Wednesday, February 27, 2013

எறும்பு , தூக்கணங்குருவி, காக்கை -ஆசாரக்கோவை

ஆசாரக்கோவை ஓர் அறிமுகம் ! ( புதியவர்களுக்கு )

ஆசாரக்கோவை என்பதற்கு நன்னடைத்தகளின் தொகுப்பு என்பது பொருள். அச்சமே கீழ்களது ஆசாரம் என்பார் திருவள்ளுவர் ( 1073 ) இந்நூலின் முதல் பதிப்பாசிரியர், திருமணம் செல்வ கேசவராய முதலியார் ஆவார். இந்நூலில் உள்ளவற்றில் பெரும்பாலானவை சமஸ்கிருத சுக்கர ஸ்மிருதி-யில் இருந்து தொகுக்கப்பட்டவையாக அவர் எடுத்துக் கூறுகிறார். இந்நூலில், வேறுபல சமஸ்கிருத நூல்களிலிருந்தும் பல செய்திகள் எடுத்தாளப்பட்டுள்ளன என்று பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை கூறுகிறார்.

இயற்றியவர் பெருவாயின் முள்ளியார். முள்ளியார் என்பது இவரது இயற்பெயர். இவருடைய ஊர் கயத்தூர் என்பது பாயிர அடிகளால் அறியப் பெறுகிறது. இவரது ஊர், புதுக்கோட்டை, நாட்டுக் குளத்தூர் வட்டத்தில் உள்ள பெருவாயில் என்று தமிழறிஞர், தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் கூறுவார்.

இந்நூலில் இயல், அதிகாரம் போன்ற எப்பகுப்பும் இல்லை. சிறப்புப் பாயிரம் நீங்கலாக நூறு பாடல்கள் உள்ளன. இந்நூலுள் ஈரடி, மூவடி, நான்கடி, ஐந்தடி வெண்பாக்கள் விரவி உள்ளன. மிகுதியாக மூவடி வெண்பாக்கள் இடம்பெற்றுள்ளன.இந்நூலின் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி.

சைவ சமயத்தைச் சார்ந்த இந்நூல், அந்தணரையே பல இடங்களில் முன்னிருத்துகின்றது. இவ்வளவு தகவல்களையும் நமக்கு எடுத்துச் சொல்பவர், தமிழறிஞர், க.ப.அறவாணன். ஆசாரக்கோவையின் 65-வது பாடலில் இடம்பெறும், “ ஐம்புலனும் தாங்கற்கு அரிது “ என்பதையே இந்நூலின் குறிக்கோளாகவும் சுட்டுகின்றார். இவர்,

புதிய பார்வையில் பதினெண் கீழ்க்கணக்கு என்னும் தலைப்பில் அனைத்து நூல்களையும் வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு நூலுக்கும்

 கருத்தடைவு,

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுக்கு முழுமையாக ஆராய்ச்சி முன்னுரை,

ஆறு அக நூல்களுக்கும் தனித்தனியே இணைக்கப்பெற்ற ஆராய்ச்சி முன்னுரை,

ஒவ்வொரு பாடலிலும் கருத்தை உள்வாங்கி எழுதப்பெற்றுள்ள தெளிவுரையும், சிறப்புரையும், சில செய்யுளுள்களுக்கு மேற்கோள் விளக்கமும்,

 பாடல்தோறும் பொருத்தமாக முகப்பில் வழங்கப்பெற்றுள்ள தலைப்புகள்

என்பனவற்றைக் கொண்டு முற்றிலும் புதிய முயற்சி என்பதையும், 

தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தோர் புலவர்களின் துணையின்றியே புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான தமிழில் எழுதப்பட்டுள்ளது என்பதையும்  படிப்போர் எல்லோரும் ஏற்றுக்கொள்வர்...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் படித்துப் பயன்பெற விழைவோர் அணுக வேண்டிய முகவரி:-

தமிழ்க் கோட்டம்
2,முனிரத்தினம் தெரு,
அய்யாவு குடியிருப்பு,
அமைந்தகரை,
சென்னை- 600 020


ஆசாரக்கோவை
108 பக்கங்கள்
விலை ரூ.50/-


 ஆசாரக்கோவை-96


நந்து எறும்பு, தூக்கணம்புள், காக்கை, என்று இவைபோல
தம் கருமம் நல்ல கடைப்பிடித்து, தம் கருமம்
அப் பெற்றியாக முயல்பவர்க்கு ஆசாரம்
எப் பெற்றியானும் படும்.
                                      








               சுறு சுறுப்புடைய எறும்பு,




 




          தூக்கணங் குருவி,







          காக்கை




 ஆகியவற்றைப்போல, தம் கருமமே கண்ணாக இருந்து, தம் கருமம்

 வெற்றி அடைய அயராது முயல்பவர்க்கு ஒழுக்கம் எந்த நிலையிலும்

செழிக்கும்.

கருத்துரை :- உணவு சேர்த்தலில் எறும்பாகவும், இருப்பிடம்

கட்டிக்கொள்வதில் தூக்கணங்குருவியாகவும், உறவினருடன் பகிர்ந்து

அழைத்து உண்ணுதலில் காக்கை ஆகவும் இருத்தல் வேண்டும்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.