Friday, February 22, 2013

சமூகநலத்திற்காகச் செலவிடும் பணக்காரர்கள் பட்டியலில், முதல் இந்தியர், அசிம் பிரேம்ஜி !


தங்கள் சொத்துமதிப்பில், ஒரு பகுதியை சமூகநலத் திட்டங்களுக்குச் செலவிடும் உலக மகா பணக்காரர்கள் வரிசையில், இந்தியாவின் முதல் நபராக விப்ரோ குழுமத் தலைவர் அசிம் பிரேம்ஜி இடம்பிடித்துள்ளார். அதன்படி, அமெரிக்க மெகா கோடீஸ்வரர்களான வாரன் பஃப்பெட் மற்றும் பில் கேட்ஸ் தொடங்கியுள்ள கிவிங் பிளட்ஜ் (Giving the Pledge) அமைப்பில் இணைய பிரேம்ஜி கையெழுத்திட்டுள்ளார்.

அந்த அமைப்பின் குறிக்கோளின்படி, உலகக் கோடீஸ்வரர்கள் தங்கள் சொத்து மதிப்பில் கணிசமான பகுதியை உலகம் முழுவதும் ஏழை நாடுகளில் அடிப்படைக் கல்வி, சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பணக்காரர்களைக் கொண்டு செயல்பட்டு வந்த இந்த அமைப்பை, இந்தியா மற்றும் சீனாவுக்கும் விரிவுபடுத்த வாரன் பஃப்பெட் மற்றும் பில் கேட்ஸ் முடிவு செய்தனர்.

அதில் இந்தியாவில் இருந்து முதலாவதாக, அசிம் பிரேம்ஜி Giving Pledge அமைப்பில் இணைந்துள்ளார். இந்தியாவின் 3வது மிகப் பெரிய பணக்காரரான இவர், ஏற்கனவே தனது பெயரில் அறக்கட்டளை தொடங்கி, தரமான கல்வி அளிப்பதில் ஈடுபட்டுள்ளார்.

அதற்காக விப்ரோ நிறுவனத்தில் வைத்துள்ள தனது பங்குகளில் 8.7 சதவீதத்தை நன்கொடையாக  அளித்துள்ளார்                                                                     

நன்றி :- புதிய தலைமுறை, THE ECONOMIC TIMES OF INDIA


0 comments:

Post a Comment

Kindly post a comment.