Flash news:

  • உலகம்
  • தமிழகச்செய்திகள்
  • கட்டுரைகள்
  • சிறப்பு செய்திகள்
  • அனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.
Showing posts with label . . செய்திச் சுரங்கம். Show all posts

Monday, August 29, 2016

சென்னை: அரசால் விதிக்கப்பட்ட தடையை மீறி, விவி மினரல்ஸ் நிறுவன தொழிலதிபர் வைகுண்டராஜன், தாதுமணல் ஏற்றுமதி செய்கிறார். இதன் காரணமாக தமிழக அரசுக்கு ரூ10,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று பகீர் கிளப்பி உள்ளார் வைகுண்டராஜனின் சகோதரர் குமரேசன். 

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட கடற்கரையோரங்களில் கிடைக்கும் தாது மணலை எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் தொழில் செய்து வருபவர் வைகுண்டராஜன். கடந்த பல வருடங்களாக இவர் செய்து வரும் இந்த தொழிலுக்கு, உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மட்டத்தில் ஆதரவு இருப்பதாகவும், வைகுண்டராஜன் விதி மீறல் செய்வதாகவும்  குற்றச்சாட்டுக்கள் எழுந்தன..

வைகுண்டராஜனின் சகோதரர் குமரேசன்

வைகுண்டராஜன்

மேலும், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தனது தாது மணல் ஏற்றுமதி தொழிலில் கோலோச்சி வரும் வைகுண்டராஜன் அண்ட் பிரதர்ஸ், அரசிடம் முறையான அனுமதி வாங்கவில்லை என்று கூறி, கடந்த 2013 முதல் தாது மணல் ஏற்றுமதிக்கு தமிழக அரசு தடை விதித்தது. ஆனாலும், வி.வி பிரதர்ஸ் என்னும் 'மாய சக்தி'யின் தொழில் தங்கு தடையின்றி நடந்து கொண்டேதான் உள்ளது.

தமிழகத்திலுள்ள முக்கிய அரசியல் கட்சிகளின் ஆதரவு பார்வை இருப்பதால், வி.வி பிரதர்ஸின் தொழிலுக்கு எந்தத் தடையும் வந்ததில்லை. அப்படியே வந்தாலும் அதை ஆரம்பத்திலே முறியடித்து, தாது மணல் ராஜாங்கம் நடத்தும் தந்திரத்தை கற்றவர்கள் வி.வி.பிரதர்ஸ். அதனால் அரசு உத்தரவுகள், இவர்களை என்றுமே தொந்தரவு செய்ததில்லை. அவை மணலோடு மணலாய் மாயமாகிப்போகின்றன.

சமீபத்தில், 'என்னை எனது தலைவர் அறைந்தார்' என்று நாடாளுமன்றத்தில் பேசி உயிருக்குப் பாதுகாப்பு கேட்டு தேசிய அளவில் பரபரப்பை உண்டாக்கிய எம்.பி. சசிகலா புஷ்பாவின் அரசியல் வளர்ச்சிக்கு வைகுண்டராஜன் தான் காரணம் என பேசப்பட்டு வரும் நிலையில், டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சசிகலாபுஷ்பா, 'என்னைச் சீண்டினால் அ.தி.மு.க.வின் உள்ளே நடப்பதை வெளியில் சொல்வேன். என்னை சாதாரணமாக நினைக்க வேண்டாம். தமிழக அரசியலையே புரட்டிப் போட்டுவிடுவேன்’ என்று கூறியிருக்கிறார். அவரின் இந்தப் பேச்சு, வைகுண்டராஜன் விவகாரத்தில், தமிழக அரசு வேகமெடுக்க காரணமாகிவிட்டதோ என்று எண்ண வைத்துள்ளதாகக் கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

எம்.பி. சசிகலா புஷ்பா

இந்நிலையில், சென்னையில் இன்று வைகுண்டராஜனின் சகோதரர் குமரேசன் திடீரென செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''மத்திய அரசின் நிறுவனங்கள் மூலம் விதிக்கப்பட்ட தடையை மீறி வைகுண்டராஜன், அவரது விவி மினரல்ஸ் நிறுவனம் மூலம் தொடர்ந்து தாது மணலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இதனால், தமிழக அரசுக்கு ரூ10,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த தாது மணல் எந்தெந்த வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என்பதற்கான முழுமையான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அந்த ஆதாரங்களை முதல்வரிடம் அளிக்க உள்ளேன். இதுவரை தடையை மீறி 50 லட்சம் டன் அளவுக்கு தாது மணலை வைகுண்டராஜன் வெளிநாடுகளுக்கு கடத்தியுள்ளார். இந்த சட்ட விரோத நடவடிக்கையை அவர் ரவுடிகளின் பாதுகாப்புடன் நடத்தி வருகிறார். இப்படி முறைகேடாக அள்ளப்பட்ட தாது மணல், 15 கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

https://news.google.co.in

http://www.vikatan.com/

வைகுண்டராஜனால் தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு! - பகீர் கிளப்பும் சகோதரர்

Sunday, August 28, 2016

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 
புதிதாக அமைக்கப்பட்டுள்ள 
தொங்கு பாலம்.

ஆசியா, ஐரோப்பாவை இணைக் கும் வகையில் துருக்கி இஸ்தான்புல் நகரில் புதிய தொங்கு பாலம் திறக்கப்பட்டுள்ளது.

ஆசியா, ஐரோப்பா கண்டங்களுக்கு இடையில் துருக்கி அமைந்துள்ளது. இதன் மேற்குப் பகுதி ஐரோப்பிய கண்டத்திலும் கிழக்குப் பகுதி ஆசிய கண்டத்திலும் உள்ளன. இரு கண்டங்களையும் இணைக் கும் வகையில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்கெனவே 2 பிரமாண்ட பாலங்கள் உள்ளன.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க் நகர புரூக்ளின் பாலத்தைப் போன்று இஸ்தான்புல்லில் 3-வதாக தொங்கு பாலம் அமைக்கும் பணி கடந்த 2013 மே மாதம் தொடங்கப்பட்டது.

ரூ.20,100 கோடி செலவில் 3 ஆண்டு காலத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இது 1.4 கி.மீட்டர் நீளம், 59 மீட்டர் அகலம், 322 மீட்டர் உயரம் கொண்டதாகும். 8 வழிச் சாலைகள், 2 ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஒருங்கிணைந்த சாலை, ரயில் பாதை கொண்ட உலகின் மிகப்பெரிய பாலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

புதிய தொங்கு பாலத்தை துருக்கி அதிபர் எர்டோகன் நேற்றுமுன்தினம் மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தார். இந்தப் பாலத்துக்கு 16-ம் நூற்றாண்டை சேர்ந்த துருக்கி மன்னர் யாயூஷ் சுல்தான் சலிம் பெயர் சூட்டப்பட்டுள்ளது. புதிய பாலம் மூலம் துருக்கி, ஐரோப்பாவுக்கு இடையே வர்த்தகம் மேம்படும் என்று அதிபர் எர்டோகன் நம்பிக்கை தெரிவித்தார்.

நன்றி :- தி இந்து

ஆசியா ஐரோப்பாவை இணைக்கும் புதிய தொங்குபாலம் திறப்பு !

Image result for pachamuthu

சைக்கிளில் சென்று ஆசிரியர் பணியைத் தொடங்கிய டி.ஆர்.பச்சமுத்து இவ்வளவு பெரிய கல்வி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பின்னணி இது!

சென்னை மேற்கு மாம்பலத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இருந்து பச்சமுத்து வளர்ச்சி அத்தியாயம் தொடங்கியது. கடன் வாங்கித்தான் அந்த பள்ளியை தொடங்கியதாக அவருடன் நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். கல்வி சாம்ராஜ்ஜியம் மட்டுமல்லாமல் அரசியலிலும் பச்சமுத்து கால் பதித்தார். காட்டாங்கொளத்தூரில் பல ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாய் காட்சி அளிக்கிறது எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம். இந்த அளவுக்கு அவரது வளர்ச்சி ஏற்பட்டது மற்றவர்களை வியப்புக்குள் ஆழ்த்துகிறது. ஆனால், அவர் கடந்து வந்த பாதைகளை விவரிக்கிறார் பச்சமுத்துவின் நெருங்கியவர்கள்...

மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் தொடங்கி தொழில் நுட்ப கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் எஸ்.ஆர்.எம். நிர்வாகத்தால் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான இடங்களை தேர்வு செய்வதிலும் எஸ்.ஆர்.எம். கடைபிடிக்கும் பாலிசியே வித்தியாசமானது. நீர்நிலைகளை ஆக்கிரமித்து பல கட்டடங்களும் கட்டப்பட்டு இருக்கின்றன என்ற குற்றச்சாட்டும் உள்ளது. மேலும், நைட்டிங்கேல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, வள்ளியம்மை பாலிடெக்னிக் கல்லூரி, எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.எம்.நர்சிங் கல்லூரி, எஸ்.ஆர்.எம். பிசியோதெரபி, எஸ்.ஆர்.எம். ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் காலேஜ், எஸ்.ஆர்.எம். பாலிடெக்னிக் கல்லூரி, ஈஸ்வரி பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.எம். பல்மருத்துவ கல்லூரி, எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி மையம், வள்ளியம்மை பொறியியல் கல்லூரி என 20க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார் பச்சமுத்து. இவை போக சில வட இந்திய மாநிலங்களில் எஸ்.ஆர்.எம். கல்லூரிகளின் கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றன. கல்வி நிறுவனங்களை தாண்டி, எஸ்.ஆர்.எம். மருத்துவமனைகள், எஸ்.ஆர்.எம். நட்சத்திர விடுதிகள் , எஸ்.ஆர்.எம். பார்சல் சர்வீஸ், எஸ்.ஆர்.எம். டிராவல்ஸ், எஸ்.ஆர்.எம். எலக்ட்ரிக்கல்ஸ், என வேறு பல தொழில்களிலும் கோலோச்சுகிறார் பச்சைமுத்து. ஊடகத்துறையிலும் கால் பதித்துள்ளார்.

2005ல் நாகர்கோவிலை சேர்ந்த மதன், மருத்துவ மற்றும் இன்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை மூலம் பச்சமுத்துவிடம் அறிமுகம் ஆகிறார். 2007ல் எஸ்.ஆர்.எம். நிர்வாகத்தின் பெரும்பாலான மாணவர் சேர்க்கை மதன் மூலமாகவே நடக்கிறது. ஒரு கட்டத்தில் எஸ்.ஆர்.எம். நிர்வாகத்தின் துணை பொதுமேலாளர் என்ற பதவியும் மதனுக்கு வழங்கப்படுகிறது. நகமும், சதையும் போலவே பச்சமுத்து, மதனின் நட்பு இருந்தது. 2011ல் அரசியல் ஆசை துளிர்விட பச்சமுத்து இந்திய ஜனநாயக கட்சியை தொடங்குகிறார். அதிலும் மதனுக்கு மாநில இளைஞரணி பொறுப்பு அளிக்கப்படுகிறது. பச்சமுத்துக்கு சினிமா பிசினஸ் ஆசை வர, ஒரு தயாரிப்பாளரால் அவமானப்படுத்தப்படுகிறார். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வேந்தர் மூவிஸ் உதயமாகிறது. மொட்ட சிவா, கெட்ட சிவா வரை வேந்தர் மூவிஸ் நிகழ்ச்சிகளில் பச்சமுத்து தவறாமல் ஆஜராகினார். இவர்களின் நட்பு பச்சமுத்துவின் குடும்பத்தின் சிலருக்கு பிடிக்கவில்லை.

இதன் பிறகுதான் இருவரையும் பிரிக்க சதுரங்கவேட்டை ஆரம்பமானது. பூஜை அறையில் பச்சமுத்துவின் படத்தை வைத்து பூஜித்தார். அந்த அளவுக்கு பச்சமுத்து மீது அளவு கடந்த பாசத்தையும், மரியாதையும் வைத்திருந்தார் மதன். பச்சமுத்து குடும்பத்தினர் மதன் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்த போதும் அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாமல் முழு நம்பிக்கை வைத்திருந்தார் பச்சமுத்து. இந்த சமயத்தில் பச்சமுத்துவின் உறவினர் ஒருவர் விருகம்பாக்கத்தில் தாக்கப்பட்ட சம்பவத்தில் மதன் மீது பரபரப்பான குற்றச்சாட்டை வைத்தனர் பச்சமுத்துவின் குடும்பத்தினர். இந்த சம்பவத்துக்கு பிறகு இருவரின் நட்பில் விரிசல் ஏற்பட்டது. திருச்சி மருத்துவக் கல்லூரி அனுமதிக்காக டெல்லிவரை சென்று காயை நகர்த்திய மதன் மீது பச்சமுத்து முதன்முறையாக கோபப்பட்டார். திருச்சி மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு பெறப்பட்ட பணத்தில் சில கோடிகள் ஆந்திராவில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க ஒரு பெண்ணிடம் கொடுக்கப்பட்டது. அந்த அசைன்மெண்டிலும் மதன் சொதப்ப, கோபத்தின் உச்சக்கே சென்றார் பச்சமுத்து. 

2016 ஜனவரியில் தொடங்கி இவர்களது முட்டல், மோதல் மே மாதத்தில் பூதாகரமாக வெடித்தது. அதற்கு மருத்துவக்கல்வி நுழைவுத்தேர்வான நீட்டும் ஒரு காரணமாக அமைந்தது. மே 28ஆம் தேதி வாட்ஸ்அப்பில் வேந்தர் மூவிஸ் லெட்டர்பேடில் மதன் எழுதிய தற்கொலை கடிதம் எஸ்.ஆர்.எம். நிர்வாகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த கடிதத்தில் காசிக்கு சென்று சமாதி அடைவதாகவும், மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக பெறப்பட்ட பணத்தை எஸ்.ஆர்.எம். நிர்வாகத்திடம் கொடுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். முதலில் எஸ்.ஆர்.எம். நிர்வாகம், மதனுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்தது.

உரிய ஆதாரங்கள் வெளிவரத்தொடங்கியதும், மதன் மீது பச்சமுத்து சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து, மதன் மீதும், பச்சமுத்து மீதும் மாணவர் சேர்க்கை மோசடி தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார்களை குவித்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் திண்டுக்கல் மாவட்ட ஐ.ஜே.கே மாவட்ட செயலாளர் பாபு, மதனின் கூட்டாளி சுதீர், வேந்தர் மூவிஸ் மதன், எஸ்.ஆர்.எம் நிர்வாகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தது. ஆனால், விசாரணை என்ற பெயரில் வழக்கை இழுத்தடித்துக் கொண்டிருந்தனர். சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறைக்கு விடுத்த எச்சரிக்கை காரணமாக இன்று பச்சமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நன்றி :-Vikatan Newsletter,

பச்சமுத்து பாரிவேந்தர் ஆன கதை !

Sunday, November 8, 2015

நலிந்த, ஏழை மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பாடு அடைய, அரசு பல திட்டங்கள் தீட்டி, அவற்றைச் செயல்படுத்த முயற்சிகள் எடுத்து வருகிறது. அவ்வாறு செயல்படுத்தப்படும் திட்டங்கள் சில சரிவர மக்களைச் சென்றடைவதில்லை. 

 அப்படிச் சென்றடைந்தாலும் மக்கள் அவற்றைச் சரிவரப் பயன்படுத்துவதும் இல்லை. சில நேரங்களில் அரசு பொதுமக்களுக்காக தீட்டப்படும் திட்டங்கள் குறித்து சரியான புரிதலும் மக்களிடையே இல்லை என்பது வேதனையைத் தரும் செய்தி.

 பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் இலவச அரிசியை எத்தனை குடும்பங்களில் பயன்படுத்துகிறார்கள் என்பது மிகப் பெரிய கேள்வி. 
 இந்த இலவச அரிசியானது ஏழைகளுக்குப் பயன்படுவதைவிட, தெருவோரச் சிற்றுண்டிக் கடைகள், சிறு உணவு விடுதிகளில் சிற்றுண்டி தயாரிக்கத் தான் பயன்படுகிறது. 

 தமிழ்நாட்டின் எல்லையோரத்தில் உள்ள வெளிமாநில பகுதிகளுக்கு ரயில், பேருந்து மூலம் அரிசி கடத்தப்பட்டு விற்கப்படுகிறது.
 முந்தைய ஆட்சியில், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், இலவச எரிவாயு இணைப்பு - அடுப்பு போன்றவை இலவசமாக வழங்கப்பட்டன. 
 வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகள் கணிசமான எண்ணிக்கையில் சரியாக இயங்கவில்லை. பலர் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டிகளை விலைக்கும் விற்றுவிட்டார்கள். 

 எரிவாயு இணைப்பு இல்லாத வீடு இன்று உண்டா? அங்கிங்கெனாதபடி எல்லா இல்லங்களிலும், கிராமங்களில் உள்ள வீடுகள் உள்பட எரிவாயு இணைப்பு இருக்கிறது. 
 அரசு இலவசமாகக் கொடுக்கிறதே என்று வீட்டில் உள்ள மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு எரிவாயு இணைப்பை வாங்கி, மாதாமாதம் கிடைக்கும் நிரப்பப்பட்ட எரிவாயு உருளைகளை தேநீர்க் கடை, உணவு விடுதிகளுக்கு அதிகப்படியான விலைக்கு விற்கத்தான் பெரும்பாலும் இது பயன்படுகிறது. 

 பல குடும்பங்களில் எரிவாயு இணைப்பு இருக்கிறது. ஆனால், எரிவாயு உருளை கிடையாது. அதையும் விற்றாகி விட்டது. 

 சமீபத்தில் தொலைக்காட்சி செய்தி சேனலில் ஒளிபரப்பட்ட ஒரு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. 

 பண்டிகைக் காலங்களையொட்டி ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை துணியானது கேரள மாநிலத்தின் பல துணிக் கடைகளில் ரூ.200-க்கு விற்கப்படுவதை ஆதாரத்துடன் (மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமரா மூலம்) செய்தி ஒளிபரப்பியது. 

உண்மையிலேயே பரம ஏழைகளைத் தவிர இந்த வேட்டி, சேலையை யாருமே உடுத்துவது கிடையாது.

சில தினங்களுக்கு முன்பு அரக்கோணம் நகர, கிராம நிர்வாக அதிகாரியின் அலுவலகத்தில் முதியோர் ஓய்வூதியம் வாங்குபவர்கள் கூட்டம் அலைமோதியது. காரணம் கேட்டால், அரசின் இலவச வேட்டி, சேலையை வாங்குவதற்காக அந்த வரிசை. 

அரசுப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா (இலவசம் என்று சொல்லக்கூடாதாம்) மடிக் கணினியை அரசு வழங்கிவருகிறது. 

விலையில்லா மடிக்கணினி பெற்ற மாணவர்களில் எத்தனை சதவீதம் பேர் அதை தங்கள் வாழ்க்கை முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். 

கிராமப்புற மாணவர்களில் பலர், வீட்டில் இருக்கும்போதும், விடுமுறைக் காலங்களில் மாடு மேய்ச்சலுக்குப் போகும்போதும், படம் பார்க்கவும், விளையாட்டுக்கும் தான் இதைப் பயன்படுத்தி  வருகிறார்கள்.

ஏழை, எளிய மக்கள் வாழ்வில் மேம்பாடு அடைய அரசால் வழங்கப்படும் விலையில்லா அரிசி, வேட்டி, சேலை, மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர், மடிக் கணினி, வண்ணத் தொலைக்காட்சி, எரிவாயு அடுப்பு போன்ற பொருள்கள் வெளிமாநிலக் கடைகளில் விற்கப்படுகின்றன என்பது மோசமான நிலை அல்லவா? 
இதுகுறித்து ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும். 

பொதுமக்கள் மத்தியில் அரசுகள் அறிவிக்கும் இலவசங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படாத வரை, பொதுமக்களுக்கான திட்டங்கள் அவர்களின் பெயரால் அதிகாரிகளின் பையை நிரப்புவதற்கு உதவிடுமே தவிர, இலவசங்களின் முழுப் பயனும் அவர்களுக்குக் கிடைக்காது.
வாக்கு வங்கிக்காக அரசுகள் வழங்கும் விலையில்லாப் பொருள்களால் விரயமாகும் மக்கள் வரிப் பணம் ஒருபுறம்; இலவசங்களை அறிவிக்கச் செய்து மக்கள் மனங்களைக் கெடுத்து

இலவசங்கள் என்கிற மனநோயிலிருந்து மக்கள் எப்போது விடுபடுவர்? இலவசங்கள் என்ற அரக்கனுக்கு கடைசி மணி கட்டுவது யார்?
பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் இலவச அரிசியானது ஏழைகளுக்குப் பயன்படுவதைவிட, தெருவோரச் சிற்றுண்டிக் கடைகள், சிறு உணவு விடுதிகளில் சிற்றுண்டி தயாரிக்கத் தான் பயன்படுகிறது.

நன்றி :- தினமணி

இலவசங்கள் என்கிற மனநோய்!

Friday, November 6, 2015

குழந்தைகளைத் தோளில் சுமந்தபடி அன்பாசிரியர் வாசுகி.

சொல்லித்தரும் கல்வி, வெறும் ஏட்டெழுத்துகளாக இல்லாமல், அனுபவக் கல்வியாக இருக்க வேண்டும். அவை மாணவர்களால் விரும்பப்படுவதாக இருக்க வேண்டும்.

மாநில இராதாகிருஷ்ணன் விருது, அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 'சிகரம் தொட்ட ஆசிரியர்' விருது, ஈரோடு பெண் மருத்துவர் சங்கத்தின் 'சிறந்த ஆசிரியர்' விருது, ராஜாஜி அறக்கட்டளையின் 'காமராசர் நல்லிணக்க விருது' உள்ளிட்ட சாதனைகளுக்குச் சொந்தக்காரரான ஆசிரியை வாசுகியின் வார்த்தைகள் இவை. யார் இந்த ஆசிரியர்? என்ன செய்தார் இவர்?

"20 வயதில் எனக்கு ஆசிரியப் பணி கிடைத்தது. 1989-ல் மொடக்குறிச்சி வட்டம், ஊஞ்சப்பாளையம் என்னும் ஊரில் என்னுடைய பணியை ஆரம்பித்தேன். அங்கு படித்த பெரும்பாலான மாணவர்கள், வறுமைக்கோட்டுக்குக் கீழே இருந்தார்கள். ஒரு நாள் காலையில் வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தேன். மாணவன் ஒருவன் வலியால் துடித்துக்கொண்டிருந்தான். என்ன ஆனதென்று அருகில் போய்ப் பார்த்தால், அவனை நாய் கடித்திருந்தது.

வீட்டில் யாரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லையா என்று கேட்டேன்.

''அம்மாவும், அப்பாவும் செங்கல் வேலைக்குப் போயிருக்கறாங்க டீச்சர்; சாயந்தரம் வந்து கூலிக்காசுல கூட்டிட்டு போறதா சொல்லிருக்காங்க" என்றான்.

எனக்கு தூக்கிவாரிப் போட்டது. உடனடியாகத் தலைமை ஆசிரியரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.

அடிப்படை மருத்துவம்கூடப் பார்க்க முடியாத நிலையில் இருந்த சிறுவனின் நிலை எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

சில மாதங்களிலேயே, தாராபுரம் அருகிலுள்ள முண்டுவேலம்பட்டி என்னும் ஊருக்கு மாற்றலானேன். அங்கிருந்த பள்ளிக்குச் செல்ல 5 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து வசதியே இல்லை. தினமும் காலையிலும், மாலையிலும் 5 கி.மீ. நடந்தே செல்வேன். ஒரு முறை அங்கிருந்த டீக்கடை வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தேன். அங்கிருந்த ஆறு வயதுச் சிறுவன் தினமும் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். ஸ்கூலுக்குப் போகவில்லையா என்று கேட்டதற்கு, அவனின் பெற்றோர், ''பக்கத்துல ஸ்கூல் இல்லை; நேரமிருந்தால் தொலைவில் இருக்கும் பள்ளியில் கொண்டுபோய் விடுவோம்'' என்றனர்.

நான் தினமும் அந்த வழியாகத்தான் செல்கிறேன். என்னுடன் வா என்று அச்சிறுவனை அழைத்துச் செல்ல ஆரம்பித்தேன். சிறுவன் என்பதால் இடுப்பில் வைத்துக்கொண்டு தினமும் காலையிலும், மாலையிலும் கரும்புக்காடு வழியாக செல்வேன். அந்த அனுபவமும், தைரியமும்தான் என்னை இந்த இடத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்".

செயல்வழிக் கற்றலின் தொடக்கம்

முண்டுவேலம்பட்டியில் ஐந்து வருடம் வேலை பார்த்த ஆசிரியை வாசுகி, அடுத்ததாக சலங்கபாளையும் என்னும் ஊருக்கு மாற்றலானார். அங்கு சமூக அறிவியல் சொல்லிக்கொடுத்தவர் வரலாறு, குடிமையியலில் மாணவர்களுக்கு குறைவான ஆர்வமே இருந்ததை உணர்ந்தார். பாடம் தொடர்பான செயல்பாடுகளை செய்துவரச் சொன்னவர், அதற்கெனத் தனியாக மதிப்பெண்கள் கொடுத்தார். இது படிக்காமல் இருந்தவர்களையும் செயல்பாடுகளில் ஈடுபடத் தூண்டியிருக்கிறது. அரசால் தொடங்கப்பட்ட செயல்வழிக் கற்றலின் முன்னோட்டமாகவும் இருந்திருக்கிறது.

2009-ல் பவானி ஒன்றியத்தில் உள்ள கே.ராமநாதபுரம் என்னும் ஊருக்கு மாற்றல் கிடைத்தது. தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் என்று இரண்டு பேர் மட்டுமே கொண்ட பள்ளி அது. நிறைய மாற்றங்களும் வசதிகளும், தேவைப்படும் நிலையில் இருந்தது. எதுவும் நம்மிடம் இருந்தே தொடங்க வேண்டும் என்று சுத்தம் உள்ளிட்ட எல்லா வேலைகளிலும் அதிக அக்கறை செலுத்தத் தொடங்கினேன். என்னைப்பார்த்து மாணவர்கள் பின்பற்ற, சிறிய வகுப்புக் குழந்தைகள் அவர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தனர். நாளாக நாளாக பள்ளி, சுத்தமாக இருக்கத் தொடங்கியது. நீங்கள் சல்லடை போட்டுத் தேடினாலும், எங்கள் பள்ளியில் ஒரு காகித உருண்டை கூடக் கிடைக்காது.

என் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும்

மாணவர்களிடம் படிப்பும், ஒழுக்கமும் வந்துவிட்டது. இனி உதவும் மனப்பான்மையும் வளர வேண்டும் என்று தோன்றியது. வகுப்பில் சிறுமியொருத்தி, ''நாம உண்டியல் வெக்கலாமா டீச்சர், அதுல தினசரி பணம் சேர்த்து இல்லாதவங்களுக்குக் கொடுக்கலாம்'' என்றாள். நல்ல யோசனை என்பதால் உடனடியாக செயல்படுத்த ஆரம்பித்தோம். தினமும் பிரேயர் முடிந்ததும் வகுப்பு தலைவன், 'உதவி செய்ய வாருங்கள் தோழர்களே!' என்று கூப்பிடுவான். விருப்பப்பட்டு வீட்டிலிருந்து பணம் கொண்டு வரும் குழந்தைகள் முன்னால் வந்து, ''என் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும்'' என்று சொல்லி உண்டியலில் காசு போடுவார்கள். அவர்களின் பெயரைச் சொல்லி அனைவரும் கைதட்டுவோம்.

அடுத்ததாக, 'நான் செய்த உதவி!'. ஒவ்வொரு நாளும் ஒரு வகுப்பு மாணவர் வந்து, 'நான் செய்த உதவி!' என்று சொல்லி அவர் செய்த உதவியைச் சொல்ல வேண்டும். அது என்ன மாதிரியான உதவியாக வேண்டுமானாலும் இருக்கலாம். தன் அப்பாவுக்கு கண் கண்ணாடியை எடுத்துத் தந்திருக்கலாம். பக்கத்து வீட்டு பாட்டிக்கு, ஒரு மாத்திரை வாங்கிக் கொடுத்திருக்கலாம். உதவியின் அளவை நாங்கள் பார்ப்பதில்லை. அதைச் செய்வதற்கான மனதைத்தான் வளர்க்க ஆசைப்படுகிறோம்.

ஆண்டுக்கு ஒரு முறை, உண்டியலில் ஓரளவுக்கு நிதி சேர்ந்த பிறகு, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு குழந்தையை அழைத்துச் சென்று, இல்லத்தில் கேட்பதை வாங்கிக் கொடுக்கின்றனர். சென்னையைச் சேர்ந்த மாநகராட்சிப் பள்ளி மாணவன் அருண், கணினி வாங்குவதற்குப் பணம் இல்லாமல் சிரமப்படுவதாக அறிந்து, உண்டியல் பணத்தோடு கொஞ்சம் பணத்தைச் சேர்த்து, சென்னைக்கு வந்து அருணிடம் கொடுத்தார் ஆசிரியை வாசுகி.

"இது சாதாரண காசில்லை; ஏழை மாணவர்களால் சேர்க்கப்பட்ட பணம். இது ஏழை மாணவனுக்குத்தான் போய்ச்சேரணும்" என்ற வார்த்தைகளைக் கேட்ட சிறுவனின் கண்களில் கண்ணீர் துளிர்த்திருக்கிறது. "கண்டிப்பா நல்லவிதமா பயன்படுத்துவேன் டீச்சர்" என்று கூறிய அருண், இன்று அருகில் வசிக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக கணினி கற்றுக் கொடுக்கிறான் என்கிறார் ஆசிரியை வாசுகி.

எதிர்கால ஆசைகள்

''அதிக மதிப்பெண் வாங்கும் மாணவர்களுக்கும், வாங்காதவர்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளியைக் குறைக்க வேண்டும். இருவரையும் ஒப்பிட்டுப் பார்க்காமல், அவர்களுக்கு என்ன வருகிறதோ, அதை வளர்த்துகொள்ளக் கற்றுக்கொடுக்கிறேன்.

இருபத்தைந்து ஆண்டுப் பணிக்குப் பின்னரும், மாணவர்களின் மீதான என்னுடைய செயலாராய்ச்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நகரத்துக்கு இணையாக, கிராமக் குழந்தைகளுக்கும் புதுமையாக கற்றுக்கொடுக்க வேண்டும். சொல்ல மறந்துவிட்டேனே,

முண்டுவேலம்பட்டி பள்ளியில் நான் தூக்கிக்கொண்டு நடந்த மாணவர் இன்று சிங்கப்பூரில் நல்ல வேலையில் இருக்கிறார். ஒவ்வொரு மாதமும் தவறாமல் என்னிடம் போன் பேசுவது அவரின் வழக்கம். என் வீட்டில் இருப்பவர்களிடமும் பேசுபவர், அவர்களிடம் சொல்வதெல்லாம் ஒன்றுதான். ''எங்க டீச்சர பத்திரமா பாத்துக்குங்க!".

க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

| மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும் அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் நல் அடையாள அணிவகுப்புத் தொடர் இது. |

முந்தைய அத்தியாயம்: அன்பாசிரியர் 6 - திலீப்: அரசு பள்ளியில் ஓர் இணைய வித்தகர்!

Keywords: ஆசிரியர், ஆசிரியை, அரசுப் பள்ளி, மாணவர்கள், கற்றல், கல்வி, கற்பித்தல், குழந்தைகள், வாசுகி

நன்றி :- தி இந்து

அன்பாசிரியர் 7 - வாசுகி: 'நான் செய்த உதவி' எனும் நெகிழ்வுத் திட்டம்!

மார்க் ஸக்கர்பெர்க்

மார்க் ஸக்கர்பெர்க்

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தனது நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளையொட்டி, சில புள்ளிவிவரங்கள், தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன் முக்கிய அம்சங்களாவன:

* உலகம் முழுக்க அன்றாடம் ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சுமார் 150 கோடி. இதில் தினமும் 100 கோடி பேர் தொடர்ச்சியாக ஃபேஸ்புக் பயன்படுத்துகின்றனர்.

* இன்டர்நெட் டாட் ஆர்க் நிறுவனத்தின் மூலம் சுமார் 1.5 கோடி மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

* ஒவ்வொரு மாதமும், 90 கோடி மக்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்துகின்றனர்; 70 கோடி பேர் மெசஞ்சர் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

* ஒவ்வொரு மாதமும் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை 40 கோடி.

* 92 கோடிக்கும் மேற்பட்டோர், ஃபேஸ்புக் குழுக்களில் உள்ளனர்.

* காணொளிகள் தினமும் 800 கோடிக்கும் மேற்பட்ட முறைகள் காணப்பட்டிருக்கின்றன.

* 4.5 கோடிக்கும் மேற்பட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஃபேஸ்புக் பக்கங்களைப் பயன்படுத்துகின்றன.

அறிவியல், தொழில்நுட்பத்தில் கால்பதிக்கும் ஃபேஸ்புக்

* இணைய வசதி இல்லாத மக்களுக்கு இணையத்தை அளிப்பதற்காக ஃபேஸ்புக் நிறுவனம், ஆளில்லா போயிங் ரக 'அக்விலா' என்னும் விமான ஏவுதலை அறிவித்துள்ளது.

* இணைய வசதியை அளிக்கும் முதல் செயற்கைக்கோள் வெளியீடு குறித்தும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

* 'எம்' டிஜிட்டல் உதவியாளர் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

எம்
''டிஜிட்டல் உதவியாளரான 'எம்', மெசஞ்சர் குறுஞ்செய்திக்கான செயலிக்குப் பின்னால் இயங்கும். செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் எம் செயலியால், உங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம், என்ன புத்தகம் வாங்கலாம், எங்கு பயணம் செல்லலாம், என்ன பரிசு வாங்கலாம் என்பதை எம் பரிந்துரைக்கும்'' என்று பேஸ்புக் அறிவித்திருக்கிறது. பரிசோதனை முடித்து தற்போது எம் டிஜிட்டல் உதவியாளர், ஆப்பிளின் சிரி செயலி, கூகிள் நவ் மற்றும் மைக்ரோசாஃப்டின் கோர்ட்டானா ஆகியவற்றுடன் இணைந்துள்ளது.

* 'கியர் விஆர்' திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கியர் விஆர்
ஃபேஸ்புக் மூலம் காணொளீகள் பகிரப்படுவதை ஊக்குவித்து வரும் மார்க், காணொளி செல்லும் திசையில் பயனரும் பயணித்து 360 டிகிரியும் சுழலும் வகையிலான காணொளிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக விஆர் என்றழைக்கப்படும் விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம், மெய்நிகர் உலகத்தில் பார்வையை மேம்படுத்த ஃபேஸ்புக் முயற்சி எடுத்து வருகிறது.

Keywords: அறிவியல், தொழில்நுட்பம், கால்பதிக்கும் ஃபேஸ்புக், புள்ளிவிவரம்

அறிவியல், தொழில்நுட்பம், கால்பதிக்கும் ஃபேஸ்புக், புள்ளிவிவரம் :ஃபேஸ்புக் இன்றும் நாளையும்: மார்க் பகிர்ந்த நிலைத்தகவல்கள்

For the last two years, Ezhilarasan has been sleepily getting into a bus at dawn from his home in Kundrathur to reach Nandanam. From here, he walks to the large Thakkar Bapa Vidyalaya campus just in time for his wiring class. “I have just a few days left to complete my course,” he says, grinning. “I’m a good electrician; I hope to get a good job in campus placement.”
Ezhil, like a lot of his friends, is a “Xth pass”. Like them, he is from a home of daily-wage earners. He needs skills to earn, and so applied to the Central Polytechnic at Taramani. It didn’t work out, so he tried his luck at ITI-Guindy.
“I was accepted and sent to Mint for counselling where I met this officer from Thakkar Bapa Vidyalaya. He told me about the free electricals/industrial motor-wiring course, and I jumped at the offer.” He is already doing wiring jobs near his home and is getting paid well.
Why is it named Thakkar, I ask 94-year-old Sthanunathan, secretary of the institution.
He explains, “Gandhi started the Harijan Sevak Sangh with branches in all states. Thakkar, born in the same year as the Mahatma, and his close associate, was appointed its first general-secretary. When the industrial school started by Gandhi in Kodambakkam needed to be shifted, Thakkar acquired these premises, and in 1946 invited Gandhi to lay the foundation stone for the new building. A philanthropist had donated funds and wanted the place to be named after him, but Gandhiji was firm on Thakkar’s name.”
The Vidyalaya runs technical courses recognised by the National Council for Vocational Training (electrician/fitter/wireman), courses affiliated to the State Government (AC mechanic/carpentry) and its own (welding/tailoring), says Sthanunathan.
“We have a working-women’s hostel. Our charges are nominal.” They also run a primary school with free boarding and lodging.
Everything is run on Gandhian principles, Sthanunathan reiterates. The institution is run on public contributions and endowments help to give prizes and scholarships, he adds. “I want this to grow into a big institution, and continue to provide skills to young boys and girls. We’re also planning a six-month patient-care course.”
A series of low buildings are spread out over the large campus. Mohan, chairman of the Gandhi Study Centre, volunteers to take me on a tour: the front arch and wall-writings proclaim the institution’s association with Gandhiji, the trees that grew before Gandhiji returned from South Africa, the marble foundation stone he laid.
A plaque announces the opening of the boys’ hostel by Rajaji and a third reads, “Udyogashala opened by Sri O.P. Ramaswami Reddiar, Premier of Madras, 9th November, 1947.”
Mohan then shows me their most precious possessions — a well-polished charka Gandhiji used when he was in Madras in 1946 and the trowel he used to set the foundation stone.
Today, one can drive into the campus to reach Vinobha Hall, a modern auditorium let out for felicitations and lectures on culture and history. But for youngsters like Ezhilarasan, training here is a crucial step towards a life with dignity.
For details, call 2434 3302.
Thanks :- The Hindu,  CHENNAI, July 22, 2015

Thakkar Bapa Vidyalaya: A campus built on industry

தமிழ், சிங்களப் பாடப்புத்தகங்களில் திருக்குறள் இடம்பெற வேண்டும்

திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறளின் அத்தியாயங்களை இலங்கை பாடசாலைகளில் தமிழ், சிங்களப் பாடப்புத்தகங்களில் இடம்பெறச் செய்து இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவேண்டுமென  இலங்கை வந்துள்ள இந்திய பாரதிய ஜனதாக் கட்சியின் இராஜ்யசபா பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் பா.ஜ.க இராஜியசபா உறுப்பினர் தருண் விஜய் ஆகியோருக்குமிடையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் குறிப்பிட்டதாவது :-

‘இந்தியா முழுவதும் அனைத்து மாநில மொழிகளிலும் திருக்குறள் பாடத்திட்டமாக இடம்பெறுவதற்காக இந்தியப் பாராளுமன்றத்தில் முதன் முதலாக குரல் எழுப்பி அதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் தற்போது செய்து கொண்டிருக்கிறது.

மிகவிரைவில் எல்லா மொழிகளிலும் திருக்குறள் ஒரு பாடத்திட்டமாக நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் இலங்கையிலும் திருவள்ளுவருடைய திருக்குறள் அனைத்து மொழிகளிலும் வெளிவந்து இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்’ என்றார்

தமிழ், சிங்களப் பாடப்புத்தகங்களில் திருக்குறள் இடம்பெற வேண்டும் - http://onlineuthayan.com/

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் திரைப்பட இயக்குநர்கள், படத்தொகுப்பாளர்கள் உள்ளிட்ட மேலும் 24 பேர், தங்களது தேசிய விருதுகளை திருப்பி அளிப்பதாக வியாழக்கிழமை அறிவித்தனர்.

தாத்ரி சம்பவம், பிரபல எழுத்தாளர் கலபுர்கி படுகொலை உள்ளிட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டி, நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகக் கூறி, நயன்தாரா ஷகல் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள், தங்களுக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாதெமி விருதுகளை கடந்த மாதம் திருப்பி அளித்தனர்.

இவர்களை தொடர்ந்து, 10-க்கும் மேற்பட்ட திரைப்பட, ஆவணப்பட இயக்குநர்கள் தங்களது தேசிய விருதுகளையும், பிரபல விஞ்ஞானி பார்கவா தனக்கு அளிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதையும் திருப்பி அளிப்பதாக அண்மையில் அறிவித்தனர்.

இவர்களது வரிசையில் தற்போது, புக்கர் விருது பெற்ற பிரபல எழுத்தாளரும், சிறந்த திரைக்கதையாசிரியருக்கான தேசிய விருது பெற்றவருமான அருந்ததி ராய், தனது தேசிய விருதை திருப்பி அளிப்பதாக வியாழக்கிழமை தெரிவித்தார்.

தமது இந்த முடிவு குறித்து அவர் கூறியபோது, "கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதலை கண்டிக்கும் விதமாக தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறினார்.

இவரைத் தவிர, பிரபல திரைப்பட இயக்குநர்களான குந்தன் ஷா, சாகித் மிர்ஜா, வீரேந்திர சாய்னி, பிரதீப் கிருஷ்ணன், மனோஜ் லோபோ, அமிதாப் சக்கரவர்த்தி, திரைப்பட ஒளிப்பதிவாளர் சத்ய ராய் நாக்பால், படத்தொகுப்பாளர் தருண் பார்தியா உள்ளிட்ட திரைப்படத் துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மேலும் 24 பேரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட தேசிய விருதை திரும்ப அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஹேமா மாலினி கண்டனம்: திரைப்படத் துறையினர் தேசிய விருதை பெறுவதற்காக, தங்களது வாழ்நாளையே தியாகம் செய்யும் நிலையில், தங்களுக்கு அளிக்கப்பட அந்த விருதை சிலர் திருப்பித் தருவது சரியான முடிவல்ல என்று பாஜக எம்.பி.யும், நடிகையுமான ஹேமா மாலினி தெரிவித்தார்.

முரண்பாடு: ஒருபுறம் பிரிவினைவாதிகளான யாசின் மாலிக், கிலானி போன்றவர்களுக்கு ஆதரவளித்துவிட்டு, மறுபுறம் சகிப்பின்மையை காரணங்காட்டி, அருந்ததி ராய் தனது தேசிய விருதை திருப்பி அளிப்பது முரண்பாடாக உள்ளது என்று பிரபல திரைப்பட தயாரிப்பாளரான அசோக் பண்டிட் சாடியுள்ளார்.

நன்றி :- தினமணி

தேசிய விருதை திருப்பி அளிக்கும் அருந்ததி ராய் உள்ளிட்ட 24 பேர்

Thursday, November 5, 2015

மனிதர்கள் வாழும் சூழல் உள்ள பூமியை போன்ற இன்னொரு கிரகத்தை தேடிய பயணத்தை, கெப்லர் செயற்கைக்கோள் மூலம் 2009ம் ஆண்டு துவங்கியது நாசா.
சூரிய குடும்பத்தை தாண்டிய மனிதன் வாழும் கோள் பற்றிய ஆராய்ச்சியையும், தனது பயணத்தையும் இதுவரை கெப்லர் செய்து கொண்டே உள்ளது. 'என்றாவது ஒரு நாள் கெப்லர் விண்கலம் நம்மை போன்ற மனிதன் வாழும் ஒரு கிரகத்தை கண்டுபிடித்து, அங்குள்ள மனிதன் நம்மோடு வீடியோ கான்ஃப்ரன்ஸில் பேசுவானோ...?' என்ற நம்பிக்கை நமக்கும் இருந்து கொண்டேதான் இருக்கிறது.
அதற்கேற்ப  நாசா,  தனது இணையதளத்தில் அனைவரும் ஆர்ச்சர்யப்படும் விதமான தகவலை இன்று வெளியிட்டுள்ளது. தனது நிகழ்வுகள் பக்கத்தில் கெப்லர் டிஸ்கவரிஸை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது. இது இந்திய நேரப்படி 9:30 மணிக்கு வெளியிடும் என அறிவித்துள்ளது. இதில் பூமியை போன்ற இன்னொரு கிரகத்திற்கான அறிவிப்பு இருக்கும் என்று தெரிகிறது.
படம் உதவி: நாசா
பூமியின் அளவில் உள்ள பூமியை ஒத்த தட்பவெட்ப நிலையுள்ள ஒரு கிரகத்தைதான் தேடி வருகிறது கெப்லர் விண்கலம். இதுவரை 2258 நாட்கள் பயணித்துள்ள கெப்லர்,  306604 நட்சத்திரங்களை படம் பிடித்துள்ளது. 4601 கோள்கள் அடையாளம் காணப்பட்டு அதில் 1024 கோள்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இன்று கெப்லர் டிஸ்கவரிஸில் அறிவிக்க இருக்கும் அறிவிப்புக்கான கவுண்டவுன், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இரவு 9:30 மணிக்கு நடக்க இருக்கும் நேரடி நிகழ்ச்சியில், நாசாவின் நான்கு விஞ்ஞானிகள் பங்கேற்பார்கள் என நாசா அறிவித்துள்ளது.
நாசாவின் ஜான் க்ரெண்ஃபெல்ட், ஜோன் ஜென்கின்ச், ஜெஃப் காஃபின், டிடியெர் க்வெல்ஸ் ஆகியோரிடம் மீடியாக்கள் மின்னஞ்சல், தொலைபேசி மூலமாகவும், ட்விட்டர் பக்கத்தில் #askNASA என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தியும் கேட்கலாம் என்று நாசா அறிவித்துள்ளது. இந்த டெலிகான்ஃபரென்ஸின் போதுதான், கெப்லர் விண்கலத்தின் கண்டுபிடிப்புகள் பற்றிய அறிவிப்புகளும் வெளியாகும். இந்த அறிவிப்பில் பூமியை ஒத்த பண்புடைய இன்னொரு கிரகம் குறித்த தகவலும் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கெப்லர் விண்கலத்தின் தேடுதல் பாதை படம்: நாசா
1995ம் ஆண்டு சூரியனை போன்ற இன்னொரு சூரியன் கண்டுபிடிக்கப்பட்டது . 21 வருடங்கள் கழிந்த நிலையில் பலரது கனவுகள், ஆராய்ச்சிகள் 1000க்கும் மேற்பட்ட கோள்களை தாண்டி ஒரு கோள் இருக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்குமே உள்ளது. பூமியை போன்ற ஒரு பூமி இருந்தால், அவர்களும் நம்மை போன்று இன்னொரு கிரகத்தை தேடிக் கொண்டிருந்தால், அவர்கள் என்ன மொழி பேசுவார்களோ, அங்கு எந்த மாதிரியான தொழில்நுட்பம் இருக்குமோ? இந்த கேள்விகள் எல்லாம் உங்களுக்கும் எனக்கும் எழுவது நியாயமே. பதில் இன்றிரவு கெப்லர் டிஸ்கவரிஸில் என்று நாசா அறிவித்து அதற்கான நேரலை இணைப்பையும் தந்துள்ளது.

நாசாவின் கெப்லர் டிஸ்கவரிஸ் நேரலை இணைப்பு:
(பின் குறிப்பு: இது இந்திய நேரப்படி 9:30 மணிக்கு தான் துவங்கும், அதுவரை காத்திருக்கவும்)
]நன்றி :-http://www.vikatan.com/news/article.php?aid=49990 

இன்னொரு பூமி எங்கே இருக்கிறது...? இன்று இரவு சொல்கிறது நாசா!

பணி நிரந்தரம் செய்யக்கோரும் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தின் தற்காலிக பணியாளர்களின் கோரிக்கையை 10 வாரத்துக்குள் பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் வேலைப்பார்த்து வரும் தற்காலிக பணியாளர்கள் ஜெயக்கொடி, லட்சுமி உள்ளிட்ட 16 பேர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறிஇருப்பதாவது:–

தற்காலிக பணியாளர்கள்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொகுப்பூதியம் அடிப்படையில், தற்காலிக பணியாளர்களாக, எந்தவித இடை நிறுத்தமும் இல்லாமல் கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்து, அரசு நூலக பணியாளர்களுக்கான ஊதியத்தை வழங்கவேண்டும் என்று தமிழக அரசிடம் முறையிட்டோம். ஆனால் இதுவரை எங்கள் கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், ஓய்வுபெற்ற பேராசிரியர் மனோன்மணி தொடர்ந்த வழக்கை விசாரித்த இந்த ஐகோர்ட்டு, வக்கீல்கள் இருவரை சட்ட ஆணையர்களாக நியமித்தது.

பணி நிரந்தரம்
இந்த வக்கீல்கள், நூலகத்தை ஆய்வு செய்து கொடுத்த அறிக்கையில், தற்போதுள்ள பணியாளர்கள் எண்ணிக்கை போதாது என்றும், தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்யவேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை அரசு பூர்த்தி செய்யவேண்டும் என்று இந்த ஐகோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவின் அடிப்படையில், எங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, தனியார் பணியாளர்களான எங்களை பணி நீக்கம் செய்ய தடை விதிக்கவேண்டும்.

பரிசீலிக்க வேண்டும்
ஐகோர்ட்டு, பிறப்பித்துள்ள உத்தரவின் அடிப்படையில், காலி பணியிடங்களை பூர்த்தி செய்யும்போது, எங்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளனர்.

இந்த வழக்கை நீதிபதி எம்.சத்திய நாராயணன் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் வக்கீல் ரமேஷ் கணபதி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, மனுதாரர்களின் கோரிக்கை குறித்து தமிழக அரசு 10 வாரத்துக்குள் பரிசீலனை செய்து உரிய முடிவு எடுக்கவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

நன்றி :- தினத்தந்தி

பணி நிரந்தரம் செய்யக்கோரிய அண்ணா நூற்றாண்டு நூலக தற்காலிக ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலிக்கவேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

உயிர்காக்கும் மருத்துவ பணி இறைபணிக்கு இணையாக கருதப்படுகிறது. இவர்கள் தங்களை உருக்கி, மற்றவர்களுக்கு ஒளிகொடுக்கும் மெழுகுவர்த்தி போன்ற தியாக தீபங்கள். ஊரெங்கும் பண்டிகைகள் கொண்டாடுவார்கள். ஆனால், மருத்துவத்துறையினர் மருத்துவமனைகளில் பணியாற்றுவார்கள்.  

இந்த நிலையில், தீபாவளி வருகிற 10–ந் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. ‘உன்னைக்கண்டு நான் ஆட, என்னைக்கண்டு நீ ஆட, உல்லாசம் பொங்கும் இந்த தீபாவளி’ என்று மக்கள் அனைவரும் பட்டாசு போட்டு மகிழ்ந்து கொண்டாடினாலும், சில நேரங்களில் எதிர்பாராத நேரங்களில் சில நிகழ்வுகள் ஏற்பட்டு மக்கள் மருத்துவமனையை நாடும் நிலை ஏற்படலாம் என்ற சூழ்நிலையில், அரசு மருத்துவமனைகளில் தீத்தடுப்பு சிகிச்சை வார்டுகள், சர்க்கரை நோய் மருந்துகளின் இருப்பு உயர்வு போன்ற பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு கொண்டுவரும் பணிகள் 108 ஆம்புலன்சு சேவையில்தான் இருக்கிறது.

2008–ம் ஆண்டு தொடங்கிய இந்த இலவச சேவை ஏழை மக்களுக்கு மிகவும் பயன் அளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களிலும், 684 ஆம்புலன்சுகள் 108 என்ற பெயரில் மருத்துவ சேவையாற்றுகிறது. தினமும் 6,500 பேர் மருத்துவ உதவிக்காக 108–க்கு போன் செய்கிறார்கள். விபத்துக்களில் பாதிக்கப்படுபவர்கள், திடீர் மாரடைப்பு போன்ற உயிர் காப்பாற்றவேண்டிய நிலையில் சீரியசாக இருப்பவர்கள், பிரசவத்துக்கு மருத்துவமனைக்கு செல்லவேண்டியவர்கள் என்று அனைவரும் 108–ஐத்தான் நம்பியிருக்கிறார்கள். தினமும் 108–க்கு வரும் 65 ஆயிரம் அழைப்புகளில் 3,500 அழைப்புகள் ‘எமெர்ஜன்சி’ என்று சொல்லப்படும் ‘அவசர சிகிச்சை’ தேடுபவர்கள்தான். இந்த ஆம்புலன்சு பணியில் 3,500 பேர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த புனித சேவையில் ஈடுபட்டுள்ள இவர்கள், தீபாவளி நெருங்கும் நேரத்தில் 20 சதவீத போனஸ் கேட்டு வருகிற 8–ந் தேதி இரவு 8 மணி முதல் 24 மணி நேரம் வேலை நிறுத்தம் செய்வோம், 20 சதவீத போனஸ் தராவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்துவிட்டார்கள். இந்த சேவையை இயக்கும் நிறுவனம் நாங்கள் ஏற்கனவே ஊக்கத்தொகையாக ரூ.4,800 கொடுத்துவிட்டோம், இதற்குமேல் முடியாது என்று கூறிவிட்டது. 

அறிவிக்கப்பட்ட இந்த வேலை நிறுத்தம் அரசை மட்டுமல்லாமல், பொதுமக்களையும் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. இதையொட்டி, சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் இந்த வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா ஆகியோர் கடந்த ஆண்டும் தீபாவளியின்போது இதுபோல 108 சேவை ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்ததைக்குறிப்பிட்டு, பொதுமக்களுக்கு ஆம்புலன்சு சேவை பாதிக்கப்படாத வகையில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்ததையும் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தொழிலாளர் துறையில் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் ஒரு சுமுக முடிவு ஏற்பட இருதரப்பும் முன்வரவேண்டும். வேலைநிறுத்தம் நடந்தால் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். மக்களுக்கு மருத்துவ சேவைகள் தேவைப்படும் நேரத்தில், அதிலும் குறிப்பாக, தீபாவளி நேரத்தில் மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்லும் உயரிய சேவையை செய்யும் 108 ஆம்புலன்சின் சேவைகள் பாதிக்கக்கூடாது என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

நன்றீ :- தினத்தந்தி

உயிர்காக்கும் பணி 108

Wednesday, November 4, 2015

ஆத்துல ஒழுங்கா தண்ணி வராட்டியும் ஒரு குரூப் கையில காசு பொழங்கத்தான் செய்யுது மாப்ள. தெக்கலங்கமே திக்குமுக்காடுதுடா, ஒரு நெல்லு மணி விழுந்தாக்கூட எடுக்க முடியாத அளவுக்கு மொய்க்குறானுவ’. சில தினங்களுக்கு முன்பு தஞ்சையிலிருந்து அழைத்த என்னுடைய நண்பன் செல்வம் தீபாவளிக் கூட்டம் பற்றி சொன்ன வார்த்தைகள் இவை.

தஞ்சை பெரிய கோயிலைப் பார்க்க வந்த வெளிநாட்டினர் சிலர், நகரின் சுவர் ஒன்றில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியைப் பார்த்து, ‘ஏதாவது கலை நிகழ்ச்சி நடக்கிறதா?’ என்று அவனிடம் கேட்டார்களாம். நகர் விழாக்கோலம் பூண்டிருப்பதில் வெளிநாட்டுக்காரர்களுக்கு அத்தனை மகிழ்ச்சி. ஆனால், அந்தச் சுவரொட்டியில் எழுதப்பட்டிருந்ததை மட்டும் அவர்களால் வாசிக்க முடிந்திருந்தால் வெள்ளைக்காரர்களின் முகம் வெளிறியிருக்கும்!

ஆமாம், அத்தனை சுவரொட்டிகளிலும் சாதி வாடை. தஞ்சையில் ஒரு சுவர்கூட சுவரொட்டியின் கபளீகரத்திலிருந்து தப்பவில்லை. எங்கும் எதிலும் சுவரொட்டிகள். இலக்கியம், கட்டிடவியல், சமயம் வளர்த்த பூமியில் சாதிய துதிகளைத் தாங்கிய அந்தச் சுவரொட்டிகளைப் பார்க்கும் யாருக்கும் தஞ்சாவூர் சாதிச் சண்டை மைதானமாகிவிட்டதோ என்றுதான் எண்ணத் தோன்றும். ஜீரணிக்க முடியாத மாற்றம் இது!

ஒரு ஊர் இப்படிக்கூட உருமாறுமா என்று ஆயாசமாக இருக்கிறது. ராஜராஜனைச் சொந்தம் கொண்டாடி மட்டுமே 5 சாதிகளின் ஆட்கள், சுவரொட்டிக் களேபரங்களை நடத்தியிருந்தனர். இதனுடன் மருதுபாண்டியர்கள், முத்துராமலிங்கத் தேவரைப் போற்றும் சுவரொட்டிகளும் சேர்ந்துகொண்டன. ‘அடக்கி ஆண்ட கூட்டம், அடங்கிப் போக மாட்டோம். பாசமுன்னா உயிரக் கொடுப்போம், பகைன்னா உயிர எடுப்போம்’... இன்னும் இத்யாதி இத்யாதி. தமிழ்த் திரைப்படங்களில் ‘பஞ்ச் டயலாக்’ எழுதுபவர்களை மிஞ்சிவிட்டார்கள், இந்தச் ‘சுவரொட்டிச் சிந்தனையாளர்கள்’!

நிலக்கிழார்கள் காங்கிரஸ்காரர்களாகவும், விவசாயக் கூலிகள் கம்யூனிஸ்ட்டுகளாகவும் அவதாரம் எடுத்த காலம் முதல் இன்றைய திராவிட அரசியல் காலம் வரை தஞ்சையின் அரசியல் பங்களிப்பு முக்கியமானது. ஆர். வெங்கட்ராமன், ஜி.கே. மூப்பனார், மு. கருணாநிதி, எஸ்.டி. சோமசுந்தரம் என தஞ்சை தந்த அரசியல்வாதிகளின் பட்டியல் நீளமானது!

இன்று ஈரோட்டில் திராவிடர் கழகம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால், தஞ்சையிலும், ஒரத்தநாட்டிலும் வாராவாரம் கடவுள் மறுப்புக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஒரத்தநாட்டிலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் பல கிராமங்களில் தி.க. கொடிக் கம்பங்களையும், பெரியார் படிப்பகங்களையும் காணலாம். தஞ்சை நிலம் இன்ன சாதிக்கென்று சோற்றினைத் தரவில்லை. இப்படிப்பட்ட நிலத்தில் சாதியக் கவுச்சியின் வாசம் வீசுகிறதென்றால், அது நமது கட்டமைப்பின் தோல்வி என்றுதான் தோன்றுகிறது.

சென்ற மக்களவைத் தேர்தலின்போது அரசியல் கட்சி வேட்பாளர்களை, அந்தந்தக் கட்சிகளின் பிரதிநிதிகளாகப் பார்ப்பதற்குப் பதிலாக, இருவேறு சமூகத்தின் பிரதிநிதிகளாகத்தான் தஞ்சை மக்கள் பார்த்தார்கள்; பார்க்க வைக்கப்பட்டார்கள். வேட்பாளர் தேர்வு மட்டுமன்றி கட்சியின் கிளைச் செயலாளர் பதவி வரை மறைமுகமாகச் சாதிக் கணக்குகள் போடப்படுகின்றன. தமிழகத்தின் பல ஊர்களிலும் இதே நிலைதான். ஒரு சோற்றுப் பதம்தான் தஞ்சை. சுயமரியாதை வேரில் முளைத்த இயக்கங்கள் சிந்துகிற பூக்களில் சாதிய வாடை வீசுவது மிகப் பெரிய துரதிர்ஷ்டம்!

தொடர்புக்கு: manikandan.m@thehindutamil.co.in

நன்றி :- தி இந்து

சாதிச் சுழலில் காவிரிப் படுகை!

தென் துருவமான அன்டார்டிகாவில் பனி வேகமாக உருகி வருகிறது என இதுவரை வெளிவந்துள்ள ஆய்வு முடிவுகள் எச்சரித்து வரும் நிலையில், அங்கு பனிப்போர் வையின் தடிமன் அதிகரித்து வருகிறது என நாசாவின் புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அன்டார்டிகாவின் பனிப் பாறைகள் உருகி தடிமனை இழந்து வருகின்றன. அங்கு சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிகழ்ந்து வரும் பனிப்பொழிவு, தற்போது அந்த இழப்பை ஈடு செய்யும் அளவுக்கு திரண்டு வருகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

அன்டார்டிக் தீபகற்பம் போன்ற பகுதிகளில் பனியின் பரப்பு கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என நாசா ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாறுபாடுக ளுக்கான பன்னாட்டு அரசின் கூட்டமைப்பு (ஐபிசிசி) 2013-ம் ஆண்டு வெளி யிட்ட அறிக்கையில், அன்டார்டிகா பரவலாக தன் பனிபரப்பை இழந்து வருகிறது எனத் தெரிவித்திருந்தது. இந்த ஆய்வு உட்பட பல்வேறு ஆய்வுகளின் முடிவுக்கு மாறாக, நாசாவின் புதிய ஆய்வு முடிவு அமைந்துள்ளது.

நாசா செயற்கைக்கோள் தரவு களின்படி, 1992-2001-ம் பனி ஆண்டுகளில் அன்டார்டிகாவின் பனிப்பரப்பில் 11,200 கோடி டன் நிகர பனிக்குவியல் சேர்ந்துள்ளது.

அதேசமயம் இந்த அளவீடு, 2003-2008-ம் ஆண்டுகளில் 8,200 கோடி டன்களாக உள்ளது.

நாசா பனியாறியல் ஜே ஜுவாலி கூறும்போது, “அன்டார்டிக் தீப கற்பம், மேற்கு அன்டார்டிகாவின் த்வைட் பகுதியிலும் பைன் தீவு பகுதியிலும் பனியிழப்பு அதிகரித்துள்ளது எனக்கூறும் ஆய்வு முடிவுகளோடு ஒத்துப்போகிறோம்.

ஆனால், கிழக்கு அன்டார்டிகா மற்றும் மேற்கு அன்டார்டிகாவின் உள்பகுதியில் இந்த ஆய்வு முடிவுகள் வேறாக இருக் கின்றன.

இப்பகுதிகளில் மற்ற பகுதி களில் காணப்படும் பனியிழப்பை விட பனி சேர்க்கை உபரியாக இருக்கிறது. ஆனால், அன்டார் டிகாவில் பனிச் சேர்க்கை விகிதம் மாறுபாட்டை ஏற்படுத்துவதற்கு இன்னும் சில பத்தாண்டுகள் தேவைப்படும்” எனத் தெரிவித்தார்.

ஐரோப்பிய விண்வெளி மையத்தின் இரு செயற்கைக் கோள்கள், நாசாவின் ‘ஐஸ்சாட்’ செயற்கைக்கோள்களின் மூலம், அன்டார்டிகாவின் பனிப்போர் வைகளின் உயரத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆய்வுக்கு உட்படுத் தப்பட்டன. அதனடிப்படையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன.

“இறுதி பனியுகத்தின் கடைசி காலத்தில், காற்று வெதுவெதுப் படைந்து, இக்கண்டம் முழுவதும் ஈரப்பதத்தை பரவலாக்கியது. இதன் மூலம், பனிப்பொழிவை இரண்டு மடங்காக அதிகரித்தது” என ஜுவாலி தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆயிரம் ஆண்டு களுக்கு முன் கூடுதல் பனிப் பொழிவு தொடங்கியது. அதனால், பனிப்படலத்தின் மேல் பனி குவியத் தொடங்கி, பல்லாயிரமாண்டுகளில் திடமாக மாறத் தொடங்கியது.

இந்த மாறுதல், கிழக்கு அன்டார்டிகா மற்றும் மேற்கு அன்டார்டிகாவின் உட்பகுதியில் ஆண்டுக்கு 0.7 அங்குலம் என்ற அளவில் பனியின் தடிமனை அதிகரிக்கச் செய்கிறது.

இந்த சிறிய அளவிலான தடிமன் அதிகரிப்பு, ஆயிரக்கணக் கான ஆண்டுகளாக நீடித்து, இப்பிராந்தியத்தில் விரிவான பரப்பில் மிக அதிகமான பனிச் சேர்க்கைக்குக் காரணமாகிறது.

“கடல்மட்ட உயர்வில் தற்போது அன்டார்டிகாவின் பங்களிப்பு ஏதுமில்லை என்பது மிக நல்ல செய்தியாகும். ஆனால், ஆண்டுக்கு 0.23 மில்லிமீட்டர் அளவு கடல் பின்வாங்குவது நல்ல செய்தி அல்ல.

ஆண்டுக்கு 0.27 மில்லிமீட்டர் அளவுக்கு கடல் மட்டம் உயர் வதற்கு அன்டார்டிகா காரணமாக இருக்கிறது என ஐபிசிசி அறிக்கை கூறுகிறது.

ஆனால், அதற்கு அன்டார்டிகா காரணமில்லை. கடல் மட்டம் உயர்வுக்கு வேறு காரணம் இருக்க வேண்டும்” என ஜுவாலி தெரிவித்துள்ளார்.

நன்றி :- தி இந்து:- 

அன்டார்டிகாவில் பனியின் பருமன் அதிகரிக்கிறது: நாசா ஆய்வில் தகவல்

Saturday, October 31, 2015

Facebook Group of Azhagi/Azhagi+

Testimonials (more testimonials - here and here)

எனக்கு உங்களை எப்படி பாராட்டுறதுன்னே தெரியவில்லை Viswanathan Balasubramanian.
எனக்கு அழகி Software ஐ கிட்டத்தட்ட 8 வருசத்துக்கு முன்னமே தெரியும்.
காசு குடுத்து வாங்குற Software தான் மக்களுக்காக பாத்து பாத்து வடிவமைக்கப்பட்டிருக்கும். மத்தது ஏதோ சாதாரணமாகத்தான் இருக்கும்னு நினைச்சிட்டிருந்தேன். ஆனா, என்னுடைய நினைப்பு எவ்வளவு தவறு என்பது உங்களுடைய Software ஐ உபயோகப்படுத்துனதுக்கு அப்புறம் புரிஞ்சிக்கிட்டேன்..
எப்பப்பப்பா!!! எவ்வளவு ஒரு எளிமையாக உபயோகப்படுத்தக்கூடிய ஒன்று.. கணிப்பொறி சார்ந்த குறைந்த அறிவுள்ளவர் எவரும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைத்துக் (Customizable) கொள்ளக்கூடிய வசதி..
அந்த மென்பொருள் சார்ந்த அனைத்து வித கேள்விகளுக்கும் விடைகொண்ட ஒரு வலைத்தளம். இவ்வளவு உழைப்பும் ஒரு தனி மனிதனுடையதுன்னு நினைக்கிறப்ப தலை சுற்றுகிறது.
இதுல மிகப்பெரிய விசயம் என்னன்னா நிறைய பேர்த்துக்கு உங்களுடைய மென்பொருள் இருப்பதே தெரியாது.. அப்படி தெரிஞ்ச சிலருக்கும் அதை சரியாக உபயோகிப்பது எவ்வாறு என்பதை புரிந்து கொள்ள இயலாமல் (உண்மையில் என்னைப்போல் நேரம் ஒதுக்காமல்) கைவிட்டிருக்க வேண்டும்..
ஒரு தமிழனுடைய மதிப்பு மிக்க உழைப்பு எப்படி வீணாகிக்கொண்டிருக்கின்றது என்பதை கண்கூடாக காண முடிகிறது. ஆனால் முழுவதுமாக வீணாக வில்லை ஒருசிலர் உங்களின் மென்பொருளின் எளிமையை மற்றும் தரத்தை உணர்ந்து பயன்படுத்தி பயன் பெறுகின்றனர்..
இனி வரும் காலங்களில் என்னால் இயன்ற அளவு எவ்வளவு தூரம் மக்களிடம் இதை எடுத்துச்செல்ல முடியுமோ அவ்வளவு எடுத்துச்செல்லுவேன்.
நன்றி கலந்த வணக்கத்துடன்
சரவணா

Respected Sir,
I would like to extend my Heartiest gratitude to you and to your Noble effort which transpired in the form of Azhagi for the World.
In spite of an 'N' no. of innovations from the Multi-National Brands (Google & Microsoft), I continue to adore Azhagi+ as "The Only" method to type in my Mother Tongue -- Hindi.
On this occasion of "Hindi Divas", I would like to offer a 1000 salutes to your selfless efforts, dedication & a persistent commitment for this cause.
Thank you so very much Sir!

திரு விஸ்வநாதன் அண்ணன் அவர்களே!
வணக்கம். தாங்களும் தங்கள் குடும்பமும் சகல செளபாக்கியமும் பெற்று நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்!
நான் தங்களுடைய அழகி+ 10.25 பதிவிறக்கம் செய்து பழகி வருகிறேன். என்னுடைய நீண்ட நாள் ஆசையை இப்பொழுதான் நிறைவேற்றி பயிற்சி செய்து வருகிறேன். தங்களுக்கு மிக்க நன்றி. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். அவ்வகையில் உங்கள் மூலமாக இறைவனின் கருணையைக் காணலாம்.
மேலும் இவ்வுலகில் காற்றையும் நீரையும் இறைவன் [விஸ்வம்=உலகம், நாதன்=தலைவன்] இவ்வுலகிற்கு இலவசமாகத் தந்தான். அதுபோல தாங்களும் அழகி மென்பொருளை இலவசமாக உலகிற்கு அளித்து அதிகம் படிக்காதவரும், தங்களின் சொந்த தாய் மொழியிலும் மற்றும் ஏனைய இந்திய மொழியிலும் லோக்கல் மென்பொருள் செயல்பாடுகளிலும் பயன்படுத்தவும், இணைய தளத்திலும் தங்களின் எண்ணங்களை பரிமாறிக் கொள்ளவும் வழிவகுத்து கொடுத்ததன் மூலமாக எல்லோருடைய சுவாசத்திலும், இருதயத்திலும் நிறைந்துள்ளீர்கள்!
நாம் சுவாசிக்கும் காற்றுக்கும் அருந்தும் நீருக்கும் எவ்வாறு விலையை நிர்னயிக்க முடியாதோ அதே போல தங்களின் அழகி+ மென்பொருளும் விலையில்லாதது. அத்தகைய சிறப்பு வாய்ந்த ஒன்றை இலவசமாகத் தந்த உங்களை வாழ்த்த தமிழில் வார்த்தைகளே இல்லை.
உங்களின் திருப்பாதங்களை வணங்கி என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களைப் போன்றவர்களின் அறிமுகமும், நட்பும், ஆசியும் நான் பெற்றால் அது நான் பெற்ற வரமும், பாக்கியமும் ஆகும்.
தங்களை இந்தத் தமிழக அரசு எவ்வாறு கௌரவித்தது என்று நான் அறியவில்லை.
1. அனைத்து மாவட்ட மக்களின் தாய் மொழி மற்றும் கணினி பாடப் புத்தகத்தில் தங்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் கண்டுபிடிப்பு இடம் பெறவேண்டும். இந்திய அரசு இவ்வாறு தங்களைக் கௌரவிக்க வேண்டும்.
2. தங்களின் அபாரமான உழைப்பிற்கும் அளவற்ற தியாகத்திற்கும், இந்திய அரசு மிக உயரியவிருதை நல்கி சிறப்பிக்க வேண்டும்.
நமது அழகி குருப்பில் உள்ள அனைவருக்கும் எனது வணக்கங்கள். இந்த இளைய சமுதாயமும், குறிப்பாக மாணவ, மாணவியர்களும் ஏனைய மற்றோரும் இவரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு ஆக்கப்பூர்வமான வழியில் முன்னேற வேண்டும். அதுவே அவருடைய உழைப்பிற்கு நாம் கொடுக்கும் மரியாதையாகும்.
என்றும் அன்புடன்,
ப. அருள் செல்வம்

சகோதரர் மிகப்பெரிய அபாரமான செயலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல உள்ளார்.. உண்மையில் இந்த மென்பொருளை உபயோகப்படுத்துவது இன்னும் நிறைய பேர்களுக்கு எப்படி என்பதே புரியாமல் இருக்கிறது.. ஆனால் ஒருமுறை எப்படி என்று புரிந்து கொண்டால் அவரவர்களுக்கு தேவையானபடி எவ்வாறு அழகியை வடிவமைப்பது என தெரிந்து கொண்டால் மலைத்துப்போவது உறுதி..

Easy portable typing / transliteration in Tamil, Hindi, Sanskrit, Telugu, Kannada, Malayalam, Marathi, Gujarati, Bengali, Punjabi, Oriya, Assamese, Sourashtra, Grantha, etc.Portable Azhagi+
If (and ONLY IF) you are conversant with portable softwares, then kindly proceed ahead to download and use Azhagi+ in portable mode too. OTHERWISE, click here to download the regular installable version of Azhagi+.
  • Less than 600 KB.
  • No need to install it.

அழகி மென்பொருள் பிதாமகன் = பாராட்டுக்கள் குவிகின்றன