Saturday, October 31, 2015

அழகி மென்பொருள் பிதாமகன் = பாராட்டுக்கள் குவிகின்றன

Facebook Group of Azhagi/Azhagi+

Testimonials (more testimonials - here and here)


எனக்கு உங்களை எப்படி பாராட்டுறதுன்னே தெரியவில்லை Viswanathan Balasubramanian.
எனக்கு அழகி Software ஐ கிட்டத்தட்ட 8 வருசத்துக்கு முன்னமே தெரியும்.
காசு குடுத்து வாங்குற Software தான் மக்களுக்காக பாத்து பாத்து வடிவமைக்கப்பட்டிருக்கும். மத்தது ஏதோ சாதாரணமாகத்தான் இருக்கும்னு நினைச்சிட்டிருந்தேன். ஆனா, என்னுடைய நினைப்பு எவ்வளவு தவறு என்பது உங்களுடைய Software ஐ உபயோகப்படுத்துனதுக்கு அப்புறம் புரிஞ்சிக்கிட்டேன்..
எப்பப்பப்பா!!! எவ்வளவு ஒரு எளிமையாக உபயோகப்படுத்தக்கூடிய ஒன்று.. கணிப்பொறி சார்ந்த குறைந்த அறிவுள்ளவர் எவரும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைத்துக் (Customizable) கொள்ளக்கூடிய வசதி..
அந்த மென்பொருள் சார்ந்த அனைத்து வித கேள்விகளுக்கும் விடைகொண்ட ஒரு வலைத்தளம். இவ்வளவு உழைப்பும் ஒரு தனி மனிதனுடையதுன்னு நினைக்கிறப்ப தலை சுற்றுகிறது.
இதுல மிகப்பெரிய விசயம் என்னன்னா நிறைய பேர்த்துக்கு உங்களுடைய மென்பொருள் இருப்பதே தெரியாது.. அப்படி தெரிஞ்ச சிலருக்கும் அதை சரியாக உபயோகிப்பது எவ்வாறு என்பதை புரிந்து கொள்ள இயலாமல் (உண்மையில் என்னைப்போல் நேரம் ஒதுக்காமல்) கைவிட்டிருக்க வேண்டும்..
ஒரு தமிழனுடைய மதிப்பு மிக்க உழைப்பு எப்படி வீணாகிக்கொண்டிருக்கின்றது என்பதை கண்கூடாக காண முடிகிறது. ஆனால் முழுவதுமாக வீணாக வில்லை ஒருசிலர் உங்களின் மென்பொருளின் எளிமையை மற்றும் தரத்தை உணர்ந்து பயன்படுத்தி பயன் பெறுகின்றனர்..
இனி வரும் காலங்களில் என்னால் இயன்ற அளவு எவ்வளவு தூரம் மக்களிடம் இதை எடுத்துச்செல்ல முடியுமோ அவ்வளவு எடுத்துச்செல்லுவேன்.
நன்றி கலந்த வணக்கத்துடன்
சரவணா

Respected Sir,
I would like to extend my Heartiest gratitude to you and to your Noble effort which transpired in the form of Azhagi for the World.
In spite of an 'N' no. of innovations from the Multi-National Brands (Google & Microsoft), I continue to adore Azhagi+ as "The Only" method to type in my Mother Tongue -- Hindi.
On this occasion of "Hindi Divas", I would like to offer a 1000 salutes to your selfless efforts, dedication & a persistent commitment for this cause.
Thank you so very much Sir!

திரு விஸ்வநாதன் அண்ணன் அவர்களே!
வணக்கம். தாங்களும் தங்கள் குடும்பமும் சகல செளபாக்கியமும் பெற்று நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்!
நான் தங்களுடைய அழகி+ 10.25 பதிவிறக்கம் செய்து பழகி வருகிறேன். என்னுடைய நீண்ட நாள் ஆசையை இப்பொழுதான் நிறைவேற்றி பயிற்சி செய்து வருகிறேன். தங்களுக்கு மிக்க நன்றி. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். அவ்வகையில் உங்கள் மூலமாக இறைவனின் கருணையைக் காணலாம்.
மேலும் இவ்வுலகில் காற்றையும் நீரையும் இறைவன் [விஸ்வம்=உலகம், நாதன்=தலைவன்] இவ்வுலகிற்கு இலவசமாகத் தந்தான். அதுபோல தாங்களும் அழகி மென்பொருளை இலவசமாக உலகிற்கு அளித்து அதிகம் படிக்காதவரும், தங்களின் சொந்த தாய் மொழியிலும் மற்றும் ஏனைய இந்திய மொழியிலும் லோக்கல் மென்பொருள் செயல்பாடுகளிலும் பயன்படுத்தவும், இணைய தளத்திலும் தங்களின் எண்ணங்களை பரிமாறிக் கொள்ளவும் வழிவகுத்து கொடுத்ததன் மூலமாக எல்லோருடைய சுவாசத்திலும், இருதயத்திலும் நிறைந்துள்ளீர்கள்!
நாம் சுவாசிக்கும் காற்றுக்கும் அருந்தும் நீருக்கும் எவ்வாறு விலையை நிர்னயிக்க முடியாதோ அதே போல தங்களின் அழகி+ மென்பொருளும் விலையில்லாதது. அத்தகைய சிறப்பு வாய்ந்த ஒன்றை இலவசமாகத் தந்த உங்களை வாழ்த்த தமிழில் வார்த்தைகளே இல்லை.
உங்களின் திருப்பாதங்களை வணங்கி என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களைப் போன்றவர்களின் அறிமுகமும், நட்பும், ஆசியும் நான் பெற்றால் அது நான் பெற்ற வரமும், பாக்கியமும் ஆகும்.
தங்களை இந்தத் தமிழக அரசு எவ்வாறு கௌரவித்தது என்று நான் அறியவில்லை.
1. அனைத்து மாவட்ட மக்களின் தாய் மொழி மற்றும் கணினி பாடப் புத்தகத்தில் தங்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் கண்டுபிடிப்பு இடம் பெறவேண்டும். இந்திய அரசு இவ்வாறு தங்களைக் கௌரவிக்க வேண்டும்.
2. தங்களின் அபாரமான உழைப்பிற்கும் அளவற்ற தியாகத்திற்கும், இந்திய அரசு மிக உயரியவிருதை நல்கி சிறப்பிக்க வேண்டும்.
நமது அழகி குருப்பில் உள்ள அனைவருக்கும் எனது வணக்கங்கள். இந்த இளைய சமுதாயமும், குறிப்பாக மாணவ, மாணவியர்களும் ஏனைய மற்றோரும் இவரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு ஆக்கப்பூர்வமான வழியில் முன்னேற வேண்டும். அதுவே அவருடைய உழைப்பிற்கு நாம் கொடுக்கும் மரியாதையாகும்.
என்றும் அன்புடன்,
ப. அருள் செல்வம்


சகோதரர் மிகப்பெரிய அபாரமான செயலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல உள்ளார்.. உண்மையில் இந்த மென்பொருளை உபயோகப்படுத்துவது இன்னும் நிறைய பேர்களுக்கு எப்படி என்பதே புரியாமல் இருக்கிறது.. ஆனால் ஒருமுறை எப்படி என்று புரிந்து கொண்டால் அவரவர்களுக்கு தேவையானபடி எவ்வாறு அழகியை வடிவமைப்பது என தெரிந்து கொண்டால் மலைத்துப்போவது உறுதி..

Easy portable typing / transliteration in Tamil, Hindi, Sanskrit, Telugu, Kannada, Malayalam, Marathi, Gujarati, Bengali, Punjabi, Oriya, Assamese, Sourashtra, Grantha, etc.Portable Azhagi+
If (and ONLY IF) you are conversant with portable softwares, then kindly proceed ahead to download and use Azhagi+ in portable mode too. OTHERWISE, click here to download the regular installable version of Azhagi+.
  • Less than 600 KB.
  • No need to install it.

0 comments:

Post a Comment

Kindly post a comment.