

பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா, உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு, ஜாதிச் சான்றிதழ்களைப் பெற இனி அலைய வேண்டாம்.

ஒவ்வொரு வாரமும் வருவாய்த் துறை அலுவலர்கள் உங்கள் வீடு தேடி வர உள்ளனர். இதற்கான புதிய திட்டம் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 24) தொடங்கப்படவுள்ளது. இந்த புதிய திட்டத்தை ஈரோடு மாவட்டம் வின்னப்பள்ளி கிராமத்தில் வருவாய்த் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் தொடங்கி வைக்கிறார்.

AMMA (Assured Maximum Service to Marginal People in All Villages)  

என புதிய திட்டத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் 65-வது பிறந்தநாளை ஒட்டி, புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

என்னென்ன சேவைகள்?

அரசின் பல்வேறு சேவைகள் மற்றும் சான்றிதழ்களைப் பெறுவதற்குப் பொது மக்கள் தாலுகா அலுவலகங்களுக்கு பலமுறை வந்து மனுக்களை அளித்து வருகின்றனர். தாசில்தார்கள் பலர் வெளி அலுவல் காரணமாகச் சென்று விடுவதால், அவர்களை பொது மக்கள் சந்தித்து முறையீடு செய்வது சிரமமாக உள்ளது.

மேலும் வயதானவர்கள், ஏழைகள், தாலுகா அலுவலகத்துக்கு வந்து செல்வதும் சிரமமாக உள்ளது. வருவாய்த் துறையின் புதிய திட்டப்படி, வாரத்தில் ஒருநாள் குறிப்பிட்ட ஊராட்சியில் வருவாய்த் துறை சார்பில் அதிகாரிகளும், அலுவலர்களும் முகாமிடுவார்கள்.

அங்கு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், வீட்டு மனைப் பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு, ஜாதிச் சான்றிதழ்கள் ஆகியவற்றை முகாமின்போது சம்பந்தப்பட்ட ஊராட்சியிலேயே ஆய்வு செய்து உடனடியாக வழங்க வழி செய்யப்படும்.

இவைதவிர ரேஷன் அட்டை, குடிநீர் பிரச்னைகள், நிலம் தொடர்பான பிரச்னைகளும் நேரில் ஆய்வு செய்யப்பட்டு தீர்வு காணப்படும் என வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்அறிவித்துள்ளார்.

நன்றி :- தினமணி, 24-02-2013                               

கிராமங்களில் வீடு தேடி வரும் வருவாய்த் துறை

Saturday, February 23, 2013

வருக! வருக!! அனைவரும் வருக!! (உரத்த‍ சிந்தனை 29ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ்)

உரத்த‍ சிந்தனை 29ஆம் ஆண்டு விழா

24-02-2013 ஞாயிறு அன்று மாலை 5.40 மணிக்கு,
சென்னை – 600 033, மேற்கு மாம்பலம், எல்லை அம்ம‍ன் கோயில் தெரு, கதவு எண்.34-ல் அமைந்துள்ள‍ சந்திரசேகர் கல்யாண மண்டபத்தில்
சிறப்புற நடைபெற இருப்ப‍தால், தாங்களும் தங்களது சுற்ற‍மும் நட்பும் சூழ வருகை தந்து விழா சிறக்க, முழு ஒத்துழைப்பு வழங்குமாறு, உரத்த சிந்தனை (மாத இதழ்) மற்றும் விதை2விருட்சம் (இணையம்) சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
இந்த விழாவில்

திரைப்பட இயக்குநர் கலைமாமணி கே. பாக்யராஜ்,

பத்மஸ்ரீ கவிப்பேரர‍சு வைரமுத்து (திரைப்பட பாடலாசரியர்),

திருப்பூர் கிருஷ்ணன் (அமுத சுரபி இதழின் ஆசிரியர்),

வெற்றிவித்தகர் டாக்டர் ஜி.வி.ராவ்,

கவிமாமணி இளையன்

போன்ற பிரபலங்கள் வருகை தந்து, சிறப்பிக்க‍ உள்ள‍னர்.
மேலும் சென்னை, தேனி, ஹதராபாத், மதுரை, கோவை, திருச்சி, திருவண்ணாமலை மற்றும் மாவட்ட‍ங்களிலிருந்து பிரபலங்கள் மற்றும் உரத்த‍ சிந்தனை மற்றும் விதை2விருட்சம்-ன் வாசகர்கள்  அனைவரும் விழாவில் இணைய இருக்கிறார்கள்.
உரத்த‍ சிந்தனை 29ஆம் ஆண்டு விழாவிற்கு உங்களை அன்போடு அழைக்கின்றோம். விழாவின் அழைப்பிதழ் கீழே பிரசுரித்துள்ளோம்.
வருக வருக, விழாவினை சிறப்பித்து தருக‌!
29yr Inv pg 01
29yr Inv pg 02
29yr Inv pg 0329yr Inv pg 04

மேலும் விவரங்களுக்கு

9444011105 / 9884728812 / 9445089592 / 9884193081

இப்படிக்கு
தங்கள் வருகையை எதிர்நோக்கும்

உரத்த சிந்தனை & விதை2விருட்சம்

உரத்த‍ சிந்தனை 29ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ் !

மக்களவையில் வெள்ளிக்கிழமை எழுத்துமூலமாக அளித்த பதிலில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் கூறியது:

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ரூ. 6,799 கோடி கருப்புப் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். 2011-12-ம் நிதிஆண்டில் ரூ. 14,017 கோடி தொகை கைப்பற்றப்பட்டது. கணக்கில் காட்டப்படாத இந்த கருப்புப் பணத்தை சம்பந்தப்பட்ட நபர்கள் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

இது தவிர, கணக்கில் காட்டப்படாத ரூ. 453.53 கோடி சொத்துகளும் மீட்கப்பட்டுள்ளன.

மறைமுக வரி ரூ. 3.75 லட்சம் கோடி:

நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் ரூ. 3.75 லட்சம் கோடி மறைமுக வரியாக வசூலாகியுள்ளது என்று அமைச்சர் பழனி மாணிக்கம் தெரிவித்தார். இது நடப்பு ஆண்டு இலக்கில் 74 சதவீதமாகும். இதில் உற்பத்தி வரி ரூ. 1,38,654 கோடி, சுங்க வரி ரூ. 1,34,802 கோடி, சேவை வரி ரூ. 1,02 322 கோடியும் வசூலாகியுள்ளது. வரும் நிதிஆண்டில் ரூ. 5.05 லட்சம் கோடி மறைமுக வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

வங்கிகளில் உரிமை கோராத தொகை ரூ. 2,481 கோடி:

நாட்டில் உள்ள வங்கிகளில் 2011 டிசம்பர் வரையிலான நிலவரப்படி மொத்தம் ரூ. 2,481.40 கோடி உரிமை கோராமல் உள்ளது. மொத்தம் 1.12 கோடி வங்கிக் கணக்குகள் செயல்படுத்தப்படாமல் உள்ளன என்று நமோ நாராயண் மீனா கூறினார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுத்தப்படாத வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்களைக் கண்டுபிடித்து அதைச் செயல்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வங்கி மோசடி ரூ. 52.66 கோடி:

நடப்பு நிதி ஆண்டில் வங்கிகளில் நிகழும் மோசடிகளின் அளவு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 43 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் ரூ. 52.66 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு இத்தொகை ரூ. 36.72 கோடியாக இருந்ததாக அமைச்சர் தெரிவித்தார். தொகை அதிகமாக இருந்தபோதிலும் வழக்குகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைக் காட்டிலும் குறைவாக அதாவது 8,322 வழக்குகள் பதிவானதாக அவர் குறிப்பிட்டார்.

வாராக் கடன் வசூல் அதிகரிப்பு:

வங்கிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் வாராக்கடன் வசூல் கணிசமாக அதிகரித்துள்ளது. மொத்தம் ரூ. 1,84,193 கோடி வசூலாகியுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். 2010-ல் ரூ. 9,726 கோடி, 2011-ல் ரூ. 13,940 கோடி, 2012-ல் ரூ. 17,043 கோடி, செப்டம்பர் வரையான காலத்தில் ரூ. 10,815 கோடி வசூலாகியுள்ளது.

உரிமம் பெறாத சுரங்கங்களுக்கு ரூ. 622 கோடி அபராதம்:

உரிமம் பெறாமல் செயல்பட்ட சுரங்கங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம் மாநிலங்களுக்கு ரூ. 622 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய சுரங்கத்துறை அமைச்சர் தீன்ஷா படேல் தெரிவித்தார். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலம் ரூ. 131.43 கோடியும், ஆந்திரம் ரூ. 93.04 கோடியும், மத்திய பிரதேசம் ரூ. 85.10 கோடியும், தமிழகம் ரூ. 65.73 கோடியும், கர்நாடகம் 52.23 கோடியும் பெற்றுள்ளன. மொத்தம் 25,519 சுரங்கங்கள் முறைகேடாக நடைபெற்றதும் கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 2011-12-ம் ஆண்டில் மொத்தம் 94,599 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

நால்கோ, எம்எம்டிசி பங்கு விற்பனை:

நடப்பு நிதி ஆண்டில் மத்திய அரசு நிறுவனங்களானநால்கோ, செயில், எம்எம்டிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக அமைச்சர் பழனி மாணிக்கம் தெரிவித்தார்.

நால்கோவில் 12.15 சதவீதப் பங்குகளையும், 

எம்எம்டிசியில் 9.33 சதவீத பங்குகளையும், 

ராஷ்ட்ரீய ரசாயனம் 

மற்றும் உரத்துறை நிறுவனத்தின் 12.59 சதவீத பங்குகளையும், 

செயில் நிறுவனத்தில் 10.82 சதவீத பங்குகளையும் 

விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும்  அவர் கூறினார்.  

நன்றி :- தினமணி, 23-02-2013

கருப்புப் பணம் ரூ. 6,799 கோடி மீட்பு !

Friday, February 22, 2013

இந்தியாவில் 2005-ம் ஆண்டிலிருந்து 2012-ம் ஆண்டு வரை 24 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் சுமார் 800-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

குண்டு வெடிப்பு விவரங்கள்:

2005: அக்டோபர் - தில்லியில் உள்ள மார்க்கெட் பகுதியில் 3 குண்டுகள் வெடித்ததில் 62 பேர் உயிரிழந்தனர்.

2006: மார்ச் - உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த இரு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 20 பேர் உயிரிழந்தனர்.

ஜூலை - மும்பையில் ரயில்களில் குண்டுகள் வெடித்ததில் குறைந்தது 200 பேர் உயிரிழந்தனர். 700-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

செப்டம்பர் - மலேகானில் நிகழ்ந்த இரு குண்டு வெடிப்பில் 30 பேர் உயிரிழந்தனர்.

2007: பிப்ரவரி - இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் செல்லும் ரயிலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 66 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.

மே - ஆந்திர மாநிலம், ஹைதராபாதில் உள்ள மெக்கா மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 11 பேர் உயிரிழந்தனர்.

ஆகஸ்ட் - ஹைதராபாதில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.

அக்டோபர் - ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் இருவர் உயிரிழந்தனர்.

2008: ஜனவரி - ராம்பூரில் சிஆர்பிஎஃப் முகாமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.

மே - ஜெய்ப்பூரில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் 68 பேர் கொல்லப்பட்டனர்.

ஜூலை - பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார்.

ஜூலை - ஆமதாபாதில் இரண்டு மணி நேரத்தில் தொடர்ச்சியாக 20 குண்டுகள் வெடித்ததில் 57 பேர் உயிரிழந்தனர்.

செப்டம்பர் - தில்லியில் 6 குண்டுகள் வெடித்ததில் 26 பேர் உயிரிழந்தனர்.

செப்டம்பர் - தில்லியில் மார்க்கெட் பகுதியில் குண்டுகள் வீசப்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.

செப்டம்பர் - குஜராத் மாநிலத்தில் மசூதி அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார்.

செப்டம்பர் - மகாராஷ்டிரத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

அக்டோபர் - இம்பாலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

அக்டோபர் - அசாமில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 77 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

நவம்பர் - மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர்.

2010: பிப்ரவரி - புணேயில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 17 பேர் உயிரிழந்தனர்.

டிசம்பர் - வாராணசியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 2 வயது குழந்தை உயிரிழந்தது. 25 பேர் காயமடைந்தனர்.

2011: ஜூலை - மும்பையில் 3 இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 26 பேர் உயிரிழந்தனர். 130-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

செப்டம்பர் - தில்லியில் உள்ள உயர் நீதிமன்றத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். 24 பேர் காயமடைந்தனர்.

2012: ஆகஸ்ட் - புணேயில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஒருவர் காயமடைந்தார்.                                                                                                                                  
நன்றி :- தினமணி, 22-02-2013                                                                                                                              

2005 முதல் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் !

திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி, சென்னையில் மார்ச் 17-ஆம் தேதி கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை உலகத் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து தஞ்சாவூர், தமிழ்த் தாய் அறக்கட்டளை நடத்துகிறது.

மாநாடு தொடர்பாக திருக்குறள் தேசிய நூல் ஆய்வுக் கருத்தரங்க சிறப்புத் தலைவர் மா. கோமுகிமணியன், கருத்தரங்கத் தலைவர் துரை. இராசமாணிக்கம், செயலர் தா. உடையார்கோயில் குணா ஆகியோர் கூறியதாவது:

உலகப் பொதுமறையான திருக்குறளைத் தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தை வழிமொழிந்தும், தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்தும் தஞ்சாவூர், தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் மார்ச் 17-ஆம் தேதி சென்னை எழும்பூர் அருங்காட்சியக கலையரங்கில் திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தும் மாநாடும் ஆய்வுக் கருத்தரங்கும் நடத்தப்படும்.

இதற்காக தில்லி, மும்பை, ஹைதராபாத், மைசூர், புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளை இந்தப் பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக ஆதரவு திரட்டி வருகிறோம்.

இந்த மாநாட்டில் திருக்குறள் ஆய்வு நூல், கருத்தரங்க மலர் ஆகியவை வெளியிடப்படும். இந்த ஆய்வு நூலில் பல்வேறு தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்களின் கருத்துகள் இடம்பெறும்.

மாநாட்டில் பல்வேறு துணைவேந்தர்கள், தமிழறிஞர்கள், பேராசிரியர்கள் பங்கேற்கின்றனர். பல்வேறு இடங்களில் திருக்குறளைப் பரப்பும் வகையில் நடத்தப்படும் திருக்குறள் படிப்பகம், நூலகம், தவச்சாலை, திருக்குறள் மன்றங்களின் நிர்வாகிகளை மாநாட்டில் சிறப்பிக்க இருக்கிறோம்.

மாநாட்டில் வெளியிடப்பட இருக்கும் சிறப்பு மலருக்கு திருக்குறள் தொடர்பான அரிய தகவல்களைத் தந்து உதவ வேண்டுகிறோம். திருக்குறள் ஒப்பிக்கும் குழந்தைகள், திருக்குறள் நெறி பரப்புவோர் குறித்தும் மாநாட்டு மலரில் செய்திகள் வெளியிடப்பட உள்ளன.

இது தொடர்பான தகவல்களை  

thamilthaitrust@gmail.com 

என்ற மின்னஞ்சல் மூலம்    

அனுப்பலாம்.

நன்றி :- தினமணி, 22-02-2013                                                                                                                       

சென்னையில், மார்ச் 17-ல், திருக்குறள் தேசிய நூல் கோரிக்கை மாநாடு !

தங்கள் சொத்துமதிப்பில், ஒரு பகுதியை சமூகநலத் திட்டங்களுக்குச் செலவிடும் உலக மகா பணக்காரர்கள் வரிசையில், இந்தியாவின் முதல் நபராக விப்ரோ குழுமத் தலைவர் அசிம் பிரேம்ஜி இடம்பிடித்துள்ளார். அதன்படி, அமெரிக்க மெகா கோடீஸ்வரர்களான வாரன் பஃப்பெட் மற்றும் பில் கேட்ஸ் தொடங்கியுள்ள கிவிங் பிளட்ஜ் (Giving the Pledge) அமைப்பில் இணைய பிரேம்ஜி கையெழுத்திட்டுள்ளார்.

அந்த அமைப்பின் குறிக்கோளின்படி, உலகக் கோடீஸ்வரர்கள் தங்கள் சொத்து மதிப்பில் கணிசமான பகுதியை உலகம் முழுவதும் ஏழை நாடுகளில் அடிப்படைக் கல்வி, சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பணக்காரர்களைக் கொண்டு செயல்பட்டு வந்த இந்த அமைப்பை, இந்தியா மற்றும் சீனாவுக்கும் விரிவுபடுத்த வாரன் பஃப்பெட் மற்றும் பில் கேட்ஸ் முடிவு செய்தனர்.

அதில் இந்தியாவில் இருந்து முதலாவதாக, அசிம் பிரேம்ஜி Giving Pledge அமைப்பில் இணைந்துள்ளார். இந்தியாவின் 3வது மிகப் பெரிய பணக்காரரான இவர், ஏற்கனவே தனது பெயரில் அறக்கட்டளை தொடங்கி, தரமான கல்வி அளிப்பதில் ஈடுபட்டுள்ளார்.

அதற்காக விப்ரோ நிறுவனத்தில் வைத்துள்ள தனது பங்குகளில் 8.7 சதவீதத்தை நன்கொடையாக  அளித்துள்ளார்                                                                     

நன்றி :- புதிய தலைமுறை, THE ECONOMIC TIMES OF INDIA

சமூகநலத்திற்காகச் செலவிடும் பணக்காரர்கள் பட்டியலில், முதல் இந்தியர், அசிம் பிரேம்ஜி !

Thursday, February 21, 2013

அரசு சார்பில் ஆண்டுதோறும் ஆனி மூலம் நட்சத்திர தினத்தில் தொடங்கி 3 நாட்கள் சீர்காழியில் நடத்தப்படும் தமிழிசை மூவர் விழா கடந்த 3 ஆண்டுகளாகத் தடைபட்டுள்ளது. கடந்த 2010-ல் கோவை செம்மொழி மாநாடு காரணமாக இந்த விழா தடைபட்டது. 2011, 2012-களில் காரணம் ஏதும் குறிப்பிடப்படாமலேயே விழா கைவிடப்பட்டது.

தமிழிசை மூவருக்கு மணிமண்டபம் இல்லாத நிலையில், சீர்காழி சட்டநாதர் கோவிலில் கொண்டாடப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாகத் தடைபட்டுள்ள தமிழிசை மூவர் விழாவை நிகழாண்டிலிருந்து, மூவர் மணிமண்டபத்தில் சிறப்பாகப் கொண்டாட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

மூவரின் பெருமைகள்

முத்துத்தாண்டவர்: தமிழகத்தின் கீர்த்தனம் - கிருதி - மரபுக்குப் பிதாமகன் எனக் குறிப்பிடப்படும் இவர் சீர்காழியில் இசைவேளாளர் மரபில் பிறந்தவர். தில்லை (சிதம்பரம்) நடராஜப் பெருமானுக்குத் தனது கீர்த்தனைகளையும், பதங்களையும் அர்ப்பணித்தவர். 80 வயதுக்கும் மேல் வாழ்ந்த இவர் இயற்றிய கீர்த்தனங்கள் பல நூறு என அறியப்பட்டாலும், இவர் பாடிய 80 கீர்த்தனங்கள் மட்டுமே தமிழிசை உலகுக்குக் கிடைத்துள்ளன.

மாரிமுத்தாப்பிள்ளை: சிதம்பரம் அருகேயுள்ள தில்லைவிடங்கன் என்ற சிற்றூரில் சைவ வேளாளர் மரபில் பிறந்தவர் இவர். தில்லை நடராஜப் பெருமான் மீது பல கீர்த்தனங்களையும், பதங்களையும் பாடியவர். 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும் புலவர்கள் வரிசையில் இடம் பெற்றவர். இவரது படைப்புகளில் குறவஞ்சி, நொண்டி நாடகம் மற்றும் சொந்த ஊரைப் பற்றிப் பாடிய பதிகங்கள் குறிப்பிடத்தக்கவை.

அருணாச்சலக் கவிராயர்: நாகை மாவட்டம், தில்லையாடியில் சைவவேளாளர் குலத்தில் பிறந்த இவர் கம்பராமாயணத்தையும், இராம சரித்திரத்தையும் கீர்த்தனையாகப் பாடியவர். இவரது கீர்த்தனைகளைப் பாடாத இசைவாணர்களே இல்லை எனக் குறிப்பிடப்படுவதன் மூலம் இவரின் பெருமையை உணரலாம்.

தமிழ் ஆர்வலர்கள் வேண்டுகோள்

மைய மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை சுமார் 250 பேர் அமர்ந்து பார்க்குமளவு இடவசதி உள்ளது. நாட்டிய நிகழ்ச்சி நடத்துவதற்கேற்ப மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒப்பனை அறை, கழிப்பறை ஆகியன அமைக்க வேண்டும். தமிழிசை மூவரின் கீர்த்தனைகளை சுவர்களில் பொறிக்க வேண்டும் என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.

சீர்காழி தமிழிசை மூவர் பேரவையின் நிர்வாகி பாலவேலாயுதம்:

தமிழிசை மூவர்களின் கீர்த்தனைகள், வாழ்க்கை வரலாறுகள் குறித்த நூல்கள் இந்த மண்டபத்தில் இடம்பெற வேண்டும். இதைப் பார்வையிடுவோருக்குத் தமிழிசை மூவர் குறித்த அனைத்து விவரங்களும் தெரியும் வகையில் ஏற்பாடு மேற்கொள்ள வேண்டும்.

திருப்பாணர் நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் அமிர்த ஜெயராமன்:

இங்கு அமைக்கப்பட்டுள்ள வெண்கலச் சிலைகள் சென்னையிலிருந்து கொண்டு வரப்பட்டன. தமிழ் மீதான ஆர்வம் மற்றும் தன்னார்வத்துடன் இந்தச் சிலைகளை மண்டபத்துக்குள் இறக்கிவைக்கும் பணியில் ஈடுபட்ட எனக்குக் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

தமிழிசை மூவரின் கீர்த்தனைகளை தினமும் இந்த மணிமண்டபத்தில் ஒலிக்கச் செய்ய வேண்டும். மூவரின் கீர்த்தனைகளையும் சுவர்களில் பதிக்க வேண்டும். இந்த மணிமண்டபம் தமிழிசை மூவரின் புகழ் பரப்பும் மையமாகச் செயல்பட வேண்டும்.

திருக்குறள் பண்பாட்டுப் பேரவை நிர்வாகி கு. ராஜாராமன்:

இந்த மணிமண்டபத்தில் இசை நிகழ்ச்சிகள் பிரதானமாக இடம்பெற வேண்டும். தமிழிசை மூவரின் வரலாறு, கீர்த்தனை புத்தகங்கள் இடம் பெற வேண்டும்.                                                                                                                                         

நன்றி :- தினமணி, 21-02-2013

நிறுத்தப்பட்ட சீர்காழி தமிழிசை மூவர் விழா தொடருமா ?

 ஒன்றுமியிருப்ைவிட  ேனும் ெரிந்திரப்பு மேல்

என்பன் அடிப்பையில், கினியில் கிடத் ல்கள்

ிர்ந்த கொள்ளப்புகின்று.ம்பத்ன்மை உறி செய்யப்பல் 

ேண்டும். 
 
http://yellowpages.sulekha.com/kidney-donor-foundation_chennai_contacts

Broad Match Kidney Donor Foundation in Chennai
Lifecell International Pvt. Ltd.
Be the first to review
Phone: 044 - 43965353
Area: Mount Road
Services: Kidney Donor Foundation
Tags: Blood, Organ & Tissue Banks in Chennai
Save to phone/email

C.P.J.M. Blood Bureau
Be the first to review
Area: Park Town

Centre For Blood Disorders
Be the first to review
Phone: 9840119052
Area: Kilpauk

Indian Red Cross Blood Bank
Be the first to review
Phone: 9840823465

Jai Gopal Garodia Janaklal Blood Bank
Be the first to review
Phone: 044 - 42046119
Area: Vadapalani

Lions Blood Bank
Be the first to review
Phone: 044 - 28415959
Area: Egmore

Doctor's Diagnostic Centre
Be the first to review
Phone: 9150244449
Area: Mylapore

S.L. Blood Test Centre
Be the first to review
Phone: 9382330340
Area: Maduravoyal

Red Cross Blood Bank
Be the first to review
Phone: 044 - 28554425

Human Welfare Trust
by 1 user
Phone: 9150003999
Area: Selaiyur

Jaigopal Garodia Janakalyan Blood Bank
Be the first to review
Phone: 9840141259

Sri Ramachandra Blood Bank
Be the first to review
Phone: 044 - 24798017
Area: Porur

Chettinad Health City
by 1 user
Phone: 044 - 47411000
Area: Kelambakkam

Apollo First Med Hospital
Be the first to review
Phone: 9710422800
Area: Kilpauk
Services: Kidney Donor Foundation, Neuro Physicians

Ratary Rajan Eye Bank
Be the first to review
Area: T. Nagar

வருமுன் காத்தலே நன்று. வந்துவிட்டால் தைரியமாய் எதிர்கொள்வதே சரி.                                                                                                                          

சென்னையில் சிறுநீரகக் கொடையாளர் அறம் தகவல்கள் :-

Wednesday, February 20, 2013

காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை கெஜட்டில் வெளியிட்டது மத்திய அரசு
 
தமிழ்ப் பயணி
   
09:40 (4 hours ago)
       
to பண்புடன், tamilpayani, தமிழ் 

டெல்லி: தமிழகம் பலகாலமாக கோரிக்கை விடுத்தும் கூட அதைக் கேட்காமல், கண்டுகொள்ளாமல் இருந்து வந்த மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டின் கடும் எச்சரிக்கை மற்றும் மிரட்டலைத் தொடர்ந்து தற்போது காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் எந்தக் காரணத்தைக் கூறியும் இனிமேல் தமிழகத்திற்குத் தண்ணீர் தர மாட்டோம் என்று கர்நாடக அரசு கூற முடியாது. எப்பாடுபட்டாவது தமிழகத்திற்குரிய தண்ணீரைக் கர்நாடகம் தந்தே தீர வேண்டும் என்ற சட்டப் பாதுகாப்பு தமிழகத்திற்குக் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைக்குள் வெளியிட கெடு விதித்த சுப்ரீம் கோர்ட் !

இன்றைக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவாகும். இந்த நிலையில் நேற்று பகல் முழுவதும் இதுதொடர்பான உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்காமல் இருந்து வந்தது. இந்தச் சூழ்நிலையில் நேற்று இரவு நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு மத்திய அரசு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து அரசிதழில் தீர்ப்பு வெளியானது.

இனி இறுதித் தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதன் அடிப்படையிலேயே கர்நாடகம், தமிழகம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் காவிரி நதி நீரைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். அவரவருக்கு உரிய நீரை கர்நாடகம் கொடுத்தே தீர வேண்டும். எந்தக் காரணத்தையும் கூறி தண்ணீரை அது மறுக்க முடியாது.

இடைக்காலத் தீர்ப்பை வைத்து ஏமாற்றிய கர்நாடகம்

தற்போது நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில்தான் தண்ணீர் கொடுத்து, அதையும் கூட முறையாகக் கொடுக்காமல் ஏமாற்றிக் கொண்டு வந்தது கர்நாடகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள, நேற்றிலிருந்து அடுத்த 90 நாட்களுக்குள் இந்த அறிவிக்கை அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசிதழில் வெளியிடும் அறிவிக்கையை மத்திய அரசு பிப்ரவரி 19ம் தேதி பிறப்பித்துள்ளது. கெஜட்டில் வெளியிடவும் அனுப்பி வைத்துள்ளது. இதை 20ம் தேதி பொதுமக்கள் பார்வையிட முடியும் என்று தெரிவித்தார்.

நேற்று காலையிலேயே அறிவிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை செயலாளர் எஸ்.கே.சர்க்கார் ஒப்புதல் அளித்து விட்டார். பிரதமரின் அனுமதியைத் தொடர்ந்து சர்க்கார் கையெழுத்திட்டார். அதன் பின்னர் அறிவிக்கையை மாலைக்கு மேல் வெளியிட்டது அரசு.

ஆணையம், கண்காணிப்புக் குழு ரத்தாகிறது

அரசு கெஜட்டில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து தற்போது நடைமுறையில் உள்ள பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையம், காவிரி கண்காணிப்புக் குழு ஆகியவை ரத்தாகி விடும். அதற்குப் பதிலாக காவிரி நிர்வாக வாரியம் மற்றும் காவிரி நதி நீர் முறைப்படுத்தும் கமிட்டி ஆகியவை உருவாக்கப்படும். இனி இவைதான் நதி நீர்ப் பங்கீட்டைக் கண்காணித்து அமல்படுத்தி வரும்.

மேலும் இனிமேல் இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட முடியாது என்றும், நதி நீர்ப் பங்கீடு தொடர்பான எந்த பிரச்சினையாக இருந்தாலும் வாரியம் மற்றும் முறைப்படுத்தும் கமிட்டி ஆகியவைதான் கவனிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2007ல் வெளியான தீர்ப்பு

நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2007ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி வெளியிடப்பட்டது. அன்று முதல் அதை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று தமிழகம் தொடர்ந்து கோரி வந்தது. ஆனால் அதை மத்திய அரசு பொருட்படுத்தவே இல்லை. தொடர்ந்து கர்நாடகத்திற்குச் சாதகமாகவே நடந்து வந்தது.

இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டின் கடுமையான  கட்டளைக்குப் பின்னரே  நடுவண் அரசு, அரசிதழில் அதை வெளியிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வருக்குக் கிடைத்த பிறந்தநாள் பரிசு !

தமிழிசை மூவருக்காக சீர்காழியில் ரூ.1.51 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மணிமண்டபத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைக்கிறார்.

தமிழிசை மூவர்களான சீர்காழி முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகியோருக்குth தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறை சார்பில் சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் ரூ.1.51 கோடியில், 250 பேர் அமரக்கூடிய மணிமண்டபம் கட்டும் பணி கடந்த 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி தொடங்கப்பட்டது.

குறித்தபடி கட்டடப் பணிகள் 2011, டிசம்பர் 24 அன்று முடிந்தாலும், உள் அலங்காரப் பணிகள் நடைபெற்று வந்ததால் மணிமண்டபம் திறப்பதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இம்மணிமண்டபத்தைத் தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையிலிருந்தவாறு காணொலி மூலம் புதன்கிழமை (பிப்ரவரி 20) காலை 10 மணி அளவில் திறந்துவைக்கவுள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியரக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நன்றி :- தினமணி, 20-02-2013

முத்துத் தாண்டவரின் 9-வது தலைமுறையச் சேர்ந்தவர், மக்கள் நினைவில் வாழும், கலைமாமணி, இசைப்பேரறிஞர், முனைவர், திருப்பாம்புரம் சோ.சண்முக சுந்தரம்.

சீர்காழி மூவர் கீர்த்தனைகளை இருதொகுதிகளாகத் தொகுத்துள்ளார். 2000-ஆம் ஆண்டில் முதல் பதிப்பு வந்தது. 2008-ல் இரண்டாம் பதிப்பாகவும் வந்துள்ளது. தமிழிசை நுணுக்கம் இரண்டாம் பதிப்பாக 2007-ல் வந்துள்ளது.

உரோகிணி பதிப்பகம், 22-வெங்கடேசா நகர் முதல் தெரு, விருகம்பாக்கம் அஞ்சல், சென்னை-600 092. 

டாக்டர் சுதா சேஷய்யன் ”சீர்காழி மூவர்” என்ற நூலை எழுதியுள்ளார். LKM PUBLICATIONS, CHENNAI-17  இந்த ஆண்டு வெளியிட்டுள்ளது.

சீர்காழி தமிழிசை மூவர் மணி மண்டபம் இன்று திறப்பு !

Tuesday, February 19, 2013

புதன், 4 ஜூலை, 2007

மூலிகைவளம் வலைப்பூ,   பெரியவர் குப்புசாமி அவர்களால்,

 2007, ஜுலை, 4, புதன்கிழமை ,அதிகாலை 2.10 மணியளவில்

துவக்கப்பட்டது. எமது பார்வைக்கு  இன்றுதான் கிடைத்தது.

நல்லதோர் வலைப்பூவை அன்பர்களோடு பகிர்ந்து கொள்வதில்

பெருமகிழ்ச்சி. தொடர்ந்து படித்துப் பயன்  பெறுக.

http://mooligaivazam-kuppusamy.blogspot.in/

மூலிகைவளம்

பழங்காலத்தில் மூதாதையர்கள் உடல் ஆரோக்கியத்தைக் காப்பாற்ற மூலிகைச் செடிகளின் இலை, வேர், காய், பழம், பட்டை, மற்றும், விதைகளைப் பயன் படுத்தினர்.

பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள், தன்வந்திரி, மூலனார், நாகர்ஜுனா, போன்றவர்கள் அறிவுத் திறனாலும் அனுபவத்தாலும் கண்ட உண்மைகளைப் பல மூலிகைகளைக் கண்டு பிடித்து ஏடுகளில் எழுதிவைத்துள்ளனர்.

சுமார் 4000 வருடங்களுக்கு முன்பே ரிக் வேதத்தில் முலிகை மருத்துவத்தைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. மற்றும் ஆயுர் வேதமருத்துவத்தில் கி.மு. 600 ல் மூலிகை குணம் தீர்க்கும் நோய்கள் பற்றி 341 மருந்துச் செடிகள் பற்றி எழுதப்பட்டுள்ளது.

தற்பொழுதும் இது நடைமுறையில் உள்ளது. நம் இந்திய நாட்டில் சுமார் 2000 முதல் 7000 வகை மூலிகைச் செடிள், மரங்கள் உள்ளன. இவற்றில் 700 முதல் 1000 வரை மூலிகைச் செடிகள் நாட்டு மருந்துகள் தயாரிப்பிலும் 100 முதல் 150 மூலிகைகள் ஆங்கில மருத்துவத்திலும் பயன் படுத்தப்படுகின்றன.

நம்மிடம் மூலிகைச் செடியிலிருந்து மூலப்பொருட்களைப் பிரித்தெடுக்க உகந்த மேம்பட்ட தொழில் நுட்பங்கள் இல்லாமையால் மூலிகை மருந்து உற்பத்தியில் நம் நாடு 15 வது இடத்தை வகிக்கின்றது. நமது நாட்டில் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல், போன்ற தட்ப வெப்ப நிலங்களில் வளரும் மூலிகைகள் உள்ளன.

அதனால்ஏற்றுமதியில்முன்னேற்றம்அடைந்துள்ளோம். மூலிகை வளம் கொழிக்கும் நம் நாட்டில் தீராத நோய்களையும் பக்க விளைவுகள் இன்றிக் குணப்படுத்தவும், பிணியின்றி வாழவும் இயற்கையான முறையில் பயிர் செய்யப்பட்ட தானியங்கள், மூலிகைகள் வாங்கி உபயோகிக்கவும், ஆங்கில மருத்துவத்தை விட மூலிகை மருத்துவப் பணச்செலவு குறைவாக இருப்பதாலும், மேலும் பக்க விளைவுகளும் இல்லை என்பதாலும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆகவே பல வகை மூலிகைகளைப்பற்றி யாவரும் அறியவும், இரகசியம் எதுவும் மறைக்காமல் வெளியிடப்படும்.

க.பொ.குப்புசாமி கோவை-641 037.

இடுகையிட்டது kuppusamy நேரம் 2:10 AM

நன்றி, பெரியவர், குப்புசாமி அவர்களே !

வெண்ணெயைக் கையில் வைத்துக் கொண்டு ...........மூலிகை வளம் !

உ. வே. சாமிநாதையர் (பெப்ரவரி 19,1855 - ஏப்ரல் 28, 1942, உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக உ.வே.சா. இவர் சிறப்பாக தமிழ் தாத்தா என அறியப்படுகிறார்.

ஒரு தமிழறிஞர். பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர்.

தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர்.

 உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி
 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும்  சேகரித்திருந்தார்.

மேலும் விபரங்களுக்கு,

நன்றி, தமிழ் விக்கி பீடியா:-

http://ta.wikipedia.org/s/bmw

”தமிழ்த் தாத்தா” -- உ. வே. சாமிநாதையர் 159- வது பிறந்த நாள் !

400 மலாலாக்கள் தயார் !
மலாலா யூசஃப்ஸாய்.

15 வயது இளம் சமூக ஆர்வலரான இவர் இப்போது இருப்பது லண்டனில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில். தாலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் மலாலா. படிப்பில் அதிக ஆர்வம் கொண்ட இஸ்லாமியச் சிறுமி. முதல் மாணவி. தனது பாக்கெட் மணியை அதிகமாகப் புத்தகங்கள் வாங்குவதில் செலவழிப்பார்.

இவர் படிக்கும் பள்ளியில் பெண் குழந்தைகள் படிக்க வரக்கூடாது என தாலிபான்கள் தடைவிதித்தனர். அவர்களின் இந்தத் தடைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் விதமாக இணையதளத்தில் ஓர் பிளாக்கைத் தொடங்கி "தாலிபான்களின் பிடியில் எனது பள்ளி வாழ்க்கை' என்ற தலைப்பில் கட்டுரை எழுதினார். இவரின் வாழ்க்கையை அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் பத்திரிகை ஆவணப்படமாக எடுத்தது. பெஷாவரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் "எனது கல்வி உரிமையில் தலையிடுவதற்கு தாலிபான்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?' என்று பேட்டியளித்தார்.

தாலிபான்களுக்கு எதிராகவும், பெண் உரிமைக்காவும், பெண் கல்விக்காகவும் குரல் கொடுத்து வந்த இவருக்குக் கொலை மிரட்டல்கள் வந்து கொண்டேயிருந்தன. சளைக்காமல் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தார் மலாலா. பொதுக்கூட்டங்களில் பேசும்போது பாரம்பரிய பழக்க
வழக்கங்களை உடைத்தெறிந்துவிட்டு, பெண் குழந்தைகளைப் படிக்க அனுப்பும்படி கூறுவார். சமூகத்திலும் மாற்றம் நிகழ்ந்தது. பல பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பினர். பல பள்ளிகளுக்கு மலாலாவின் பெயர் மறுபெயராக சூட்டப்பட்டது.

இந்நிலையில் மலாலாவைக் கொல்லத் தீர்மானித்தனர் தாலிபான்கள். ""எங்கள் தலைவர் மலாலாவைக் கொல்லுமாறு உத்தரவு பிறப்பித்தார். இரண்டு பேரை அனுப்பி மலாலாவை கொலை செய்யச் சொன்னார். ஆனால் எங்களுக்குக் கொலை செய்ய மனம் வரவில்லை. கொலை செய்தால், எங்களுக்கு அவப்பெயர் கிடைக்கும். ஆனால் எங்களுக்கு வேறு வழியும் இல்லை'' என்கிறார் தாலிபான் தீவிரவாதிகளின் மூத்த கமாண்டர்.

9 அக்டோபர் 2012. மலாலாவின் பள்ளிப் பேருந்து 14 மாணவிகளும் மூன்று ஆசிரியர்களுடன் சென்று கொண்டிருந்தது. அனைத்து மாணவிகளும் அன்றைய தினம் நடந்து முடிந்த தேர்வினைப் பற்றி தீவிரமாகப் பேசிக் கொண்டே வந்தனர். பேருந்தின் பின்பகுதி வாசலில் மலாலாவின் அருகில் அமர்ந்திருந்த சிறுமிதான் துப்பாக்கி ஏந்திய அந்தத் தீவிரவாதியை முதலில் பார்த்தாள்.

வண்டியை நிறுத்தி ""இதில் யார் மலாலா?'' என்றான் அவன். அனைவரும் அமைதியாயினர். ஆனால் எல்லாரின் பார்வையும் மலாலாவின் மீதே இருந்தது. அவ்வளவுதான் துப்பாக்கி குண்டு மலாலாவின் தலையைத் துளைத்தது; முன்னோக்கிச் சரிந்தார் மலாலா. துப்பாக்கி ஏந்தியவர்கள் தப்பியோடினர்.

மலாலாவின் தலையைத் துளைத்த துப்பாக்கி குண்டு அவரின் இடது கண்ணுக்குப் பின்னால் உள்ள தோலைத் துளைத்தது. அவரின் மண்டை ஓட்டையும், தாடை எலும்பையும் பதம் பார்த்தது. பாகிஸ்தான் டாக்டர்கள் அவரின் உடைந்த மண்டை ஓட்டுப் பாகங்களை நீக்கிவிட்டு அந்த இடத்தை அவரின் வயிற்றுப் பகுதியில் உள்ள சதையால் அடைத்தனர். உடைந்த மண்டைஓட்டுப் பகுதியை சரி செய்வதற்காக லண்டன் சென்றார் மலாலா.

மலாலா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த லண்டன் "ராணி எலிசபெத் மருத்துவமனை' பரிசுப் பொருள்களாலும், வாழ்த்து அட்டைகளாலும் நிறைந்தன. உலகின் பல்வேறு இடங்களில் இருந்து நன்கொடைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. அமெரிக்காவில் உள்ள ஒரு கல்லூரி மாணவர்கள் குழு சுமார் 50 ஆயிரம் டாலர் அனுப்பி வைத்தது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வாயிலாகவும், சமூக ஆர்வலர்கள் மூலமாகவும் பாகிஸ்தான் பெண்கள் கல்விக்கு உதவித்தொகைகளும் குவியத் தொடங்கின. பாகிஸ்தான் அதிபர் மலாலாவின் பெயரில் பெண்கள் கல்விக்கு 10 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியுள்ளார்.

இதுமட்டுமன்றி, மலாலா இப்போது உலகின் பிரபல மனிதர்களின் நண்பராகிவிட்டாள். கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் மேகன் ஸ்மித், அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்ஷின் மனைவி என பல்வேறு முக்கியப் புள்ளிகளின் பார்வையில் மலாலா உள்ளார். மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றும் பலர் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை முடிந்து திரும்பினார் மலாலா.

மீண்டும் மலாலா அதே பள்ளியில் தனது படிப்பைத் தொடர்வாரா?என்பது தெரியவில்லை. ""எங்கள் வகுப்பில் 31 மாணவிகள் படிக்கிறோம். எனக்கருகில் உள்ள ஒரே ஒரு டெஸ்க் மட்டும் காலியாக இருக்கிறது. அது மலாலாவின் டெஸ்க். மலாலா வரும்வரை இந்த டெஸ்க் அவளுக்காகக் காத்துக்கொண்டிருக்கும்'' என்றார் அவர் வகுப்புத் தோழி மோனிபா.

அவர் வந்தாலும் வராவிட்டாலும் அதே பள்ளியில் 400 மலாலாக்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றனர். பள்ளிக்குச் செல்லப் பயப்பட்ட பெண் குழந்தைகள் இப்போது தைரியமாக பள்ளிக்குச் செல்கின்றனர். அவர் படித்த பள்ளி மாணவிகள் அனைவரும் இப்போது தைரியசாலிகளாகிவிட்டனர்.                          

நன்றி :- , ஜெனிஃப்ரீடா ,தினமணி கதிர், 17-02-2013

தீவிரவாதிகளின் தாக்குதலில் தப்பிய மலாலா யூசஃப்ஸாயின் விஸ்வரூபம் ! !

நெஞ்சின் கதிரலைகள் நின்றுவிட்டால் என்வாழ்வில்
துஞ்சிடும் ஆத்மீகத் தொண்டு !

ஆணும் பெண்ணும் ஒன்றல்ல !
ஏசுவும், புத்தரும் இரண்டல்ல !
இந்து, இசுலாம், கிறித்துவம் மூன்றல்ல !
jayabarathans-photo.jpg
சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. [Nuclear] Canada
(பிறப்பு :  பிப்ரவரி 21, 1934)

அண்டத் தலைவனை, ஆதி முதல்வனைத்
தொண்டன் பணிந்து துதிக்கிறேன் – விண்டுபோய்
இற்றுவிழும் மாந்தர் இணைந்து பணிபுரிய
வற்றாத் திறன் ஊட்ட வா.
++++++++
போர் வாளை எல்லாம் நெளித்து
ஏர் முனை ஆக்கு !
+++++++
சிலைகள் சுமப்ப  தில்லை
கோபுரத்தை !
வலைகள் பிடிப்ப தில்லை
முத்துச் சிப்பியை !
கலைகள் நிரப்பு வதில்லை
பசி வயிற்றை !
அலைகள் அசைப்ப தில்லை
ஆழ்கடலை !
++++++++
தோல்விகள் தோள்வரை
ஏறினும் வெற்றி
கால் பாதம் வரை
வராதா ?
மேல் சென்று சிகரம் தொட
மூச்சு வாங்கும் !
நாள் செல்லும் வெற்றியின்
நறுமணம் நுகர !
++++++++++
அணுவினைப் பிளந்த நான்
அன்பையும் பிளந்து
நுணுகி நுணுகி
நோக்கினேன் ! அங்கும்
அன்னை சக்தி
என்னை மயக்கி
முறுவல் செய்தாள் !
சிறுவன்
பணிந்தேன் அதன் திருப்
பாதங்களில் !
சி. ஜெயபாரதன்
+++++++++++

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன்.  பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக் கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.

அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன்.

 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 500 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன.  எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன.  இதுவரை மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி.  இரண்டு நூல்கள் அச்சில் உள்ளன : விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா.

எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர்.  ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப்  பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.
எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே.  “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.

அன்புடன்,
சி. ஜெயபாரதன்,
கிங்கார்டின்,
அண்டாரியோ, கனடா.
டிசம்பர் 17, 2011  (புதுப்பிக்கப் பட்டது)

 போர் வாளை ஏர்முனை ஆக்கச் சொல்கின்றார், அறிவியல் பேராசான்
சி.ஜெயபாரதன் !

இதயமெல்லாம் அன்பு நதியினில் நனைத்து, இறையுணர்விலும் தினைத்துணையும் பழுதின்றி,.

தமக்குத் தெரிந்த அறிவியல் உண்மைகளை எல்லாம், ஆங்கிலம் அறியாத, தமிழ்ப் பாமரரும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம்,

கணினியில் விளக்கப் படங்களுடன் சுவை குன்றாமல், தொடர்ந்து அளித்துவரும், மதுரை தந்த மாமனிதருக்கு இன்று ( 20-02-1934 )  பிறந்தநாள்

கணினி அன்பர்கள் அனைவரும் தனித்தனியாகவும், மொத்தமாகவும் வாழ்த்திடுவோம் நீடுழி வாழ்க ! வாழ்க ! என்று !

அறிவியல் பேராசான் ஜெயபாரதனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லுவோம் !

Monday, February 18, 2013

சி. ஜெயபாரதன்
22:30 (8 hours ago)

to vallamai, tamilmantram, தமிழ், தமிழமுதம், vannan, senkodi

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா
(Subduction Zones Drift & Sea-Floor Spreading) [2]
கால்பந்து ஒட்டுபோல் தையலிட்ட
கடற் தளத்தின் மேல்
கோல மிட்டுக்
காலக் குயவன் எல்லை வரைந்த
வியப் பீடங்கள்
நடம் புரியும் கடலில் மிதந்து !
நண்டு போல் நகர்ந்து,
கண்டத் தட்டுகள் இங்குமங்கும்
துண்டு துண்டாய்ச் சேரும், பிரியும்
கடல் சூழ்ந்திட !
நாற்பது மில்லியன் ஆண்டுகட்கு
முந்தி இந்தியா
உந்தி நகர்ந்து ஆசியாவுடன்
முட்டிப் படிப் படியாய்
எட்டாச் சிகரமாய் வளர்ந்துள்ளது
இமய மலை !
+++++++++++++
Fig 1A Ages of Plates

[The Formation of Himalayas]
+++++++++++++
"இந்திய உபகண்டம் 40 மில்லியன் ஆண்டுகட்கு முந்தி வெகு வேகமாக ஆசியக் கண்டத்தை நோக்கி வந்து மோதியது. ஆனால் அப்படி இந்தியா மோதியது ஒரு தடவை மட்டுமில்லை. [பலமுறையாக இருக்கலாம்]. இந்த முடிவு இமயமலை எவ்விதம் நகர்கிறது என்னும் யூகிப்பைப் பெருமளவில் மாற்றப் போகிறது. புகழ் பெற்ற அடித்தட்டு நகர்ச்சி [Plate Tectonic Movement] பற்றிய கால யுகம் இந்த முடிவால் மாற்றம் அடையும். இந்திய உப கண்டம் ஆண்டுக்கு 10 செ.மீ. [4 அங்குலம்] நகர்கிறது. 10 மில்லியன் வருடங்களுக்குப் பிறகு 1000 கி.மீடர் [600 மைல்] நகர்ந்திருக்கும். புவி & அண்டக் கோள் விஞ்ஞான இதழில் [Earth and Planetary Science Letter] இந்த அரிய, புதிய விளைவுகள் வெளியிடப் படும். "
ஆலிவர் ஜொகட்ஸ் [Oliver Jagotz] [Boston MIT Assistant Professor of Geology]
'450 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆஃபிரிக்காவின் ஸகாராப் பாலையின் மீது துருவப் பனிக்கூண்டு [Polar Ice Dome] படிந்து கிடந்தது. அதை மெய்ப்பிக்க அல்ஜீரியா பாலைவனத்தில் பனிப்பாறை செதுக்கிய கற்பாறைகள் இப்போதும் பிழைத்திருப்பதை காணலாம். பூர்வக் காந்தத்தைச் [Paleo-magnetism] சோதிக்கும் போது அல்ஜீரியா பகுதி ஒருகாலத்தில் தென்துருவத்தில் பனிமூடிக் கிடந்திருக்க வேண்டும் என்று தெரிய வருகிறது. அல்ஜீரியா பகுதி இப்போது பூகோளத்தின் வளைவில் பெயர்ச்சியாகி 8000 மைல் தூரம் வடக்கே நகர்ந்துள்ளது.
250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆஃபிரிக்காவின் ஸகாரா பாலைவனம் தென்துருவத்தில் இருந்து பனிப்பாறையால் மூடியிருந்த காலத்தில், பூமத்திய ரேகை வட அமெரிக்காவின் மத்தியப் பகுதி வழியாகச் சென்றிருக்க வேண்டும். குளிர்ப் பிரதேசங்களான அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற இடங்களில் நிலக்கரிச் சுரங்கங்கள் அந்த யுகத்தில்தான் தோன்றி யிருக்க வேண்டும் '.
டாக்டர் ரோட்ஸ் ஃபேர்பிரிட்ஜ், கொலம்பியா பல்கலைக் கழகம்.
Fig Continents Drifts

முன்னுரை: பிரபஞ்சத்தின் அண்டங்கள், பஞ்ச பூதத்தின் அங்கங்கள், உலகத்தில் வாழும் உயிரினங்கள் எல்லாம் சக்தி மயத்தால் முறையே ஓர் ஒழுக்க நியதியைப் பின்பற்றி இயங்கினாலும், அவற்றின் இயக்கத்திலும் வடிவத்திலும் தொடர்ந்து மாறுபாடுகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வேறுபாடுகளை நோக்கும் போது, பிரபஞ்ச நியதிகள் முற்றிலும் சீரானவை என்றோ அல்லது முழுவதும் சீரற்றவை என்றோ அழுத்தமாகச் சொல்லமுடியாது. ஆனால் நமக்குத் தெரிந்த பிரபஞ்சக் கோட்பாடு களைச் [Laws of the Universe] 'சீரற்ற ஒழுங்கு நியதிகள் ' [Disorderly Order Hypothesis] என்று இரண்டு முரண்பாடுகளையும் இணைத்து நாம் விளக்கம் சொல்லலாம்!
அட்லாண்டிக் பெருங்கடல் மெதுவாக அகன்று வருகிறது என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது! ஆனால் பசிபிக் பெருகடல் மெதுவாகக் குறுகிக்கொண்டு வருகிறது! ஈரோப்பில் இருக்கும் ஆல்ஃப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் அதிகமாகிக் கொண்டே போகிறது! பூதக் கண்டம் ஆஃப்பிரிக்கா செங்கடல் வட முனையில் பிளக்கப் போகிறது! இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டம் அடித் தட்டுக்கு மேல் புகுத்தி, அழுத்தி அவற்றின் உயரத்தை மிகை யாக்கிய வண்ணமா யிருக்கின்றன! ஹவாயி தீவுகள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன!
Fig 2 Major Plates

நாற்பது மில்லியன் ஆண்டுகட்கு முந்தி இந்திய உபகண்டம் வடதிசை நோக்கி நகர்ச்சி
பாஸ்டன் மாஸ்ஸெசுஸெட்ஸ் தொழில் நுணுக்கக் கூடத்தின் விஞ்ஞான வல்லுநர்கள், இந்தியா ஆசியா வுடன் முட்டி மோதிய அடித்தட்டு நகர்ச்சி 40 மில்லியன் ஆண்டுகட்கு முந்திதான் நிகழ ஆரம்பித்தது என்று இப்போது கண்டு பிடித்துள்ளார்கள். இதுவரை 50 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு என்று கணிக்கப் பட்டிருந்தது. சமீபத்தில் இமய மலைச் சரிவுகளில் தேடி அறிந்த மூலக / மூலக்கூறு உலோகச் சான்று களை வைத்து அந்த நிகழ்ச்சி 10 மில்லியன் ஆண்டுகட்குப் பிந்தி [50-10=40] நேர்ந்திருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்கள். விஞ்ஞானிகள் இமயமலைத் தொடர்களில் தற்போது இரண்டு வெவ்வேறு அரங்குகளில் எடுத்த மாதிரிப் பாறைகளை ஆராய்ந்ததின் விளைவுகள்தான் இந்த முடிவை வெளியிட ஆதாரமாக இருந்துள்ளன.
இப்போது நாம் காணும் இந்தியா 50 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு சிறிய பரப்புள்ள உபகண்டமாய் இருந்திருக்கும். இந்தியாவின் எத்தனை வடபுறப் பரப்பளவு யுரேசியக் கண்டத்தின் அடியிலே நகர்ந்துள்ளது என்று அறிந்து கொள்வது கடினம். ஆனால் இந்திய அடித்தட்டு எந்த வேகத்தில் நகர்கிறது என்று நுட்பமாய்த் தெரிவதிலும், எப்போது ஆசியத் தட்டுடன் மோதியது என்று தெரிவதின் மூலமும் விடை கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார். இமயத்தின் பல்வேறு சிகரங்கள் அவற்றின் கீழியங்கும் பூதப் பெரும் அடித்தட்டு நகர்ச்சி விசைகளால் எழுப்பப் பட்ட கோபுரங்களே.
Fig 1 North America's Shaping

முந்தைய கணிப்புகளின்படி இந்திய-யுரேசிய மோதல் விரைவான வேகத் தாக்குதல் ஏற்பட்டது சுமார் 50 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு நேர்ந்ததாகக் கருதப் பட்டது. இடையில் தூளாக்கப்பட பாறைகளே பிறகு இமயமலைச் சிகரமாக உயர்ந்தன என்பது மாதிரி ஆதாரங்களை வைத்து ஊகிக்கப்படுகிறது. இந்தப் பேரளவு மோதலே அடித்தட்டு நகர்ச்சி தாக்கங்களில் பெரும் கொந்தளிப்பு நிகழ்ச்சியாக கருதப் படுகிறது. அந்த அசுர மோதலில் பெரும்பான்மையான இந்தியப் பகுதி யுரேசியத் தட்டின் கீழ் புகுந்துவிட்டது என்று ஊகிக்கப் படுகிறது. இந்திய-யுரேசிய மோதலை உறுதியாகத் தெரிந்து கொள்ள அதுபோல் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். கடந்த 2 மில்லியன் ஆண்டுகளாக ஆஸ்திரேலியக் கண்டத்தின் அடித்தட்டு அருகில் உள்ள "சுந்தா வளைவு" [Sunda Arc] என்னும் பற்பல தீவு மந்தைகளைத் மோதி வருகின்றன. அந்த மோதல்களை ஆராய்ந்து, முந்தைய இந்திய மோதல்கள் எப்படி நேர்ந்தன என்று கண்டறிந்தனர்.
Fig Zigzaw Puzzle
Half Globe
வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் மெல்ல மெல்ல நகர்ந்து இடைவெளியை அகலமாக்கி வருகின்றன! அமெரிக்காவில் காலிஃபோர்னியா கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் வடபுறமாகச் சரிந்து கொண்டிருக்கிறது! மைய அட்லாண்டிக் கடற்தட்டுப் பிறழ்ச்சிப் பீடம் [Mid-Atlandic Tectonic Plate Ridge] குறுக்கே வெட்டிச் செல்லும் ஐஸ்லாந்து தீவின் அருகில் உள்ள சூர்ட்ஸி [Surtsey, Iceland] என்னும் தீவு 1963 நவம்பர் 14 இல் வட அட்லாண்டிக் கடலில் திடீரென எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது!
'கடற்தளங்கள் நீட்சியைக் கண்டுபிடித்து விளக்குவது நம் கையில்தான் இருக்கிறது. மைய அட்லாண்டிக் பிறழ்ச்சிப் பீடத்தின் இருபுறமும் உள்ள கடற்தளம் ஆண்டுக்கு சுமார் ஓரங்குல நீளம் நகர்ந்து கொண்டு வருகிறது. கடற்துளையில் எடுத்த மாதிரிகள் வடிகால் புழுதிக்கும், அடிக்கடற் பாறைக்கும் இடையில் உள்ள எல்லையைக் காட்டின. அத்துடன் அவை எத்துணை இளைய பருவத்தை உடையவை என்று வயதைக் காட்டி, அடிக்கடல் பூர்வப்படிவங்கள் [Undersea Basement Fossils] வெஜினரின் [Alfred Wegener (1880-1930] மகத்தான கண்டங்களின் புலப்பெயர்ச்சி நியதியை மெய்ப்பித்தது '.
டாக்டர் ஆர்தர் மாக்ஸ்வெல் [Co-Leader, Wood Hole Oceanographic Institution]
'ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே மத்தியதரைக் கடல் பிரதேசம், நீரில்லாத இரண்டு மைல் ஆழக் குழியாக உப்புக் கலவைப் பொருள் மிகையாகக் கொண்டிருந்தது. அட்லாண்டிக் கடலை ஜிப்ரால்டர் பெரு மலைத்தொடர் மறைத்து, ஒருசில நதிகள் மட்டும் சேரும் மத்திய தரைக் கடல் வெள்ளம் அனைத்தும் ஆவியாகப் போனது. கப்பலின் துளைக்கருவி வெகு ஆழத்தில் தோண்டிப் பார்த்ததில், பல பகுதிகளில் பாலைவன வெப்பத்தில் காய்ந்துபோன ஆயிரக் கணக்கான அடி உயர உப்புக் குளங்களும், ஏரிகளும் காணப்பட்டன '.
டாக்டர் வில்லியம் ரயான், [Glomar Challenger Deep Sea Exploration (1970)]
அட்லாண்டிக் பெருங்கடல் மெதுவாக அகன்று வருகிறது என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது! ஆனால் பசிபிக் பெருகடல் மெதுவாகக் குறுகிக்கொண்டு வருகிறது! ஈரோப்பில் இருக்கும் ஆல்ஃப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் அதிகமாகிக் கொண்டே போகிறது! பூதக் கண்டம் ஆஃப்பிரிக்கா செங்கடல் வடமுனையில் பிளக்கப் போகிறது!
இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டம் அடித்தட்டுக்கு மேல் புகுத்தி, அழுத்தி அவற்றின் உயரத்தை மிகை யாக்கிய வண்ணமா யிருக்கின்றன! ஹவாயி தீவுகள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன!
வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் மெல்ல மெல்ல நகர்ந்து இடைவெளியை அகலமாக்கி வருகின்றன! அமெரிக்காவில் காலிஃபோர்னியா கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் வடபுறமாகச் சரிந்து கொண்டிருக்கிறது! மைய அட்லாண்டிக் கடற்தட்டுப் பிறழ்ச்சிப் பீடம் [Mid-Atlandic Tectonic Plate Ridge] குறுக்கே வெட்டிச் செல்லும் ஐஸ்லாந்து தீவின் அருகில் உள்ள சூர்ட்ஸி [Surtsey, Iceland] என்னும் தீவு 1963 நவம்பர் 14 இல் வட அட்லாண்டிக் கடலில் திடாரென எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது!

தென்துருவத்தில் இருக்கும் அண்டார்க்டிகாவில் முதலில் 1967 ஆண்டிலும், அடுத்து 1969 ஆண்டிலும் நெடுத்தொடர் மலைகளின் [Transantarctic Mountains] பனிபாறைகளில் டைனோசார்ஸ் காலத்திய நிலத்துறை விலங்குகளின் பூர்வப்படிவத் துணுக்குகளைக் [Fossil Fragments of Land Creatures] கண்டுபிடித்து, அமெரிக்க தேசீய விஞ்ஞான அறக்கூடம் [National Science Foundation] உளவு செய்தது. அந்த மாதிரிகளில் ஒன்று செம்மறி ஆடு போல் ஊர்ந்திடும் விலங்கான லிஸ்டிரோசாரஸ் [Lystrosaurus]. அண்டார்க்டிகாவில் முதன்முதல் கண்டுபிடிக்கப் பட்ட முதுகெலும்புள்ள பூர்வ மூலப்படிவம் [Index Fossil] அந்த விலங்கு. அந்த விலங்குகள் ஆஃபிரிக்கா, இந்தியா, சைனா ஆகிய நாடுகளில் 180-225 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக அறியப்படுகின்றன.
குலோமர் சாலஞ்சர் கப்பலின் கடற்தள உளவுப் பயணம்:
1968 ஆம் ஆண்டில் 'ஆழக்கடல் துளை தோண்டுத் திட்டம் ' [Deep Sea Drilling Project] என்று பெயர் பெற்ற மாபெரும் கடற்தட்டு உளவுப்பணி ஆரம்பிக்கப் பட்டது. குலோமர் சாலஞ்சர் கப்பல் காலிஃபோர்னியா கடற்தள ஆயில் துளைக் கம்பெனி [California Offshore Oil Drilling Co. Global Marine Inc] தயாரித்தது. கடற்தளப் பாறைகளில் 20,000 அடி ஆழத்தில் துளையிட்டு மாதிரிகளைக் கொண்டுவந்து சோதிப்பதே அதன் முக்கியப் பணி. தேசீய விஞ்ஞான அறக் கட்டளை [National Science Foundation] வழியாக அமெரிக்க மைய அரசு உளவுக்கு நிதிக்கொடை அளித்தது. அப்பணிகளைச் செய்தவை அமெரிக்காவின் பூதள ஆய்வுக் கூட்டு நிறுவகங்கள் [JOIDES Gruop (Joint Oceanographic Institutions for Deep Earth Sampling)].

குலோமர் சாலஞ்சர் கடற்துளைக் கருவி 1968 ஆம் ஆண்டு போட்ட முதல் துளையில் மெக்ஸிகோ வளைகுடாவில் 12,000 அடி ஆழத்தில் நுழைந்து பெட்ரோலியம் கச்சா ஆயில் இருப்பதைக் கண்டுபிடித்தது! இதுவரைக் கடலில் இத்தனை ஆழத்தில் ஆயில் ஒளிந்துள்ள தென்று யாரும் ஊகித்தது கூட இல்லை! மூன்றாவது துளையை அட்லாண்டிக் கடற்தளத்தில் தோண்டி, அட்லாண்டிக் கடல் மெய்யாக அகன்று வருகிறது என்று கண்டு பிடித்தது. 1968 ஆண்டு இறுதியில் ஆஃபிரிக்காவின் மேற்திசையில் சென்று, மைய அட்லாண்டிக் கடற்தட்டுப் பீடத்தின் தென்புற மிருந்து துவங்கி இருபுறமும் தொடர்ந்து துளைக்கு மேல் துளையிட்டு மாதிரிகளைச் சோதித்து மகத்தான கடற்தட்டு மெய்ப்பாடுகளைக் கண்டு பிடித்தது.
குலோமர் கப்பல் நான்கு வருடங்களாகப் பணி செய்து சுமார் 400 துளைகளைக் கடற் பாறைகளில் தோண்டி பல அரிய புதிய பூகோளச் செய்திகளைக் கூறி யிருக்கிறது. உலகக் கண்டங்களை விட, கடற்தளங்கள் இளைய காலத்தவை என்று கண்டுபிடித்துள்ளது. பூர்வ வடிகால் புழுதிகள் [Oldest Sediments] 160 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் உண்டாகி யிருக்கின்றன என்று கண்டுள்ளது.

அதற்கு முரணாகச் சமீபத்தில் உளவிய கிரீன்லாந்தின் பாறைகள் சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று காட்டி யுள்ளது. பூகோள விஞ்ஞானிகள் தற்போது பூமியின் முழு வயதை 4.5 பில்லியன் ஆண்டாகக் கணிக்கிறார்கள். ஆனால் பூகோளக் கடற்தளத்தின் வயதை சுமார் 180 மில்லியன் ஆண்டாகத்தான் மதிப்பிடுகிறார்கள்.
1970 இல் குலோமர் கப்பல் ஆய்வாளர்கள் ஆஃபிரிக்கா கண்டம் வடதிசை நோக்கி மெதுவாக நகர்ந்து, மத்தியதரைக் கடல் அகலத்தைக் குறுக்கி வருகிறது என்று நிரூபித்திருக்கிறார்கள். அந்த நகர்ச்சியால் கடற்தட்டுகள் பிறழ்ந்து, எப்போதாவது ஸிசிலியில் உள்ள எட்னா சிகரத்தில் [Mount Edna, Sicily] எரிமலைக் குமுறலையும், கிரீஸ், துருக்கி ஆகிய நாடுகளில் நிலநடுக்கத்தையும் உண்டாக்குகின்றன! படிப்படியாக அழுத்தி மத்தியதரைக் கடற்தட்டு மடங்கி ஆல்ஃப்ஸ் மலைத் தொடரை உயர்த்திக் கொண்டே போகிறது என்றும் கூறி யிருக்கிறார்கள்!
சுனாமி உண்டாக்கிய சுமாத்திரா கடற்தட்டுப் பிறழ்ச்சி:
இந்தோனேசியாவுக்கு மேற்கே சுமாத்திரா தீவுக்கு அருகே கடற்தளத்தில் அதே கோணத்தில் சாய்திருக்கும் சுமாத்திர நிலநடுக்கப் பழுது [Sumatran Fault] சுமார் 1100 மைல் நீளத்தில் இருப்பதாக அறியப்படுகிறது. 2004 ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி வெடித்த கடற்தள பூகம்பத்தில் பூதவடிவில் எழுந்த சுனாமி கால் மில்லியன் நபர்களைக் கொன்றதோடு, பனிரெண்டு நாட்டுக்குக் கடற்கரை நகரங்களைத் தகர்த்து விட்டது.

நிலநடுக்கத்தின் போது மாபெரும் ஆற்றல் மிக்க அசுர சுனாமியை எழச்செய்த கடற்தள முறிவின் நீளம்: சுமார் 700-800 மைல், அகலம்: 60 மைல்! அதாவது 48,000 சதுர மைல் [800x60] பரப்பும், பல ஆயிரம் அடி ஆழமுள்ள கடல் வெள்ளத்தை செங்குத்தாகத் தூக்கிப் பல முறைக் குலுக்கிப் போட்டுச் சுனாமிப் பேரலைகள் கரைநோக்கி அடுத்தடுத்துப் படையெடுத்துள்ளன! அபார ஆற்றல் கொண்ட அந்த அசுர நிலநடுக்கத்தைத் தூண்டிய கடற்தட்டுப் பிறழ்ச்சிப் பழுது [Plate Tectonic Fault] சுமாத்திரா பழுது! பல்லாண்டு களாக இக்கடற்தட்டுப் பழுது எண்ணற்ற நிலநடுக்கங்களை உண்டாக்கியுள்ள பூகம்பத் திடலாக இருந்து வருகிறது. 1833 ஆம் ஆண்டில் அதே பழுதுத் தொடரில் மிகப்பெரும் பூகம்பம், Mw:9 [Mercalli Scale] அளவு நிர்ணயத்தில் எழுந்து பேரழிவு செய்துள்ளது..
சுமாத்திரா தீவு 1100 மைல் நீளமும், 250 மைல் அகலமும் கொண்டது. தீவுக்கு மேற்கே 180 மைல் தூரத்தில் அதன் முழு நீளத்திற்கும் இணையாக, ஒரு பயங்கர நில அதிர்வுப் படுகுழி காணப் படுகிறது. சுமாத்திரா பூகம்ப பழுதுக்குழி [Sumatran Fault Trench] குமுறிக் கொண்டிருக்கும் உலகக் கடற்தளப் பிறழ்ச்சிக் குழிகளிலே மிகப் பெரியது. அன்னத்தின் கழுத்துபோல் வளைந்த அந்தப் பூகம்ப பழுது 1100 மைல் நீண்ட தாக தீவுக்கு இணையாகக் கடற்தளத்தில் தோன்றி யிருக்கிறது. கடற்தட்டுத் திணிப்பால் [Ocean Plate Subduction Process] வளர்ந்திருக்கும் சுமாத்திராவின் மலைத்தொடரும், பழுதுக் குழிக்கு இணையாக மலைப் பாம்புபோல் படுத்துக் கிடக்கிறது!
Fig Drift Maps

மெஸோசாயிக் யுகத்தின் [Mesozoic Era] ஆரம்ப காலத்தில், அதாவது 240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு குமுறிக் கொண்டிருந்த கடற்தட்டுத் திணிப்பு அரங்கத்தில் [Subduction Zone], சுமாத்திரா தீவு அமைந்துள்ளது. அந்த நாட்டிய அரங்கம் சுமாத்திரா தீவு போல் இணை யாகச் சாய்ந்த கோணத்தில் நீண்டு வளைந்துள்ளது. பல மில்லியன் ஆண்டுகளாக படிப்படியாகக் கடற்தட்டுத் திணிப்பால் உண்டான கருங்கல் குன்றுகளில் மாதிரிகளை எடுத்து ஆராய்ந்ததில் கீழிருக்கும் கடற்தட்டின் உயர அளவுகளையும், பண்புகளையும் கண்டிருக் கிறார்கள்.
அவை யாவும் திணிப்பைச் சார்ந்த கருங்கல் வகையான, நிலநடுக்கத் தன்மை கொண்ட கால்க்-ஆல்கலைன் ரகத்தைச் [Subduction Related I-type, Volcanic Arc, Calc-Alkaline type] சேர்ந்தவை. கருங்கல் மாதிரியில் உள்ள ஸ்டிராஞ்சியம் ஏகமூலத்தின் ஆதி விகிதத்தை [Strontium Isotope Initial Ratio] உளவு செய்தால், திணிப்புத் திடல் கலந்துள்ள பூதளக் குழம்பின் மேற்தட்டு பகுதியைச் [Magmas from Upper Mantle with Subduction Contamination] சேர்ந்ததாக அறியப் படுகிறது.
ஆர்கான் ஏகமூலங்கள் [Ar40-Ar39 Dating], ருபீடியம், ஸ்டிராஞ்சியம் கதிரியக்கத் தேய்வு காலத்தை [Rubidium-Strontium (Rb-Sr) Dating] ஆராய்ந்து, சுமாத்திரா குன்றுகளின் கருங்கல் மாதிரிகளின் வயதைக் காண முடிந்தது. கருங்கற்கள் 5.5 முதல் 192 மில்லியன் ஆண்டு வயதுகளைக் கொண்டிருந்தன. [Sulit Granite: 192 Ma], [Lassi Pluton: 52 Ma], [Lolo Pluton: 12 Ma], [Sungaipenuh Granite: 5.5 Ma] [Ma (Million Years Ago)]. சுமாத்திரா பாறைகளில் காந்தசக்தி ஜுராஸிக் யுகத்தின் [Jurassic Era] ஆரம்பத்தில் சுமார் [193-15 Ma] மில்லியன் ஆண்டுகளுக்கு இடையிடையே ஏற்பட்டுள்ளது என்பதும் அறியப்பட்டது.
Fig Satellite Monitoring1

கண்டத் தீவுகளுக்கும் கடற் தீவுகளுக்கும் உள்ள வேறுபாடுகள்:
உலகிலே உண்டாகி யிருக்கும் தீவுகளை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். 1. கண்டத் தீவுகள். 2. கடற் தீவுகள். கண்டத் தீவுகள் [Continental Islands] என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம். பெருங் கண்டத்துடன் அதன் அருகே தணிந்த கடல் ஆழத்தில் தளப்பரப்பால் இணைக்கப்பட்ட தீவே, கண்டத் தீவு என்று அழைக்கப்படுகிறது. இலங்கைத் தீவு உப கண்ட மான இந்தியாவின் கண்டத் தீவு என்று சொல்லலாம். கடந்த 20,000 ஆண்டுகளில் பெருங் கண்டத்துடன் பிணைந்து கொண்ட தீவுகளே அப்பெயரைப் பெறுகின்றன. கண்டத் தீவுகளில் உள்ள சில செடி கொடிகள், உயிர் ஜந்துகள் [Fauna & Flora, Species] பெருங் கண்டத்தில் உள்ளவை போல் இருக்கின்றன. குறிப்பிட்ட இடத்தில் பிறந்து விருத்தியாகும் ஜந்துகள் [Endemic Species] அங்கு இருப்பது அபூர்வந்தான்.
கடற் தீவுகள் [Ocean Islands] என்றால் என்ன ? பூமியின் உட்கருவிலிருந்து கடற்தளத்தில் துளையிட்டு எரிமலைகள் சீறி எழுந்து, கடல் ஆழத்தில் உண்டாக்கப்பட்ட தீவுகள் இப்பெயரால் அழைக்கப்படுகின்றன. ஹவாயி தீவுகள், ஐஸ்லாந்து தீவுகள் ஆகிய வற்றை இவற்றுக்கு உதாரணமாகக் கூறலாம். கண்டங்களை ஒட்டாமல், கண்டங்களுக்கு அப்பால் உண்டானவை இத்தீவுகள். மைய அட்லாண்டிக் பிறழ்ச்சித் தட்டுக் கடற்பீடம் குறுக்கே செல்லும் ஐஸ்லாந்தில் உள்ள சூர்ட்ஸி [Surtsey, Iceland] என்னும் தீவு 1963 நவம்பர் 14 இல் வட அட்லாண்டிக் கடலில் எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது! அத்தீவுகள் எப்போதும் ஒரு பெருங் கண்டத்துடன் பிணைக்கப் படுவதில்லை. செடி, கொடிகள், விலங்கினங்கள் கடல் வழியாகக் கொண்டு செல்லப்பட வேண்டும். கடல்மீது வந்த தாவர இனங்கள், விலங்கினங்கள் மட்டுமே அத்தீவுகளில் பிழைத்திருக்க முடியும். நிலப் புதுநீரில் வளரும் மீனினம் போன்ற பலதரப்பட்ட உயிர் ஜந்துகள் அந்த தீவுகளில் கிடையா. கண்டத்திற்கு அப்பாலிருக்கும் கடற்தீவுகளில் புத்தின ஜந்துகள் வளர்ச்சிக்கு மையமாக [Centres of Speciation]
இருக்கின்றன. குறிப்பிட்ட இடவிருத்தி ஜந்துகள் [Endemic Species] வளர இத்தீவுப் பகுதிகளின் சூழ்நிலைகள் உதவுகின்றன.

கடலில் மூழ்கிய தமிழகத்தின் தென்திசைக் குமரிக் கண்டம்
1960 ஆம் ஆண்டில் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிதிக்கொடை அளித்து, இந்து மாக்கடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த உளவில், தமிழகத்தின் கன்னியா குமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதைக் கண்டுபிடித்திருக் கிறார்கள். முதலாக கப்பலில் சென்று ஒலிச் சமிக்கை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள். அத்திட்டம் ஏனோ 1960 ஆண்டுக்குப் பிறகு தொடரப்பட வில்லை! 1960-1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாக்கடல் கடற்தள வரைபடங்களில், குமரிக் கண்டத்தின் பூர்வீக அமைப்பு நிலை காணப்படுகிறது. அரபிக் கடலுக்குத் தெற்கில், லட்சத் தீவுகள் நீட்சியில் மால்டிவ் தீவின் வடக்குப் பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சாகோஸ் ஆர்கிபிலாகோ [Chagos, Archipelago] வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த [கி.மு.8000] பனி யுகத்தின் போது [During the Ice Age] இந்து மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது.

பனி யுகத்தில் எங்கோ பனி திரண்டு நீர் சுண்டிப்போய் உலகெங்கும் கடல் மட்டநீர் தணிவாக இருந்தது. அப்போது உலகத்தில் கண்டங்கள், தீவுகள் பல பகுதிகளில் பிணைந்திருந்தன! ஐரோப்பாவுடன் இங்கிலாந்து, பிளாரிடாவுடன் கியூபா தீவு, ஆஸ்திரேலியாவுடன் பப்பா நியூகினி தீவு, தமிழகத்துடன் இலங்கைத் தீவு, சுமாத்திரா ஜாவா போர்னியோ தீவுகள் தென் கிழக்காசியாவின் பெருந்தளத்துடன் இணைந் திருந்தன என்று கருதப்படுகிறது! இலங்கை தமிழகத்துடன் இணைந்திருந் ததற்கு, இப்போதும் தெரியும் தணிவாக உள்ள கடல்மட்ட நீர் நிலையே சான்றாக இருக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்து வால்மீகி முனிவர் எழுதிய இராம கதையில், அனுமார் படையினர் பாறாங் கற்களைக் கொண்டு வந்து, ஈழத்தின் தணிந்த கடற்தள மீது கற்பாலம் கட்டிக் கடந்திருப்பது அறியப்படுகிறது. பனியுகம் மாறி வெப்பம் மிகையான காலத்தில் பனிப் பாறைகள் உருகி கடல் மட்டம் மெதுவாக படிப்படியாக உயர்ந்து குமரிக் கண்டம் மூழ்கிப் போயிருக்கலாம் என்று உறுதியாக நம்ப இடமிருக்கிறது. அதன் விளைவில் குமரிக் கண்டம் சிதறி ஆஃபிரிக்கா முதல், ஆஸ்திரேலியா வரை உள்ள மடகாஸ்கர், லட்சத் தீவுகள், அந்தமான் தீவுகள், இந்தோனியாவின் தீவுகள் போன்றவை பிரிவு பட்டன என்று ஒரு சாரார் குறிப்பிட்டுள்ளார்கள்.
'லெமூரியா கண்டம் ' [Lemuria Continent] இந்து மாக்கடல் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்று முதலில் கூறியவர் 19 ஆம் நூற்றாண்டு பூதளவாதி பிலிப் ஸ்கிலேட்டர் [Geologist, Philip Sclater]. விக்டோரியன் டார்வின் நியதியைப் பின்பற்றுவோர் மடகாஸ்கர் தீவில் மட்டும் தனித்து வாழும் லெமூர் குரங்குகளை [Lemurs] எடுத்துக் காட்டி யிருக்கிறார்கள். அவற்றின் பூர்வப்படிவப் பிரதிகள் [Fossils of Lemurs] ஆஃபிரிக்காவிலும், தென் கிழக்காசியாவிலும் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஜெர்மன் டார்வின்வாதியான ஏர்னெஸ்ட் ஹேக்கல் [Ernst Haeckel] ஆதி லெமூரியாவின் உயிர் மூலவிகள் [Genes] யாவும் இந்து மாக்கடலில் மூழ்கி மடிந்ததால் காணாமல் போயின என்று கூறியதை எடுத்துக் கொண்டு பிலிப் ஸ்கிலேட்டர் லெமூரியா கண்டம் (குமரிக் கண்டம்) ஒன்று ஆங்கே இருந்திருக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.

++++++++++++++++++++++++++
R. Mathivanan, then Chief Editor of the Tamil Etymological Dictionary Project of the Government of Tamilnadu, in 1991 … [produced] the following timeline …:
ca. 200,000 to 50,000 BC: evolution of “the Tamilian or Homo Dravida”, ca. 200,000 to 100,000 BC: beginnings of the Tamil language 50,000 BC: Kumari Kandam civilisation 20,000 BC: A lost Tamil culture of the Easter Island which had an advanced civilisation 16,000 BC: Lemuria submerged 6087 BC: Second Tamil Sangam established by a Pandya king 3031 BC: A Chera prince in his wanderings in the Solomon Island saw wild sugarcane and started cultivation in Tamilnadu. 1780 BC: The Third Tamil Sangam established by a Pandya king 7th century BC: Tolkappiyam (the earliest extant Tamil grammar)… [Link]
(தொடரும்)
++++++++++++++++++++++++++++++++++++++++
தகவல்
1. The Continental Mosaic -Reader 's Digest Atlas of the World [1987]
2. Hutchinson Encyclopedia of the Earth By Peter Smith [1985]
3. Earth 's Restless Crust -ABC 's of Nature, Reader 's Digest [1984]
4. The Long Journey of Continents By: Ronald Schiller -The Marvels & Mysteries of The World Around US, Reader 's Digest Publication [1972]
5. Continental Drift & Plate Tectonics [www.zephryus.co.uk/geography/home.html] (Mar 20, 2003)
6. Pangaea, Gondwana, Laurasia, Plate Tectonics, Alfred Wegener From: Wikipedia Encyclopedia
7. Theory of Continental Drift By: Jim Cornish, Newfoundland, Canada (Sep 2001)
8. Continental Frift, Geology & Oceanography. [Several Internet Articles]
9. Everyday Geography By: Kevin McKinney (1993)
10 Eduard Suess, Austrian Scientist From: Wikipedia Encyclopedia
11 Our Changing Earth By: Tusco Wilson Ph.D. Frontiers of Science, National Geographic Society [1982]
12 This Changing Earth By: Samuel Matthews, National Geographic Society [Jan 1973]
13 Our Restless Planet Earth Rick Gore By: National Geographic Society [Aug 1985]
14 Fossils, Annals of Life Written in Rocks By: David Jeffery, National Geographic Society [Aug 1985]
15 The Earth 's Fractured Surface By: National Geographic Society [1995]
16 Physical Earth By: National Geographic Society [1998]
17 The Shaping of a Continent, North America 's Active West [1995]
18 National Geographic Picture Atlas of our World [1990]
19 Differences Between Continental & Oceanic Islands [www.abdn.ac.uk/zoohons/lecture1]
20 The Evolution of the Sumatran Earthquake Fault System, Indonesia, Andy McCarthy. Ph.D. [July 9, 2002]
21 Isotopic Dating of Sumatran Fault System By: Imtihanah & MPhil
22 The Sumatran Fault System By Professor Kerry Sieh & Danny Natawidjaja [Nov 1999]
24 Kumari Kandam By: Chitta Ranjan Myilvaganan, Sydney, Australia. [Jan 30, 2005]
29. India Joined with Asia 10 million years later than previouly thought By: Jennifer Chu, MIT News Office, Boston, MA [February 14, 2013]
**********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (February 16, 2013) [R-2]

நாற்பது மில்லியன் ஆண்டுகட்கு முன்பு இந்தியா ஆசியாவுடன் மோதி இணைந்தது - சி.ஜெயபாரதன், மதுரை @ கனடா .