மூலநோயும் மருத்துவ முறைகளும்
உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
உடம்பில் ஏற்படும் எல்லாவிதமான வெப்பமும் வெளியேறும் இன்றியமையாட்த ஆசனத்துளை ( Anus) இந்த இடத்திற்கு மூலாதாரம் என்று பெயர். எனவே, இங்கு ஏற்படும் நோயை மூலநோய் என அழைக்கின்றனர். ( சோமசுந்தரன் 18829 )
மூல நோய் என்பது வாத, பித்த, கப மாறுபாட்டால் உடலிலில் உள்ள தோலும் மாமிசக் கொழுப்புத் தாதுக்களும் திறந்து ஆசன வாயிலுள்ளும் வெளியிலும் மாமிச முளைகள் கண்டு குத வாயிலை அடைத்துத் துன்புறுத்துவக்கூடியது. மூல நோயானது தொற்று நோயன்று. மலச் சிக்கலாலும் மரபு வழியாகவும் தோன்றக் கூடியது. ( சிதம்பர தாணுப்பிள்ளை என். 198263 ) ,
மூல நோயை வகைப்படுத்துவதில் பல்வேறு மருத்துவ நூல்களும் , ஆறு, எட்டு, ஒன்பது, இருபத்தொன்று எண்ணிக்கையில் வேறுபட்டு நிற்கின்றன. ஆனால் அலோபதி ( Allopathy ) மருத்துவ நூல்கள் உள்மூலம், ( Internal piles ) , வெளிமூலம் ( External piles ) , பவுத்திர மூலம் ( Fistula ) என்னும் மூன்று முறைகளையே குறிப்பிட்டு விளக்கமளிக்கின்றன.
மூலநோய் குறித்துப் சித்த, யுனானி, ஆயுர்வேதம் ஆகியவற்றினின்றும், அல்லோபதி மருத்துவ முறை எவ்வாறு வேறுபட்டு நிற்கின்றது என்பதைக் குறித்து மருத்துவ நூல்களின் வழி ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது. .
மூல நோய் தோன்றுவதற்கான அறிகுறிகள் -
அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுதல், எப்பொழுதும் மலங் கழிக்கவேண்டும் என்பது போன்ற உணர்வு, மலமானது அதிகவலியுடன் சிறிது சிறிதாக வெளியேறுதல், நாவின் சுவை குறைதல், காரச் சுவையில் மிகுந்த நாட்டம், தாகம், தலைவலி, ஆசனப்பகுதியில் இரவு நேரத்தில் அரிப்பு, வாயில் புளிப்புச் சுவை, உடம்பு நாளுக்கும்நாள் இளைத்தல், ( தியாகராசன், இரா. பதி : 1976:141 ) போன்றவை மூல நோய் தோன்றுவதற்கான அறிகுகுறிகளாகும் .
மூலநோயும், பிற மருத்துவ முறைகளும் ( சித்த, யுனானி, ஆயுர்வேதம் )
சிலநூல்கள், பிற மூலம், ஆணி மூலம், கதிர் மூலம், சீழ்மூலம், வாதமூலம், அல்லது இரத்த மூலம் என ஆறு வகையான மூல நோய்கள் உண்டு . (சுப்புலட்சுமி, மு. ( 1985.39 ) எனவும், சிலநூல்கள் உள்மூலம் வெளிமூலம், செண்டு மூலம், சீழ் மூலம், சீழ் மூலம், இரத்த மூலம், சலமூலம், ஆணிமூலம் கிரந்தி மூலம் ( சூசைஉராஜா , ஏ. 1981: 105 ) எனவும் குறிப்பிடுகின்றன.
இவ்வகைப்பாட்டில் உள்ளவை அனைத்தும் பெரும்பாலான மருத்துவ நூல்கள் குறிப்பிடும் இருபச்த்தோருவகையான மூல நோய்கள் என்ற வகைப்பாட்டில் அடங்குவனவாக உள்ளன.
21 வகையான மூலநோய்கள் :-
1. நீர் மூலம். தொப்புளில் வலி உண்டாதல். மலம் வருதல். ஆசனவாய் வழியாக நீர் பெருகுதல் பொன்றவை காணப்படும்.
2. செண்டு மூலம் . ஆசனப் பகுதியில் கருணைக் கிழங்கு முளையைப் போல் உண்டாகி, இரத்தமும் நீரும் கசிந்து வலி ஏற்பட்டு ஆசனவாய் சுருங்கும்.
இவைகள் குணமாக முள்லிவேர், பிரண்டைவேர், கற்றாழை வேர், கடுக்காய், சுக்கு, மிளகு, வெள்ளைப் பூண்டு ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து அரைத்துப் புளித்த மோரில் கரைத்துக் கொடுக்கவேண்டும். ( தியாகராசன், பதி, 1876 : 142 )
3: முளை மூலம் :- ஆசனப் பகுதியில் மஞ்சளின் முளையைப்போல் ஒரு முளை உண்டாகி ஆசனவாய் சுருங்கி இரச்சலுடன் இரத்தம் இறங்கும். இதற்கு ஈருள்ளியைப் பன்றி நெய்யில் வறுத்து ஐந்து நாள் கொடுத்து வர குணம் காணலாம்.
21 வகையான மூலநோய்கள்
1. நீர் மூலம் :- தொப்புளில் வலி உண்டாதல். மலம் வருதல். ஆசனவாய் வழியாக நீர் பெருகுதல் பொன்றவை காணப்படும்.
2. செண்டு மூலம் :- ஆசனப் பகுதியில் கருணைக் கிழங்கு முளையைப் போல் உண்டாகி, இரத்தமும் நீரும் கசிந்து வலி ஏற்பட்டு ஆசனவாய் சுருங்கும்.
இவைகள் குணமாக முள்ளிவேர், பிரண்டைவேர், கற்றாழை வேர், கடுக்காய், சுக்கு, மிளகு, வெள்ளைப் பூண்டு ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து அரைத்துப் புளித்த மோரில் கரைத்துக் கொடுக்கவேண்டும்.
( தியாகராசன், பதி, 1876 : 142 )
3 முளை மூலம் :- ஆசனப் பகுதியில் மஞ்சளின் முளையைப்போல் ஒரு முளை உண்டாகி ஆசனவாய் சுருங்கி இரச்சலுடன் இரத்தம் இறங்கும். இதற்கு ஈருள்ளியைப் பன்றி நெய்யில் வறுத்து ஐந்து நாள் கொடுத்து வர குணம் காணலாம்.
4. சிற்று மூலம். ஆசன்ப்பகுதியில் சிறுமுளைகள் உண்டாகும்.
5. வறள் மூலம். அதிக வெப்பத்தாள் உடல் உலர்ந்து ஆசனவாயினின்று இரத்தம் வெளிப்படும். வாழப் பழத்தில் சீரகப் பொடிஉஐக் கலந்து உண்டுவரக் குணமாகும்.
6.இரத்த மூலம். ஆசன வாயிலிருந்து இரத்தம் வெளிப்பட்டுச் சோகையினால் கண்கள் மஞ்சளாகத் தோன்றும்/ வாழைப்பழச் சாற்றில் சீரகப் பொடியைக் கலந்துண்ணச் சரியாகும்.
7.சீழ் மூலம். உடல் வெளுத்து ஆசனவாயிலிருந்து சீழூம் நீரும் வெளிப்படும்.
8. ஆழிமூலம். ஆசனவாயில் வள்ளிக்கிழங்குபோல் ஒருமுளைதோன்றிச் சீழும் இரத்தமும் வெளிப்படும்.
9. வாதமூலம். ஆசனவாயில் வாதுகைப் பூ போன்ற முளை வளர்ந்து குடல் வலி , தலைவலி ஆகியவற்றுடன் வெண்மையான மலம் வெளிப்படும்.
10. தமரக மூலம். ஆசன வாயில் தாமரைப்பூ போன்று தோன்றி இரத்தம் வெளிப்படும்.
11. ஆசன வாயில் நெல் அல்லது பருத்து விதை போன்ற முளை உண்டாகி மலகம் இறுகி இரத்தத்துடன் சிறிது சிறிதாக வெளிப்படும்.
12. சிலேத்தும மூலம். உடல் வெளுத்து ஆசனவாயில் வெண்மையான முளை தோன்றும்.
13. தொந்த மூலம். ஆசனவாய் குறுகிச் சிவந்து விரிந்து முளை தோன்றும்
14. வினைமூலம். உணவு செரிக்காமல் அடி வயிற்றில் வலி ஏற்படும். புளியங்கொட்டையின் மேல்தோலை அரைத்துப் ப்பசுவின் பாலில் ஐந்து நாள் கொடுக்கக் குணமாகும்.
15.மேக மூலம். ஆசனவாயிலிருந்த்கு இரத்தமும் , சிறுநீரில் சர்க்கரையும், வெளிப்படும். வட்டத் துத்தியிலைச் சாற்றை நல்லெண்ணெயில் கலந்து கொடுக்கக் குணமாகும்.
16. பவுத்திர மூலம். ஆசனவாயில் கட்டி உண்டாகி சிறுநீர் அடிக்கடி வெளியேறும்.
17. கிரந்தி மூலம். மலம் வறண்டு இரத்தத்துடன் ஆசனவாய் வெடிக்கும்படி வெளியேறும். ஈருள்ளிச்சாறு , பசுவின்பால், ந்ய் ஆகியவற்றில் அதிமட்குரத்தக் கலந்து கொடுக்கக் குணமாகும்.
18. குத மூலம். ஆசன வாயில் மூங்க்லில் குருத்துப்போல ஒரு முளை வெளிப்பட்டு இரத்தம் வெளியாகும்
19. புற மூலம். ஆசன வாயில் சீழும் பருப்புப் போனேஅ முளையும் உடலெங்கும் சிறங்கும் தோன்றும்.
20.கருக்கு மூலம். மலவாய் சுருங்கி, உடல்வெளுத்துக் குடல்வலியுடன் இரத்தமும் சீழும் வெளிஒப்படும்.
21.சவ்வு மூலம். அடிவயிற்றில் மூலம் மிகுதியாகி ஆசன வாயில் சவ்வுபோலச் சுற்றிச் சீழும் நீரும் கசியும். ( முல்லை. பி.எல். 1990 : 38 )
ஆவாரங்கொழுந்து , பூ, பட்டை, அறுகம் வேர் இவைகளைச் சம அளவில் எடுத்து நிழலில் உலர்த்தித் தூள் செய்து பசுவின் நெய்யில் 48 நாட்கள் உட்கொள்ள ஆசனவாயுள் கரைந்துபோகுஇம்.
குறிப்பு :-
மேற்குறிப்பிடப்பட்டுள்ள 21 வகை மூலநோய்களுக்கும் தனித்தனியான மருத்துவ முறைகள் கூறப்பட்டுள்ளன. என்றாலும், கட்டுரையின் சுருக்கம் கருதி எளிமையான சில முறைகள் மட்டுமே இங்கு இடம் பெற்றுள்ளன.
மூல நோய்க்குரிய பொதுவான சில மருந்துகள்.
பிரண்டைக் கொளுந்தை அல்லது நாயுருவி இலையை அரைத்தது நல்லெண்ணெயைக் கலந்து ஏழு நாட்கள் இருமுறை உட்கொள்ள மூல நோய் குணமாகும். ( தியாகராசன், இரா. பதி. 1978:155 )
மூல நோயும் அல்லோபதி மருத்துவ முறையும் .
மூல நோயானது அல்லோபதி மருத்துவ முறையில் உள்மூலம், வெளிமூலம், பெளத்திர மூலம் என மூன்றாக வகைப்படுத்தப் பட்டுள்ளது.
1.உள் மூலம். ( Internal Piles )
ஆசனத் துளையின் உட்பகுதியில் சவ்வு படர்ந்து மலம் கழிக்கும்போது உட்புறம் உள்ள தசைகள் உப்பி வெளிப்புறம் நீட்டும். இதனால் மலம் வெளிப்படுதல் சிக்கலாகி இரத்தம் வெளியேறும். இவ்வகை மலநோயினால் ஏற்படும் வலையினைப் போக்க எஹடன்ஸா, மெடித்தேன் போன்ற களிம்புகள் பயன்படுத்தப் படுகின்றன. ( சோமசுந்தரன், அரு., 1988 - 11 )
2.வெளி மூலம் ( External Piles )
ஆசனத் துவாரத்தின் அருகில் சிறிது சதை வளர்ந்து தொங்கும். இதற்கு வெளி மூலம் என்று பெயர். இப்பகுதியில் அடிக்கடி அரிப்ப ஏற்படுவதோடு மலம் வெளியேறும்போது இரத்தமும் கடுப்பும் தோன்றும்.
3. பவுத்திர மூலம். ( Fistula Piles )
உள் மூலமானது முதிர்ந்து பவுத்திரமாக மாறுகிறது. ”பவுத்” என்ற வட சொல்லுக்குத் துளை என்பது பொருள். பவுத்திர நோய் தோன்றுகையில் ஆசனத் துளையைச் சுற்றிக் கண்ணுக்குத் தெரியாத சிறிசிறு துளைகள் தோன்றி அதனின்று தூய்மையற்ற நீர் வெளிவரும்.
இதற்குரிய மருத்துவம் செய்யாவிடில் ஆசனத் துளையின் உட்புறம் சவ்வு போலவும், பலூன் போலவும், ஏராளமாகச் சதை வளர்ச்சி தோன்றி அவற்றில் துளைகள் ஏற்படும். பிறகு ஆசனத் துளை அருகில் வலியற்ற ஒரு கொப்புளம் ஏற்படும். இது நாட்பட்ட நிலையில் உடந்து ( PUS ) வெளியேறும். மீண்டும் இது கொப்புளமாக மாறும். பவுத்திர நோய் முதிர்ந்த நிலையில் இத்துளை வழியாகச் சீழுடன் இரத்தமும் வெளிப்படும். இதற்கு அறுவை மருத்துவ முறை ஒன்றே ஏற்றதாகும்.
இதில் ஆசனத் துளைக்கும் பவுத்திர நோய்த் துளைக்கும் இடையில் உள்ள சதைகள் தோண்டப்பட்டுப் பவுத்திர நோயின் வேர் எவ்வளவு ஆழத்திற்குச் சென்றிருக்கிறதோ அவ்வளவு ஆழம் வரை தோண்டிக் கருணைக் கிழங்கு போன்ற வேர்ப் பகுதி நீக்கப் படுவதால் இந்நோய் குணமாகிறது. ( சோமசுந்தரம், அரு ( 1982-27 )
மேலும், அல்லோபதி முறையில் அறுவை முறையினால் அகற்றப்பட்ட மூலநோய் மீண்டும் வருவதாகவும் மூலிகை மருத்துவத்தால் மட்டூமே முழுமையான குணம்பெற முடியும் என்றும் பரவலான கருத்து இடம்பெற்றுள்ளது.
மூல நோயாளருக்கான உணவு முறைகள் ;-
காரமான உணவுகளை உட்கொள்ளக்கூடாது. பழங்கள், கருணைக்கிழங்கு, வெங்காயம், கீரை முதலியவற்றை உணாவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குளிர்ச்சிதரும் பொருட்களை அதிகம் உண்ண வேண்டும். ( சோமசுந்தரன், அரு., ( 1982-12 ),. தேங்காய், சப்போட்டா, பால் பொருட்கள், குளிர்ந்த நீரில் நீராடுதல் போன்றனவும் மூலநோயைத் தவிர்க்க வல்லன . ( தமிழ்வாணன், லேனா, (பதி) 1962-67 )
முடிவுரை :-
1. மூலநோய் தோன்றுவதற்குரிய அடைப்படைக் காரணங்களாகத் திகழ்வது மரபும், மிகுந்த வெப்பமும். மலச் சிக்கலுமுமாகும். எனவே, மூலநோய் மரபில் வந்தோர் ப்மலச்சிக்கலை ஏற்படுத்தும் உணவு முறைகளைக் கைவிடுவதோடு மிகுந்த வெப்பத்தினின்றும் தம்மைக் காக்க வேண்டும்.
2. பெரும்பாலான மருஇத்துவ நூல்கள் 21 வகையான மூல நோய்களையும், அல்லோபதி மருத்துவ நூல்கள் மூன்று வகையான மூலநோய்களையும் எடுத்துக் கூறுகின்றன.
3. மூல நோயைக் குணப்படுத்துவதற்கான மருத்துவ முறைகளில் பிற மருந்துவ முறைகள் மூலிகைகளையும் அல்லோபதி மருத்துவ முறை அறுவை மருத்துவத்தையும் மேற்கொள்ளுகின்றன.
4. மூல நோய் வராமல் தடுப்பதிலும், வந்தபின் குணப்படுத்துவதிலும் பிற மருத்துவ்ப முறைகளும் , அல்லோபதி மருத்துவ முஇறையும் பெரும்பாலும் ஒரேவகையான உணவு முறைகளையே வலியுறுத்துகின்றன.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சிதம்பர தாணுப்பிள்ளை, எஸ்,
நோய் விளக்கம், முதற்பதிப்பு, சென்னை.
சித்த மருத்துவ நூல் ஆராய்ச்சி நிலையம், 1982.
சுப்புலட்சுமி, மு.
வைத்திய நூல் ( சுவடியியல் பட்ட ஆய்வேடு ) சென்னை.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.
சூசைராஜா, எஸ்.ஏ. பயங்கர வியாதிகளும் பயனுள்ள சிகிச்சை முறையும். முதற் பதிப்பு, சாந்தி நிலையம்.
சோமசுந்தரன், அரு.
அ பவுத்திர நோய், முதற்பதிப்பு, காரைக்குடி, பொன்முடி பதிப்பகம்.
தியாகராசன், இரா.
( பதி ) யூனி. முனிவர் வைத்திய சிந்தாமணி ( பெருநூல் 800 ) ( முதல் பாகம் ) முதற் பதிப்பு, சென்னை, சித்த மருத்துவ நூல் வெளியீட்டுக் குழு. 1976.
முத்தையா.முல்லை. பி.எல்.
வீரமாமுனிவர் இயற்றீய தமிழ் மருத்துவ நூல், முதற் பதிப்பு, சென்னை, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேடெ லிமிடெட், 1990
தமிழ்வாணன், லேனாஃ ( பதி ) ,
நாட்டு வைத்தியம், இரண்டாம் பதிப்பு,
சென்னை, மணிமேகலைப் பிரசுரம்.
..........................................................................................................................................
நன்றி :- ( 1998 )
வெள்ளி விழா மலர் 1970-1995- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 6000 113
0 comments:
Post a Comment
Kindly post a comment.