2003-ல் இவரது தாஜ் குடியிருப்பு ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானது. 2007-ல் இவரது கவர்னராக இருந்தவர், போதிய ஆதாரங்கள் இல்லை என்று வழக்கிட அனுமதி மறுத்தார். சி.பி.ஐ. உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது..
பல்வேறு அரசியல் கட்சிகளுடன் கூட்டணிகள் வைத்து பதவி நாற்காலியில் தொடர்ந்து அமர்ந்தௌ வந்த இவர், நான்காவது முறையாகத் தனது சொந்தத் தொகுதியில் 13-05-2007 -ல் வேறூ எவருடைய ஆதரவுமின்றி வெற்றி பெற்றார். “மக்கள் நல நாள் “ என்று, JAN KAZYAN KAN DIWAS " என்று ஒரு நாளைக் கொண்டாடி சாதாரண மக்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.
1995-ல் குறுகிய கால முதல்வராக இருந்தார். 1997=ல் மீண்டும் முதல்வரானார். 2002 மற்றும் 2003-ல் பாரதீய ஜனதாக் கட்சியின் உதவியால் முதல்வராக இருந்தார்.
முதல் வரிகளைப் படிக்கும்பொழுது தமிழக முதல்வர் ஜெயலலிதாவாக இருக்கக்கூடுமோ என்ற ஐய்யம் சிலருக்கு எழுந்திருக்கக்கூடு.ம். பின்னர் ஐயம் தெளிந்து மாயாவதி நினைவு வந்திருக்கக்கூடும்.
ஆம், ஐயமே வேண்டாம். உத்தரப்பிரதேச மாயாவதியைப் பற்றிய சிறு வரலாறுதான் இது.இவர் உ.பி. முதவராவதற்குரிய வித்து 1984-லிலேயே விதைக்கப்பட்டு விட்டது. 1984-ஆம் ஆண்டு பிற்பகுதியில் KANSHIRAM மூலம் தொடங்கப்பட்டது. துவக்கத்திக்லிருந்தே பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்து வருகின்றார். KAIRANa, BIJNOR, HARIDWAR என்று முயற்சிகள் தொடர்ந்தன. இறுதியில் எண்ணமும் கைகூடியது.
பி.ஏ.,, எல்.எல்.பி., பி/எட். ஆகியன கற்றவர். ஆசிரியராகவும் பணியாற்றியவர் KANSHIRAM சந்திப்பு இவரை அரசியல்வாதியாக்கியது.
புது தில்லி, SRIMATHI SUCHETA KIRPLANI மருத்துமனையில் 15-01-1956-ல். பிறந்தார். தந்தையின் பெயர், பிரபுதாஸ். பதல்பூர், கெளதமபுத்தர் நகர் அஞ்சல் துறையில் பணியாற்றி வந்தார். குறைந்த வருவாய்தான். பெண் குழந்தைகள் அரசினர் பள்ளிகளுக்கே அனுப்பப் பட்டனர் ஆண்கள் உயர்ந்த தனியார் பள்ளிகளுக்கு அனுப்புவித்தனர்..
ஆனால், மாயாவதிக்கு கற்பூரப் புத்தி. நன்கு கற்றார். காலத்தையும் நேரத்தையும் நன்கு பயன்படுத்திக் கொண்டார்.
இந்திய அரசியலில் ஒதுக்கிவைத்துவிடமுடியாத இடத்தில் இருக்கின்றார்.
தமிழக முதல்வரும், மாயாவதியும் கைகோர்த்தால் இந்திய அரசியல் தலைமை புதிய தடத்தில் பயணிக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது.
0 comments:
Post a Comment
Kindly post a comment.