தமிழ் வளர்ச்சித் துறைக்காக உருவாக்கப்பட்ட
www.tamilvalarchithurai.org
என்ற புதிய வலைத்தளத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் தமிழ் வளர்ச்சித் துறைக்கென தனி வலைத்தளம் இல்லாத குறையினைப் போக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறைக்கென புதிய வலைத்தளம் உருவாக்கிட ஆணையிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் 2012-2013ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையில், தமிழ் வளர்ச்சித் துறைக்கென 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தனியாக ஒரு வலைத்தளம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ் வளர்ச்சித் துறைக்காக உருவாக்கப்பட்ட புதிய வலைத்தளத்தை தமிழக முதல்வர் இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
இந்த வலைத்தளத்தில்,
தமிழ் வளர்ச்சித் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கப் பணிகள்,
தமிழ் வளர்ச்சி தொடர்பான திட்டங்கள், நாட்டுடைமை ஆக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள் விவரம்,
ஆட்சிச் சொல்லகராதி,
தமிழ் வளர்ச்சித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு,
தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் விருதுகள்
மற்றும் அவற்றைப் பெற்ற தமிழறிஞர்கள் விவரம்
உள்ளிட்ட பல்வேறு விவரங்கள்
அனைவரும் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இடம்பெற்றுள்ளன.
மேலும், தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் சிறந்த நூலுக்கான பரிசு,
நூல் வெளியிட நிதியுதவி,
அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி,
தமிழறிஞர்களுக்கு நிதி உதவி போன்ற திட்டங்களுக்கான விண்ணப்பப்
படிவங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும்
இந்த வலைத்தளத்தில்ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்பு முகவரி :-
தமிழ் வளர்ச்சி இயக்ககம்
தமிழ் வளர்ச்சி வளாகம். முதல் தளம்,
ஆல்சு சாலை, எழும்பூர், சென்னை – 600008
( எழும்பூர் குழந்தைகள் மருத்துவ மனைக்கு அடுத்த கட்டிடம் )
info@tamilvalarchithurai.org
044 28190412 / 13
நன்றி:- தினமணி , 21-02-2013
Thursday, February 28, 2013
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.