Saturday, September 22, 2012

இந்தியாவின் முதல் பெண் புகைப்படப் பத்திரிக்கைக் கலைஞர் !

HOMAI VYARAWALA  இந்தியாவில் முதல் பெண் புகைப்படப் பத்திரிக்கையாளர்.. குஜராத் தெற்குப் பகுதியில் உள்ள நவ்சாரி நகரில் பார்சி குடும்பத்தில் 09-12-1913-ல் பிறந்தார்.  மும்பையில் வளர்ந்தார். தனது 13 வது வயதில் MANECKSHAL WARWALA -வை மணந்தார்.

மற்றும் கலை கே.கே.பள்லியில் படித்தார். 1930-ல் தனது புகைப்படத் தொழிலைத் துவக்கினார். 1938-ல் பெண்கள் சுற்றுலாப் படங்களை பம்பாய் கிரானிக்கலுக்காக எடுக்கத் துவங்கினார். அப்போது ஒரு படத்திற்கு ஒரு ரூபாய் சம்பளம்.

இந்தியா சுதந்திரத்தை நோக்கி அடியெடுத்து வைக்க ஆரம்பித்தபோது, இவரால் எடுக்கப்பட்ட படங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. மெள்ண்ட் பேட்டன் வழியனுப்புவிழா, மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, லால்பஹதூர் சாஸ்திரி, 1950 களில், மாசேதுங்க் காலத்தில் சீனப்பிரதமராக இருந்த சூ என் லாய், வட வியட்நாம் தலைவர் ஹோஸிமின், திபெத்திலிலிருந்து தப்பித்துவந்த நிலையில் தலாய் லாமா, எலிசபெத் அரசி II இவர்களது இந்திய வருகைகளைப் பதிவு செய்தார். President Dwighto Eisewhower and John F Kennedy and First lady Mamie Eisenhewer & Jacuuelint Kennedy ஆகியோரையும் படம் எடுத்துள்ளார்.

இவருக்கு புகைப்ப்ட அனுமதிக்கு வழஙப்பட்ட உரிமை எண் DALDA 13, இவருக்குத் திருமணம் நடந்த வயது 13, இவரது முதல் காரின் பிளேட் எண் DLA 13, எனவே, இவர் பெயரைவிட DALDA!3 பெயரைவிட இதுவே இவரது அடையாளமாக அமைந்தது.

 30 ஆண்டுகள் இவரால் எடுக்கப்பட்ட புகைப் படங்கள் அனைத்துமே வரலாற்ரு முக்கியத்துவம் வாய்ந்தவை. 1990-ல் ஓய்வு எடுக்கத் துவங்கினார். சென்ற ஆண்டு மன்மோகன் சிங்க் இவரது பிறந்த நாளின்போது வாழ்த்த் அட்டை அனுப்பிக் கெள்ரவித்தார். 4 தலைமுறை புகைப்படத்துறையில் இருந்த இவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கிக் கவுரவித்தது, மத்திய அரசு. 20 ஆம் நூற்ராண்டின் மத்தியில், ஜனவரி 15-ல் 98 ஆம் வயதில் காலமானார்.


0 comments:

Post a Comment

Kindly post a comment.