Flash news:

  • உலகம்
  • தமிழகச்செய்திகள்
  • கட்டுரைகள்
  • சிறப்பு செய்திகள்
  • அனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.

Friday, November 6, 2015

அறிவியல், தொழில்நுட்பம், கால்பதிக்கும் ஃபேஸ்புக், புள்ளிவிவரம் :ஃபேஸ்புக் இன்றும் நாளையும்: மார்க் பகிர்ந்த நிலைத்தகவல்கள்

மார்க் ஸக்கர்பெர்க்

மார்க் ஸக்கர்பெர்க்

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தனது நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளையொட்டி, சில புள்ளிவிவரங்கள், தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன் முக்கிய அம்சங்களாவன:

* உலகம் முழுக்க அன்றாடம் ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சுமார் 150 கோடி. இதில் தினமும் 100 கோடி பேர் தொடர்ச்சியாக ஃபேஸ்புக் பயன்படுத்துகின்றனர்.

* இன்டர்நெட் டாட் ஆர்க் நிறுவனத்தின் மூலம் சுமார் 1.5 கோடி மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

* ஒவ்வொரு மாதமும், 90 கோடி மக்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்துகின்றனர்; 70 கோடி பேர் மெசஞ்சர் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

* ஒவ்வொரு மாதமும் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை 40 கோடி.

* 92 கோடிக்கும் மேற்பட்டோர், ஃபேஸ்புக் குழுக்களில் உள்ளனர்.

* காணொளிகள் தினமும் 800 கோடிக்கும் மேற்பட்ட முறைகள் காணப்பட்டிருக்கின்றன.

* 4.5 கோடிக்கும் மேற்பட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஃபேஸ்புக் பக்கங்களைப் பயன்படுத்துகின்றன.

அறிவியல், தொழில்நுட்பத்தில் கால்பதிக்கும் ஃபேஸ்புக்

* இணைய வசதி இல்லாத மக்களுக்கு இணையத்தை அளிப்பதற்காக ஃபேஸ்புக் நிறுவனம், ஆளில்லா போயிங் ரக 'அக்விலா' என்னும் விமான ஏவுதலை அறிவித்துள்ளது.

* இணைய வசதியை அளிக்கும் முதல் செயற்கைக்கோள் வெளியீடு குறித்தும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

* 'எம்' டிஜிட்டல் உதவியாளர் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

எம்
''டிஜிட்டல் உதவியாளரான 'எம்', மெசஞ்சர் குறுஞ்செய்திக்கான செயலிக்குப் பின்னால் இயங்கும். செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் எம் செயலியால், உங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம், என்ன புத்தகம் வாங்கலாம், எங்கு பயணம் செல்லலாம், என்ன பரிசு வாங்கலாம் என்பதை எம் பரிந்துரைக்கும்'' என்று பேஸ்புக் அறிவித்திருக்கிறது. பரிசோதனை முடித்து தற்போது எம் டிஜிட்டல் உதவியாளர், ஆப்பிளின் சிரி செயலி, கூகிள் நவ் மற்றும் மைக்ரோசாஃப்டின் கோர்ட்டானா ஆகியவற்றுடன் இணைந்துள்ளது.

* 'கியர் விஆர்' திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கியர் விஆர்
ஃபேஸ்புக் மூலம் காணொளீகள் பகிரப்படுவதை ஊக்குவித்து வரும் மார்க், காணொளி செல்லும் திசையில் பயனரும் பயணித்து 360 டிகிரியும் சுழலும் வகையிலான காணொளிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக விஆர் என்றழைக்கப்படும் விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம், மெய்நிகர் உலகத்தில் பார்வையை மேம்படுத்த ஃபேஸ்புக் முயற்சி எடுத்து வருகிறது.

Keywords: அறிவியல், தொழில்நுட்பம், கால்பதிக்கும் ஃபேஸ்புக், புள்ளிவிவரம்

0 comments:

Post a Comment

Kindly post a comment.