Thursday, February 28, 2013

"சுவரில் ஓட்டை' குடிசைப் பகுதிவாழ்க் குழந்தைகள் சுயமாக கணினி கல்வி கற்கும் புதுமையான முறை ! இந்தியருக்கு 5.4 கோடி விருது !

கல்வி, தொழில்நுட்பத்தில் சாதனை: வெளிநாடுவாழ் இந்தியருக்கு ரூ.5.4 கோடி பரிசு

குடிசைப் பகுதிவாழ் குழந்தைகள் சுயமாகக் கணினி கல்வி கற்கும் புதுமையான முறை மூலம் புகழ்பெற்ற வெளிநாடுவாழ் இந்தியருக்கு ரூ.5.4 கோடி மதிப்பிலான டி.இ.டி. விருது வழங்கப்பட்டுள்ளது.
 !
குடிசைப் பகுதிவாழ் குழந்தைகள் சுயமாகக் கணினி கல்வி கற்கும் புதுமையான முறை மூலம் புகழ்பெற்ற வெளிநாடுவாழ் இந்தியருக்கு ரூ.5.4 கோடி மதிப்பிலான டி.இ.டி. விருது வழங்கப்பட்டுள்ளது.

டி.இ.டி. ஒருலாபநோக்கமற்ற அமைப்பு ஆகும். உலகம் முழுவதும் தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, வடிவமைப்பு (டி.இ.டி.) ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் வல்லுநர்களை ஒருங்கிணைக்கும் வகையில் ஆண்டுதோறும் கருத்தரங்கம் நடத்தி வருகிறது. இத்துறை சார்ந்த புதுமையான கருத்தாக்கங்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான டி.இ.டி. விருது வெளிநாடுவாழ் இந்தியரும் சிறந்த கல்வியாளருமான டாக்டர் சுகதா மித்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர், இங்கிலாந்தில் உள்ள நியூகேஸ்டில் பல்கலைக்கழகத்தில் கல்வி தொழில்நுட்பப் பிரிவு பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்த விருதைப் பெற்றுக் கொண்ட பின்னர் மித்ரா கூறியது:

எனக்குக் கிடைத்த இந்த பரிசுத் தொகையை, பள்ளிகள் மற்றும் குடும்பத்தினருக்குத் தாமாகவே கல்வி கற்கக்கூடிய சாதனங்களை உலகம் முழுவதும் அறிமுகம் செய்வதற்காகப் பயன்படுத்துவேன். இதன்மூலம் தாமாகக் கல்வி கற்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதுதான் என் குறிக்கோள். உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் தனித்திறமையை வெளிக் கொண்டுவந்து, அவற்றை ஒருங்கிணைக்க உதவுவதன் மூலம், எதிர்காலத்துக்கான சிறந்த கல்வி முறையை வடிவமைக்க உதவ வேண்டும் என்பதுதான் என் விருப்பம் என்றார் மித்ரா.

சுவரில் ஓட்டை: கடந்த 1999ஆம் ஆண்டு "சுவரில் ஓட்டை' என்ற புதிய கருத்தாக்கத்தை மித்ரா உருவாக்கினார். இதன்படி, தில்லியில் குடிசைப் பகுதிக்கு அருகே உள்ள தனது ஆராய்ச்சி மையத்தில் உள்ள ஒரு அறையின் சுவரில் ஓட்டை போட்டு அதில் ஒரு கணினியை மாட்டி வைத்தார். அதை அப்பகுதி குடிசைவாழ் குழந்தைகள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தார்.  எந்தவித கணினி அறிவும், ஆங்கில மொழி அறிவும் இல்லாத குழந்தைகளும் தாங்களாகவே கணினியை இயக்க கற்றுக் கொள்ளும் வகையில் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, டி.இ.டி. அமைப்பின் இயக்குநர் லாரா ஸôடெய்ன் கூறுகையில், ""குழந்தைகள் சுயமாக கற்றுக் கொள்வதற்கான சுகதா ஆராய்ச்சி மிகவும் பாராட்டுக்குரியது. அவரது முயற்சி உலகம் முழுவதும் பரவ ஆதரவு அளிப்போம்'' என்றார்.

நன்றி :- தினமணி, 28-02-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.