மாநாடு தொடர்பாக திருக்குறள் தேசிய நூல் ஆய்வுக் கருத்தரங்க சிறப்புத் தலைவர் மா. கோமுகிமணியன், கருத்தரங்கத் தலைவர் துரை. இராசமாணிக்கம், செயலர் தா. உடையார்கோயில் குணா ஆகியோர் கூறியதாவது:
உலகப் பொதுமறையான திருக்குறளைத் தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தை வழிமொழிந்தும், தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்தும் தஞ்சாவூர், தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் மார்ச் 17-ஆம் தேதி சென்னை எழும்பூர் அருங்காட்சியக கலையரங்கில் திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தும் மாநாடும் ஆய்வுக் கருத்தரங்கும் நடத்தப்படும்.
இதற்காக தில்லி, மும்பை, ஹைதராபாத், மைசூர், புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளை இந்தப் பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக ஆதரவு திரட்டி வருகிறோம்.
இந்த மாநாட்டில் திருக்குறள் ஆய்வு நூல், கருத்தரங்க மலர் ஆகியவை வெளியிடப்படும். இந்த ஆய்வு நூலில் பல்வேறு தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்களின் கருத்துகள் இடம்பெறும்.
மாநாட்டில் பல்வேறு துணைவேந்தர்கள், தமிழறிஞர்கள், பேராசிரியர்கள் பங்கேற்கின்றனர். பல்வேறு இடங்களில் திருக்குறளைப் பரப்பும் வகையில் நடத்தப்படும் திருக்குறள் படிப்பகம், நூலகம், தவச்சாலை, திருக்குறள் மன்றங்களின் நிர்வாகிகளை மாநாட்டில் சிறப்பிக்க இருக்கிறோம்.
மாநாட்டில் வெளியிடப்பட இருக்கும் சிறப்பு மலருக்கு திருக்குறள் தொடர்பான அரிய தகவல்களைத் தந்து உதவ வேண்டுகிறோம். திருக்குறள் ஒப்பிக்கும் குழந்தைகள், திருக்குறள் நெறி பரப்புவோர் குறித்தும் மாநாட்டு மலரில் செய்திகள் வெளியிடப்பட உள்ளன.
இது தொடர்பான தகவல்களை
thamilthaitrust@gmail.com
என்ற மின்னஞ்சல் மூலம்
அனுப்பலாம்.
நன்றி :- தினமணி, 22-02-2013
0 comments:
Post a Comment
Kindly post a comment.