Wednesday, August 29, 2012

திருக்குறள் ஈரடிகள், காஞ்சிக்கு ஒரே வரி- வேண்டுவது துரை. உ. வின் காலத்திற்கேற்ற புதிய ஈரடி!
தமிழில் திருக்குறள் சிறந்த நூல்தான். ஆனால் அது மட்டும்தான் சிறப்பானது

என்று  கூறி வருவது தவறு, திருக்குறள் ஈ.வே.ரா. வின் விமர்ச்சனத்திற்கும்

ஆளானது.

ஒள்யையாரின் ஆத்திசூடி, அறஞ்செய விரும்பில் துவங்கி, ஓரம் சொல்லேல்
என்பது வரை 109 பாடல்கள், 109 வரிகள்தான்..
.

ஒள்வையாரின் கொன்றை வேந்தன், அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம் துவங்கி,  ஓதாதவர்க்கு இல்லை, உணர்வொடு ஒழுக்கம் என்பது
வரை 91 பாடல்கள்.. 91 வரிகள்தான்.


பாரதியாரின் புதிய ஆத்திசூடி, அச்சம் தவிர் துவங்கி,  வெள்வுதல் நீக்கு என்பது
வரை 110 பாடல் கள்  110 வரிகள்தான்.


த.ரோஸ்ஸிலின் சுரேஷ் எழுதியுள்ள நவீன ஆத்திசூடி, அன்பு கூர்ந்து வாழ்
துவங்கி,  தீமைக்கும் நன்மை செய் 152 பாடல்கள், 152 வரிகள்தான்.
( அறிவுப் பதிப்பகம், 044- 28482441, 044- 28482973 )

இன்னும் பல இருக்கக் கூடும். அவற்றிலும்  ஒரே வரிகளில் நற் கருத்துக்கள் ப

பல உள்ளன. பழையவை தமிழின் சிறப்பிற்கு. புதியவை தமிழின் வளர்ச்சிக்கு.

பழையன போற்றுவோம். புதியனவற்றைச் சிந்திப்போம். அதைத்தான்

பாரதியார்

புதுவையில் முழக்கமிட்டார்.

இனி.முதுமொழிக் காஞ்சிக்கு வருவோம்


காஞ்சி என்று குறிப்பிடுவது, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் 

ஒன்றான,  முதுமொழிக் காஞ்சியைக் குறிக்கும். 

.
நச்சினார்க்கினியர்  போன்ற உரையாசிரியர்கள் இந்நூலை மேகோலாகக் 

காட்டியுள்ளனர். முது  மொழிக் காஞ்சி துறை சார்ந்த ஐந்து பாடல்கள் 

புறநானூற்றில் இடம்  பெற்றுள்ளன. ( 18, 24,  27,  28 )


தொல்காப்பியத்தில்  காஞ்சி என்பது நிலையாமை என்னும் பொருளில் 

மாறிவிட்டது..


 மகளிரின் அணிகலன் ஒன்றிற்கும் காஞ்சி என்று பெயர் உண்டு. 

மேலும், முது மொழிக் காஞ்சி நிலையாமை பற்றிக் கூறவில்லை காஞ்சி 

என்பதற்கு இவ்விடத்தில் கோவை  என்று பொருள் கொள்வதே சாலவும் 

சிறந்ததாகும்.  நூலாசிரியர் மதுரைக் கூடலூர்க் கிழார் ஆவார். 

  தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியத் தொகுப்பிலும் 

கடவுள்  வாழ்த்து எனும் தனி முகப்பு இடம் பெறவில்லை. அதே போன்று 

முது மொழிக்  காஞ்சியிலும் கடவுள் வாழ்த்து இடம் பெறவில்லை.


இலக்கியங்களிலிருந்தே இலக்கணங்கள் உருவாக்கப் படுகின்றன. 

புறநானூற்றில் உள்ள முதுமொழிக் காஞ்சிப் பாடல்களின் கருத்துக்களை 

உள்வாங்கிக் கொண்ட ஐயனாரிதனார், முதுமொழிக் காஞ்சிக்குரிய 

இலக்கணத்தை வகுத்திருக்க வேண்டும்.


திருக்குறளை விடச் சுருக்கமாகச் சொன்ன நூல்கள் வரிசையில் 

முதலிடம் வகிப்பது   முதுமொழிக் காஞ்சி என்றே துணிந்து கூறலாம். 


சிறந்த பத்து, அறிவுப் பத்து, பழியாப் பத்து, துவ்வாப் பத்து,

அல்ல பத்து , கல்லைப் பத்து (பெரும் பேறு ), பொய்ப் பத்து,

எளிய பத்து,   நல்கூர்ந்த பத்து , தண்டாப் பத்து என்று 10 அதிகாரங்களில், 

மொத்தம்  100 குறள் வெண் செந்துறையில் இயற்றப்பெற்றுள்ளது. 

அதாவது  நூறு  அடிகளைக் கொண்டது.

எடுத்துக்காட்டாக ஒரே ஒரு அதிகாரத்தை இவ்வலைப்பூவில் பதிவு

செயப்பட்உள்ளது.

 அதிகாரம்  3.  பழியாப் பத்து :  


21.  ”ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்-
      யாப்பிலோரை இயல்பு குணம் பழியார்.”

22..    மீட்பு இலோரை மீக்குணம் பழியார்.

23.     நிறையச் செய்யாக் குறை வினை பழியார்.

24.     முறை இல் அரசர் நாட்டு இருந்து பழியார்

25.     பெருமை உடையதன் அருமை பழியார்

26.      அருமை உடையதன் பெருமை பழியார்.

27.      செய்தக்க நற் கேளிர் செய்யாமை பழியார்.

28.       அறியாத தேசத்து, ஆசாரம் பழியார்.

29.       வறியோன் வள்ளியன் அன்மை பழியார்

30 .      சிறியோர் ஒழுக்கம் சிறந்தோறும் பழியார்.


மேலுள்ளவற்றிற்கான தெளிவுரை :- ( தேவைப் படுவோருக்கு மட்டும் )


21.  ஒலிக்கும் கடல் சூழ்ந்த மக்களுள், கட்டுப்பாடு வகுத்துக்

     கொள்ளாதவரின் குறைகளைப் பலறறியப் பொது இடங்களில் அறிஞர்

     பழிக்க  மாட்டார், என்பதாகும்.

    ( இக்கருத்திற்குரிய இரு  அடிகளும் ஒவ்வொரு அதிகாரத்தின் முதலிலும்
     இடம்பெறும் )

22.  பெருந்தன்மை இல்லாமல், தன்னைத்தானே தற்பெறுமை அடித்துக்
     
       கொள்வோரைப்  பழிப்பதால் பயனில்லை.

23.   மிக்க பெருமைக்குரிய செயல் செய்வதற்குத் தகுதியுடயவராய்

        இருப்பவர்களைக்  கண்டு பழிப்பதால் பயனில்லை.

24.  செங்கோல் பிறழ்ந்து ஆளும் அரசரின் நாட்டுக்குள் வாழ்ந்து கொண்டு

        அரசரைப் பழித்துரைப்பதால் மட்டும் பயனில்லை.

25.  நிறையச் சாதனை செய்திட வேண்டிய ஒருவர் , குறைவாகச்

      சாதனைகளை   நிகழ்த்தினாலும் அவரைப் பழிப்பதால் ப்யனில்லை.

26.   கொடுங்கோன்மை செய்யும் அரசனின் நாட்டில் இருந்து கொண்டு

       அவனது   முறையில்லாத செயல்களைப் பழிப்பதால் ப்யனில்லை.

27.   உதவி செய்யும் நிலையில் உள்ள உறவினர், உதவி

       செய்யதிருக்கும்போது, அவறைப் பழிப்பதால் பயனில்லை.

28.     நமக்கு அறிமுகம் ஆகாத நாட்டின் பழக்கங்களைப் பழிப்பதால்

         பயனில்லை.

29.     பொருள் இல்லாத ஏழை, பிறருக்கு, வாரி வழங்கவில்லையே என்று

          பழிப்பதால்  பயனில்லை.

30.      பண்பற்றவர்களிடம், அவர்களுடைய தீய பழக்கங்களைச்

          சுட்டிக்காட்டினும் திருந்தமாட்டார். எனவே, சிறந்த சான்றோற்

          சிறியோரைத் திருத்த முனையார்.


புதுவையில் நடந்த உண்மை நிகழ்வு. பாரதியாரிடம் ஒருவர் பெருமையுடன், ”ஐயா, ஒள்வையாரின் ஆத்திசூடியைப் பிரெஞ்ச்சுக்கு மொழி பெயர்த்துக் கொண்டிருக்கின்றேன்” என்றார்.

”சற்றுப் பொறும் வருகிறேன்” என்று கூறிவிட்டுக் கடற்கறைக்குச் செல்கின்றார். ஆவேசத்துடன் படைக்கின்றார், புதிய ஆத்திசூடியை.! மீண்டு வந்து,   ஒள்வையாரின் ஆத்திசூடியை பிரெஞ்சில் மொழியாக்கம் செய்து கொண்டிருந்தவரிடம்., “ஐயா, பிடியும், இதை. இது புதிய ஆத்திசூடி. பழம் பெரு நூல்களை எல்லாம் தமிழின் பழைமையையும், சிறப்பையும் பிறருக்கு எடுத்துச் சொல்லப் பயன்படுத்திடல் வேண்டும். நவீன காலத்திற்கும், தேவைக்கும் ஏற்றபடி புதியனவற்றைப் படைத்திடல் வேண்டும்” என்று சொல்லிச் சென்றுவிட்டார்.

இதனைத் திருச்சியில் ஒரு கூட்டத்தில் எடுத்துச் சொன்னவர்,
தமிழச்சி தங்கப்பாண்டியன் ! நேரிற் கேட்டவர், இந்தப் பதிவர்.

அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பது பிழைதானே, நண்பர்களே ?தூத்துக்குடியிலிருந்துகொண்டு தமிழ்க்கடலில் மூழ்கி முத்த்ர்டுக்கும்

துரை-உ -அன்பருக்கு !

உங்கள் ஈரடிக் கவிதைகளை 

உடனே அச்சேற்றுங்கள், தாமதம் வேண்டாம்.

பாரதியே வழி காட்டுகின்றார். -


ஆழம் அறியாத வேழத்தின் வீழ்ச்சியை
ஈழம் உணர்த்தும் உமக்கு [01]


யானை தனது சந்தேகத்துக்கிடமான பயணவேளைகளில் தரையின் தன்மையை துதிக்கையால் அழுத்தி சோதித்தபின்பே எடுத்துவைக்கும் அடுத்த அடியை. கொண்ட ஆணவத்தால் , உண்மைதன்னை உணராமல்,உணமைத்தன்மை அறியாமல் புதைக்குழியில் காலவைத்த (சிங்கள)யானையின் அழிவை உணர்த்தும் ஆவணமாய் இருக்கும் ’ஈழம்’.
2 comments:

 1. இன்றுதற்செயலாகத்தான் இந்தப் பதிவைப் பார்த்தேன் ...

  என்னால் நம்பவே முடியவில்லை ... நம்மையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று அறிய வரும் போது ..கிடைக்கும் ஆனந்தத்திற்கு ஈடே இல்லை :)) மிக மகிழ்வாக உணர்கிறேன்

  திரு.ராமசாமி ஐயா அவர்களை நான் இதுவரையிலும் அறிந்திருக்கவில்லை ...அய்யாவிற்கு பாதம்பணிந்த வனக்கங்களை காணிக்கையாக்குகிறேன் .

  விரைவில் தங்கள் எண்ணம் நிறைவேற முயல்வேன் ஐயா .....

  ReplyDelete
 2. நன்றி, நண்பர், துரை.ந.உ. அவர்களே. தமிழிலக்கியத்தைப் பாமரரும் புரியும் வண்ணம் எளிமைப் படுத்தியதில் நெல்லைச் சீமைக்குப் பெரும் பங்கு உண்டு. நெல்லையோடு சேர்ந்திருந்த பல ஊர்கள் இன்று தனி மாட்டங்களாகிவிட்டன. தூத்துக்குடியும் அதனுள் அடக்கம். பாரதி காட்டிய வழியில் புதுமையைப் படைத்துக் கொண்டிருக்கும் தங்களுக்குப் பல்வேறு பரிசுகள் காத்துக் கொண்டிருக்கின்றன என்று எனதுளம் கூறுகின்றது. விரும்பியன விரைவில் நிறைவேறும்.

  ReplyDelete

Kindly post a comment.