Friday, December 2, 2016

இனிய இவ்விழாவிற்குத் தலைமையெற்றுள்ள காவ்யா பதிப்பகம் ஐயா சண்முகசுந்தரம் அவர்களே! பத்துநூல்களைப் பாங்குடன் வெளியிட்ட ஐயா ச.வே.சுப்பிரமணியன் அவர்களே! பத்து நூல்களைப் பெற்றுக்கொண்ட பேராளர்களே! நூல் ஆசிரியப் பெருமக்களே! நூலக நிர்வாகிகளே! நூல்  ஆசிரியப் பெருமக்களே1 கூடியுள்ள தமிழ்ச் சான்றோர்களே! தமிழார்வலர்களே! மற்றுமுள்ள பெருமக்களே! தாய்மார்களே! அனைவருக்கும் முதற்கண் எளியவனின் பணிவான வணக்கங்கள்!

இவ்வாண்டு நூலக  வாரவிழாவிலே இன்று ஒரு பொன்னாளாகும். “தமிழ்ப் பேரறிஞர்”, “நுண்மாண்நுழைபுலச் செம்மல்”, “தாகூர் சட்ட விரிவுரையாளர்”, “பல்கலைச் செல்வர்” என்னும் சிறப்புகளுக்கு உரியவராம், வற்றாது வளங்கொழிக்கும் வளமான தண்பொருநை பாயும் நம் நெல்லையம்பதியில் சைவ வேளாண் குலத்துதித்தவராம் ஐயா கா.சுப்பிரமணியபிள்ளை அவர்களின் நூல் வெளியிடுகின்ற நன்னாள்!

ஐயா கா.சு. பிள்ளை அவர்கள் சைவத்திற்கும், தமிழுக்கும் ஆற்றியுள்ள பணிகள் அளப்பரியனவாம். சட்டம் பயின்று  வழக்கறிஞராகத் திகழ்ந்து சட்ட நூல்கள் பலவற்றை இயற்றியவர். சைவ சமயத்தின் மீதும் தமிழ்மீதும் கொண்ட தணியாத காதலால் வழக்கறிஞர் பணியைத் துறந்து தமிழ்ப் பணிகளிலும், சைவசமயப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு செயலாற்றிய பெருந்தகையரவார்கள்!

சைவசமயம், இலக்கியம், சாத்திரம், தோத்திரம், வாழ்வியல், அறிவியல், சட்டவியல், வானியல் எனப் பலதுறைகளிலும் கரைகண்டு, ஆழங்காற்பட்டு தமிழிலும் ஆங்கிலத்திலுமாக ஏறத்தாழ ஐம்பத்தைந்து நூல்களுக்கும் மேலாக எழுதியுள்ளார். அவர்கள் காலத்திலும், பின்னரும்  தருமையாதீனம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், உமாதேவன் கம்பெனி, இரத்னநாயக்கர் சன்ஸ் ஆகியோர் 1963 - வரை நூல்களைப் பதிப்பித்தனர். இருபத்தைந்து ஆண்டுகளுக்குப்பின் அவர்கள் நூற்றாண்டை முன்னிட்டு 1987 - 1989 களில் குழித்தலை தமிழ்க்கான நினைவு இயக்கக் குழுவினர் நான்கு நூல்களை மீள் பதிப்புச்  செய்ததுடன் தமிழ்க்காகாக பல்துறைத்திரட்டு தமிழ்க்காக கலைக்களஞ்சியம் என இரு தொகுப்புகளும் தமிழ்க்காக நூற்றாண்டு மல்ர் ஒன்றும் வெளியிட்டனர்.  

அவர்களது  நூல்களைத் தேடித்தேடி ஏறத்தாழ ஐம்பது நூல்களைச் சேகரித்துள்ளேன். பெரும்பான்மை முதற் பதிப்புக்கள். அவைகளை வாசித்தபோது இன்றைய தலைமுறையோடு வருங்காலத்த் தலைமுறைக்கும் இந்நூல்கள் பயன்படவேண்டுமாயின் மீள்பதிப்புத்தேவை.  அன்னாரின்  படைப்பிலகியங்கள் நாட்டுடைமைய்ப்ட்டற்தற்கான வழி எனக்கண்டு 1998-இல் அதற்கான  முயற்சிகளில் .”நெல்லை கா.சு.பிள்ளை இலக்கிய வட்டம் “ ஈடுபட்டதன் பயனாய் 2007 இல் நாட்டுடைமையாக்கி இடைப்பட்ட ஒன்பதாண்டுக்காலம் அதற்காக இலக்கிய வட்டம் எடுத்துக்கொண்ட  முயற்சிகள் அளப்பரியவனவாம். இலக்கியவட்டத்துடன் அம்முயற்சிகளுக்குத் துணைநின்ற  தமிழறிஞர்களையும் அமைப்புக்களையும் இங்கே நன்றியுடன் நினைவிற்கொள்கிறேன்.

நாட்டுடைமைக்குப்பின் பல பதிப்பகத்தார் சில நூல்களை, எடுத்துக்காட்டாகத் “திருவாசகம் உரை” “தனிப்பாடல் திரட்டு உரை” இரண்டு பாகங்கள், “இலக்கிய வரலாறு” போன்றவைகளை மட்டுமே பதிப்பித்து வருகின்ற சூழ்நிலையில், காவ்யா பதிப்பக உரிமையாளர், இவ்விழாத்தலைவர் சண்முக சுந்தரம் அவர்கள் ஒரு திங்கள் முன்னர் எளியவன் இல்லத்தில் சந்தித்து கா.சு.பிள்ளை நூல் தொகுப்பு வெளியிடவுள்ள விபரம் கூறியவுடன், கா.சு. பிள்ளை நூல்கள் தந்தால் தானே அவற்றை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்கள். பின்னர் எளியவன் அனுப்பிய நூற்பட்டியலில் இருபத்து மூன்று நூல்களைத் தேர்ந்து தெரிவித்தார்கள் .

இங்கு வெளியிடப்பட்ட “கா.சு.பிள்ளை  கட்டுரைக் களஞ்சியம்: (தொகுதி -1) ஏழு நூல்கள் இடம்பெற்றுள்ளன. முதலாவதாகத்“தமிழர் சமயம்”நூல். சிறப்புமிக்க நம் சைவசமயத்தின் மாண்பையும்,தனித்துவத்தையும்,எளிமையாக விரிவாக விளக்கியுள்ளார்கள்.குறிப்பாக இந்து என்ற சொல்லுக்கான அவர்கள் கருத்துக்கள் சிறப்பானவை. நிலையை  எழுபத்தைந்து ஆண்டுகட்கு   முன்னரே சைவசமயத்தின் விரிவால ஆய்ந்து சொல்லியுள்ளார்கள். அனைவரும் படித்து அனுபவித்து உணரவேண்டிய கருத்துக்  கருவூலமாகும்”தமிழர் சமயம்.”.

இரண்டாவதாக  இடம் பெற்றுள்ளது “சேக்கிழார் வரலாறும் பெரிய புராண ஆராய்ச்சியும்” என்றநூல்..வேளாளர் ஆராய்ச்சி, பெரியபுராணத் தோற்றம், பெரியபுராண அரங்கேற்றம் ஆராய்ச்சி     எனப்பலதரப்பட்ட  கருத்துக்களைத் தொகுத்தளித்துள்ளார் சிறந்த ஆய்வு நுல் சைவசமயிகள் மட்டுமல்லாது இலக்கிய ஆர்வலர்களும் படித்தின்புறத்தக்க நூலாகும் “சேக்கிழார் வரலாறும் பெரிய புராணா ஆராய்ச்சியும்”.

மூன்று,நான்கு,ஐந்து,ஆறு என இடம்பெற்றுள்ளன “மணிவாசகப் பெருமான் வரலாறு”,”சுந்தர மூர்த்தி நாயனார் வரலாறு “”அப்பர் சுவாமிகள் திருநாவுக்கரசு சுவாமிகள் ஆகியனவாம். அந்நான்கு நூல்களும் நால்வர் பெருமக்களின் கதையைச் சொல்வதோடமையாமல், அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் அதற்கு இறையருள் துணை நின்றதென மிக விளக்கமாகத் த்ந்துள்ளார். வரலாறு கூறுவதுடன் நூல் ஆராய்ச்சி தான் அவர்க்ளது நோக்கமாக இருந்திருக்கிறது. நால்வர் பற்றிய அவர்கள்து நோக்கமாக இருந்திருக்கிறது. நால்வர் பற்றிய அவர்கள் ஆய்வினைத் தனித்தனியே எடுத்தியம்பக் காலமும், நேரமும் போதாது. எனவே நால்வர் பற்றி நயமுடன் கூறும் இந்நன்னூல்கள் சிவனடியார்கள் சிந்தைக் கவைவன அள்வில் நிறுத்துகின்றேன்

ஏழாவது நூல்”மெய்கண்டாரும் சிவஞானபோதமும்” என்பதாகும் “வெண்ணெய்நல்லூர்ப் பெருமை” ஆலநக் கல் வெட்டுகள், அவ்வூர்த்திருப்புகழ், கலம்பகம் பற்றிய குறிப்புகளைப் பதிவு செய்துள்ளார்கள். “இராசப்ப நால்வர் மெய்கண்ட தேவர் கல்வெட்டும் காலமும் என்அ பகுதி கல்வெட்டாரந்ச்சியாள்ர்கள் படித்தின்புற வேண்டியதாகும். சிவஞானபோதத்தின் செம்பொருளைத்தெளிவுபடக்காட்டியுள்ளதும், “சிவஞானபோதம் தமிழ் முதல் நூலே” என்பதைபபல பல சான்றூகளுடன் நிறுவி உள்ளதும் இந்நூலின் டிஅப்பாம். இதுவரை” கா.சு.பிள்ளை கட்டுரைக் களஞசியம்” நூலில் இடம்பெற்றுள்ள ஏழு நூஊல்களின் சிறப்பையும் ஓரளவு கண்டனம்.

பதிப்பாசிரியர், இந்நூலில் கா.சு.பிள்ளை வழ்க்கைக் குறிப்புடன் “ கா.சு.பிள்ளை படைத்தவை” “ கா.சு.பிள்ளை எழுதிய தமிழ்க் கட்டுரைகள்”.”கா.சு.பிள்ளை தீட்டிய கவிதைகள்” “கா.சு.பிஒள்ளை நிகழ்த்திய சொபொழிவுகள்”, “பிற ஆசிரியர்தம் நூல்கள் ஐந்தும் ஆக ஒரு நூற்றொன்பது செயலாகும். அதற்காக அவர்களைப் பாரல்லுகின்றேன்.

இரு தினங்கள் முன்னர்  எளியவனில்லத்தில் காவ்யா சண்முகசுந்தரம் அவார்க்ளோடு உரையாடிக்கொண்டிருந்த போது 2017 எப்ரல் 30 ஆம்ஃஆல் கா.சு.பிள்ளை எழுபத்திரண்டாவது நினைவு ஆளில் நெல்லையில் பெரு விழாவாகக் கட்டுரைக் கள்ஞ்சியம் 2ஆவது தொகுதி வெளியிடத் திட்டமெனப் பேருவகையுடன் தெரிவித்தார்கள். கா.சு. பிள்ளை நூல்கள் மீளவும் அச்சு வாகனமேறித் தமிழ் கூறும் நல்லுலகில் உலா வரவேண்டுமென்ற எளியவன் வேணவா நிறவேற அவர்களுக்கு உறுதுணையாகப் பலகாலம் பாதுகாத்துப் பேணிவரும் நூல்களில் . அவட்கள் தேர்வு  (23 ) இருபத்துமூன்று நூல்களின் உலர்நகல்  (ஜெராக்ஸ்) படிகளை எவ்விதக் கைமாறும் கருதாது காவ்யா சண்முகசுந்தர்ம்  அவர்களிடம் வழங்கியதில் பேருவகையடைகின்றேன்.

இவ்விழாவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் குன்றக்குடி, திருவண்ணாமலை ஆதீனம், குருமகா சந்நிதானம், திருப்பெருந்திரு தெய்வசிகாமணி பொன்மைம்பல தேசிகபரமாசாரியசுவாமிகள் “ இந்தபதிப்பைப் போல காசுபிள்ளை அவர்களின் எஞ்சிய ஃஊல்களும்வெளியிடும் முயற்சி வெற்றி பெறவும், விழா இனிது நிறைவெய்தவும் திருவருளைச் சிந்தித்து வாழ்த்துகின்றோம் “ எனக் குறிப்பிட்டுள்ளார்கள் என்ற தகவலைக்கோறி அவ்வாழ்த்துச் செய்தியையும் அவர்களிடம் வழங்குகின்றேன்

இவ்வரிய வாய்ப்பினை நல்கிய திருவருளுக்கும், காவ்யா அதிபர் அவர்களுக்கும் நன்றி கூறி அமைகின்றேன். நன்றி, .வணக்கம்.

நெல்லை மு.சு.சங்கர்
    
    காவ்யா 10 நூல்கள் வெளியீடு: கா.சு.பிள்ளை , மு.சு.சங்கர் வெளியீட்டு உரை!

    Wednesday, November 30, 2016படம் : அன்னையின் ஆணை  - 1856 .  இசை :எஸ். எம்..எஸ். நாயுடு

கதை இயக்கம் :-C.H.நாராயண மூர்த்தி . பின்ணி ::  T.M சுந்தரராஜன்தொகையறா

பத்துமாதாம்         சுமந்து         பெற்றாள்
பகலிறவாய்         விழித்திருந்து         வளர்த்தாள்
வித்தகனாம்        கல்விபெற         வைத்தாள்
மேதினியில்        நம்வாழ்ச்     செய்ள்தாள்

பல்லவி 
அடிதொழ  மறுப்பவர்   மனிதரில்லை
                        மண்ணில்  மனிதரில்லை

அன்னைக்யை ப்  போலொரு  தெய்வமில்லை  -அவள்                                                                                                            ( அன்னையைப் )

சரணம்

நாளெல்லாம்  பட்டினியாய்  இருந்திடுவாள் - ஒரு
நாழிகை நம்பசி பொறுக்கமாட்டாள்
மேலெல்லாம் நாம்வாழத்ச் செய்திடுவா!                    

                                                                                                (அன்னையைப் )

கவிஞர் பொன்.செல்லமுத்து[

 31-சிங்கர்ங்கர் தெரு

-600102

கவி கா.மு ஷெரிப் திரை இசைப் பாடல்கள் தொகுப்பு =”-படம் : அன்னையின் ஆணை  - 1856 .  இசை :எஸ். எம்..எஸ். நாயுடு

கதை இயக்கம் :-C.H.நாராயண மூர்த்தி . பின்ணி ::  T.M சுந்தரராஜன்தொகையறா

பத்துமாதாம்         சுமந்து         பெற்றாள்
பகலிறவாய்         விழித்திருந்து         வளர்த்தாள்
வித்தகனாம்        கல்விபெற         வைத்தாள்
மேதினியில்        நம்வாழ்ச்     செய்ள்தாள்

பல்லவி 
அடிதொழ  மறுப்பவர்   மனிதரில்லை
                        மண்ணில்  மனிதரில்லை

அன்னைக்யை ப்  போலொரு  தெய்வமில்லை  -அவள்                                                                                                            ( அன்னையைப் )

சரணம்

நாளெல்லாம்  பட்டினியாய்  இருந்திடுவாள் - ஒரு
நாழிகை நம்பசி பொறுக்கமாட்டாள்
மேலெல்லாம் நாம்வாழத்ச் செய்திடுவா!                    

                                                                                                (அன்னையைப் )

கவிஞர் பொன்.செல்லமுத்து[

 31-சிங்கர்ங்கர் தெரு

-600102

Tuesday, November 15, 2016

யுனைடெட் பேமண்ட்ஸ் இண்டர்பேஸ் எனப்படும் யுபிஐ தொழில்நுட்பம் இந்தியாவில் நுழைந்துவிட்டது.

எனது தாத்தா அவரது அப்பா போலவே ஒரு வியாபாரி. ராமநாதபுரம் மாவட்டக் கிராமமான கடலாடியில் அவர் கடை வைத்திருந்தார். அவரது கடைக்கான சரக்குகளை வாங்க ராமநாதபுரம் டவுன் அல்லது மதுரைச் சீமைக்கு அவர் புறப்படுகிற விதமே தனிவகையாக இருக்கும்.
கனத்த கோவணம்போலப் பட்டையாகவும் நீளமாகவும் ஒரு பை வைத்திருப்பார். அது சரியாக ஒரு ரூபாய் நோட்டுக் கத்தை உள்ளே நுழையும் அளவுக்குக் கச்சிதமாக இருக்கும். அதற்குள்ளே நுழைத்து நுழைத்துக் கத்தைகளை அடுக்குவார். கவனமாக அதை எடுத்து இடுப்பில் சுற்றுவார். இரு முனைகளிலும் இருக்கிற கொக்கியை மாட்டிக்கொள்வார். ஒரு தலைமறைவுக் குற்றவாளிபோலப் பெல்ட் அவரது இடுப்பில் தலைமறைவு கொள்ளும். அதன் மேலே டிராயர் போட்டு நாடாவை இழுத்துக்கட்டிக்கொண்டு போவார். பணத்தை ஓரிடத்திலிருந்து வேறிடத்துக்குப் பத்திரமாகக் கொண்டுசெல்ல நம்மூரில் இருந்த நடைமுறைகளில் ஒன்று இது.

பணத்தின் பயணங்கள்

மதுரை வியாபாரிகளுக்குப் பத்து வயசுப் பையன்கூட அண்ணாச்சிதான். தெற்கு வாசலில் இருக்கும் கமிஷன் மண்டிகளில் வெல்லம் மலையாகக் குவிந்து கிடக்கும். விவசாயிகளின் ஒரு வருட உழைப்பு பணக்கட்டுகளாக மாறும் இடம் அது. ஒரு கடையிலிருந்து இன்னொரு கடைக்குப் பணக்கட்டுகளை இடம் மாற்றும்போது பனியனுக்குள் பணக்கட்டுகளை அடுக்கிக்கொண்டு போவார்கள். இப்படியான வழிமுறைகளுக்கான அவசியம் எல்லாம் இன்று குறைந்தேவிட்டது.
பணத்தை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டுபோகும் வழிகள் இன்று கடவுளின் பத்து அவதாரங்கள்போலப் பலவகையாக இருக்கின்றன. அதில் ஒன்று பண அட்டை. மற்றொன்று கடன் அட்டை. இணைய வழி பணப் பரிமாற்றம் உள்ளிட்ட வழிகளும் உள்ளன.

காலாவதியாகும் ஏடிஎம்

இந்த அட்டைகள் வந்தாலும் பணப் பரிமாற்றத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. ‘பேடிஎம்’(Paytm) போன்ற மொபைல் வாலெட் நிறுவனங்கள் தங்களின் போட்டி நிறுவனங்களின் பணப் பரிமாற்றங்களில் சிக்கல்களை உருவாக்குவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. பண அட்டைகள் நகலாக்கம் செய்து மோசடி செய்கிறார்கள் என்ற புகார்களும் எழுந்துள்ளன.

இந்தச் சூழலில்தான் யுனைடெட் பேமண்ட்ஸ் இண்டர்பேஸ் எனப்படும் யுபிஐ (UPI) புதிய தொழில்நுட்பம் இந்தியாவில் நுழைந்துவிட்டது. இது உங்களின் செல்போனையே ஒரு பண அட்டையாக மாற்றுகிறது. இதன் செயலியை எல்லோரும் தங்களின் செல்பேசியில் நிறுவிக்கொண்டால், ஏடிஎம் பக்கம் போகத் தேவையில்லை. ஏற்கெனவே பலர் தற்போது தாங்கள் பணம் போட்டு வைத்துள்ள வங்கிக்கே போவதில்லை. வங்கியைப் பண அட்டை (ஏடிஎம் கார்டு) விழுங்கி வருகிறது. அதைப் போல நாளை பண அட்டையை நமது கையில் உள்ள செல்பேசி விழுங்க ஆரம்பிக்கிற ஒரு புதிய சூழலில் நாம் நுழைந்துள்ளோம்.

குறுஞ்செய்தி போதும்

அப்படி என்ன இருக்கிறது இந்தப் புதிய தொழில்நுட்பத்தில்? இணைய வழியாகப் பணத்தை வேறு ஒருவருக்கு மாற்றுபவர்கள் ஐ.எம்.பி.எஸ். எனும் (உடனடி பணப் பரிமாற்றச் சேவை) முறையில் அனுப்புவார்கள். பணத்தை யாருக்கு அனுப்புகிறோமா அவரது வங்கிக் கணக்கு எண்ணும் அந்த வங்கியின் ஐ.எஃப்.எஸ்.சி. கோட் எனும் அடையாள எண்ணும் அதற்கு வேண்டும்.
ஆனால், தற்போது புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ள முறையில் அது எதுவும் உங்களுக்குத் தெரிய வேண்டாம். neethi@indianbank அல்லது 1234567890@indianbank என்று உங்களின் செல்பேசி எண்ணை வைத்தோ உங்களுக்கு ஒதுக்கப்படுகிற ஒரு அடையாள எண்ணை மட்டும் வைத்துக்கொண்டு உங்களால் உடனடியாகப் பணத்தை இன்னொருவருக்கு அனுப்ப முடியும்.

ட்ருபே எனும் செயலி

கடைக்காரர் தனது செல்பேசியிலிருந்து ஒரு குறுஞ்செய்தி அனுப்புவார். அதில் உள்ள சுட்டியைச் சொடுக்கி, நீங்கள் அவருக்குத் தர வேண்டிய பணத்தைக் குறிப்பிட்டு அனுப்பினால், அவரது வங்கிக் கணக்குக்குப் பணம் போய்விடும். அவரும் ‘கிடைத்துவிட்டது நன்றி’ என்பார். நீங்கள் போய்க்கொண்டேயிருக்க வேண்டியதுதான்.

இணைய வழி பணப் பரிமாற்றங்கள், பண அட்டை மற்றும் கடன் அட்டை பயன்படுத்திச் செய்யப்படும் பரிமாற்றங்கள், மொபைல் வாலெட்கள் மூலமாக நடைபெறும் பரிமாற்றங்கள் எல்லாவற்றையும்விட மிக எளிதானது இந்த முறை.

இந்தப் பணப் பரிமாற்ற முறையில் ஆதார் அட்டையும் இணைக்கப்பட உள்ளது. தற்போது இந்தப் புதிய முறைக்கு ஆக்ஸிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எஃப்.சி. உள்ளிட்ட 19 வங்கிகள் சம்மதித்துள்ளன. இந்த வருட முடிவுக்குள் மேலும் பல வங்கிகள் இதில் இணையும். மத்திய அரசின் தேசியப் பணப் பரிமாற்றக் கழகம் எனும் அமைப்பின் முன்முயற்சியில் ட்ருபே (Trupay) எனும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதனை நீங்கள் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

20 கோடித் திறன்பேசிகள்

இந்தியாவில் ஆதார் அட்டைகளை வாங்கி யிருப்பவர்களும் சாதாரண செல்பேசிகளை வைத்திருப்போரும் 100 கோடியைச் சமீபத்தில் தாண்டியுள்ளனர். ஸ்மார்ட் போன்கள் எனப்படும் திறன்பேசிகள் 20 கோடிப் பேரிடம் இருக்கின்றன.

இந்தியா மட்டுமே இந்தப் புதிய வழிமுறைக்கு மாறவில்லை. ஆப்பிரிக்க நாடுகளான கானா, கென்யா, தான்சானியா நாடுகளும் இதை அமல்படுத்திவிட்டன. சுமார் 3 கோடிப் பேர் வசிக்கும் கானாவில் 17% பேர் செல்பேசி வழியாகப் பணப் பரிமாற்றம் செய்கின்றனர். 91% பேர் அங்கே செல்பேசி வைத்துள்ளனர்.

இந்தியாவில் 2.5 கோடி வியாபாரிகள் உள்ளனர். ஆனால், பண அட்டை தேய்க்கும் இயந்திரங்களை 12 லட்சம் பேர்தான் பயன்படுத்துகின்றனர். அரசுக்கு வரி செலுத்துவதிலிருந்து தப்பிப்பதற்காக வெளிப்படையான பணப் பரிமாற்றங்கள் நடப்பதை வியாபாரிகளில் ஒரு தரப்பினர் விரும்புவதில்லை. இனி மேலும் அத்தகைய மனப்போக்கில் வியாபாரிகளை இருக்க விடாமல் இந்தப் புதிய தொழில்நுட்பம் நெருக்கடி கொடுக்கும். நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு அது நல்லது.

அடுத்த தேர்தலில் “ஒரு வாக்குக்கு எத்தனை எஸ்எம்எஸ்ஸு?” என்றும் குரல்கள் கேட்கும் என்று நினைக்கிறீர்களா? அதுவும்தான்.

‘இன்று நகரில் 50 செல்பேசிகளைப் பறித்துப் பல்லாயிரம் ரூபாய் திருட்டு’ என்பது போன்ற செய்திகளை நாளிதழ்களில் வாசிப்பதற்கும்தான் நீங்கள் தயாராக வேண்டும்!

- த.நீதிராஜன்

தொடர்புக்கு: neethirajan.t@thehindutamil.co.in

நன்றி :- இந்து தமிழ் நாளிதழ்

விரைவில் வரலாம் பணமற்ற உலகம்!

:

யூதர்களிடம் ஓர் வழக்கம் உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் ஓர் கைத்தடி
 ( ஊன்றுகோல் போன்றதொரு கம்பு ) உண்டு. அதில் அந்தத் தலைமுறையினரது தலைவர் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். அத்தடியானது அக்குடும்பத்தினரது பரம்பரைச் சொத்தாகத் திகழும். வாழையடி வாழையாகத் தொடரும் குடும்பத் தலைமுறையினரின் தலைவர் பெயர்கள் அத்தடியில் தொடர்ந்து பொறிக்கப்படும். பல தலைமுறையினரின் பெயர்களைத் தெரிந்து வைத்துள்ள ஒரே சமூகம் யூதர்கள் இனம்தான் என்பது ஆய்வறிஞர்களின் திடமான கருத்து.அத்தகையதோர் நடைமுறையினைப் பின்பற்றி, தனிப்பட்ட இனம் என்றில்லாது, ஓர் ஊரின் வரலாற்றைப் பதிவு செய்ய முற்பட்டதன் வெளிப்பாடே “சங்கரன்கோவில்” என்னும் இந்நூல்.

சங்கரன்கோவில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளதோர் வட்டத்தின் ( Taluk H.Q. ) தலைநகரம். 1000 ஆண்டுகள் பழமையான மூதூர். “சங்கரன்கோவில்” என்னும் தலைப்பில் அவ்வூரைப்பற்றிய தகவல்களையெல்லாம் தொகுக்கும் களப்பணியின் முதல் தொகுப்பே இந்நூல்.அப்பாவும் மகனும் சேர்ந்து எழுதிய ஒரே நூல் -அதுவும் ஒரு ஊரைப்பற்றிய நூல் -தமிழில் ஏன் ? உலகிலேயே இது ஒன்றாகத்தான் இருக்கமுடியுமென்றே ஐயமின்றிக் கூறலாம். ”அவையத்து முந்தியிருக்கச்” செய்த தந்தை: “இவன் தந்தை எந்நோற்றான் கொல்” என்று உலகம் வியந்து பாராட்டும் மகன் என இருவருமே திருவள்ளுவரின் திருக்குறளுக்கு இலக்கணமாய்த் திகழ்கின்றனர்.ஆளுமைக்கு ஓர் அடையாளம் பி.காம்.பழநிசாமி” என்ற தலைப்பில் தி இந்து ஞாயிறு, மார்ச் 9, 2014 -இல் தொகுத்தளித்துள்ள தகவல்கள் சங்கரன்கோவில் பெரியவர் பழநிசாமியின் தகைமையைப் பறைசாற்றும்.

தெருக்களில் ஜாதிப்பெயர்களை அகற்றிய அவரது செயல், பின்னாளில் எம்.ஜி.ஆர். மூலம் தமிழகத்திற்கே சட்டமாக்கப்பட்ட வரலாறு இவ்வூர் மக்கள் அனைவரும் நினைந்து நினைந்து பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டிய செயலாகும்.

கையில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் இருந்தும், அது தொழிலாளர்களுக்குச் சொந்தமான பணம் என்பதால் பஸ்ஸுக்கான கட்டணத்தைக்கூட எடுத்துக்கொள்ளாமல் திருவொற்றியூரிலிருந்து தியாகராய நகர்வரை நடந்தே சென்றவர், தோழர்.ப.ஜீவானந்தம். அதுபோன்று தேர்தல் செலவுக்குக் கிடைத்த 17,000/- ரூபாயில், 12,000 செலவுபோக, மீதித் தொகையைத் தலைமையிடம் ஒப்படைத்த அ.பழநிசாமியின் நேர்மைத்திறத்தினை வியந்து பாராட்டத்தானே வேண்டும்?

லண்டனில் பார்-அட்லா பட்டம் பெற்றவர் கே.டி.கே.தங்கமணி. தமிழகப் பொதுவுடைமைக் கட்சியின் மறக்க முடியாத தலைவர். கிடைத்ததைச் சாப்பிட்டு, கையில் உள்ள நாளிதழையே தரையில் விரித்துப் பரப்பி , அதன்மீது படுத்துறங்குமளவிற்கு எளிமையானவர். ஆனால் கோடீஸ்வரக் குடும்பத்தில் பிறந்தவர். ஆங்கிலம் தெரிந்த தொழிற்சங்கத் தலைவராக வலம் வந்தவர்.

தான் உயிரோடு இருந்தவரை தமிழக அரசியலின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றியவர், தோழர்.எம்.கல்யாணசுந்தரம். இம்மூவரின் பண்புகளையும் அ.பழநிசாமியிடம் பார்க்க முடிகின்றது.

தோழர். எம்.கே. இறுதி நாட்களில் கூறியது. “கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்போரெல்லாம் கம்யூனிஸ்டுகள் அல்ல; கம்யூனிஸ்ட் கட்சியில் இல்லாதோரெல்லாம் கம்யூனிஸ்ட் அல்ல” என்றும் கூற முடியாது.” எம்.கே. இறுதிநாட்களில் ஈ.வே.ரா.வின் நூல்களையே மறுவாசிப்புச் செய்துவந்தார் என்பதையும் தவலுக்காகக் குறிப்பிடுதல் அவசியமாகின்றது: மானுடத்தை மெய்யாக நேசித்துச் சமூக அக்கறையுடன் செயல்படுவோர் அனைவருமே கம்யூனிஸ்டுகள்தான் என்பதை எடுத்துரைக்கும் அவ்வரிகள் சுட்டும் உண்மையின் அடிப்படையில் அ.பழநிசாமியை ஓர் மெய்யான கம்யூனிஸ்டாகவே கருதுதல் வேண்டும்..

தமிழ்நாட்டில் அ.பழநிசாமி போன்று கொள்கைப் பிடிப்புடன், அந்தரங்க சுத்தியோடு செயல்பட்ட / செயல்பட்டுக்கொண்டிருக்கும் அரசியல் பிரமுகர்கள் அனைத்துக் கட்சிகளிலும் உள்ளனர். அத்தகையோர் சரித்திரத்தை எல்லாம் ஒருங்கு திரட்டி, மாணாக்கருக்குத் துணைப்பாட நூலாக்கிடுவதன்மூலமும் ஊழலற்ற வளமான வாழ்க்கையை அமைத்திட இயலும் என்பதும் மறுக்க இயலாத உண்மை. ஜீவா, கக்கன், காமராஜர் போன்றோர் பாடத்திட்டங்களில் இடம்பெற்றுள்ளார்களா?

சங்கரன்கோவிலா? சங்கரன்கோயிலா? சங்கரநயினார் கோவிலா? என்ற ஐயப்பாடெல்லாம் இந்நூலைப் படித்தவுடன் நீங்கிவிடும். கோவிலைக்கட்டிய உக்கிரபாண்டிய மன்னன், தலைமைச் சிற்பி உமாபதி சிவாச்சாரியார்,.சங்கரலிங்கப் பெருமான், ஆவுடையம்மாள் என்கிற கோமதி அம்மன் என திருக்கோயில் குறித்த சகல விபரங்களும் இந்நூலில் அருமையாகக் காணக்கிடக்கின்றன.

Manikrivan-100×100

இவ்வூரின் மிகச்சிறப்பம்சம் என்னவென்றால், கோவில் அமையக் காரணமாக இருந்தவர் மணிக்கிரீவன் என்ற காவற்பறையன். அவரது உருவச்சிலை கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.கோவிலுக்குள் உள்ள நிர்வாக அலுவலகம் அருகில். வரலாறு தெரிந்த பக்தர்கள் இனவேற்றுமை பாராட்டாது அவரைத் தொட்டு வணங்கியபின்னரே சாமி சந்நிதிக்குச் செல்வர். பல்வேறு சமூகத்தினரும் ஆளுக்கொரு நாளாய்ப் பகிர்ந்து ஆடித்தவசுத் திருவிழாவைக் கொண்டாடி மகிழ்வது மற்றொரு சிறப்பு. வேற்றுமையில் ஒற்றுமைக்கு சங்கரன்கோவில் ஒரு நிகழ்காலச் சான்றாகத் திகழ்கின்றது

திருக்கோவில் சந்நிதியில் உள்ள தெய்வத் திருஉருவங்களைக் கோவிலுக்கு வெளியே இருந்து நேரடியாகத் தரிசனம் செய்யும் முறையிலேயே எல்லாக் கோவில்களும் அமைக்கப்பட்டிருக்கும். இவ்வூர் சங்கரலிங்கப் பெருமான், கோமதி அம்மன் திருவுருவம் அமைந்துள்ள சந்நிதானங்களே அதற்கான சாட்சியங்களாகத் திகழ்கின்றன. ஆடித்தவசுத் தவசுத் திருவிழாவிற்கு அடிநாதமாக விளங்குபவர் சங்கரநாராயணர். கோவில் நடுவில் அமைக்கப்பட்ட சந்நிதி. அவரைக் கோவிலின் வெளிப்புறத்திலிருந்து நேரடியாக வணங்க இயலாது. ஏனெனில், அஃது இடையில் வலிந்து உருவாக்கப்பட்டது. எந்த ஆண்டு யாரால் சங்கரநாராயணர் சந்நிதி உருவாக்கப்பட்டது என்பதை மா.பட்டமுத்து எழுதிய கட்டுரையில் காணலாம். கோவிலில் விற்கப்படும் தமிழ்த் தலபுராணப் புத்தகத்திலேயே இவ்வுண்மை எடுத்துரைக்கப்பட்டுள்ளது.. அதற்கு ஆதாரமாக 1917 -ஆம் ஆண்டில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் பேட் துரை எழுதிய கெஜட் நோட்டிபிகேஷன் பற்றிய தகவல்கள் மேற்படி நூலில் தமிழில் இடம்பெற்றுள்ளது. அதன் ஆங்கில வடிவம் “சங்கரன்கோவில்” நூலில் நூலாசிரியர்கள் இடம்பெறச் செய்துள்ளமை பெரிது,ம் பாராட்டத் தக்கது.

இ.மு.சு. என்கிற இ.மு.சுப்பிரமணியபிள்ளை என்கிற தமிழறிஞர் 30 ஆண்டுகளுக்குமேல் வாழ்ந்த பெருமையுடையது இவ்வூர். இவருக்கு வடமொழி பிடிக்காது. சைவத்திற்குத் தமிழும் வடமொழியும் வேண்டும் என்றும், தமிழ் மட்டுமே போதும் என்றும் வாதிடும் பழக்கம் இவ்வூரில் இன்றும் அனுதினமும் ஏதாவது ஓரிடத்தில் விவாதப்பொருளாகக் கொண்டிலங்கும், பெரியவர் இ.மு.சு. இராமாயணத்தைப் பார்த்த கோணமே வேறு. அந்த அணுகுமுறைதான் ஈ.வே.ரா.விற்கு கீமாயணச் சிந்தனைகளைத் தோற்றுவித்தது. சந்திரசேகரப் பாவலர் என்ற புனைபெயரில் இவர் எழுதிய சமுதாய எழுச்சிக் கட்டுரைகள் ஈ.வே.ராவின் குடியரசு 9 ஆண்டுகள் தொடர்ந்து இடம்பெற்றன. இ.மு.சு. என்ற மூன்றெழுத்துடன் சென்னைக் கோட்டைக்குச் சென்றால் எந்தக் காரியத்தையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பது அப்போதைய நடைமுறையாக விளங்கியது வரலாற்று உண்மை., கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களது பணிக்காலத்தை ஆண்டு முழுவதும் நீடிக்கச் செய்யும் அரசு ஆணைக்கு வழி வகுத்தவர் இ.மு.சு. நெல்லை மாவட்டத்தில் வரலாறு தெரிந்த மூத்த ஆசிரியர்கள் இன்றும் அந்த அரசாணையை “இ.மு.சு. G.O.” என்றே குறிப்பிட்டுப் பேசுவது வழக்கம். தமிழ் ஆட்சிமொழியாக அனைத்துக் கட்சிகளையும் ஐக்கியப்படுத்தி மாநாடு நடத்திய பெருமைக்குரியவர் பெரியவர் இ.மு.சு.

நூலாசிரியர் ப,அருணகிரிக்கு ஓர் வேண்டுகோள். தமிழ் செம்மொழி ஆக்கப்படுவிட்டது என்றாலும் பாதிக்கிணறு தாண்டிய கதையாகத்தான் உள்ளதென்பதே உண்மை.தமிழின் தொன்மைக்காலம் 1000 / 1500 என்று பேரம்பேசியே முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவறு. 5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் ஒரே மொழியாக இருந்த பெருமையுடையது தமிழ்மொழி. சமஸ்கிருத மொழியின் தாக்கத்தாலே தமிழ் மொழிக்கு ஏற்பட்ட இடையூறுகளாலேதான் தற்போது 24 தேசிய மொழிகளில் ஒன்றாகியுள்ளது. இச்சூழலில், அனைத்து தமிழார்வலர்களையும் ஐக்கியப்படுத்தி தமிழின் தொன்மைக்காலத்தை மாற்றியமைத்திட மாநாடொன்று நடத்தி நடுவண் அரசை வற்புறுத்திட வேண்டும். தலைவர் வைகோவின் துணையுடன் வெற்றியும் பெறவேண்டும். இப்போது செய்யாதுபோனால், நதிநீர்ப் பிரச்சினை போன்று தீராத தலைவலியே தொடரும்.

தேசியக் கட்சிகள்கூட வோட்டு வேட்டைக்காக மாநிலத்திற்கு மாநிலம் ஒரு நிலை எடுப்பது சரிதானா? நதிகள் இணைப்பு என்பது இரண்டாவதாக இருக்கட்டும். நதிகள் தேசிய மயமாக்குதல் எப்போது நிகழும் ? )

இ.மு.சுவின் மகன் முத்துசாமி எழுதிய “திண்ணையிலே” என்ற நூலில் இ.மு.சு.வின் வரலாற்றினை முழுமையாகப் படிக்கலாம் என்று கூறுகின்றார், நடமாடும் சைவச் சுடரொளி மா.பட்டமுத்து. 63 -நாயன்மார்கள் மற்றும் சைவசித்தாந்தம் குறித்து மா.பட்டமுத்து ஆற்றியுள்ள பக்திச் சொற்பொழிவுகள் அனைத்தும் அவர்தம் நண்பர் எஸ்.சுப்பிரமணியன் மூலமாக ”யூடியூப்” ( You Tube mpattamuthu youtube என்று தட்டச்சு செய்தால் போதும்) வாயிலாக இணையத்தில் உலகை வலம் வந்துகொண்டிருக்கின்றன.

சைவசித்தாந்தம் குறித்து ஐயப்பாடுகள் எழுமானால் அவரைத் தொடர்பு கொள்ளலாம். மா.பட்டமுத்து, சங்கரன்கோவில் ( அவசியம் என்று கருதினால், வடக்குரதவீதியையும் சேர்த்துக் கொள்ளுங்கள் ) என்ற முகவரிக்கு எழுதிப் பயன்பெறலாம். உழவாரப் பணிகளில் தன்னையும், தன்னைச் சார்ந்தோரையும் ஈடுபடச்செய்து சிவத் தொண்டால் பொழுதளக்கும் பெருமகன் அவர்.ஆடித்தவசுத் திருவிழாவையொட்டி இலக்கிய நிகழ்வுகள், பக்திச் சொற்பொழிவுகள் கோவில் வாசலின் முன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட பந்தலில் நிழ்த்தப் பெற்றது அந்தக்காலம். அதுபோன்றதொரு நிகழ்வில் கிருப்பானந்தவாரியார் திருக்கரங்களால், சிறுத்தொண்ட நாயனார் குறித்துப் பேசியமைக்காக இரண்டாம் பரிசு வாங்கியது பசுமையாக நினைவில் உள்ளது. தற்போது கோவிலின் வெளிப்புறகாரத்தில் ஒரு சிற்றிடத்தில்தான் நடைபெறுகின்றது. பார்வையாளர்களும் மிகமிகக் குறைவே. மா.பட்டமுத்து போன்ற சான்றோர்கள் அழைக்கப்படுவதுமில்லை. கலந்துகொள்வதிலும் அத்தகையோருக்கு விருப்பங்களும் இல்லை.

இதற்கு மாற்றாக மா.பட்டமுத்து அவர்களின் முயற்சியில் அதே ஆடித்தவசுத் திருவிழா நிகழும் காலக்கட்டத்தில் , சங்கரன்கோவில் மேற்குரதவீதியும், வடக்குரதவீதியும் இணையும் இடத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் ஓர் சிறப்புநிகழ்வு தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது. இந்தக் கோவில் மேற்குரதவீதியில் உள்ள திருவாவடுதுறை மடத்தை அடுத்துள்ளது. அம்மடத்தில் மேற்படி ஆதீனத்தின் முன்னாள் குருமகா சந்நிதானம் இம்மடத்தில்தான் வேலப்பதேசிகர் ஜீவசமாதி அடைந்துள்ளார். அனைவரும் காணவேண்டிய இடம். .தமிழிசையையும், பன்னிருதிருமுறைகளையும் மனனம் செய்து இசையுடன் பாடி தலைமுறைக்கும் தமிழ் வளர்க்கும் ஓதுவாமூர்த்திகளைச் சங்கமிக்கச் செய்து , பாடச் செய்து, இலவச உணவு, போக்குவரத்துச்செலவு, கெளரவிப்பது என சைவச்சரபம் மாணிக்கவாசகம் பட்டமுத்து அவர்களது பணி இன்றும் தொடர்கின்றது.
சங்கரன்கோவில் திருக்கோவிலில் காணும் அவலம்.

அரிதான நூல்கள் நிறையப் பெற்ற நூலகம் திருக்கோவிலில் உண்டு. அந்த நூலகம் இரு இடங்களுக்கு மாற்றப்பட்டு, தற்போது கோவிலினுள் உள்ள நிர்வாக அலுவலகத்திற்கு அடுத்து அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், யாருமே பயன்படுத்தமுடியாத நிலையே தொடர்கிறது. ஏனெனில், பக்தர்கள் நேர்த்திக்கடனாகச் செலுத்தும் காணிக்கைப் பொருள்களைச் சேமிக்கும் கிட்டங்கியாகவே நூலகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலை என்று மாறுமோ ?

நெல்லை என்றால்
தமிழ்க் கடல்
நெல்லை கண்ணன்

ஈரோடு என்றால்
மக்கள் சிந்தனைப் பேரவை
ஸ்டாலின் குணசேகரன்,

திருப்பூர் என்றால்
டாலர் நகரம் ஜோதிஜி
நினைவுக்கு வரும் காலமிது..

அதுபோன்று இந்நூலைப் படித்தோருக்கு,
சங்கரன்கோவில் என்றால்

ப.அருணகிரிநாதன்
நினைவுக்கு வருவார்
என்பது திண்ணம்.

”சங்கரன்கோவில்” நூல் அறிமுகம் இன்னும் தொடரும்..
அருணகிரியின் நூல்களைப் பெற்றிட அணுக வேண்டிய முகவரி.

ஐஸ்வர்யா புக்ஸ், 2/18 – A, கோகுலம் குடியிருப்பு,

ஸ்ரீராம் நகர் முதன்மைச்சாலை, நொளம்பூர், சென்னை – 600 095
writterarunagiri@gmail.com

facebook : arunagiri sankarankovil

கைப்பேசி :- 9444393903

தற்போது கிடைக்கும் நூல்கள் :-

தமிழ்நாட்டின் கதை,
கட்சிகள் உருவான கதை,
அலைந்ததும் அறிந்ததும்,
ஜப்பானில் அருணகிரி,
அரசியல் பொதுவாழ்வில் வெற்றிபெற,
கொடிவழி,
சதுரங்கம்,
உலகம் சுற்றும் வாலிபன்.
தமிழ் நாடா?டமில்நடுவா?,
திறவுகோல்,
கிழக்கின் கதை,
ஆல்ப்ஸ் மலையில் அருணகிரி,
உலக வலம்,
ஈழத் தமிழ் எழுத்தாளர்கள்,
வாங்க. .பறக்கலாம்,
நாடாளுமன்றத்தின் கதை,
சங்கரன்கோவில்….

தமிழகத்தின் குக்கிராமம் முதல் சிறு பெரு நகரங்கள் வரையுள்ள அனைத்துப் பகுதிகளையும் சார்ந்த தமிழினப்பற்றாளர்கள் தாமே முயன்று ஊர் வாரியாகத் தகவல்களைத் திரட்டி வெளியிடத் துவங்கினால் அவையே தமிழக வரலாறாகத் திகழும்.

நூலாகப் பதிப்பிக்கக் கூட வேண்டாம். மின் நூல்களாக்கினாலே போது,ம். அவற்றையும் இலவசத் தமிழ் மின்நூல்கள் இணையத்தில் இடம்பெறச் செய்தாலே கூடப் போதுமானது.

இவ்வகையில் தக்க தொழில்நுட்ப உதவிகளைப் பெற

tshrinivasan@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம்.

இலவசத் தமிழ்நூல்களைப் படித்திட

இணையதளத்திற்குச் செல்க.

சங்கரன்கோவில் இராமசாமி

winmaniram49@gmail.com

சங்கரன்கோவில் வரலாறு - பழநிசாமி அருணகிரிநாதன். சங்கரன்கோவில்

1946 பிப்ரவரியில் அன்றைய பம்பாயில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகக் கப்பற்படையில் எழுந்த கலகம் கப்பல்கள், கப்பற்படை அலுவல கங்களோடு நின்றுவிடவில்லை. 78 கப்பல் கள், 21 அலுவலகங்களில் எழுந்த காலனிய ஆட்சிக்கு எதிரான போர்க்குரல் பம்பாய் நகர வீதிகளில் மக்கள் எழுச்சியாக உருவெடுத்து இந்தியாவின் பல்வேறு பெருநகரங்களிலும் பரவியது. சும்மா வந்துவிடவில்லை சுதந்திரம் என்பதை நிரூபிக்கும் வகையில் காலனிய அரசுக்கு எதிரான பல்வேறு பிரிவைச் சேர்ந்த மக்கள் எழுச்சியின் வீச்சை, இந்திய விடுதலை யின் ஒளி மிகுந்ததொரு காலப் பகுதியை, மறு வாசிப்பு செய்ய உதவி புரிவதாக அமைகிறது வரலாற்றுப் பேராசிரியர் அநிருத் தேஷ்பாண்டே யின் இந்த நூல்.

-வீ.பா.கணேசன்
Published: November 12, 2016 12:30 IST
நன்றி;-இந்து தமிழ் நாளிதழ்

மறந்துபோன வரலாறு1946 பிப்ரவரியில் அன்றைய பம்பாயில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகக் கப்பற்படையில் எழுந்த கலகம் கப்பல்கள், கப்பற்படை அலுவல கங்களோடு நின்றுவிடவில்லை. 78 கப்பல் கள், 21 அலுவலகங்களில் எழுந்த காலனிய ஆட்சிக்கு எதிரான போர்க்குரல் பம்பாய் நகர வீதிகளில் மக்கள் எழுச்சியாக உருவெடுத்து இந்தியாவின் பல்வேறு பெருநகரங்களிலும் பரவியது. சும்மா வந்துவிடவில்லை சுதந்திரம் என்பதை நிரூபிக்கும் வகையில் காலனிய அரசுக்கு எதிரான பல்வேறு பிரிவைச் சேர்ந்த மக்கள் எழுச்சியின் வீச்சை, இந்திய விடுதலை யின் ஒளி மிகுந்ததொரு காலப் பகுதியை, மறு வாசிப்பு செய்ய உதவி புரிவதாக அமைகிறது வரலாற்றுப் பேராசிரியர் அநிருத் தேஷ்பாண்டே யின் இந்த நூல்.

-வீ.பா.கணேசன்
Published: November 12, 2016 12:30 IST
நன்றி;-இந்து தமிழ் நாளிதழ்

Monday, November 14, 2016

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று அந்த அலுவலகம் முழுவதும் தமிழால் ததும்பி வழிகிறது. மொழிக் காகவும் இன உணர்வுக்காகவும் போராட, பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பேத்தி இசைமொழி ஓர் அமைப்பைத் தொடங்கி, செயல்படுத்திவருகிறார்.

தேநீரா, குளம்பியா என்று தேமதுரத் தமிழில் உபசரித்த இசைமொழி, “தமிழ் ஆர்வமுள்ள 11 பெண்கள் இணைந்து, தமிழகப் பெண்கள் செயற்களம் தொடங்கினோம். தற்போது 64 உறுப்பினர்கள் எங்கள் அமைப்பில் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் எல்லோருக்கும் தமிழ்ப் பெயர் சூட்டினோம். அனைவரையும் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்தினோம்” என்கிறார்.

நம் அடையாளத்தை ஏன் பிறமொழியில் எழுத வேண்டும் என்று கேள்வி எழுப்பி, கையெழுத்தையும் பெயரையும் தமிழில் மாற்ற விரும்புகிறவர்களுக்கு உதவியும் செய்துவருகிறது இந்த அமைப்பு.

“களத்தில் இறங்கிச் செயலாற்றுவதற் காகவே தமிழகப் பெண்கள் செயற்களம் தொடங்கப்பட்டது. செம்மொழி மாநாட்டின்போது, ஒருமாதம் முழுவதும் சென்னையின் பல இடங்களுக்கும் நடந்தே சென்று கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர்களைத் தமிழில் மாற்றினோம். நகரத்தில் சுமார் 10 ஆயிரம் கடைகளின் பெயர்கள் மாற்றப் பட்டன. தற்போது ஆங்கிலத்தில் பெயர் வைத்து வரு கின்றனர். மீண்டும் இந்த முயற்சியைத் தொடங்கிவிட்டோம்” என்பவர், கோயில் களில் தமிழில்தான் வழிபாடு நடத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து, இணையத்திலும் நேரடியாகவும் ஒரு கோடி மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தியிருக்கிறார். தமிழில்தான் வழிபாடு, தேவைப்பட்டால் பிறமொழி வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நீதிமன்றத்தை நாடவிருக்கிறார் இசைமொழி.

வண்டி எண் மாற்றம்

வாரா வாரம் உறுப்பினர்களை ஒன்று திரட்டி சமூகப் பிரச்சினைகளை விவாதித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆலோசிக்கிறார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வண்டி களின் எண்களைத் தமிழ்ப்படுத்தும் வேலைகளைச் செய்துவருகிறார்கள். இதுவரை 3500-க்கும் மேற்பட்ட வண்டிகளின் எண்களைத் தமிழில் மாற்றியிருக்கிறார்கள். இதற்காகச் சென்னையில் முகாம்கள் நடத்திவருகிறார்கள்.

தமிழர் வரலாறு

தமிழர் வரலாற்றை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில், நான்கு தொகுதிகளாகத் தமிழர் வரலாற்றைத் தொகுத்திருக்கிறார்கள். வரலாற்றை எளிமைப்படுத்தி, படங்களுடன் வெளியிட்டு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளனர். மாணவர்களுக்கு வினாடி வினா போட்டியும் நடத்திவருகிறார்கள்.

தமிழர் கலைகளை ஊக்குவிக்கும் வகை யில் தப்பாட்டம், சிலம்பாட்டம், பறையாட்டம், தமிழிசைப் பயிற்சியை ஐந்து மையங்களில் இலவசமாக வழங்கிவருகிறார்கள். 250 மாணவர்களுக்கு ‘நம் வரலாறு’ என்ற தலைப்பில் பாடத்திட்டம் அமைத்து, பயிற்சி வழங்கியிருக்கிறார்கள். துரித உணவுகளை எதிர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

“திருவள்ளுவருக்கு மாலையிட்டு, பொங்கல் முதல் நாளில் தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை மிகப் பெரிய அளவில், குடும்பத்துடன் கொண்டாடிவருகிறோம். இந்த அமைப்பில் உள்ளவர்கள், தங்கள் குடும்பத்தினர் பெயர்களைத் தமிழில் மாற்றியதுடன், குழந்தைகளுக்குத் தமிழ்வழிக் கல்வியும் வழங்கிவருகின்றனர். தொன்மையான தமிழ் மொழி ஏன் அழிகிறது என்ற கேள்விக்குப் பதிலாகத் தமிழகப் பெண்கள் செயற்களம் சார்பில் தொடங்கப்பட்டதுதான் தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி. பத்து ஆண்டுகளாக நடத்தப்பட்டுவருகிறது. வரலாறு தெரியாத எந்த இனமும் வெற்றிபெற முடியாது. அதனால் தமிழர் என்ற உணர்வைத் தட்டி எழுப்ப முயற்சி செய்கிறோம்” என்ற இசைமொழியின் குரலில் மாற்றத்துக்கான தேடல் அழுத்தமாக ஒலிக்கிறது.

நன்றி :- தி இந்து பவானி மணியன் | படங்கள்: எல்.சீனிவாசன்

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பேத்தி இசைமொழியின் தமிழ்த் தொண்டு !

ஒரு நாட்டின் பிரதமர் கையால் மரியாதை நிமித்தமாக மாலை பெறுவதும், அந்த நாட்டின் மிக முக்கியமான அரசாங்கத் திட்டத்தைத் தொடங்கிவைப்பதும் ஒரு சாதாரண பெண்ணுக்குக் கிடைக்கிற மிகப் பெரிய கவுரமாகக் கருதப்படும். புத்னி மஞ்சியாயீன் என்ற பெண்ணுக்கும் அப்படியொரு வாய்ப்பு வாய்த்தது. ஆனால் அதுவே அவரது வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது. தனக்கு மறுக்கப்பட்ட உரிமைகளுக்காகவும் தான் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிராகவும் கடந்த 57 ஆண்டுகளாகப் போராடிவருகிறார் புத்னி.

அது 1959-ம் ஆண்டு. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு, நாட்டின் மிகப்பெரிய திட்டமான தாமோதர் அணைத் திட்டத்தைத் தொடங்கிவைப்பதற்காக மேற்கு வங்கத்துக்குச் சென்றார். அந்த அணைத் திட்டம் மக்களுக்கானது என்பதை உணர்த்துவதற்காக அணை கட்டும் பணியில் இருந்த சாந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்த புத்னி மஞ்சியாயீன் என்பவரை வைத்தே திட்டத்தைத் தொடங்க முடிவுசெய்தார்கள். அப்போது புத்னிக்கு 17 வயது! ஏதுமறியாத அந்த இளம்பெண், அதிகாரிகள் சொன்னபடி செய்தார். அணையைத் திறந்துவைத்த முதல் பணியாளர் என்ற பெருமையையும் பெற்றார். ஆனால் இதோடு முடிந்துவிடவில்லை.

பஞ்சாயத்து கட்டுப்பாடு

அன்று இரவே சாந்தால் இன மக்களின் பஞ்சாயத்து கூட்டப்பட்டது. “ஒரு ஆணிடம் இருந்து மாலை பெற்றதால் அவரே உனக்குக் கணவர்” என்று சொல்லி, புத்னியை ஜவாஹர்லால் நேருவின் மனைவியாக அறிவித்த கொடுமை நிகழ்ந்தது. அதோடு, ஜவாஹர்லால் நேரு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரல்ல என்பதால் தன் இனத்தைச் சேராத ஒருவரை மணந்ததால் புத்னியைத் தங்கள் இனத்தைவிட்டே ஒதுக்கிவைப்பதாகவும் அறிவித்தார்கள். “ஒரு ஆணின் கையைப் பிடித்ததாலேயே ஒரு பெண்ணின் வாழ்வு இப்படிச் சிதையும் என்பது வேதனை நிறைந்தது” என்று குறிப்பிட்டிருக்கிறார் இந்தச் சம்பவம் குறித்து எழுதியிருக்கும் தனிக் பாஸ்கர்.

தொடரும் பிரச்சினை

சொந்த பந்தம் அனைத்தும் தன்னை ஒதுக்கிவைத்த நிலையிலும் தாமோதர் பள்ளத்தாக்கு அணைத் திட்டத்தில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார் புத்னி. பிறகு அந்தப் பணியிலிருந்தும் விலக்கப்பட, மனம் வெறுத்துப் போய் ஜார்கண்ட் மாநிலத்துக்குக் குடிபெயர்ந்தார். அங்கும் சிரமம் நிறைந்த வாழ்க்கைதான். சுதிர் தத்தா என்பவரைச் சந்தித்தார். இருவருக்கும் மனமொத்துப் போனாலும், புத்னி தன் சமூகத்துக்குப் பயந்து அவரைத் திருமணம் செய்துகொள்ளவில்லை. மணம் செய்துகொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்தனர். அவர்களுக்கு மூன்று குழந்தைகளும் பிறந்தார்கள். அப்போதும் புத்னியை அவரது சமூகத்தார் ஏற்றுக்கொள்ளவில்லை.

எப்போது விடிவு?

புத்னி இந்தப் பிரச்சினை குறித்து நேருவின் பேரனான ராஜீவ்காந்தியிடம் 1985-ம் ஆண்டு முறையிட்டார். அதன் பிறகு அவருக்கு தாமோதர் பள்ளத்தாக்கு நிறுவனத்தில் மீண்டும் வேலை கிடைத்தது. தற்போது பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட புத்னி மஞ்சியாயீன், தன் சொந்த கிராமத்துக்குப் பல வருடங்கள் கழித்துச் சென்றிருக்கிறார். இப்போதுகூட அவரை யாரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இந்தப் புறக்கணிப்பு தன்னைக் கொல்கிறது என்று குறிப்பிடும் புத்னி, ராகுல் காந்தியைச் சந்தித்து, தன் பிரச்சினைகள் குறித்து முறையிடும் முயற்சியில் இருக்கிறார். ஓர் ஆணின் கையைப் பிடித்ததாலும் மாலை வாங்கியாதாலுமே வாழ்க்கையே தடம்மாறிப் போன புத்னியைப் போன்ற பெண்கள் இந்தியாவில் இருக்கத்தான் செய்கிறார்கள். சமூகத்தின் கவுரவம் ஒரு பெண்ணின் செய்கையில்தான் அடங்கியிருக்கிறது என்ற பிற்போக்குச் சிந்தனைக்கு எப்போது முடிவு?h

நன்றி :- இந்து தமிழ் நாளிதழ் ஞாயிறு 11 நவம்பர் -பெண் இன்று-க்ருஷ்ணி

பிரதமரின் பெயரால் பறிபோன வாழ்வுரிமை ! 57 ஆண்டுகளாகப் போராடும் பெண்மணி !

நன்றி :- இந்து தமிழ் நாளிதழ் ஞாயிறு 11 நவம்பர் -பெண் இன்று-க்ருஷ்ணிஅமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் (வயது 70) அமோக வெற்றி பெற்றார்.

அவர் அமெரிக்க ஜனாதிபதியாக ஜனவரி மாதம் 20–ந் தேதி பதவி ஏற்கிறார்.

அமெரிக்காவின் புதிய அரசில் இந்தியர் பாபி ஜிண்டால் மந்திரி ஆகிறார்?

டிரம்ப் தலைமையிலான புதிய அரசில் பதவி ஏற்க உள்ள மந்திரிகளை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன.

அந்த வகையில் டிரம்ப் மந்திரிசபையில் இடம்பெறப்போகிறவர்களின் இறுதி பரிசீலனை பட்டியலில், இந்தியரான பாபி ஜிண்டால் (45) பெயர் இடம்பெற்றுள்ளது; இவர் சுகாதாரத்துறை மந்திரியாக பதவி ஏற்கலாம் என அங்கிருந்து வெளியாகும் ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’ பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

இவர் 2 முறை லூசியானா மாகாணத்தின் கவர்னர் பதவி வகித்த அனுபவம் மிக்கவர். குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் களம் இறங்கி பின்னர் விலகியவர். ஆரம்பத்தில் இவர் டிரம்புக்கு எதிரான கருத்துக்களை கூறி வந்தபோதும், இன்னொரு போட்டியாளராக விளங்கிய டெட் குரூசுக்கு ஆதரவு அளித்து வந்தபோதும், இவரது பெயர் சுகாதார துறை மந்திரி பதவிக்கு பரிசீலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பாபி ஜிண்டால் மந்திரி பதவி ஏற்றால், இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் அமெரிக்க மந்திரி என்ற பெயரை பெறுவார்.

நன்றி :- தினத்தந்தி

அமெரிக்காவின் புதிய அரசில் இந்தியர் பாபி ஜிண்டால் மந்திரி ஆகிறார்?
அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் (வயது 70) அமோக வெற்றி பெற்றார்.

அவர் அமெரிக்க ஜனாதிபதியாக ஜனவரி மாதம் 20–ந் தேதி பதவி ஏற்கிறார்.

அமெரிக்காவின் புதிய அரசில் இந்தியர் பாபி ஜிண்டால் மந்திரி ஆகிறார்?

டிரம்ப் தலைமையிலான புதிய அரசில் பதவி ஏற்க உள்ள மந்திரிகளை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன.

அந்த வகையில் டிரம்ப் மந்திரிசபையில் இடம்பெறப்போகிறவர்களின் இறுதி பரிசீலனை பட்டியலில், இந்தியரான பாபி ஜிண்டால் (45) பெயர் இடம்பெற்றுள்ளது; இவர் சுகாதாரத்துறை மந்திரியாக பதவி ஏற்கலாம் என அங்கிருந்து வெளியாகும் ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’ பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

இவர் 2 முறை லூசியானா மாகாணத்தின் கவர்னர் பதவி வகித்த அனுபவம் மிக்கவர். குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் களம் இறங்கி பின்னர் விலகியவர். ஆரம்பத்தில் இவர் டிரம்புக்கு எதிரான கருத்துக்களை கூறி வந்தபோதும், இன்னொரு போட்டியாளராக விளங்கிய டெட் குரூசுக்கு ஆதரவு அளித்து வந்தபோதும், இவரது பெயர் சுகாதார துறை மந்திரி பதவிக்கு பரிசீலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பாபி ஜிண்டால் மந்திரி பதவி ஏற்றால், இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் அமெரிக்க மந்திரி என்ற பெயரை பெறுவார்.

நன்றி :- தினத்தந்திசெம்மொழிப் பூங்காவில் மூவரும் கூடியிருந்தனர்.

“ஹிலாரி வருவாங்க, சரித்திரம் படைபாங்கன்னு நினைச்சேன். ஆனா, அமெரிக்காவே இன்னும் பெண் அதிபருக்குத் தயாராகலையோன்னு தோணுது” என்று பேச்சை ஆரம்பித்தாள் கனிஷ்கா.“அமெரிக்கர்கள் அப்படி நினைப்பாங்கன்னு நான் நம்பலை. இதுதான் அமெரிக்காவுக்கே கடைசித் தேர்தலா என்ன? இப்பவே அடுத்த தேர்தலுக்குப் பலர் தயாராகியிட்டாங்க. சமூக ஊடகங்களில் ‘2020-ல் மிஷேல்’ என்ற வாசகத்தைப் பரப்பிட்டாங்க. ஒருவேளை மிஷேல் ஒபாமா அடுத்த தேர்தலில் களம் இறங்கி, வெற்றி பெறவும் வாய்ப்பிருக்கே கனிஷ்கா!” என்றார் கமலா பாட்டி.

“தோல்விக்குப் பிறகு ஹிலாரியின் பேச்சைக் கேட்டீங்களா? ‘அந்த உயரத்துக்கான கனவு இன்னும் தகர்ந்துவிடவில்லை. என்றாவது ஒருநாள், யாராவது ஒருவர் அந்த உயரத்தை அடைவார்’ என்று பேசி, எல்லோரையும் கவர்ந்துட்டார்.’’

“ஆமாம் ஆன்ட்டி. ரொம்ப அழுத்தமான சின்னப் பேச்சு. ஹிலாரி ட்விட்டரில், ‘சிறுமிகளே, உங்கள் சுயமதிப்பீட்டின் மீதும் உங்களது வலிமையின் மீதும் எப்போதும் சந்தேகம் கொள்ளாதீர்கள். இந்த உலகில் எதை வேண்டுமானாலும் சாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது’ என்று எழுதியிருக்கிறார்.”

“அசத்திட்டார் ஹிலாரி!”

கமலா பாட்டி கொய்யாப் பழத்தை வெட்டி, ஆளுக்கொரு துண்டாகக் கொடுத்தார்.

“சாந்தி சிங்கு, பாரதி லகூரி இருவரும் ஒடிசாவின் அங்கூல் மாவட்டத்தின் பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். பத்தாம் வகுப்பு படிக்கிறாங்க. தினமும் காட்டு வழியில் 15 நிமிடம் நடக்கிறாங்க. அப்புறம் ஒரு படகில் அவர்களே துடுப்புப் போட்டு, 45 நிமிடம் பயணிக்கிறாங்க. பிறகு ஒரு கி.மீ. தூரம் நடந்து பள்ளிக்குப் போறாங்க. படிப்பின் மீதான அவங்க ஆர்வம் என்னைச் சிலிர்க்க வைக்குது. ஆனா, ஒரு பெண் குழந்தை, தன் கனவை நனவாக்க இவ்வளவு இன்னல்களைச் சந்திக்கும் நிலையில்தான் நம் நாடு இன்னும் இருக்குதுன்னு நினைக்கும்போது வருத்தமா இருக்கு” என்றார் கல்பனா ஆன்ட்டி.

“நீ சொல்றது சரிதான் கல்பனா. இந்த மாணவிகள் குறித்து செய்தி வெளியிட்ட தொலைக்காட்சியின் முயற்சியால், சாந்தியும் பாரதியும் பள்ளிக்குப் பக்கத்தில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கி, படிப்பைத் தொடர்கிறார்கள். பழங்குடி மக்கள் மத்தியில் பெண் கல்விக்குப் பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை. இந்த மாணவிகளின் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது” என்று பெருமிதத்துடன் சொன்னார் கமலா பாட்டி.

“பாட்டி, நொறுக்குத் தீனி எதுவும் இல்லையா?”

“தீனி எல்லாம் கடையில் இருக்கு. என் கையில்தான் காசு இல்லை கனிஷ்கா. 500, 1000 ரூபாய் செல்லாதுன்னு திடீர்னு அறிவிச்ச உடனே, பெட்ரோல் பங்குகளில் 500 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக்குங்க, சில்லறை இல்லைன்னு சொல்றாங்க. என்னத்தைச் சொல்றது?”

“நாட்டின் பிரதமரே, இனி ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டு வெறும் காகிதம்தான் என்று சொன்னால் எல்லோருக்கும் பதற்றம் வராதா? ரூபாய்களைக் கொடுத்து மாத்திக்க கால அவகாசம் இருக்கும்போது, அவர் அப்படிச் சொல்லியிருக்கவே கூடாது. படித்தவர்களே குழம்பிப் போயிட்டாங்க. இதிலும் பெண்களின் சேமிப்பை வைத்து, மீம்ஸ் போட்டுத் தாக்கிட்டாங்க. கனிஷ்கா, என்ன யோசனையில் இருக்கே?”

“உத்தரப் பிரதேசத்தின் ஹமீர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேமா தேவி. ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர். அவங்க மருமகள் குஷ்பு பெண் குழந்தை பெற்றார். உடனே மருமகளுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றைப் பரிசா கொடுத்திருக்காங்க பிரேமா தேவி. பாலின சமத்துவம் அதிகரிக்க இது மாதிரியான சம்பவங்கள் தூண்டுகோலாக இருக்கும். எனக்கு அப்படி ஒரு மாமியார் கிடைத்தால் நல்லா இருக்கும்” என்று சிரித்தாள் கனிஷ்கா.

பெண் குழந்தைக்குக் கார் பரிசு

“ஆணோ, பெண்ணோ எந்தக் குழந்தை பெத்துக்கிட்டாலும் உனக்கு ஒரு பரிசு தருகிற மாமியார் கிடைக்கட்டும் கனிஷ்கா” என்று ஆசி வழங்கினார் கமலா பாட்டி.

“நீ அரசாங்கத்தில் வேலைக்குச் சேர்ந்துட்டா, பேறு கால விடுப்பு 9 மாதம் கிடைக்கும் கனிஷ்கா. தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. இதைத் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களுக்கும் கொண்டுவந்தால் எல்லோரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கலாம்” என்றார் கல்பனா ஆன்ட்டி.

“ஏதோ பேச்சுக்குச் சொன்னால், டெலிவரிவரை போயிட்டீங்க ஆன்ட்டி” என்று சிணுங்கினாள் கனிஷ்கா.

“சரி, நவம்பர் 7 என்ன நடந்தது தெரியுமா?”

“ரஷ்யப் புரட்சி.”

“நீ சொன்னது சரிதான். ஆனால் நான் சொல்ல வந்தது, அந்த நாளில் கேரள முதல்வர் பிணராயி விஜயன், புரட்சிகரமான அறிவிப்பைச் செய்திருக்கார். சபரிமலைக்கு எந்த வயதுப் பெண்களும் இனி போகலாம் என்று ஒப்புதல் அளித்திருக்கார். பெண்கள் இதை ஆரவாரத்துடன் வரவேற்று இருக்காங்க. ஆனால் தேவஸ்தானம் எதிர்ப்பைக் காட்டியிருக்கு. விரைவில் இது சாத்தியமாகும் என்று நம்புவோம்” என்ற கல்பனா, வேகமாக எழுந்தார்.

“என்ன, அதுக்குள்ள நேரமாயிருச்சா கல்பனா?”

“ஆமாம் பாட்டி. அவசரமா ஒரு கட்டுரை எழுத வேண்டியிருக்கு. பை கனிஷ்கா” என்றவுடன் மூவரும் அவரவர் ஸ்கூட்டியில் பறந்தார்கள்.

நன்றி :-பாரதி ஆனந்த், இந்து தமிழ் நாளிதழ்

நவம்பர் 7 :கேரள முதல்வர் பிணராயி விஜயன், புரட்சிகரமான அறிவிப்பு!
செம்மொழிப் பூங்காவில் மூவரும் கூடியிருந்தனர்.

நன்றி :-பாரதி ஆனந்த், இந்து தமிழ் நாளிதழ்திருச்சூரைச் சேர்ந்த பெண் ஒருவரை, ஆளும் கட்சியின் கவுன்சிலர் உட்பட நான்கு பேர் பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் கேரளாவே அதிர்ந்துபோயிருக்கிறது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் இது கடனால் எழுந்த பிரச்சினை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் ஊடகத்தைத் திரட்டி நீதி கேட்டவர், கேரளா முழுவதும் அறியப்பட்ட பிரபல டப்பிங் கலைஞர் பாக்கியலெட்சுமி.

இவர் சுமலதா, நதியா மொய்து, கார்த்திகா, பார்வதி, ஊர்வசி, மீனா, ரேவதி, ஷோபனா, அமலா, ஸ்வேதா மேனன் உள்ளிட்ட 148 நடிகைகளுக்கு, நான்காயிரம் திரைப்படங்களில் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். 12 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சுயசரிதையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

பாக்கியலெட்சுமியின் போராட்டத்துக்குப் பிறகு, சொந்தக் கட்சியினர் என்பதையும் மீறி, நடவடிக்கை எடுத்துள்ளது மார்க்சிஸ்ட் கட்சி. பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை ஊடகத்தார் முன்னிலையில் பகிரங்கமாக, விதிகளுக்கு மாறாக அறிவித்த முன்னாள் சபாநாயகர் ராதாகிருஷ்ணனிடம் விளக்கம் கேட்டுள்ளது. சர்ச்சையில் சிக்கிய நபரைக் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது. புகார் கொடுக்க வந்தபோது பாதிக்கப்பட்ட பெண்ணை, உதாசீனப்படுத்திக் கேள்வி கேட்ட ஆய்வாளர் மணிகண்டன் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கேரள ஊடகங்கள் திருச்சூர் பெண் விவகாரம் தொடர்பாக விரிவான பேட்டிக்கு பாக்கியலெட்சுமியைத் துரத்திக்கொண்டிருக்க, ‘பெண் இன்று’ வாசகிகளுக்காக மனம்திறந்து பேசினார்.

“எங்கள் பூர்வீகம் பாலக்காடு. மூன்று வயதிலேயே அப்பாவை இழந்தேன். மூன்று குழந்தைகளை வளர்க்க முடியாமல், என் அம்மா எங்களை ஆதரவற்றவர்கள் இல்லத்தில் விட்டுவிட்டார். பெரியம்மா எங்களை அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அப்படித்தான் சென்னைக்கு வந்து சேர்ந்தோம்.

நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது, அம்மாவுக்குப் புற்றுநோய் வந்துவிட்டது. என் பள்ளிப் படிப்பு ஒரு வருடம் தடைபட்டது. அம்மாவையும் இழந்தபோது, வாழ்க்கையே இருண்ட மாதிரி இருந்தது. அம்மா, அப்பா இல்லாமல் உறவுக்காரர் வீட்டில் வளர்வது என் அண்ணனுக்குப் பிடிக்கவில்லை. வீட்டை விட்டு ஓடிவிட்டான். இன்றுவரை அவனைப் பற்றி எந்தத் தகவலும் தெரியாது. பெரியம்மா என்னை மீண்டும் பள்ளியில் சேர்த்துவிட்டார். பெரியம்மாவுக்குத் தமிழ்த் திரைப்படத் துறையோடு தொடர்பு இருந்தது. சாரதா உள்ளிட்ட நடிகைகளுக்கு மலையாள வகுப்பும் எடுத்துவந்தார்.

துணிந்து நின்றால் நீதி கிடைக்கும்

அப்போது நாங்கள் வடபழனியில் குடியிருந்தோம். தண்ணீர் லாரி வருகைக்காகக் குடத்தை வைத்திருந்தேன். முதலில் என் குடம்தான் இருந்தது. அந்தப் பேட்டை ரவுடியின் மகள் என் குடத்தைத் தூக்கியெறிந்து விட்டு, அவள் குடத்தை வைத்தாள். எனக்கு அவள் யார் மகள் என்றெல்லாம் தெரியாது. கையில் இருந்த குடத்தால் அவள் தலையில் இடித்துவிட்டு, வீட்டுக்குச் சென்று விட்டேன். சிறிது நேரத்தில் வீட்டுக்கு முன்பு பெருங்கூட்டம். நான் ரவுடியிடம் போய் நடந்ததைச் சொன்னேன். அவர், தனது மகளை மன்னிப்பு கேட்கச் செய்து, அழைத்துச் சென்றார். அநீதிக்கு எதிராகத் துணிந்து நின்றால் நீதி கிடைக்கும் என்று 11 வயதிலேயே கற்றுக்கொண்ட பாடம்தான் இன்றும் கைகொடுக்கிறது” என்று பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் பாக்கியலெட்சுமி.

பிறகு இவருடைய பெரியம்மாவும் புற்றுநோயால் இறந்து போனார். அப்போது பாக்கியலெட்சுமி பின்னணிக் குரல் கொடுக்கும் வேலையைச் செய்துகொண்டிருந்தார்.

“ஃபாசில் இயக்கத்தில் வெளியான நதியா மொய்துவின் முதல் படம் எனக்குத் திரைப்படத் துறையில் நல்ல பெயரை வாங்கித் தந்தது. மலையாள இயக்குநர்கள் மூலமாக, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டேன். திருமணத்துக்குப் பிறகு கேரளா வந்தபோதுதான், டப்பிங் ஆட்டிஸ்ட்களின் நிலை மிக மோசமாக இருந்ததை அறிந்தேன். உடனே கேரள இயக்குநர்களிடம் பேசி, 1991-ல் மலையாள டப்பிங் ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷனை ஏற்படுத்தினேன். மாநில அரசு அந்த ஆண்டு முதல் சிறந்த பின்னணிக் குரலுக்கும் விருது வழங்கிவருகிறது. நானும் இதுவரை நான்கு முறை விருதுகளைப் பெற்றிருக்கிறேன்” என்கிறார் பாக்கியலெட்சுமி.பிரிவைத் தந்த சந்தேகம்

திருமண வாழ்க்கை இவரை வலியோடு எதிர்கொண்டது. கணவரின் சந்தேகத் தீயால் ஒவ்வொரு நாளும் வதைபட்டார். ஒருகட்டத் தில் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, கணவரை விவாகரத்து செய்தார். தன் வாழ்க்கையில் நடந்த சோகத்துக்காகப் பொதுவாழ்வில் ஈடுபடுவதை பாக்கியலெட்சுமி நிறுத்திவிடவில்லை. தற்போது கைரளி தொலைக்காட்சியில் செல்பி என்ற நிகழ்ச்சியை நடத்திவருகிறார்.

“இந்த நிகழ்ச்சி மூலமாகவும், பொதுத்தளத்திலும் பல பெண்களுக்கு கவுன்சலிங் அளித்துவருகிறேன். கணவருடன் வாழாதவர் கவுன்சிலிங் கொடுப்பதா என்று கேட்பவர்களுக்கு, என் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவே அந்த முடிவை எடுத்தேன் என்று தைரியமாகப் பதில் அளிப்பேன்” என்கிறார் பாக்கியலெட்சுமி

நிமிர்ந்து நிற்பதே பெருமிதம்

அம்மா, அப்பா, அண்ணன், கணவர் என்று பல பிரிவுகளைச் சந்தித்தாலும் தன் மனத் திடத்தை இவர் இழக்கவில்லை. “சுவர் இருந்தால்தானே சாய முடியும்? சுவர் இல்லையெனில் நிமிர்ந்தே இருந்து முதுகெலும்பு பலம்பெறும். நான் அந்த ரகம்! என் சுயசரிசதையை ‘ஸ்வர பேதங்கள்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டேன். மூன்றே ஆண்டுகளில் 15 பதிப்புகள் வந்துவிட்டன. மகாத்மா காந்தி பல்கலைக் கழகத்தில் என் சுயசரிதை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது” என்று சொல்கிறவரின் வார்த்தைகளிலும் அத்தனை உறுதி!

பாலியல் வன்கொடுமை குறித்து ஊடகத்தாரிடம் பேசியதற்குப் பதில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடமே பேசி முடித்திருக்கலாமே என்று இவரிடம் பலரும் கேட்கிறார்களாம்.

“சமரசம் செய்வதற்கு, அது என்ன கணவன், மனைவிக்குள் நடந்த சண்டையா? தமிழ்நாடுதான் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஊக்கத்தை, வலிமையை எனக்குக் கற்றுக் கொடுத்தது. ஆனால் அங்கு குரல் கொடுக்க சுதந்திரம் இல்லை. கேரளாவில் அந்த நிலை இல்லை. அரசியல்வாதிகளுக்கு எதிராகப் போராடினாலும் சிறு மிரட்டல்கூட வராது. சொந்தக் கட்சியினராக இருந்தாலும் மார்க்சிஸ்ட் கட்சியினர் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். அதுதான் கேரளாவைப் பெருமையோடு நினைக்கவைக்கிறது” என்று சொல்லும் பாக்கியலெட்சுமி, பின்னணிக் குரல் கொடுப்பதைக் குறைத்துவிட்டு, பெண்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்கும் அமைப்பை ஏற்படுத்த இருப்பதாகச் சொல்கிறார்.

“கணவரை இழந்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண், இரு மகள்களுடன் வசித்துவருகிறார். அந்தப் பகுதி இளைஞர்கள் அடிக்கடி தகராறு செய்வதாகவும், சொந்தமாகத் தொழில் செய்ய உதவ வேண்டும் என்றும் கேட்டார். நண்பர் மூலம் ஐந்து தையல் மிஷின்கள் வாங்கிக் கொடுத்தோம். கடைக்கு ‘பாக்கியலெட்சுமி’ என்று என் பெயரை வைத்து, திறப்பு விழாவுக்கு அழைத்தார். நான் பெயர் வேண்டாம் என்று மறுத்தேன். உங்கள் பெயரை வைத்ததால்தான் அந்த இளைஞர்களின் தொல்லை குறைந்துள்ளது என்றார். என் வாழ்க்கையில் ஆயிரம் படங்களுக்கு மேல் குரல் கொடுத்திருந்தாலும், இவரைப் போன்ற குரலற்றவர்களுக்காகக் கொடுக்கும் குரலே உண்மையில் நிறைவைத் தருகிறது” என்கிறார் இந்தத் தைரியலட்சுமி!

பத்திரிகையாளர் சந்திப்பில்...என்.சுவாமிநாதன்  

மூகம் » பெண் இன்று Published: November 13, 2016 14:44 IST

நன்றி :- இந்து தமிழ் நாளிதழ்11 வயதிலேயே கற்றுக்கொண்ட பாடம்தான் இன்றும் கைகொடுக்கிறது” -பாக்கியலட்சுமி
திருச்சூரைச் சேர்ந்த பெண் ஒருவரை, ஆளும் கட்சியின் கவுன்சிலர் உட்பட நான்கு பேர் பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் கேரளாவே அதிர்ந்துபோயிருக்கிறது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் இது கடனால் எழுந்த பிரச்சினை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் ஊடகத்தைத் திரட்டி நீதி கேட்டவர், கேரளா முழுவதும் அறியப்பட்ட பிரபல டப்பிங் கலைஞர் பாக்கியலெட்சுமி.