Sunday, September 23, 2012

பிரபல பிரித்தானிய ஆங்கில இணையம் ஒன்றில், உலகின் கடினமான வேலை செய்பவர்களாக இந்திய சாக்கடை துப்பரவு தொழிளாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் சாக்கடைகள் மனிதர்களை கொண்டு துப்பரவு செய்யப்படுகின்றன. சமூக ஆர்வலர் மத்தியில் இது எதிர்ப்பு அலைகளை தோற்றுவித்தாலும், அரசு இதற்கு மாற்று நடவடிக்கைகள் எடுப்பதாக தெரியவில்லை.

அந்த வகையில், இந்திய தலைநகர் புதுடெல்லிக்கு விஜயம் செய்த சுற்றுலா பயணிகளை சாக்கடை துப்பரவாளர்கள் மிகவும் பாதித்திருக்கிறார்கள்.

http://www.tamilcloud.com/2012/08/19/world-hardest-job      

 சுதந்திரமடைந்து    63  ஆண்டுகளுக்குப் பின்னர்தான், சென்னைப் பெருநகரில் தெருப்பெயர்கள் பளிச்சென்று தெரியும் வண்ணம் எழுதிவைத்துள்ளனர்.

இத்தகைய கொடுமைகளுக்கெல்லாம் தீர்வுகாண இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ ?

வெள்ளைக்காரனைக் கலங்க வைத்த இந்திய சாக்கடைத் தொழிலாளர்..!

Saturday, September 22, 2012

http://tamil.oneindia.in/news/2012/09/21/world-monica-lewinsky-s-tell-all-book-reveal-bill-clinton-161866.html  

மதுவையும் மங்கையையும் ஒரு மனிதனிடமிருந்து பிரித்துப் பார்த்தால்
எல்லோரும் நல்லவரே!

நடந்ததைச் சொல்லும் தைரியம் வேலையை விட்டபின்தானே எல்லோருக்குமே வருகின்றது. அது நியாயம்தானே?

பில் கிளிண்டனுடனான 'கசமுசாக்களை' புத்தகமாக வெளியிடும் மோனிகா லெவின்ஸ்கி !

http://tamil.oneindia.in/news/2012/09/21/world-monica-lewinsky-s-tell-all-book-reveal-bill-clinton-161866.html  

மதுவையும் மங்கையையும் ஒரு மனிதனிடமிருந்து பிரித்துப் பார்த்தால்
எல்லோரும் நல்லவரே!

நடந்ததைச் சொல்லும் தைரியம் வேலையை விட்டபின்தானே எல்லோருக்குமே வருகின்றது. அது நியாயம்தானே?

வளமான எதிர்காலத்துக்கு கசப்பான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை ஆதரித்தும் அதற்கான அவசியத்தை விளக்கியும் பிரதமர் மன்மோகன் சிங் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு வெள்ளிக்கிழமை உரையாற்றினார்.

தனது உரையில் அவர் கூறியது:
டீசல் விலை உயர்வு, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு ஆகிய விஷயங்களை முன்வைத்து நமது பொருளாதாரத்துக்குப் பெரும் ஆபத்து  என்பது போல் பீதியைக் கிளப்புபவர்களை நம்ப வேண்டாம்.

இப்போது எழுப்பப்படும் கவலைகள் அடிப்படையற்றவை. 1991-ம் ஆண்டு நான் நிதியமைச்சராக இருந்தபோது பொருளாதாரச் சீர்திருத்தங்களை அமல்படுத்தினேன். அப்போது சிலர் இது குறித்து மக்களிடையே அச்சத்தைப் பரப்பினர். ஆனால், அவர்களால் தொடர்ந்து அம்முயற்சியில் வெற்றி காண இயலவில்லை. அதேபோல் இப்போதும் மக்களிடையே பீதியைக் கிளப்பும் முயற்சி பலிக்காது.

 இவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பவர்களின் பேச்சை மக்கள் நம்ப வேண்டாம். டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு மீதான கட்டுப்பாடு ஆகியவை தவிர்க்க முடியாத நடவடிக்கைகளாகும். நாட்டின் கடினமான பொருளாதார நிலைமையில் இவை அவசியமாகின்றன.

வளமான எதிர்காலத்துக்கு கசப்பான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.
நமக்குத் தேவையான கச்சா எண்ணெயில் 80 சதவீதத்தை நாம் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

 நமது மக்களுக்கு இன்னல் தரக் கூடாதென்பதால், அதே அளவுக்கு இங்கு விலை உயர்த்தப்படவில்லை.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்தாததால் எண்ணெய்த் துறை மானியமாக ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டி வந்தது.
இந்த ஆண்டு அது ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும். டீசல் விலையை உயர்த்தாவிட்டால் அது ரூ. 2 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கும்.

பணம் மரத்தில் காய்க்கவில்லை:டீசல் வகையில் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க அதன் விலையை ரூ.17 உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால் வெறும் ரூ. 5 தான் உயர்த்தப்பட்டுள்ளது.

மானிய விலையில் விற்கப்படும் டீசல் பெரும்பாலும் பணக்காரர்களின் பெரிய கார்களுக்குத்தான் பயன்படுகிறது. அவர்களுக்குப் பயன், மத்திய அரசுக்குப் பெரும் நிதிப் பற்றாக்குறையா?

ரூ. 5 உயர்த்திய பிறகும் ஒரு லிட்டர் டீசலின் விலை இறக்குமதி விலையைவிட ரூ. 13.86 குறைவாகவே இருக்கிறது. மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு ரூ. 32.70 குறைவாக விற்கப்படுகிறது. சமையல் எரிவாயு ஒரு சிலிண்டருக்கு ரூ. 347 குறைவாக விற்கப்படுகிறது.

 இதையெல்லாம் சமாளிக்க ஏது பணம்? பணம் மரத்தில் காய்க்கவில்லை. இந்த நடவடிக்கையை இப்போது எடுக்காவிட்டால் வரவுக்கும் மேல் தாங்க முடியாத அளவுக்கு அரசின் செலவுகள் கூடிவிடும்.

அதே சமயம், பெட்ரோல் மீதான ரூ.5 மதிப்பிலான வரியைக் குறைத்துள்ளோம். ஸ்கூட்டர், மோட்டர் சைக்கிள்கள் ஓட்டிச் செல்லும் கோடிக் கணக்கான நடுத்தர மக்கள் மேலும் பாதிக்கப்படக் கூடாதே என்பதால்தான் அவ்வாறு செய்தோம்
.
சமையல் எரிவாயு சிலிண்டரைப் பொருத்தவரை, பெரும்பாலான மக்கள் ஆண்டுக்கு 6 சிலிண்டர்களைத்தான் உபயோகப்படுத்துகிறார்கள். புதிய விதிமுறையினால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை. மற்றவர்களைப் பொருத்தவரை, மானிய விலையில் 6 சிலிண்டர்கள் என்பது உறுதி. அதற்கு மேல் பயன்படுத்தினால் அவர்கள் கூடுதல் விலை தந்தே ஆக வேண்டும்.

1991-ல் நாடு பொருளாதாரப் பிரச்னையைச் சந்தித்தபோது யாருமே நமக்கு சிறு தொகையைக் கூட கடனாகத் தர முன்வரவில்லை.

கடுமையான, உறுதியான முடிவுகளை எடுத்ததன் மூலம் நெருக்கடியில் இருந்து மீண்டோம். அந்த நடவடிக்கைகளின் சாதகமான பலன்களை நீங்கள் இப்போதும் பார்க்கலாம்.

இன்று நாம் அந்தச் சூழ்நிலையில் இல்லை. ஆனால் மக்கள் நமது பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை இழப்பதற்கு முன் செயலில் இறங்க வேண்டியுள்ளது.

 இப்போது நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வராவிட்டால், மேலும் விலைவாசி கடுமையாக உயரும். பொருளாதாரத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழப்பார்கள். உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளைச் செய்யத் தயங்குவார்கள். வெளிநாடுகளில் நமது நிறுவனங்கள் கடன் பெற முடியாது. வட்டி விகிதம் உயரும். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும்.

ஐரோப்பிய நாடுகள் பெரும் நிதிச் சிக்கலில் உள்ளன. மற்றவர்களின் உதவியை அவர்கள் நாடுகிறார்கள். ஊதியக் குறைப்பு, ஓய்வூதியக் குறைப்பு செய்து கடன் தருபவர்களைத் திருப்திப்படுத்துகிறார்கள்.

ஆனால் இந்தியாவை அந்த நிலைமைக்குத் தள்ள நான் விரும்பவில்லை. ஆனால் இந்நிலைமையை உங்களுக்குப் புரிய வைத்தால்தான் நான் எனது நோக்கத்தில் வெற்றி காண முடியும் என பிரதமர் தனது 15 நிமிட உரையில் தெரிவித்தார். ஹிந்தியிலும் பின்னர் ஆங்கிலத்திலும் அவர் பேசினார்.

நன்றி:- தினமணி,  சனிக்கிழமை, 22, செப்டம்பர்,2012.

வளமான எதிர்காலத்துக்கு கசப்பான முடிவுகள் தேவை:- மன்மோகன் சிங்

HOMAI VYARAWALA  இந்தியாவில் முதல் பெண் புகைப்படப் பத்திரிக்கையாளர்.. குஜராத் தெற்குப் பகுதியில் உள்ள நவ்சாரி நகரில் பார்சி குடும்பத்தில் 09-12-1913-ல் பிறந்தார்.  மும்பையில் வளர்ந்தார். தனது 13 வது வயதில் MANECKSHAL WARWALA -வை மணந்தார்.

மற்றும் கலை கே.கே.பள்லியில் படித்தார். 1930-ல் தனது புகைப்படத் தொழிலைத் துவக்கினார். 1938-ல் பெண்கள் சுற்றுலாப் படங்களை பம்பாய் கிரானிக்கலுக்காக எடுக்கத் துவங்கினார். அப்போது ஒரு படத்திற்கு ஒரு ரூபாய் சம்பளம்.

இந்தியா சுதந்திரத்தை நோக்கி அடியெடுத்து வைக்க ஆரம்பித்தபோது, இவரால் எடுக்கப்பட்ட படங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. மெள்ண்ட் பேட்டன் வழியனுப்புவிழா, மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, லால்பஹதூர் சாஸ்திரி, 1950 களில், மாசேதுங்க் காலத்தில் சீனப்பிரதமராக இருந்த சூ என் லாய், வட வியட்நாம் தலைவர் ஹோஸிமின், திபெத்திலிலிருந்து தப்பித்துவந்த நிலையில் தலாய் லாமா, எலிசபெத் அரசி II இவர்களது இந்திய வருகைகளைப் பதிவு செய்தார். President Dwighto Eisewhower and John F Kennedy and First lady Mamie Eisenhewer & Jacuuelint Kennedy ஆகியோரையும் படம் எடுத்துள்ளார்.

இவருக்கு புகைப்ப்ட அனுமதிக்கு வழஙப்பட்ட உரிமை எண் DALDA 13, இவருக்குத் திருமணம் நடந்த வயது 13, இவரது முதல் காரின் பிளேட் எண் DLA 13, எனவே, இவர் பெயரைவிட DALDA!3 பெயரைவிட இதுவே இவரது அடையாளமாக அமைந்தது.

 30 ஆண்டுகள் இவரால் எடுக்கப்பட்ட புகைப் படங்கள் அனைத்துமே வரலாற்ரு முக்கியத்துவம் வாய்ந்தவை. 1990-ல் ஓய்வு எடுக்கத் துவங்கினார். சென்ற ஆண்டு மன்மோகன் சிங்க் இவரது பிறந்த நாளின்போது வாழ்த்த் அட்டை அனுப்பிக் கெள்ரவித்தார். 4 தலைமுறை புகைப்படத்துறையில் இருந்த இவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கிக் கவுரவித்தது, மத்திய அரசு. 20 ஆம் நூற்ராண்டின் மத்தியில், ஜனவரி 15-ல் 98 ஆம் வயதில் காலமானார்.

இந்தியாவின் முதல் பெண் புகைப்படப் பத்திரிக்கைக் கலைஞர் !

Friday, September 21, 2012

தமிழன்னைக்கு மணிமகுடம் சூட்டியவர்கள்!

மனித உள்ளத்தைப் புனிதப்படுத்தும் பக்திப்பாக்கள் தமிழ்மொழியிற்போல, வேறு மொழிகளில் இல்லை. வணிகத்தின் மொழி ஆங்கிலம் என்றால், தூதின் மொழி பிரெஞ்சு என்றால், காதலின் மொழி இத்தாலி என்றால், தத்துவத்தின் மொழி ஜெர்மானியம் என்றால், உலகில் பக்தியின் மொழி தமிழே ஆகும்.

-தனிநாயகம் அடிகள்

தமிழ் எழுத்துக்களின் ஒப்புயர்வில்லாதத் தனிச்சிறப்பைக் கண்டு வியந்து தாமும் தமிழ் மாணவர் என்று பெருமிதங்கொண்ட மேனாட்டறிஞர் பலர். இவர்களில், தூய அடிகளார் ஒருவர், தமிழ் எழுத்துக்களில் மந்திரப் பொருள்கள் ( Mystic  Signification) மறைந்து பொதிந்து கிடக்கின்றன வென்றும்; அவைகளைக் காண்பதற்கு நுண்ணறிவும் தெய்வத் தன்மையும் பொருந்திய முதல் மாணவர் ஒருவர் உதிக்க வேண்டுமென்றும் தமிழ்த் தாயை வாழ்த்துகின்றனர். முருகப் பெருமானின் திருவுருவமே தூய தமிழ் எழுத்துக்களாய் அமையப் பெற்றுள்ளன வென்று சிவ, ஆகம நூல்கள் ஐயந்திரிபற ஓதுகின்றன. -தி.இரா.அண்ணாமலைப் பிள்ளை

இன்றைய உலக மொழிகளில் தமக்கெனத் தனியாகத் தாமே எழுத்து வகுத்துக்கொண்ட மொழிகள் தமிழும் தமிழின் மொழிகளும் மட்டுமே. இஃது இன்றைய உலகப் பொது மக்களுக்குத் தெரியவராத செய்தி. மாணவருலகும் அறிஞரும் கூடக் கவனியாத மெய்ம்மை ஆகும். ஆயினும் இது வரலாறு காட்டும் உண்மை. தனக்கென எண் இலக்கமும் எண் மானமும் வகுத்துக்கொண்ட உலகின் ஒரே மொழிகூடத் தமிழே! மற்ற எல்லா மொழிகளும் அதை அப்படியே மேற்கொண்டோ, சிறிது திரிந்தோ இன்றுவரை வழங்குகின்றன. -கா.அப்பாதுரை

தமிழர்களின் தாய்மொழியாகிய தமிழ் அமிழ்தினும் இனியதென இமிழ்கடல் வரைப்பில் எல்லோராலும் போற்றப்பெறுவது. "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே'யும், "முன்தோன்றி மூத்து'ப் படைப்புக் காலந்தொடங்கி மேம்பட்டு வருவது. பழமையும் பெருமையும் வாய்ந்த இது புதுமையும் பொருந்தி, இன்றும் உலக வழக்கழியாது என்றும் நின்று நிலவுதற்குரிய "உயர்தனிச் செம்மொழி' எனற்பாலது.    -சரவண.ஆறுமுக முதலியார்

சொற்பெருக்கும், கலைநுட்ப அழகும், பண்பட்ட தாய்மையும் உடையதாக மனிதர் பேசும் மொழிகளுள் ஒன்று தமிழ். -ஹட்சன் டெய்லர்

தமிழ்மொழியில் விளங்கும் அகத்துறைப்பாக்கள் (கர்ஸ்ங்-ல்ர்ங்ற்ழ்ஹ்), உலகப் பேரிலக்கியங்களோடு ஒப்பிடத்தக்க உயர்வுடையவை. தமிழில் உள்ள அறத்துறைப் பாக்கள் ( Ethical  Poetry  ) போன்று வேறு மொழிகளில் பாடல்கள் இல்லை. -வீரமாமுனிவர்

தமிழ், கிரேக்க மொழியினும் நயமான, நுட்பமான செய்யுள் நடையுடையது. லத்தீன் மொழியினும் நிரம்பி வழியும் இலக்கணச் செல்வமும் பூரணத்துவமும் உடையது. ஆங்கிலம், ஜெர்மன் மொழிகளுக்கு நிகரான நிறைவும் ஆற்றலும் உடையது. -வின்ஸ்லோ

திராவிட மொழிகளில் மிகத்திருத்தம் பெற்ற மொழியான தமிழ், வடமொழியின் துணையின்றித் தனித்தியங்கவும், ஏன் ஒலியுடன் திகழவும் வல்லமையுடையது. தமிழ்மொழியில் வரும் சுட்டு, வினாப் பெயர்களின் அழகான தத்துவார்த்தமான ஒழுங்குமுறை வேறு எம்மொழியிலுமில்லை.

-கால்டுவெல் 

சுருங்கச் சொல்லி, அதே சமயம் ஆற்றலையும், இணைத்துத் தருவதில் தமிழுக்கு நிகரான மொழி இல்லை. மனதின் இயல்பை விளக்கியுரைப்பதிலும் தமிழைப்போல், உள்ளத்தைத் தொட்டுத் தத்துவ விளக்கம் செய்வதிலும் வேறு மொழிகள் ஏதும் இல்லை.  -பெர்சிவல்

மிச் சீர்திருந்திய வளர்ச்சியும், தன் நாட்டுக்குரிய சொந்த இலக்கியங்களில் வளமும் செறிவும் நிரம்பியது தமிழ்.  -மாக்ஸ் முல்லர்

தமிழ் சொற்செல்வம் படைத்த ஒரு தனிமொழி. தமிழ்மொழி ஒரு பண்பட்ட மொழி. அது தென்னிந்திய மொழிகளை ஈன்ற அன்னை. -ஜி.யு.போப்

தமிழில் சொல்வளம் மேன்மேலும் வளர்ச்சி பெற்றதற்குரிய காரணங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

 தமிழர் வாழ்வில் புறவாழ்க்கைக்குரிய பொருள்களும் சிந்தனைக்குரிய கருத்துக்களும் நாளடைவிலே பெருகி வந்தது ஒரு காரணம்

 புலவர்கள் இலக்கியங்களை சிருஷ்டி செய்யும்போது பல திரி சொற்களை ஆக்கிக்கொண்டது மற்றொரு காரணம்

. வேற்று நாட்டுப் பொருளும் கருத்தும் இலக்கியமும் தமிழர் வாழ்க்கையிலே கலந்தது மூன்றாவது காரணம்.

தமிழ் மொழியிலே சொல்வளம் நிரம்பியிருப்பதற்குக் காரணம் தமிழர்களுடைய பரந்த நோக்கமே ஆகும். இந்தியாவில் வழங்கும் மொழிகளுக்குள் தமிழே சொல் வளத்தில் தலைசிறந்து நிற்கிறது.

-கி.வா.ஜகந்நாதன்

நன்றி :- தமிழ்மணி-தினமணி, 16-09-2012

தமிழன்னைக்கு மணிமகுடம் சூட்டியவர்கள் !

கிழக்கு மலைத் தொடர்............

இந்திய நாட்டை வேளாண் பெருநாடாகக் பொலிவுறச் செய்யும் தகுதிவாய்ந்த வாய்ப்புகளைத் தந்து உணவுப்பொருள் உற்பத்தியில் குறிப்பிடத்தகுந்த இடத்தையும், தொடர்ந்து கொடுத்துக்கொண்டு இருப்பவை இயற்கை வளங்கள் அத்தனையும் தனக்குள்ளே கொண்டுள்ள மலைகளும் அதன் காடுகளுமென்றால் அது மிகையாகுமா?

சைபீரியாவின் கடுங்குளிர் மிகுந்த உலர் மற்றும் கோடைக்காற்றை இந்தியத் துணைக் கண்டத்திற்குள் அண்டவிடாமல் நின்று நிலைத்துத் தடுக்கும் பணியை காலங்கள் கடந்து மேற்கொண்டு, ஈரப்பதம் மிக்க பருவகால மழைக்காற்றை நாடு முழுவதும் கொண்டு செலுத்துவது இமயமலையன்றி வேறில்லை.
இமயமலைக்கு அடுத்தபடியாக உன்னதமான மலைச்சிகரங்களைத் தன்னகத்தே கொண்டிலங்கி தென்னகத்தை வளங்கொழிக்கச் செய்தது நீலகிரி மற்றும் ஆனைமலைத் தொடர்கள், மேற்குக்கரை எல்லையான அரபிக் கடற்கரைக்கு இணைச் சுவரினைப்போல சங்கிலித் தொடராய் இம்மலை விளங்குகிறது.

மும்பைக்கு சற்று மேற்கே தோன்றி முக்கடல் சங்கமிக்கும் குமரி முனைவரை இம்மலை நீண்டு காணப்படுகிறது. இம்மலைத் தொடர்கள் ஏதும் இல்லாமல் இருந்திருந்தால் சைபீரியாவின் ஸ்டெபி சமவெளிபோல வறண்ட பாலைவனமாக இந்தியா இருந்திருக்கும்.

இமயமலைத் தொடர் முழுவதுமே ஒரே ஒரு தனிவகையைச் சார்ந்தவை. ஆனால், மேற்குத் தொடர்ச்சி மலைகள் உலகத்திலுள்ள இன்னபிற மலைத் தொடர்களுக்கு நிகராக விளங்குபவை. இதனுடைய எழிலும், தோற்றமும், இயற்கையின் பசுமைச் செழுமையும், தனியிடம் பெற்றிருப்பது பெருஞ்சிறப்பாகும்.

இமயமும், நீலகிரி மலையும் நமது தீபகற்பத்தின் இயற்கையின் அரும்பெரும் கொடை எனக்கொண்டாலும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

சாத்புரா, விந்தியம், ஆரவல்லி மலைத்தொடர்களும், காசி, காரோ போன்ற மலைக்குன்றுகளும் குறைவில்லாமல் இந்திய உயிரின மேன்மைக்குத் துணையாக இருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரண்டு மலைத்தொடர்கள் சூழ்ந்துள்ளன. ஒன்று மேற்குத் தொடர்ச்சி மலைகள், இரண்டாவது கிழக்குத் தொடர்ச்சி மலைகள். வடகிழக்காகத் தொடங்கி தென்மேற்காக அமைந்துள்ள மலைகளை கிழக்குத் தொடர்ச்சி மலைகள் என்கிறோம். உண்மையில் இஃது தொடர்ச்சியாக, அதாவது மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் போன்று அமையப் பெற்றதல்ல. மகா நதி தொடங்கி வைகை நதி வரையிலான பகுதிகளில் உள்ள பல்வேறு மலைகளின் தொகுப்பே இம்மலைத் தொடர்ச்சி.

இம்மலைத் தொடரை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒரிசாவில் (ஒடிசா) தொடங்கி ஆந்திரத்தின் குண்டூர் வரையிலான மலைகளை வடக்குப் பகுதியாகவும், குண்டூரில் இருந்து தமிழக எல்லை வரையிலானவற்றை நடுப்பகுதியாகவும், தமிழகத்தின் பிற பகுதிகளில் அமைந்துள்ளவற்றை நிறைவுப்பகுதியாகவும் வரையறுத்துள்ளனர்.நிறைவுப் பகுதியானது தென் மேற்காகச் சென்று நீலகிரி மலையைச் சந்திக்கிறது.

கொல்லிமலை, பச்சைமலை, ஜவ்வாதுமலை, கல்வராயன் மலை, சேர்வராயன்மலை, அழகர்மலை மற்றும் கரூர், திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் அமைந்துள்ள சிறுமலை என்று வழங்கப்படும் மலைத்தொகுதி வரை உள்ள அனைத்து உயரங்குறைவான மலைக்குன்றுகளும் கிழக்குத் தொடர்ச்சி மலை என்றே அழைக்கப்படுகின்றன. சுமார் 400 மீட்டர் முதல் 1,650 மீட்டர்கள் வரை உயரமுள்ள குன்றுகளால் ஆனது இம்மலைக்குடும்பம்.

பூமத்திய ரேகை மழை மண்டலத்தில் அமையப்பெற்றுள்ள இம்மலைப் பகுதிகள் வடகிழக்குப் பருவ மழையாலும், தென்மேற்குப் பருவ மழையாலும் மழை பெறுகிறது. இம்மலைத்தொடரின் வடக்குப்பகுதி (ஒடிசா, ஆந்திரம்) ஆண்டொன்றுக்கு 1,200 மில்லி மீட்டர் முதல் 1,600 மில்லி மீட்டர் வரை மழைப் பொழிவைப் பெறுகிறது. ஆந்திரம் 600 மில்லி மீட்டரும், தெற்குப் பகுதியாக உள்ள தமிழ்நாடு 1,000 மில்லி மீட்டரும் மழையைப் பெறுகின்றன. இதனால் மலை உச்சிகளைத் தவிர, பிற பகுதிகளில் அரை வறட்சி தட்ப வெப்பநிலையே நிலவுகிறது.

வெப்பநிலையும் வெவ்வேறு பகுதிகளில் மாறுபடுகிறது. ஜனவரியில் 20 டிகிரி செல்சியஸ் முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உள்ளது. வடக்கிலிருந்து மேற்காகச் செல்லச்செல்ல வெப்பநிலை அதிகரித்து 41 டிகிரி செல்சியஸ் வரை உயர்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையைப்போல ஆண்டு முழுவதுமான தட்பவெப்பநிலையை இம்மலை கொண்டிருக்கவில்லை.

தமிழகத்தின் கிழக்குத் தொடர்ச்சி மலையின் மொத்த பரப்பளவு 98,000 சதுர கிலோ மீட்டர்களாகும். சேர்வராயன் மலை தமிழகத்தின் இதயம் போன்று அமைந்துள்ளது. திசைகள்தோறும் சமவெளியில் சூழப்பட்ட இம்மலை 900 மீட்டர் முதல் 1,624 மீட்டர் வரையுள்ள முகடுகளைக் கொண்டது. தகுதியான மழை வளத்தின் மூலம் ஆரணியாறு, பாலாறு, பெண்ணையாறு, காவிரியாறு போன்றவை நீர்வரத்துப்பெற வேண்டும். ஆனால், நடப்பதில்லை.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மேற்கண்ட கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் மீது அதிகமான கவனம் செலுத்தப்படவில்லை. காரணம் இங்கு பழங்குடி மக்களாக வாழ்ந்து வந்தவர்களுக்கு மலேரியா இருப்பதாக அறிந்து இம்மலைகள் மீது ஆதிக்கம் செலுத்த அவர்கள் பயந்தனர்.

இருப்பினும் 1800-களில் இம்மலைத் தொடரை அளக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவையும் மலேரியா பயத்தால் தோல்வி அடைந்தன. 1820-1829களில் பல்வேறு வழிமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர் சேர்வராயன் மலைப்பகுதிகளில் நில அளவை செய்யப்பட்டது. தொடர்ந்து 1840-ம் ஆண்டுகளில் ரயில் பாதைகள் அமைப்பதற்கான (ஸ்லீப்பர் கட்டைகள்) மரங்கள் இம் மலையிலிருந்து பெருமளவு வெட்டப்பட்டன.

முன்னதாக, அதாவது 1820-1829-ம் ஆண்டுகளில் சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த எம்.டி.காக்பெர்ன், கிரேன்ஞ் எஸ்டேட் என்ற இடத்தில் தங்கினார். அவர்தான் காபிப் பயிரை இங்கு அறிமுகம் செய்து வைத்தார். அவரே ஆப்பிரிக்காவில் இருந்து ஆப்பிள் பியர் உள்ளிட்ட பழங்களையும் பயிர் செய்தார். இதன் காரணமாகவே இங்கிருந்து காபி நீலகிரிக்கு அறிமுகமானது. மலையின் பூர்வீகக் குடிகள் கேழ்வரகு, சாமை போன்றவற்றையே பாரம்பரியமாக பயிர் செய்துவந்த நிலை காபியால் முற்றிலும் காலியானது. மலைவாழ் மக்கள் உழைப்பின் நிமித்தம் பிழியப்பட்டனர். 

1841 மற்றும் 1866-ம் ஆண்டுகளில் மீண்டும் சர்வே செய்யப்பட்டது. 1900-ம் ஆண்டு ஏற்காடு-சேலம் சாலைத்திட்டம் தொடங்கி 1903-ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. 1929-ல் மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட பின்னர் 1930-ம் ஆண்டில் இம்மலைக்கு மின்சாரம் வந்தது. பின்னடைவும் வந்தது.
மெல்ல மெல்ல உலகத்தின் கண்களுக்கு தூரத்தில் இருந்து தென்பட்ட கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் முக்கியப் பகுதிகள் மனிதரின் கரங்களுக்குள் சிக்கின. மலைகளின் உயிர் நாடியாக இருந்த மரங்கள் நாளொன்றுக்கு பலநூறு டன் வெட்டப்பட்டு கீழிறக்கப்படுகின்றன. இதனால் குறிப்பாக, சேர்வராயனின் சரபங்கா மற்றும் திருமணிமுத்தாறு ஆகிய இரு நதிகள் காய்ந்து வறண்டுவிட்டன. இதே நிலைதான் கிழக்குத் தொடர்ச்சி மலை முழுதும்.

கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் முக்கியப் பகுதிகளில் சுற்றுச்சூழல் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வெளியிலிருந்து கொண்டு வரப்பட்ட 204-க்கும் மேற்பட்ட களைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. பாரம்பரியமான பூவினங்கள் சுமார் 62 வகை முற்றிலுமாக அழிந்துவிட்டன.
மேலும் 20 வகை பூவினங்கள் அரிய வகைகளாகிவிட்டன. 3 இனங்கள் உச்சபட்ச அழிவு நிலையில் உள்ளன என தமிழகத்தின் "சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை - 2005' வேதனையுடன் தெரிவிக்கிறது. அதே ஆய்வறிக்கை கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் பல்வேறு இடங்களில் அன்னியத் தாவர இனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளூர் இனங்களை ஆதிக்கம்செய்து அழித்து வருகின்றன என்று தெரிவிக்கிறது.

லேன்டானா, காமரா என்ற வகையினம் வனங்களின் உட்பகுதியையும், குளங்களை ஐகோர்னியா கிராஸ்பைஸ் என்ற தாவர வகையினமும், நீர்வளத்தைப் பாதித்து வருகின்றன. சமவெளிகளில் பரவிவரும் பார்த்தீனியம், வனங்களை ஆக்கிரமித்து கடும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது என்கிறது அறிக்கை.

மலைகளில் உள்ள இடங்களில் மேக்னசைட் கல்லும், பாக்சைட் கனிமமும், டன் கணக்கில் வெட்டியெடுக்கப்படுகின்றன. இந்த நிலை மலையின் உறுதித்தன்மையை நாளும் பாதித்து வருகிறது. காடுகள் விரிவாக்கம் எனும் பெயரில் தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். லட்சக்கணக்கான ஹெக்டேர்கள் அளவிலான அரசின் காட்டு நிலங்கள் ஜட்ரோபா எனும் காட்டு ஆமணக்கு போன்ற எரிபொருள் தாவரங்கள் பயிரிட அழிக்கப்படுகின்றது.

1864-ம் ஆண்டு வனத்துறையை ஆங்கில அரசு நிறுவியது. "அறிவியல் பூர்வமான காடு மேலாண்மை' எனும் பெயரில் நமது மண்ணுக்கும் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்புடையதல்லாத செயல்களைச் செய்து கோடிக்கணக்கில் லாபமீட்டி மலைவளம், காடுவளம் ஆகியவற்றை அழித்தொழித்தது. இப்போது இதே பணியைத்தான் நம்மவர்கள் செய்துகொண்டிருக்கின்றனர் என்பது பெருந்துயரமாகும்.
""காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம், நோக்க நோக்க களியாட்டம் நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை'' என்றார் பாரதி. 

வனங்களும், மலைகளும் மனித குலத்தின் வளத்திற்கான ஆதாரங்கள் என்கிற மனோபாவத்திற்கு நாம் உடனே மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மலைகள் இயற்கை வளங்களோடு மதிக்கப்பட வேண்டும். இல்லையேல் அவை நமக்குத் தகுந்த உதவிகள் செய்வது சீராக இருக்காது. அதற்கான வாய்ப்புகளைத் தொடர்ந்து நாம் உருவாக்கிக் கொண்டுதான் இருக்கப் போகின்றோமா என்பதுதான் இப்போது நம்முன் உள்ள கேள்வி.

நன்றி, தினமணி,  15 Sep 2012 12:00:00 AM IST

மறக்கப்படும் கிழக்கு மலைத்தொடர் -ம.தென்னரசு

2003-ல் இவரது தாஜ் குடியிருப்பு ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானது. 2007-ல் இவரது கவர்னராக இருந்தவர், போதிய ஆதாரங்கள் இல்லை என்று வழக்கிட அனுமதி மறுத்தார். சி.பி.ஐ. உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது..

 பல்வேறு அரசியல் கட்சிகளுடன் கூட்டணிகள் வைத்து பதவி நாற்காலியில் தொடர்ந்து அமர்ந்தௌ வந்த இவர், நான்காவது முறையாகத் தனது சொந்தத் தொகுதியில் 13-05-2007 -ல் வேறூ எவருடைய ஆதரவுமின்றி வெற்றி பெற்றார். “மக்கள் நல நாள் “ என்று, JAN KAZYAN KAN DIWAS " என்று ஒரு நாளைக் கொண்டாடி சாதாரண மக்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.

 1995-ல் குறுகிய கால முதல்வராக இருந்தார். 1997=ல் மீண்டும் முதல்வரானார். 2002 மற்றும் 2003-ல்  பாரதீய ஜனதாக் கட்சியின் உதவியால் முதல்வராக இருந்தார்.

முதல் வரிகளைப் படிக்கும்பொழுது தமிழக முதல்வர் ஜெயலலிதாவாக இருக்கக்கூடுமோ என்ற ஐய்யம் சிலருக்கு எழுந்திருக்கக்கூடு.ம். பின்னர் ஐயம் தெளிந்து மாயாவதி நினைவு வந்திருக்கக்கூடும்.

ஆம், ஐயமே வேண்டாம். உத்தரப்பிரதேச மாயாவதியைப் பற்றிய சிறு வரலாறுதான் இது.இவர் உ.பி. முதவராவதற்குரிய வித்து 1984-லிலேயே விதைக்கப்பட்டு விட்டது. 1984-ஆம் ஆண்டு பிற்பகுதியில் KANSHIRAM  மூலம் தொடங்கப்பட்டது. துவக்கத்திக்லிருந்தே பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்து வருகின்றார். KAIRANa, BIJNOR, HARIDWAR என்று முயற்சிகள் தொடர்ந்தன. இறுதியில் எண்ணமும் கைகூடியது.

பி.ஏ.,, எல்.எல்.பி., பி/எட். ஆகியன கற்றவர். ஆசிரியராகவும் பணியாற்றியவர் KANSHIRAM  சந்திப்பு இவரை அரசியல்வாதியாக்கியது.

 புது தில்லி, SRIMATHI SUCHETA KIRPLANI மருத்துமனையில் 15-01-1956-ல். பிறந்தார். தந்தையின் பெயர், பிரபுதாஸ். பதல்பூர், கெளதமபுத்தர் நகர் அஞ்சல் துறையில் பணியாற்றி வந்தார். குறைந்த வருவாய்தான். பெண் குழந்தைகள் அரசினர் பள்ளிகளுக்கே அனுப்பப் பட்டனர் ஆண்கள் உயர்ந்த தனியார் பள்ளிகளுக்கு அனுப்புவித்தனர்..

ஆனால், மாயாவதிக்கு கற்பூரப் புத்தி. நன்கு கற்றார். காலத்தையும் நேரத்தையும் நன்கு பயன்படுத்திக் கொண்டார்.

இந்திய அரசியலில் ஒதுக்கிவைத்துவிடமுடியாத இடத்தில் இருக்கின்றார்.
தமிழக முதல்வரும், மாயாவதியும் கைகோர்த்தால் இந்திய அரசியல் தலைமை புதிய தடத்தில் பயணிக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது.

ஜெயலலிதாவும்-மாயாவதியும் கரங்கோர்த்தால், இந்திய அரசியல் மாற்றுத் தடத்தில் பயணிக்கும் !

நல்லதொரு குடும்பத்துக்கு 4 வழிகள்

உலகமயமாக்கல் சூழ்நிலையில் சமுதாய மறுமலர்ச்சிக்கு, வளர்ச்சிக்கு 
மகிழ்ச்சியான நல்ல குடும்பம் மிகவும் முக்கியம். அதற்கு ஒரு சமன்பாட்டை 
உருவாக்கியிருக்கிறேன். இப்படிப்பட்ட மகிழ்ச்சியான நல்லதொரு குடும்பம்தான் தமிழ்ச் சமுதாய  மேம்பாட்டிற்கு அடிப்படையாகும்.

மகிழ்ச்சியான நல்ல குடும்பம் என்பது ஆன்மிகக் குடும்பம், சந்தோஷம் மிக்க தாய், வாய்மையான தந்தை, தூய்மையான பசுமை வீடு ஆகியவை சேர்ந்தது ஆகும்.

நாம் ஒரு சின்ன குடும்பத்தை எடுத்துக்கொள்வோம்.

ஒரு குடும்பத்தில் தாய், தந்தை, இரண்டு மகன்கள், ஒரு மகள் அல்லது இரண்டு மகள்கள், ஒரு மகன் என்று எடுத்துக்கொண்டால், இன்றைய சூழ்நிலையில், வாழ்க்கையை நல்ல மேம்பாட்டுடன் நடத்துவதற்கு கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
இன்றைக்கு பல குடும்பத்தில் குழந்தைகளோடு பேசி மகிழ்வதற்கு நேரமில்லை

வேலைப் பளு மற்றும் தொலைக்காட்சி நமது பொன்னான நேரத்தை ஆக்கிரமிக்கிறது. எனவே பெற்றோர்கள், குழந்தைகளுக்கு உதாரணமாக தங்களது வாழ்க்கையை முதலில் அமைத்துக் கொள்ள வேண்டும்.

அந்தக் குடும்பத்தில் ஒரு சிறிய பிராத்தனை அறை இருக்க வேண்டும்,
குறைந்தது 10 புத்தகங்கள் கொண்ட ஒரு சிறிய நூலகம் இருக்கவேண்டும்.
ஒரு வேளையாவது, குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து உணவருந்த வேண்டும்.

அந்த நேரத்தில் படித்த, பார்த்த நல்ல சம்பவங்களை, குழந்தைகளுக்கு கதை போல சொல்லிக்கொடுக்க வேண்டும்.இப்படிப்  பல வகைகளில் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டால், நல்ல கருத்து பரிமாற்றம் நிகழும். அன்பு பிறக்கும். பாசம் வளரும். அறிவுப் பரிமாற்றம் நிகழும். குடும்பத்தில் தெய்வீகம் பிறக்கும். அமைதி பிறக்கும்.

 அப்படிப்பட்ட சூழலில் வளரும் குழந்தைகள், நம்பிக்கையுடன் உருவாகும், சுயமரியாதையுடன் வாழப் பழகும். தான் செய்யும் அனைத்து செயல்களையும் ஒரு தனித்தன்மையுடன் செய்யவேண்டும் என்ற உணர்வுடன் வளரும். அதைச் செயல்படுத்தும். எனவே இப்படிப்பட்ட ஆன்மிகக் குடும்பம் முதலில் உருவாக வேண்டும்.

இரண்டாவது சந்தோஷம் மிக்க தாய். இது நான் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் சொல்லும் விஷயம்.(இவ்வாறு கூறிவிட்டு, சில வாசகங்களைக் கூறி அதை இளைஞர்கள் திரும்பக் கூறும்படி செய்தார் கலாம்)

இன்று முதல், நான் தாயின் முகத்திலும், அகத்திலும் மகிழ்ச்சியை 

உருவாக்குவேன்.

என் தாய் மகிழ்ச்சியாக இருந்தால், என் வீடு மகிழ்ச்சியாக இருக்கும்.

என் வீடு மகிழ்ச்சியாக இருந்தால், இந்த சமுதாயம் மகிழ்ச்சியாக 

இருக்கும்.

இந்த சமுதாயம் மகிழ்ச்சியாக இருந்தால், தமிழ்நாடு மகிழ்ச்சியாக 

இருக்கும்.

தமிழ்நாடு மகிழ்ச்சியாக இருந்தால், இந்தியா சந்தோஷமடையும்.

அடுத்தது வாய்மையான தந்தை. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று சொல்வதுண்டு. தந்தைதான் அறிவையும், ஆற்றலையும், தைரியத்தையும் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்க வேண்டும். தந்தைதான் குழந்தைகளுக்கு முதல் ஹீரோ. குழந்தை வளரும் போது தந்தையைப் பார்த்துத்தான் வளர்கிறது. தந்தைதான் வாய்மையாக நடந்து காட்டவேண்டும். நேர்மையாக வாழ்ந்து காட்டவேண்டும். விவேகத்தை ஊட்டி வளர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு ஒர் எடுத்துக்காட்டாக வாழவேண்டும்.

அப்படிப்பட்ட வாய்மையான தந்தைதான் இன்றைய சூழ்நிலையில், இளைய சமுதாயத்தைப் பண்படுத்த முடியும். வாய்மையான தந்தைதான் மகிழ்ச்சியான நல்லதொரு குடும்பத்தை உருவாக்குவதில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறார்.

இறுதியாக தூய்மையான பசுமை வீடு. பூமியின் தட்பவெப்பநிலை மாறி வருகிறது. மரங்களை வெட்டுவதும், தொழிற்சாலைகள், போக்குவரத்து வாகனங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்ûஸடு காரணமாக ஒசோன் படலத்தில் ஒட்டை விழுந்து பூமியின் தட்பவெப்ப நிலை அதிகரிப்பதால், இன்றைக்கு மழை பொய்த்து வறட்சி, வெள்ளம் போன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன. இளைஞர்கள் நினைத்தால் இந்த சூழ்நிலையை மாற்ற முடியும். ஒவ்வொருவரும் ஒரு மரம் நட வேண்டும்.

ஒரு மரம் 20 கிலோ கிராம் கார்பன் டை ஆக்ûஸடை ஓரு வருடத்திற்கு உள் வாங்கி அழிக்கிறது. 14 கிலோ கிராம் எடையுள்ள ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்நாளில் 10 மரங்கள் நட்டு அதைப் பாதுகாத்தால், ஆயிரம் கோடி மரங்களை நாம் நடுவோம்.

அப்படி மரங்களை நாம் நட்டால் இந்தியாவில் மாறிவரும் தட்ப வெட்ப சூழலை சமாளித்து, நமது எதிர்கால வாழ்க்கையை வளப்படுத்த இயலும். மரம் வளர்ப்பது மட்டும் அல்ல, வீட்டை மட்டுமல்ல, தெருவையும் சுத்தமாக வைத்துக்கொள்வோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார் அப்துல் கலாம்.   

அனைத்திந்திய அளவில் இயங்கிவரும் தமிழ்ச் சங்கங்களை ஐக்கியப்படுத்தும் முயற்சியில், புது தில்லித் தமிழ்ச் சஙகம் முதலடி எடுத்து வைத்துள்ளது.. முதல் முயற்சியிலேயே பெரும் வெற்றியும் கண்டுள்ளது. அடுத்த ஆண்டு புதுதில்லியில் அனைத்துலகத் தமிழ்ச்சங்க மாநாட்டை நடத்திடவும் உறுதி பூண்டுள்ளனர் பலருக்கும் நம்பிக்கையும் உள்ளது.

புதுதில்லியை நோக்கிப் படையெடுத்த இந்தியத் தமிழ்ச் சங்கங்களின் அன்பர்களை ரெயில் நிலையங்களிலேயே வரவேற்று, தங்குமிடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

இராமகிருஷ்ணாபுரம், ஐந்தாவது செக்டாரில் அமைந்துள்ள தில்லித் தமிழ்ச் சங்கத்தில். காலைச் சிற்றுண்டி, நண்பகல் உணவு, இரவு உணவு- பஃபே முறை -யில் வயிற்றுக்கும் உணவீந்து, செவிக்கும் சுவைமிகு கலை இலக்கிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்து மகிச்சியூட்டிய, தில்லித் தமிழ்ச் சங்கத்தினரை
எவ்வளவு பாராட்டினாலும் தகும்..

நிகழ்வில் கலந்து கொண்ட ஒரே ஒரு தமிழ் வலைப் பதிவர்.

நல்லதொரு குடும்பத்துக்கு நாலு வழிகள் - தில்லித் தமிழ்ச் சங்கத்தில் அப்துல் கலாம் அறிவுரை !