Tuesday, August 28, 2012

பெருமுத்தரையர் புகழ் பாடும் நாலடியார் !





பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்;-

திருக்குறள், நாலடியார், பழமொழி, நான்மணிக்கடிகை, திரிகடுகம், சிறுபஞ

மூலம், ஆசாரக் கோவை, ஏலாதி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது,

முது மொழிக் காஞ்சி என்ற அற நூல்கள் 11.

திணை மாலை நூற்றைம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை

எழுபது,திணைமாலை எழுபது, திணைமாலை ஐம்பது, கார் நாற்பது என்ற

அகநூல்கள் 6.

களவழி நாற்பது என்ற புற நூல் 1 ஆக மொத்தம் 18.

இவற்றுள் அகநூல்களே 11 ஆக அமைந்துள்ளன. இவை பெரும்பாலும் சங்க

காலத்தை ஒட்டியும், பிற்காலத்தும் எழுதப் பெற்ரவை.எனவே, இவற்றைச்

சங்க மருவிய கால நூல்கள் என்றும், நூலாசிரியர்களைப் பிற்சான்றோர்

என்றும் வழங்குவது தமிழ் இலக்கிய மரபாக உள்ளது. அற நூல்களின் காலம்

என்றே இக்காலம் கருதப்பட்டு, இலக்கிய ஆசிரியர் பலராலும்

விவரிக்கப்பட்டு வருகின்றது.

நாலடியார்;-

1. அறத்துப்பால் :- துறவற இயல், இல்லறவியல்

2. பொருட்பால் :-  அரசு இயல், நட்பு இயல், இன்ப இயல், துன்ப இயல், பொது

    இயல், பகை இயல் பல்நெறி இயல்


3. காமத்துப்பால் : இன்ப துன்ப இயல், இன்ப இயல்

   என்பதாக, அறத்துப் பால், பொருட்பால், காமத்துப் பால் என்ற 

   முப்பால்களையும், 400  வெண்பாக்களைக் கொண்டிலங்குகின்றது. 

   சமண    முனிவர்கள் பலரால்  எழுதப்பட்டதொரு தொகுப்பே  

    நாலடியார்.



 "Something is better than nothing "  என்பதற் கிணங்க ஒரு சிலவற்றையேனும்

 மேலோட்டமாகத் தெரிந்து கொள்ளவே இந்தப் பதிவு. மிகவும் அதிகமாகப்

 போனால் 4 பாடல்களைக் கீழ் வகுப்புக்களில் சிலர் படித்திருப்பர்.

  7-ஆம் நூற்றாண்டின் ந்டுப்பகுதியில் சமணர்கள் கூட்டணி அமைத்து 

எழுதித்  தொகுத்ததே நாலடியார் என்பது அறிஞர்கள் கருத்தாகும். , 

முத்தரையர் என்ற  அரசர்  பரம்பரையினரைப் பற்றிய  குறிப்புகள்  இரு 

பாடல்களில்  இடம்பெற்றிருப்பதையே  காரணமாகக்  கூறுகின்றனர்.  

அந்த இரு பாடல்களை மட்டும் இங்கே காண்போம்.


  நாலடியார் , பொருட்பால்,  அரசு இயல்  :20 : தாளாண்மை 200

உழைத்து உண்ணலே பேரின்பம்

.      பெரு முத்தரையர் பெரிது உவந்து ஈயும்
       கருணைச் சோறு ஆர்வர் கயவர், கருணையைப்
       பேரும் அறியார், நனி விரும்பு தாளாண்மை
       நீரும் அமிழ்து ஆய்விடும்.


       கருத்துரை :- இலவசமாகப் பெற்று உண்னும் விருந்து உணவைவிடத்                            தானே முயன்று உழைத்துக் குடிக்கும் தண்ணீர், உழைத்தவனுக்கு
                    அமிழ்தத்தை நிகர்த்தது ஆகும்.


 தெளிவுரை- பெருமுத்தரையர் பெரிதும் மகிழ்ந்து அன்னதானம் செய்வர்  அவர்                          வழங்கும் பொரியலுடன் கூடிய சோற்றை முயற்சி எதுவும்                             
செய்யாமல் கயவர் வாங்கி உண்பர். பொரிக்கறியையும் சோற்றையும்
                   அறியாதவராய்த் தம் அயரா உழைப்பால் தாம் முயன்று பெற்ற                    தண்னீர் கூட உழைப்பாளிக்கு அமிழ்தத்தை ஒத்த இன்பம் தருவதாகும் 



நாலடியார் : நான்கு : துன்ப இயல் : 30. மானம்

யாரிடமும் யாசிக்க மாட்டார்

மமல்லல் லா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்
செல்வர் எனினும், கொடாதவர் நல்கூர்ந்தார்,
நல்கூர்ந்தக் கண்னும், பெரு முத்தரையரே,
செல்வரைச் சென்று இரவாதார்.


கருத்துரை :- மற்றவர்க்கு உதவாத செல்வந்தர், செல்வந்தர் அல்லர்.  வறுமையிலும் செம்மை காத்து, யாரிடமும் சென்று யாசிக்காதவர்,
பெரு முத்தரையருக்கு  இணையான
பெரும் புகழுடையவராவர்.




தெளிவுரை :- வளப்பம் மிக்க பெரிய உலகத்து வாழ்வோரும், மிகுந்த செல்வராக இருந்த போதிலும், ஏழைக்கு இரங்காத கொடியவர் வறியரே. வறுமையுற்ற போதும் சென்று யாரிடமும் யாசிக்காதவர் பெரும் முத்தரையருக்கு இணையான செல்வராவார்.


சிறப்புறை :- பெரும் முத்தரையரின் பெருமை இரண்டாம் முறை பேசப் படுகின்றது.

                                                                               !
    உதவி :- புதிய பார்வையில் பதினெண் கீழ்க்கணக்கு
                     நாலடியார் மூலம், தெளிவுரை, சிறப்புரை, கருத்து அடைவு
       
                     க.ப.அறவாணன்
       
                    தமிழ்க் கோட்டம், 2, முனிரத்தினம் தெரு,
                   அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை
                   சென்னை- 600 029

                   தொலை பேசி :- 044-2374 4568   

           தமிழ் வெல்க !



1 comments:

  1. இதுவரையில் உங்கள் வலைப்பதிவில் பொதுசெய்திகள், சமுதாயச்செதிகள் வெளிவந்தன. இந்தப் பதிவிலிருந்து நீங்களும் இலக்கியச் செய்தியைக் கொடுத்துள்ளீர்கள். அதுவும் இலக்கியத்தில் வரலாற்றுச்செய்தியைப் பதிவு செய்துள்ளீர்கள். பெரும்பிடுகு முத்தரையரின் வரலாற்றைப் பதிவுசெய்துள்ளீர்கள். இது எமக்குப் புது கருத்தாக அமைந்துள்ளது. அதன் பிறகு அதற்கான பின்குறிப்பையும் கொடுத்துள்ளீர்கள். இதுபோன்ற மேலும் பல வரலாற்றுச்செய்திகளை இலக்கியங்கள் வழி வெளியிடவேண்டும். அது எம்மை போன்ற நபர்களுக்குப் பயன்படும்.
    உங்கள் வலைப்பதிவுப் பணி தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கவேண்டுகின்றேன்.

    அன்பின்
    முனைவர் துரை.மணிகண்டன்.

    ReplyDelete

Kindly post a comment.