Monday, September 3, 2012

ஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012


ஸ்பைருலீனா  ( சுருள் பாசி ) என்றால் என்ன ? 



இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது இயற்கையிலேயே முழுமையான  போஷாக்கு நிறைந்த ஊட்டச் சத்துக் கொண்டது. இந்த உப உணவில் புரதம் 55.65% உள்ளது. இது உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. ஏனைய உணவுப் பொருட்களுடன் ஒப்பிடும்பொழுது ஸ்பைருல்லாவில் உள்ள புரதம் எளிதில் ஜீரணிக்கும் தன்மை கொண்டது.


இத்தகைய இயற்கைப் பொருளான ஸ்பைருலீனாவைக் கொண்டு பற்பல உப பொருட்கள் தயாரிக்கப் படுகின்றன. இதைப் பதப்படுத்தி மாவு போல் அரைத்து  ஒரு டீ ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம். அது போன்று , சேமியா, சுருள்பாசி ஷாம்பூ,  சுருள்பாசி சோப்பு,  ஃபேஷியல் ஜெல், சுருள்பாசி மாய்சரைசிங், சுருள்பாசி ஜாம் போன்ற பற்பல மதிப்புக் கூட்டப்ட்ட  பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. பல வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது


ஸ்பைருலீனாவில் -சுருள் பாசியில் உள்ள ஊட்டச் சத்துக்களின் பட்டியல் :-

 புரதம் :-               55% முதல் 65% வரை.

தாதுக்கள் :-       இதில் அனைத்து வகையான தாதுக்களும் உள்ளன.  உடலைச்

                              சீராக   இயக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும்

                              உதவுகின்றது.

 மக்னீசியம், நைட்டனின் ஏ, பீட்டாகரோட்டின் வைட்டமின்  B6, B12,

இரும்புச்சத்து, ஹார்போஹைடிரேட்,  காமாலினோலினிக் மமிலம், சூப்பர்

ஆக்ஸைடு, டிஸ்மியூட்டேஸ்  (SOD)  போன்றவைகளும் உள்ளன.

 இலங்கைத் தமிழர் இந்தியாவில் நடமாட ஆரம்ம்பித்த பின்னரே சுருள்பாசி

குறித்த தகவல்கள் தமிழகத்தில் பரவ ஆரம்பித்தன என்றே தோன்றுகின்றது.

சென்னையில்  எங்கே தயாராகின்றது ?


சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலையில், நாவலூர் உள்ளது.

அதிலிருந்து இரண்டு கிலோமீட்டர் பயணித்தால், நத்தம் என்ற அழகிய

கிராமத்தை அடையலாம். அங்கே ஈழ ஏதிலியர் மறு வாழ்வுக் கழகம்

இயங்கி வருகின்றது அவர்கள் வசிக்கும் இடங்களைச் சுற்றிப்

பசுமையான தோட்டங்களை உருவாக்கிக்கொண்டுள்ளனர். பெரிய

பெரிய தொட்டிகளை அமைத்து, அந்த நீர்த் தொட்டிகளில்தான்

சுருள்பாசி என்கிற ஸ்பைருலீன் வளர்க்கப்படுகின்றது.


நாம் தயாரித்துப் பயன் படுத்த முடியுமா?


இதற்குப் பயிற்சியும் வழங்கப் படுகின்றது. வித விற்பனை முதல்

அனைத்துத் தகவல்களும் சொல்லித் தரப்படுகின்றன. பயிற்சிக்

கையேடு, தஙுகுமிடம், உணவு உட்பட மூன்று நாள் பயிற்சிக்கு 6000

ரூபாய், கட்டணம் வசூலிக்கப் படுகின்றது. எழும்பூரில்தான்

பயிற்சிக்கான இடம் உள்ளது. தொடர்பிற்கு :-


க. இரத்தினராஜலிஙகம், ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம் ( OFERR )

தொலைபேசி :- 044-28193063  044- 28190400  

கைபேசி :- 98840 00413,

இணையதளம் :- www.offerr.org/spirullina.htm

மின்னஞ்சல் :-   oferrindia@gmail.com    /  offerigp@gmail.com 


உள்ளம் உடல் உணவு சார்ந்த விழிப்புணர்வு மாத இதழாக,

டயட் ஃபுட்  முதலில் அம்பத்தூரிலிருந்தும் , தற்பொழுது 

அமைந்தகரையிலிருந்தும் வந்துகொண்டிருக்கிறது.

அவ்வப்பொழுது வாங்குவேன். பத்தாண்டு காலமாக

சுருள்பாசி குறித்த தகவல் பார்வையில் பட்டுக்கொண்டே

இருக்கின்றது. எனவே தான் இந்தப் பதிவு.

தொடர்பு எண் :-044 - 26640530, 26640522

மின்னஞ்சல் :- ediror.dietmagazine@gmail.com


சுருள்பாசியின் நம்பகத்தன்மை குறித்து தக்க மருத்துவர் ஆலோசனைகளைப்

பெற்றுப் பயன் படுத்தவும்.

1 comments:

Kindly post a comment.