Saturday, October 31, 2015

பல நூறு கோடியில் சினிமா தியேட்டர்கள் வாங்கிய சசிகலா: கருணாநிதி


சென்னை: சென்னையில் பல நுாறு கோடி செலவில் 11 திரையரங்குகளை சசிகலா சொத்துக்கள் வாங்கி குவிப்பதாக வந்த தகவல் உண்மை தான் என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார் . 

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் உள்ள "போரம் மால்”, மற்றும் "சத்தியம் திரையரங்கு வளாகம்” போன்றவற்றையும் வாங்குவதற்கான முயற்சியிலே ஈடுபட்டிருப்பதாகவும், அதன்உரிமையாளர்கள் அவற்றை விற்பதற்குத் தயங்குவதாகவும் செய்திகள் வந்து கொண்டு உள்ளன. 

சென்னை வேளச்சேரியில் "பீனிக்ஸ் மால்” என்று ஒரு வணிக வளாகம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த வளாகம் ஜன.2013ல் தொடங்கப்பட்டது. இந்த வளாகம் மும்பையைச் சேர்ந்த பீனிக்ஸ் மில்ஸ் மற்றும் மற்றொரு தனியார் நிறுவனத்தோடு சேர்ந்து தொடங்கப்பட்டது. இந்த வளாகத்தில் "லுாக்ஸ்” சினிமா என்ற பெயரில் மொத்தம் 11 தியேட்டர்கள் கட்டப்பட்டன. 

வணிக வளாகம் ஜனவரி 2013ல் தொடங்கப்பட்டாலும், இதில் உள்ள தியேட்டர்கள் மட்டும் மார்ச் 2014ல் தான் தொடங்கப்பட்டன. சென்னையில் வணிக வளாகத்தைக் கட்டியவர்களுக்கு தியேட்டரை மட்டும் உடனடியாக கட்டத் தெரியாதா? ஒரு ஆண்டு தாமதம் ஏன்? ஏன் என்றால் சென்னை மாநகரக் காவல்துறையும் இதர அமைப்புகளும், உள்நோக்கத்தோடு இந்த தியேட்டர்களைத் திறக்கத் தேவையான சான்றிதழ்களுடன் அனுமதி தரவில்லை. 

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பல பினாமி நிறுவனங்கள் இருந்தன என்பது நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பிலேயே சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. ஹாட்வீல்ஸ் இஞ்சினீயரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அத்தகைய பினாமி நிறுவனங்களில் ஒன்று. இந்நிறுவனத்தின் பெயரை "ஜாஸ்” சினிமா நிறுவனம் என்று மாற்றி, சத்தியம் சினிமா நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 600 கோடி ரூபாயிலிருந்து 1000 கோடி ரூபாய் மதிப்புடைய பதினோறு திரையரங்குகளை, ஜெயலலிதாவுடனேயே இருந்து வரும் சசிகலாவும், இளவரசியும், அவரது உறவினர் பெயரிலே வலியுறுத்தியும், மிரட்டியும் வாங்கியிருக்கின்ற செய்தி இன்று வீதிக்கு வந்து விட்டது. 

மேலும் இந்தக் குழுவினர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள "போரம் மால்”, மற்றும் "சத்தியம் திரையரங்கு வளாகம்” போன்றவற்றையும் வாங்குவதற்கான முயற்சியிலே ஈடுபட்டிருப்பதாகவும், அதன் உரிமையாளர்கள் அவற்றை விற்பதற்குத் தயங்குவதாகவும் செய்திகள் வந்து கொண்டு உள்ளன.

wanRi :- maalaimalar

0 comments:

Post a Comment

Kindly post a comment.