Showing posts with label . . வரலாறு. Show all posts

Wednesday, August 31, 2016

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகேயுள்ள வாழமங்கலம் கிராமத்தில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த காணிக்காவல் ஆசிரியம் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள வயல்வெளியில் கிடந்த துண்டு கல்வெட்டு குறித்து அதே ஊரைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர் பாண்டியன் அளித்த தகவலின் பேரில், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனரும், கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியருமான மங்கனூர் ஆ. மணிகண்டன் இதுகுறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து அவர் தெரிவித்தது: புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சோழர்களும், இறுதிப் பகுதியில் பாண்டியர்களும் ஆட்சி செய்தனர். அதன் தொடர்ச்சியாக நிலையான ஒருங்கிணைந்த ஆட்சிமுறை மறையத்தொடங்கியதோடு, 14-ம் நூற்றாண்டின் தொடக்கம் முதலாக அதிக நிலம் படைத்தவர்கள் அவ்வூரின் குறுநில மன்னர்களாக செயல்பட்டு வந்துள்ளனர்.

இவர்களுக்கான பாதுகாப்பை அவர்களே முறைப்படுத்திக்கொள்ளும் வகையில், வரி செலுத்தி பாடிகாவலை நியமித்துக்கொள்வது மரபாக இருந்து வந்துள்ளதை புதுக்கோட்டை சமஸ்தான கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. பாடி காவலுக்கென  தனியான வரிவிதிப்பு முறையும் இருந்துள்ளது.

மேலும், பிற்பகுதியில் கிராம பாடிகாவல் புரிவோர் குளம் வெட்டுதல், பாசனத்தை முறைப்படுத்தி வழங்குதல், கோயில் நிர்வாகம் உள்ளிட்ட பொது நிகழ்வுகளை முன்னெடுக்கும் உரிமையைப் பெற்றனர்.

புதுக்கோட்டை சமஸ்தான கல்வெட்டுகள் கீழைக்குறிச்சியை சேர்ந்தவர்கள் பாடிக்காவல் புரிந்தததையும், கள்வர்களால் கவர்ந்து செல்லப்பட்ட பசுவை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்ததையும், இச்செயலுக்காக பயனடைந்த கிராமத்தவரால் பாடிகாவல் குழுவுக்கு விருந்து வழங்கப்பட்டதையும் கூறுகிறது.

தம்மால் பாதுகாக்கப்படும் கிராமத்தை ஒரு குறிப்பிட்ட குழுவினர் காவல்காத்து வருவதை தெரியப்படுத்தும் வகையில், கல்வெட்டை ஊரின் எல்லையிலோ அல்லது வயல்களிலோ, அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் ஊரின் மத்தியிலோ அல்லது கோயிலுக்கு அருகிலோ அல்லது பாடிகாவல் புரியும் நிலப்பகுதியிலோ நட்டு வைத்திருப்பதை அறியமுடிகிறது.

இவ்வாறு ஒரு குறிப்பிட்ட ஊரின் வரிவசூல் உள்ளிட்ட உரிமைகளை வெளிப்படுத்தும் கல்வெட்டே ஆசிரியம் கல்வெட்டாக நடப்பட்டுள்ளது.

தற்போது கிடைத்த கல்வெட்டில், ஸவஸ்தி ஸ்ரீ வட சிறுவாயி நாட்டு வாளுவமங்கலம் பகைத்தலைப்பாடியான கீழைக்குறிச்சியார் ஆசிரியம் விசையஞ்சாநல்லூர் என்று கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

அதாவது, தற்போது வாழமங்கலம் என்று அழைக்கப்படும் இவ்வூர், வடசிறுவாயி நாடு என்ற சோழ மன்னர்களால் பெயரிடப்பட்ட குறுநில நாட்டின் ஒருபகுதியாக இருந்துள்ளதோடு, வாளுவமங்கலம் என்ற பெயரோடு வழங்கப்பட்டுள்ளதை இக்கல்வெட்டின் மூலம் அறிகிறோம். மேலும், கீழைக்குறிச்சியார் என்ற ஊர்ப்பெயரோடு அழைக்கப்பட்ட பாடிக்காவல் தலைவனின் கட்டுபாட்டில் இவ்வூர் வந்ததையும், இவ்வூரின் பெயரை விசையஞ்சான் அல்லது விசையன் அஞ்சாதவன் என்ற பொருள்படும்படி தனது பெயரின் முன்னொற்றோடு விசையஞ்சாநல்லூர் என்று கல்வெட்டி நாட்டியிருப்பதையும் அறிகிறோம்.

அத்துடன் தற்போது வரை வாழமங்கலத்தில் வசிக்கும் குறிப்பிட்ட இனத்தவரின் உறவினர்கள் கீழைக்குறிச்சி கிராமத்தினரோடு உறவு பேணி வருவதை இவ்வூரில் வசிக்கும் சங்கர் மற்றும் சோமசுந்தரம் ஆகியோர் அளித்த தகவல்களின் மூலம் உறுதி செய்துகொள்ள முடிகிறது என்றார்.

நன்றி :- தினமணி

புதுக்கோட்டை வாழமங்கலம் கிராமத்தில்14-ம் நூற்றாண்டு காணிக்காவல் ஆசிரியம் கல்வெட்டு!

Tuesday, August 30, 2016

சமுதாய அக்கறை மிக்க பாடல்களுக்குத் தனது குரல் மூலம் தனி வடிவம் தந்தவர்

சமூகத்தின் மீதான அக்கறை, தமிழ் மீதான காதல், ஒடுக்கப்பட்டோருக்காக எழுந்த கலகக் குரல் என்று பல்வேறு தளங்களில் தொடர்ந்து இயங்கிவந்த பாடகர் திருவுடையான், சாலை விபத்தில் மறைந்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நெல்லை மாவட்டச் செயலாளராகச் செயல்பட்டுவந்த திருவுடையான், கலை இரவு மேடைகளில் தனது அற்புதமான பாடல்களால் பலரது மனங்களை நனைத்தவர். தபேலாவை வாசித்துக்கொண்டே கணீர்க் குரலில் அவர் பாடுவதைக் கேட்டவர்களால் அந்தக் குரலை ஒரு நாளும் மறக்க முடியாது. எளிய பின்னணியிலிருந்து வந்த திருவுடையான், திரையுலகத் தொடர்பு, அரசியல் செயல்பாடுகள் என்று வெவ்வேறு திசைகளில் பயணம் செய்திருந்தாலும் அந்த எளிமையை இறுதிவரை கடைப்பிடித்தவர்.

இசையை நெய்தவர்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் நெசவுத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவர் திருவுடையான். இளம் வயதிலிருந்தே இசை மீது ஆர்வம். கைத்தறி சேலைக்கு பார்டர் போடும் பேட் மேஸ்திரியாக இருந்த அவரது தந்தை பழனிச்சாமி, தனது மகனின் இசையார்வத்தை ஊக்குவித்தார். உள்ளூர் கோயில்களில் அந்தச் சிறுவனின் குரல் ஒலிக்கத் தொடங்கியது. எல்லாமே பக்திப் பாடல்கள்தான். ஓவியத்திலும் நல்ல ஆர்வம் இருந்தது. வறுமை காரணமாக எட்டாம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்திவிட்டு, அப்பாவுடன் நெசவுத் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார். சமயம் கிடைக்கும்போதெல்லாம் கோயிலில் பாடிக்கொண்டிருந்த அவருக்குப் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களைக் கொடுத்துப் பாட வைத்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் சங்கத்திடம் அழைத்து வந்தவர்கள் நாடகக் கலைஞர் மு.சு.மதியழகன், தாய்த் தமிழ்ப் பள்ளி நடத்திவரும் ஆசிரியர் சங்கர்ராம் ஆகியோர்.

திருநெல்வேலி ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 1993-ல் முதன்முதலாக, கலை இரவு மேடையில் பாடத் தொடங்கினார். விரைவில் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் அவரது குரல் ஒலிக்கத் தொடங்கியது. காசி ஆனந்தன், ஏகாதசி, நவகவி, ரமணன் போன்றவர்கள் எழுதிய பாடல்களை முழுமையாக உள்வாங்கி, உணர்வுடன் பாடியவர் அவர். ‘தமிழா… நீ பேசுவது தமிழா?’, ‘பாடல் எடுத்துப் பாடுக மனமே’, ‘அன்பு மணம் கமழும் அறிவு மலர்ச் சோலையிலே’ போன்ற பல பாடல்களுக்குத் தனது குரலால் தனி வடிவம் தந்தார்.

சீர்காழி கோவிந்தராஜனின் குரலை மிகவும் நேசித்த அவர், சங்கரன்கோவிலில் அவருக்காகவே ஒரு தனி இசை நிகழ்ச்சி நடத்தினார். இலங்கை அறிவிப்பாளர் அப்துல் ஹமீது தொகுத்து வழங்கிய பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி அது.

இவரது முதல் இசைத் தகடு, இசையமைப்பாளர் கங்கை அமரனால் வெளியிடப்பட்டது. கங்கை அமரன் இசைக் குழுவில் பலமுறை பாடியிருக்கிறார். டி.ஆர்.மகாலிங்கம், சிதம்பரம் ஜெயராமன் பாடல்களையும் அற்புதமாகப் பாடுவார். பாரதி பாடல்களைப் பாடி ஒலிப்பேழையாக வெளியிட்டிருக்கிறார்.

மதுரையில் நடந்த கலை இரவு நிகழ்ச்சியில் ‘தமிழா... நீ பேசுவது தமிழா?’ பாடலை அவர் பாடியதைக் கேட்டு ரசித்த நடிகர் - இயக்குநர் பார்த்திபன், தனது ‘கிறுக்கல்கள்’ நூல் வெளியீட்டு விழாவுக்குப் பாட அழைத்தார். அத்துடன், இளையராஜாவின் இசையில் ‘இவன்’ திரைப்படத்தில் பாடுவதற்கு ஒரு வாய்ப்பும் கொடுத்தார். கமல்ஹாசன் இயக்கிய ‘விருமாண்டி’ படத்தில் இடம்பெற்ற ‘கருமாத்தூர் காட்டுக்குள்ளே’ என்ற பாடலிலும் இவரது குரல் ஒலித்தது. தங்கர்பச்சான் இயக்கிய ‘களவாடிய பொழுதுகள்’ படத்திலும் பாடியிருக்கிறார்.

“நீங்க சென்னையில் இருங்களேன், ஏன் ஊருக்கு ஊருக்கு ஓடுறீங்க?” என்று இளையராஜாவே அவரிடம் கேட்டிருக்கிறார். “வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பாடுகிறேன். முழு நேரமும் மக்கள் மத்தியில் பாடுவதுதான் எனது விருப்பம்” என்று சிரித்தபடியே வந்துவிடுவார் திருவுடையான்.

கரிசல் குயில்

உழைக்கும் மக்கள் மத்தியில், அவர்களின் பிரச்சினைகளைப் பாடிக்கொண்டிருக்கும் கத்தார், கோவன் போன்ற கலைஞர்களைப் போன்றே திருவுடையானும் மக்கள் மேடைகளில் மட்டுமே பாடிக்கொண்டிருந்தார். ‘கரிசல் குயில்’ என்று எளிய மக்கள் அவரைக் கொண்டாடி மகிழ்ந்தனர். குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார்.

ஓவியரான திருவுடையான், சங்கரன்கோவில் பகுதியில் தட்டி போர்டு எழுதும் பணியில் இருந்தார். ஃபிளெக்ஸ் போர்டுகளின் வரவுக்குப் பிறகு, இசை நிகழ்ச்சிகளில் முழு மூச்சுடன் ஈடுபடத் தொடங்கினார்.

விசைத்தறித் தொழிலாளர்களின் பிரச்சினைகளை அக்குவேறு ஆணிவேறாகத் தெரிந்தவர். தொழிலாளர் களின் போராட்டங்கள், அரசு அதிகாரிகள், முதலாளி களுடன் தொழிலாளர்கள் கலந்துகொள்ளும் பேச்சுவார்த்தைகளில் அவர்கள் சார்பாகப் பேசுவதற்கு முதலில் நிற்பார். இரவு எத்தனை மணி நேரமானாலும் தொழிலாளர்கள் சார்பாகப் பேசிக்கொண்டிருப்பார். “ரெண்டு இட்டிலியாவது சாப்பிட்டுப் போங்க தோழர்” என்று சொன்னால், “கூப்பிடுற நேரத்தில் உடனே போகலேன்னா, இதுதான் சாக்குன்னு எதையாவது பேசி முடிச்சுருவாங்க முதலாளிமாருங்க...” என்று சிரிப்பார்.

திருவுடையானின் பாடல்களுடன் உணர்வு பூர்வமாகக் கலந்துவிட்ட ரசிகர்கள் இவரது இசை நிகழ்ச்சிகளுக்குப் பெரும் ஆதரவு கொடுத்தனர். திருவுடையான் மேடையேறிவிட்டார் என்று தெரிந்தாலே, ஆட்டோ ஓட்டுநர்கள், கடைகளில் வேலை பார்ப்பவர்கள், சிறு வியாபாரிகள் என்று பலரும் திரளாகக் குழுமிவிடுவார்கள். கலை இரவுகளின்போது பந்தோபஸ்துக்கு வந்த காவல் துறையினர் பலரும் இவரது பாடல்களைக் கேட்டு, பரம ரசிகர்களான கதைகள் உண்டு.

மக்கள் பிரச்சினைகளுக்காக வீதியில் இறங்க ஒருபோதும் தயங்காத இந்தப் போராளி, ஒரு முறை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டபோது, சொற்ப ஓட்டுக்கள் பெற்று தோற்றுப்போனார். உங்களுக்கு இதில் எல்லாம் வருத்தம் இல்லையா என்று கேட்டபோது, “மக்கள் அப்படித்தான் இருப்பாங்க தோழர்.. அதுக்காக நாம கோவிச்சுட்டுப் போக முடியுமா?” என்று சிரிப்பார்.

ஒடுக்கப்பட்ட மக்கள், தொழிலாளர்கள், பெண்கள் என்று வாழ்நாள் முழுதும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அனைவருக்கும் தனது தார்மிக ஆதரவை வழங்கியவர் அவர். அவர்களது துயரத்தை, வலியை உள்வாங்கிக்கொண்டு, உணர்வுபூர்வமான தனது குரலின் மூலம் சமூகத்தின் காதுகளுக்குக் கொண்டுசென்றவர். தனது பாடல்களையே பரிசாகத் தந்துவிட்டு, நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டது இந்த கரிசல் குயில்!

 இரா.நாறும்பூநாதன்,
நெல்லை மாவட்டத் தலைவர்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்
கலைஞர்கள் சங்கம்
narumpu@gmail.com

நன்றி :- இந்து

மக்கள் பாடகன்

சென்னை: சென்னை பிரஸ் கிளப்பிற்கு 1998ல் தேர்தல் நடந்தது. தேர்தல் அதிகாரி தேர்தலை ஒத்திவைத்தார். உறுப்பினர் பெயர் பட்டியலில் குறைபாடுகள் இருந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு ஒத்திவைக்கப்பட்ட தேர்தலை பிரஸ்கிளப் தலைவராக இருந்தவரே விதிமுறைகளுக்கு முரணாக நடத்தினார். அதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டது.   இதையடுத்து, நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 2001ல் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். மீண்டும் 2003ல் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேர்தல் நடைபெறவில்லை. இதையடுத்து, 2005ல் தேர்தல் நடத்தப்படும், உறுப்பினர் பட்டியல் சரிபார்க்கப்படுகிறது என பிரஸ்கிளப் அறிவித்தது. அதன் பிறகு பல உறுப்பினர்கள் வலியுறுத்தியும் தேர்தல் நடக்கவில்லை.

இதையடுத்து, தேர்தலை நடத்தக் கோரி 2008ல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிட்டி சிவில் நீதிமன்றம் தேர்தலை நடத்த 2011ல் உத்தரவிட்டது. அப்போது, தங்களை நிர்வாகிகள் எனக் கூறிக்கொண்ட சிலர் இந்த வழக்கிற்கு உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றனர். இந்நிலையில், 3 உறுப்பினர்கள் உயர் நீதிமன்றத்தில் தனி வழக்கு தொடர்ந்தனர்.   இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் பி.வில்சன், சிராஜுதீன் ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: பிரஸ் கிளப்பிற்கு தேர்தலை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு நியமிக்கப்படுகிறார். நியாயமான தேர்தலை நடத்தும் வகையில் அவருக்கு உறுப்பினர்கள் உரிய ஒத்துழைப்பு தரவேண்டும். தேர்தல் அதிகாரி தேர்தலை 3 மாதங்களுக்குள் நடத்த வேண்டும். 

 கடந்த 2011 மார்ச் 7ம் தேதிக்குப் பிறகு உறுப்பினர் படிவம் கொடுத்தவர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து அவற்றை தேர்தல் அதிகாரி ஒப்புதல் அளித்து இறுதிப் பட்டியலை வெளியிட வேண்டும். 2011 மார்ச் 7ம் தேதிக்குப் பிறகு விண்ணப்பம் கொடுக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து தேர்தல் அதிகாரி முடிவு செய்வார்.   தேர்தல் அதிகாரி ஒப்புதல் அளித்த விண்ணப்பங்களுக்கு உரியவர்களே கிளப்பின் உறுப்பினர்களாக முடியும். 2011 மார்ச் 7 முதல் 2016 ஆகஸ்ட் 19 வரை வந்துள்ள விண்ணப்பங்களை சரிபார்த்து தகுதியுள்ளவர்களை மட்டும் சேர்த்து இறுதிப் பட்டியலை தேர்தல் அதிகாரி வெளியிடுவார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

நன்றி :- தினகரன்

சென்னை பிரஸ் கிளப்புக்கு தேர்தல் அதிகாரியாக நீதிபதி சந்துரு நியமனம்!

வரி ஒரு நாட்டின் மிக முக்கிய வருமான ஆதாரம். வரிகள் மூலமே அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு வரிகள் மிக முக்கியமான காரணமாக இருந்து வருகிறது. எகிப்து பேரரசில் முதன் முதலில் வரி விதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. அதன்பிறகு பல்வேறு நாடுகளும் வரி விதிப்பை நடைமுறைப்படுத்தி உள்ளன. இந்தியாவிலும் பண்டைய காலத்திலிருந்து வரி விதிப்பு முறை இருந்துள்ளது. இந்தியாவில் வரிகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டன என்பதை பற்றி சில தகவல்கள்….

வாட் வரி

பண்டைய காலந்தொட்டே இந்தியாவில் வரி முறைகள் பின்பற்றப்பட்டு வந்தன. அர்த்தசாஸ்திரம் மற்றும் மனு ஸ்மிருதி நூல்களில் வரி விதிப்பு முறைகள் பற்றி கூறப்பட்டுள்ளன.

மெளரியர் ஆட்சிக் காலத்தில் வேளாண்மை உற்பத்தியில் குறிப்பிட்ட சதவீதத்தை வரியாக செலுத்துவது, காட்டுப் பொருட்களுக்கு வரி, உலோகங்களுக்கு வரி, உப்பு வரி என பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டன.

அதன் பிறகு சுல்தானியர்கள் ஆட்சிக் காலத்தில் கிராஜ் என்று நில வரி முறை பின்பற்றப்பட்டு வந்தது. அது மட்டுமல்லாமல் முஸ்லிம்கள் அல்லாதோர்கள் மீது ஜெசியா என்ற வரி விதிக்கப்பட்டு வந்தது. 
அக்பர் ஆட்சிக் காலத்தில் நிதியமைச்சராக இருந்த ராஜா தோடர்மால் பல்வேறு வரி முறைகளை கொண்டு வந்தார். தற்போதுள்ள வருமான வரி அமைப்பு போல் ஒவ்வொருவரின் வருமானத்தை பொறுத்து வரியை விதிக்கக்கூடிய முறை கொண்டு வரப்பட்டது.

ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் சுரண்டல் நோக்கில் பல்வேறு வரி முறைகளை கொண்டு வரப்பட்டன. மகல்வாரி முறை, ரயத்துவாரி முறை, ஜமீன்தாரி முறை என பல்வேறு வரி முறைகளைக் கொண்டு வந்தனர்.

1922-ம் ஆண்டு வருமான வரித்துறை சட்டம் முதன் முறையாக கொண்டு வரப்பட்டது. வரி பிரிவை கண்காணிப்பதற்கென வரித்துறை அமைப்பு பிரத்யேகமாக அமைக்கப்பட்டது.

ஜிஎஸ்டி

மறைமுக வரியில் உற்பத்தி வரி, சேவை வரி, உற்பத்தி மற்றும் சுங்கத்துறையில் விதிக்கப்படும் கூடுதல் வரி, சிறப்பு கூடுதல் சுங்க வரி, செஸ், சர்சார்ஜ் உள்ளிட்டவை அடங்கும்.இந்த மறைமுக வரி அனைத்தையும் ஒரே வரியாக மாற்றி நாடு முழுவதும் ஒரே வரி முறையை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கொண்டுவரப்பட்டுள்ளது.

2000-ம் ஆண்டு வாஜ்பாய் அரசாங்கம் முதன்முதலில் நாட்டிலுள்ள மறைமுக வரிகளை ரத்து செய்துவிட்டு நாடு முழுவதும் ஒரு முனை வரியை கொண்டு வர அசிம் தாஸ்குப்தா தலைமையில் குழு ஒன்று அமைத்தது. அதன் பிறகு 2006-ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஜிஎஸ்டி மசோதாவை 2010-ம் ஆண்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் அதிகாரமளிக்கப்பட்ட குழு ஒன்றை அமைத்தார்.

விற்பனை வரிக்கு பதிலாக மதிப்பு கூட்டு வரியை கொண்டு வர 1999-ம் ஆண்டு அசிம்தாஸ் குப்தா தலைமையில் மாநில நிதியமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தியா போன்ற கூட்டாட்சி அமைப்புடைய நாட்டிற்கு வாட் வரியை கொண்டு வருவது மிகக் கடினம் என்ற கருத்து நிலவியது. ஆனால் 2005-ம் ஆண்டில் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் 2005-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்தார்.

2014-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஜிஎஸ்டி வரியால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை மத்திய விற்பனை வரியிலிருந்து வழங்குவோம் என்று அறிவித்தது. அதையொட்டி மாநிலங்கள் ஆதரவு தந்த நிலையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுதந்திரத்துக்கு பிறகு வரி சீர்திருத்தங்கள்

1951-ம் ஆண்டு வர்தாசாரி தலைமையில் வருமான வரி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும் இதே ஆண்டு தானாக முன் வந்து வருமான வரி தாக்கல் செய்யும் முறையும் அமைக்கப்பட்டது.

வரி முறையை எளிதாக்குவதற்காக 1969-ம் ஆண்டு பூதலிங்கம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது

1991-ம் ஆண்டு புதிய பொருளாதார கொள்கைகளை அறிமுகப்படுத்தப் பட்ட பிறகு வரி அமைப்பில் முக்கிய சீர்திருத்தங்கள் செய்யவேண்டி இருந்தது. இதற்காக பொருளாதார அறிஞர் ராஜா செல்லையா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இவர் அளித்த பரிந்துரையில் பேரில்தான் இந்தியாவில் சேவை வரி கொண்டு வரப்பட்டது. ராஜா செல்லையா வரிச் சீர்திருத்தங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

நன்றி :- இந்து

இந்தியாவில் வரி பயணித்து வந்த பாதை !

Monday, August 29, 2016

ஒரு சமூகத்தின், நாட்டின் தலைவன் சிறந்து விளங்கினால் அவனது சமூகமும் நாடும் சிறப்புறும். சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் அமரர் எஸ்.ஆர். நாதன் சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்தவர், இந்திய சமூகத்துக்குச் சிறப்புத் தேடித் தந்தவர், தமிழினத்துக்கு உயர்வு கொண்டு வந்தவர்.

நவீன சிங்கப்பூரின் உருவாக்கத்தில் ஆரம்ப காலம் முதல் பல வழிகளிலும் சேவையாற்றியுள்ள முன்னோடித் தலைவர்களில் ஒருவர் திரு செல்லப்பன் ராமநாதன். மூன்றாம் தலைமுறை சிங்கப்பூரரான திரு நாதன், இந்த நாட்டின் நலனுக்கு எது முக்கியம், எது தேவை, எது சாத்தியம் என்பதை உணர்ந்து அதற்கேற்ப சேவையாற்றி யவர். இதில் நாட்டுக்காக உயிரையும் பணயம் வைக்க அவர்  தயங்கியதில்லை.

திரு கோபிநாத் பிள்ளை குறிப்பிட்டத்தைப் போல “முடிந்தவரையில் சிறப்பாகச் செயல்படுவது போதுமான தல்ல, தேவையானதைச் செய்வதே  மிக முக்கியமானது” எனக் கருதிய திரு நாதன், தொழிற்சங்கத் தோழராக, அரசாங்க ஊழியராக, அதிபராக, சமூக சேவையாளராக மக்களின் நண்பராக, சிங்கப்பூரின் மகனாக நாட்டுக்குத் தேவையான காரியங்களை செய்து முடிப்பதில் வாழ்நாள் முழுவதும் கடுமையாக உழைத்தார். அதேநேரத்தில் ஓர் இந்தியராக  இந்திய சமூகத்தின் முன்னேற்றத்துக்கும் ஒருங்கிணைப்பிற்கும் முக்கிய பங்காற்றியுள்ளவர் திரு நாதன்.

இந்து  அறக்கட்டளை வாரியம், இந்து ஆலோசனை மன்றம் ஆகியவற்றின் தலைவராகச் சேவை புரிந்துள்ள அவர், சிங்கப்பூரில் இந்து சமயம் சார்ந்த, குறிப்பாக கோயில்களின் செயல்பாடுகளையும் சமூகத்தில் இந்து சமயம் குறித்த பார்வையையும் உயர்தரத்துக்கு உயர்த்தியவர்.

வாரியத்தில் நிறுவன நிர்வாக விதிமுறைகளைக் கொண்டுவந்து, கணக்கு வழக்குகளையும் செயல்பாடு களையும் முறைப்படுத்தியது போன்ற பல பணிகளை அவர் செய்துள்ளார். சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தை (சிண்டா) நிறுவியவர்களில் ஒருவருமான திரு நாதன் அறிமுகம் செய்த ‘புரொஜெக் ரீட்’ திட்டம் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு உதவியதுடன் தொண்டூழியமும் சமூகப் புரிந்துணர்வும் வளர்வதற்கும் வழிவகுத்தது.

கடந்த 2000 வரை சிண்டாவின் அறங்காவலர் குழுவில் நீடித்த அவர், இந்திய சமூகத்தின் மேம்பாட்டில் இறுதிக் காலம் வரை அக்கறை கொண்டிருந்தார். எத்தனை உயர்பதவியில் இருந்தபோதும் தமது தமிழ் அடையாளங்களையும் அவர் விட்டுவிடவில்லை. வீட்டில் தமிழ் பேசி வளர்ந்த திரு நாதனுக்கு பள்ளியில் தமிழ் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதனால் பிற்காலத்தில் தமிழ் எழுதவும் படிக்கவும் கற்றுத் தேர்ந்தார். தமிழர்களிடம் தமிழில் உரையாடுவதில் அவருக்கு அலாதி இன்பம்.

சிங்கப்பூரராக, இந்தியராக, தமிழராக அவரை நாடி வந்தவர்க்கெல்லாம் அவர் உதவி செய்தவர். வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாமல் அவர் செய்துள்ள பல உதவிகள் அவரின் மறைவுக்குப் பின்னரே தெரிய வந்துள்ளன.

சொல்லப்படாத மேலும் பல சம்பவங்கள் பலரின் மனப் பெட்டகங்களுக்குள் பாதுகாக்கப்பட்டிருக்கும். பேதங் களின்றி நாடி வந்தோருக்கெல்லாம் நல்ல நண்பராகத் திகழ்ந்த  அவருக்கு அஞ்சலி செலுத்த 20,000க்கும் மேற் பட்டவர்கள் திரண்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

சாதாரண குடும்பத்தில் பிறந்து, சிறுவயதில் தந்தையை இழந்து, படிப்பைப் பாதியில் விட்டு, வீட்டைவிட்டு வெளியேறி, தெருவில் படுத்துத் தூங்கி, கிடைத்த வேலைகளைச் செய்தபோதும் தன் மீதும் தனது திறன் மீதும் கொண்டிருந்த நம்பிக்கையால் சிங்கப்பூரின் அதிபராக உயர்ந்த திரு எஸ்.ஆர். நாதன் தனது  ஒப்பற்ற ஆற்றலாலும் உயரிய பண்பாலும் தமிழ்ச் சமூகத்தின் மதிப்பை பன்மடங்கு உயர்த்தியுள்ளார். உலக அரங்கில், நாட்டின் அதிபர்களாக பெரும் சிறப்புடன் பெயர் பொறித்த தமிழர்களான எஸ்.ஆர்.நாதனும் அப்துல் கலாமும் அன்பு மனத்தாலும் பண்புநெறிகளாலும் மக்களை ஈர்த்தவர்கள். தங்களின் உயர்வால் உலகெங்கும் பல தமிழர்கள் உயர் நிலையை எட்ட இவர்கள் உந்துசக்தியாகத் திகழ்வார்கள் என்பது நிச்சயம்.

நன்றி :- தமிழ் முரசு, சிங்கப்பூர்

தமிழினத்தை உயர்த்திய தலைமகன், எஸ்.ஆர்.நாதன்

Sunday, August 28, 2016

இலங்கை தமிழுக்கும் கத்தோலிக்க மதத்திற்கும் தொண்டாற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவரும், பன்மொழிப் புலவருமான - தமிழ் வேர்ச்சொல் அறிஞர், நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர். 1875ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி யாழ்ப்பாணத்திலுள்ள மானிப்பாயைச் சேர்ந்த இராசசிங்கம் ராமநாதப்பிள்ளை-தங்கமுத்து தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். எட்டாவது பரராச சேகரனின் பரம்பரையில் சைவக் குடும்பத்தில் பிறந்தவர் சுவாமி ஞானப்பிரகாசர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வைத்தியலிங்கம்.

ஐந்து வயதிருக்கும்போதே இவர் தந்தை இறந்துவிட்டதால், அவர் தாயார், கத்தோலிக்கரான தம்பிமுத்து என்பவரை மறுமணம் செய்துகொள்ள மதம் மாறினார். அப்போது மகனும் கத்தோலிக்க மதத்தில் சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு வைக்கப்பட்ட பெயர்தான் ஞானப்பிரகாசர் என்பது! இவர், திருமறை குருவாக விருப்பங் கொண்டார். ஆனால், பெற்றோரின் விருப்பப்படி யாழ்ப்பாணம் கோட்டை தொடர்வண்டி நிலையத்தில் அலுவலராகப் பணிபுரிந்தார். என்றாலும் கத்தோலிக்கக் (திருமறை) குருவாக ஆகவே அவரது உள்ளம் பேரவாக் கொண்டது.

ஞானப்பிரகாசர் சிறு வயதிலேயே இலக்கணப் பிழையின்றி விரைவாகக் கவிதை புனையும் ஆற்றல் கைவரப்பெற்றார். வயலின், மத்தளம் போன்றவற்றை வாசிப்பதிலும் வல்லவராகத் திகழ்ந்தார். சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார்.

இவருடைய வளர்ப்புத் தந்தையான தம்பிமுத்துவிடம், தமிழ்ச் செய்யுள், தமிழக வரலாறு, தமிழ் இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார்; பின்னாளில் தான் விரும்பியபடி திருமறைப் பணியாளராகப் பயின்று குருவானார்.

ஞானப்பிரகாசர் கால்டுவெல்லின் திராவிட மொழி ஒப்பிலக்கணம், கதிரைவேலரின் தமிழ் அகராதி ஆகியவற்றை விரும்பிப் படித்து, வேர்ச்சொல் ஆய்வில் ஈடுபட்டார். தமிழே உலகின் உயர்தனிச் செம்மொழி என்று பதினெட்டுச் சான்றுகளுடன் உறுதிபட எடுத்துரைத்த இவர், செந்தமிழ்ச் சொற்பிறப்பு ஒப்பியல் அகராதி தந்தார். "தமிழ் அமைப்புற்றது எவ்வாறு', "தமிழில் வேர்ச்சொல் ஆய்வுகள்', "தமிழ் வேர்ச்சொல் ஒப்பியல் பேரகராதி' ஆகிய மூன்று அரிய நூல்களைப் படைத்தார். இவரின் ஆய்வினை அடிப்படையாகக் கொண்டே தேவநேயப் பாவாணர் சொற்பிறப்பு ஒப்பியல் அகர முதலியை உருவாக்கப் பாடுபட்டார் என்று கூறுவர்.

நல்லூர் ஞானப்பிரகாசர் தனது சமயப் பணியை ஆற்றும்போது, தமிழ்ப் பணியையும் தொடர்ந்து ஆற்றிவந்தார். கிறிஸ்தவராக இருந்துகொண்டு இவர் ஆற்றும் தமிழ்த் தொண்டினை இந்து, இஸ்லாம் சகோதரர்கள் பெரிதும் மதித்தனர். இந்து சமய மடாதிபதிகள் ஞானப்பிரகாசருடன் தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் பற்றி அளவளாவிப் பெரிதும் இன்புற்றனர். பிற சமயத்தாரின் பேரன்பைப் பெற்ற நல்லூர் ஞானப்பிரகாசர் மென்மேலும்

தமிழ் ஆய்வில் தனது கவனத்தைச் செலுத்தி, வேர்ச்சொல் ஆய்வில் முழுமையாக ஈடுபட்டார்.

ஞானப்பிரகாசர், சிந்து சமவெளி நாகரிகம் தமிழரின் நாகரிகம் என்ற ஈராஸ் அடிகளாருடன் இணைந்து, சிந்து சமவெளி நாகரிகத்தால் தமிழரின் பண்பாடு சிறந்துள்ளதையும், தமிழ்மொழியின் தொன்மையையும் தெளிவுபடுத்தினார். சிங்கள மொழியில் திராவிட மொழிக் கூறுகளை இவர் எடுத்து விளக்கியபோது, இவருக்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், இவரின் கருத்தை பிற நாட்டு மொழியறிஞர்கள் ஏற்று ஆதரவு தெரிவித்தனர். இலங்கை அரசு இவரை வரலாற்றுச் சுவடிகளின் ஆய்வுக் குழுவில் நியமித்து கெüரவித்தது.

இவரை ஜெர்மன் மொழியறிஞர்கள் தங்கள் நாட்டிற்கு அழைத்து, தமிழின் பழைமையையும் பெருமையையும் அறிந்து கொண்டு, இவரைப் பெரிதும் பாராட்டினர். ஜெர்மன் அரசு இவரது உருவம் பொறித்த அஞ்சல் தலை (முத்திரை) வெளியிட்டு பெருமை செய்தது.

குடும்ப வாசகம், அமலோற்பவ இராக்கினி தூதன் ஆகிய இரு இதழ்களுக்கு இவர் ஆசிரியராக இருந்தார். திங்கள் இதழ்களான இவை தவிர, "சத்திய வேதப் பாதுகாவலன்' என்னும் வார இதழுக்கும் ஆசிரியராய் இருந்தார். இவற்றில் திருமறைக் கோட்பாடுகளையும், இறையியல் கோட்பாடுகளையும், மக்களின் வாழ்க்கையோடு இயைந்து விளக்கி வந்தார்.

ஞானப்பிரகாசர், தமிழரின் தொன்மை வரலாறும் சமயமும், யாழ்ப்பாண வரலாற்று ஆய்வு, கத்தோலிக்க திருச்சபையும் அதன் போதகர்களும், போர்த்துக்கீசியர் - ஒல்லாந்தர் கால யாழ்ப்பாண வரலாறு, யாழ்ப்பாண அரசர்கள் ஆகிய அரிய நூல்களைப் படைத்தார்.

இவர் படைத்த செகாச சேகரன் புதினமும், சுப்பிரமணிய ஆராய்ச்சி, பிள்ளையார் ஆராய்ச்சி ஆகிய நூல்களும் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டன.

பன்மொழிப் புலவரான நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசருடைய தமிழ்த் தொண்டினைப் பாராட்டித் திருப்பனந்தாள் மடம் அவரை கெüரவித்து சன்மானமும் வழங்கியிருக்கிறது.

இவர் முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட தேவாலயங்களைக் கட்டுவித்துள்ளார். மேலும், பல வாசக சாலைகளையும் ஏற்படுத்தியுள்ளார்.

1947ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் தேதி மானிப்பாய் மருத்துவமனையில் இவர் காலமானார். இவ்வேர்ச்சொல் தமிழறிஞரை அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 30-இல் நினைவுகூர்ந்து போற்றுவோம்!

நன்றி :- மதுரை இளங்கவின், தமிழ்மணி, தினமணி

தமிழ் வேர்ச்சொல் அறிஞர், நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்.

Wednesday, November 25, 2015

சென்னை, பள்ளிகரணையில் உள்ள சதுப்பு நிலம். படம்: எம்.கருணாகரன்

சென்னை, பள்ளிகரணையில் உள்ள சதுப்பு நிலம். 

படம்: எம்.கருணாகரன்

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

கடல்கள், ஆறுகள், ஏரிகள் போலவே சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்தவை சதுப்பு நிலங்கள் (Wet lands). கடல்களுக்கும் ஆறுகளுக்கும், ஏரிகளுக்கும், சதுப்பு நிலங்களுக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. ஆறுகள் மற்றும் ஏரிகளின் உபரி நீர் நீண்டகாலம் தொடர்ச்சியாக வெளியேறும் பகுதிகளில் சதுப்பு நிலங்கள் உருவாகின்றன. இவை மூன்று மீட்டருக்கு குறைவான ஆழம் கொண்டவை. கனிமவளம் மிகுந்தவை. நிலத்தடி நீரை சேமித்து வைப்பதில் சதுப்பு நிலங்களின் பங்கு அபாரமானது. அவை தங்க ளதுபரப்பளவைப் போல சுற்றுப் பகுதியில் பத்து மடங்குப்பரப்பளவுக்கு நிலத்தடி நீரை வற்றாமல் பாதுகாக் கின்றன. தவிர, வலசைசெல்லும் பறவை களுக்கு இனப் பெருக்க பூமியாகவும் திகழ்கின்றன. ஏராளமான நீர் தாவரங்கள், மீன்கள், நுண்ணிய முதுகெலும்பு இல்லா உயிரினங்கள் வசிக்கும் பல்லுயிர் சூழல் முக்கியத் துவம் வாய்ந்த பகுதி இவை.

இவற்றின் முக்கியத்துவத்தை சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் அறிந்திருந்தார்கள். கெய்ரோ நகருக்கு தெற்கே 80 கி.மீ தொலைவில் 1800 சதுர கி.மீ பரப்பளவில் ஃபாயூம் (Fayum) என்கிற சதுப்பு நிலம் இருந்தது. இதன் அருகில் இருந்த ஒரு மலை இடுக்கு வழியாக நைல் நதியின் தண்ணீர் சதுப்பு நிலத்துக்கு வந்துகொண்டிருந்தது. ஒருகட்டத்தில் இதற்கு தண்ணீர் வந்துகொண்டிருந்த பாதை தூர்ந்துபோனது. பல ஆண்டுகளாக இந்த நிலை தொடர்ந்ததால் சதுப்பு நிலம் வறண்டு பாளம் பாளமாக வெடித்தது. பறவைகள், நீர் வாழ் உயிரினங்கள் அழிந்தன. பாலைவனமாக மாறியது சதுப்பு நிலம்.

கி.மு. 1877 - 1870ம் ஆண்டுகளில் எகிப்தை ஆண்ட மன்னன் இரண்டாம் செனுஸ்ரெட்டுக்கு (Senusret - 2) இந்தத் தகவல் சென்றது. உடனடியாக சதுப்பு நிலத்தை மீட்க முடிவு செய்யப்பட்டது. மராமத்துப் பணியில் மக்களும் ஈடுபட்டார்கள். முதல்கட்டமாக பல மைல் தூரம் கொண்ட தூர்ந்துப்போன ஆற்றுப் பாதை ஆழப்படுத்தப்பட்டது. அதன் இருபுறமும் கரைகள் அமைக்கப்பட்டன. அடுத்ததாக, சதுப்பு நிலத்தையும் நைல் நதியையும் இணைத்த மலை இடுக்கில் அணை ஒன்று கட்டப்பட்டது. இந்த அணையின் மூலம் சதுப்பு நிலத்துக்கு சீரான அளவில் தண்ணீர் செலுத்தப்பட்டது. சில மாதங்களிலேயே பாலைவனத்தில் பசுமைத் துளிர்த்தது. நீர்த் தாவரங்கள், பாசிகள், பறவைகள், உயிரினங்கள் பல்கிப் பெருகின. இதன் தொடர்ச்சியாக புத்துயிர் பெற்றது சதுப்பு நிலம். இத்தோடு விட்டுவிடவில்லை அவர்கள். சதுப்பு நிலத்தில் சற்று மேடான பகுதிகளைப் பன் படுத்தினார்கள். கால்வாய்கள் வெட்டினார்கள். கணிசமான பகுதியில் விவசாயம் செய்தார்கள். ஆனால், நாகரிக சமூகம் என்று கூறிக்கொள்ளும் நாம் என்ன செய்கிறோம்?

நமது அதிகாரிகள் சதுப்பு நிலங்களை எதற்கும் உதவாத நிலம் (Waste land) என்று குறிப்பு எழுதினார்கள். கடந்த 1985-86ம் ஆண்டுதான் மத்திய அரசு இதன் முக்கியத் துவத்தை உணர்ந்தது. தேசிய சதுப்பு நிலப் பாதுகாப்பு மற்றும் நிர்வாக திட்டம் உருவாக்கப் பட்டது. அதன் கீழ் நாட்டில் உள்ள 94 சதுப்பு நிலங்கள் கொண்டுவரப்பட்டன.

தமிழகத்தில் சென்னை - பள்ளிக்கரணை, விழுப்புரம் - கழுவெளி, நாகப்பட்டினம் - கோடியக் கரை (Point Calimere) ஆகிய சதுப்பு நிலங்கள் இருக்கின்றன. இவற்றில் பள்ளிக் கரணையும் கழுவெளியும் நன்னீர் சதுப்பு நிலங்கள். அரிதி னும் அரிதானவை இவை. மதிப்புமிக்கவை. நமது சதுப்பு நிலங்களில் நெடுங்கால் உள்ளான், முக்குளிப்பான்கள், தண்ணீர்க் கோழிகள், நாமக் கோழிகள், நீளவால் இலைக் கோழிகள், நீலத் தாழைக் கோழிகள், நாமக் கோழிகள், சீழ்க்கைச் சிறகி, பூநாரைகள், கதிர்க் குருவிகள், சாம்பல் கதிர்க் குருவி, கள்ளப்பருந்து, கரிச்சான், சாம்பல் ஆள்காட்டி, கூழைக்கடா போன்ற பறவைகள் இனப்பெருக்கம் செய்கின்றன.

ஆனால், நாட்டிலேயே மிக, மிக மோசமாக பாதிக்கப்பட்டது பள்ளிக்கரணை சதுப்பு நிலம்தான். சமகாலத்தில் நம் கண் முன்னால் அழிவைச் சந்தித்துக்கொண்டிருக்கும் அரிய பொக்கிஷம் அது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இது 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்திருந்தது. சுற்றுவட்டாரங்களில் சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நிலத்தடி நீர் செறிவுடன் காணப்பட்டது. ஆனால், இன்று பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பரப்பளவு 500 ஹெக்டேருக்கும் குறைவே. பத்தில் ஒரு பங்கைக்கூட விட்டு வைக்காமல் வெறிகொண்டு விழுங்கிவிட்டோம். சதுப்பு நிலத்தைப் பிளந்துச் செல்கின்றன சாலைகள். கலந்துநிற்கின்றன சாக்கடைகள்.

கான்கிரிட் கட்டிடங்களைக் கட்டி பூமித்தாயை உயிரோடு புதைத்துவிட்டோம். நிலத்துக்குள் தண்ணீர் ஊடுருவ முடியவில்லை. தாகத்தில் மூச்சடைத்து தவிக்கிறாள் தாய்.

சதுப்பு நிலத்துக்கு தண்ணீர் கொடுத்த ஏராளமான மதகுகளைக் காணவில்லை. எல்லாவற்றையும் விட கொடுமையாக சென்னை மாநகராட்சியே அங்கே மலைபோல குப்பையைக் கொட்டி வைத்திருக்கிறது. மருத்துவமனை கழிவுகள் தொடங்கி இறைச்சிக் கழிவுகள் வரை அங்கே பகிரங்கமாகக் கொட்டப்படுகிறது. சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனமான தேசிய கடல் தொழில்நுட்பக் கழகமே சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்திருக்கிறது. 2007-ம் ஆண்டில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இது அறிவிக்கப்பட்ட பின்பும் இது தொடர்வதுதான் வேதனை. இனியும் இது நீடித்தால் பள்ளிக்கரணை பாலையாகும் நாள் வெகுதூரமில்லை.

சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தியர்களுக்கு இருந்த விழிப்புணர்வு, நவீன சமூகமாகிய நமக்கு இல்லை என்பதுதான் வெட்கித் தலைக்குனிய வேண்டிய விஷயம்!

உங்கள் வீட்டுக்குள் தண்ணீர் வந்தது ஏன் ?

சென்னையை விடிய விடிய வடிய வைத்து அடிக்கிறது மழை. நகரின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் பூண்டி (கொள்ளளவு 3.1 டி.எம்.சி), செம்பரம்பாக்கம் (3.3 டி.எம்.சி), புழல் (3.6 டி.எம்.சி), சோழவரம் (0.8 டி.எம்.சி) ஆகிய ஏரிகள் அதிகாரபூர்வமாக திறந்துவிடப்பட்டுள்ளன. இவை கொசஸ்தலை, அடையாறு வழியாக கடலில் சென்று கலக்கின்றன. அதாவது, குடிநீரை கடலுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறோம். இந்த நான்கு ஏரிகளின் வழித் தடத்தில் மட்டும் சுமார் 36 சங்கிலித் தொடர் ஏரிகள் அழிக்கப்பட்டதே இதற்குக் காரணம். இவை இல்லாமல் மடிப்பாக்கம், அம்பத்தூர், ரெட்டை ஏரி உள்ளிட்ட பல ஏரிகள் நிரம்பி வழிந்து, அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததில் மக்கள் மாடிகளில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். அடையாறு கரையோரப் பகுதிகள், தாம்பரம், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு அன்றாட உணவே அரிதாகிவிட்டது.

சென்னையின் இன்றைய வெள்ளத்துக்கு மிக, மிக முக்கியமான காரணம் கீழ்கண்ட ஏரிகளின் ஆக்கிரமிப்புகள்தான். இதை அப்புறப்படுத்த அரசு முன்வருமா?

(நீர் அடிக்கும்)

பாலையாகும் பள்ளிக்கரணை!

Monday, November 23, 2015

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

இயற்கைச் சீற்றங்கள் உலகுக்குப் புதிது அல்ல. நம் முன்னோர்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியை யும் போராடியே கடந்தார்கள். அந்த போராட் டங்களில் இயற்கையின் இயல்புகளை கண்டுகொண்டார்கள். அதற்கேற்ப தொழில் நுட்பங்களை கண்டுபிடித்தார்கள். இயற்கை யுடன் இசைந்து வாழ்ந்தார்கள். விலங்குகளும் கூட நுண்ணறிவின் மூலம் இயற்கை சீற்றங் களை முன்கூட்டியே உணர்ந்து கொள் கின்றன. ஆனால், செயற்கைக்கோள்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் நாம்தான் சாலைகளில் படகு விடுகிறோம்.

ஆனால், 2500 ஆண்டுகளுக்கு முன்பே பிரம்மாண்டமாக ஓடிய நைல் நதியை மனிதர்கள் கையாண்ட விதம் ஆச்சர்யம் அளிக்கிறது. எகிப்து நாட்டின் ஒரே ஜீவாதாரம் நைல் நதி மட்டுமே. நைல் நதியில் ஜூலை முதல் செப்டம்பர் வரை வெள்ளம் பெருக்கெடுக்கும். அதற்கு முன்னதாகவே ஆற்றின் இரு கரைகளிலும் 3 மீட்டர் வரை ஆழம் கொண்ட பெரிய பாத்திகளை வெட்டி விடுவார்கள். இப்படி ஆயிரக்கணக்கான பாத்திகள் வெட்டப்பட்டு, கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டன. இவை வெள்ளம் ஊருக்குள் புகாமல் பாது காத்தன. இதில் சேகரமாகும் தண்ணீர் இரு மாதங்கள் வரை தேங்கி நின்றது. கூடவே பாத்திகளில் வளமான வண்டலும் சேர்ந்தது.

சோழர்களின் குளங்கள்

எகிப்தியர்களுடன் எந்தத் தொடர் பும் இல்லாத நிலையில் இதே தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத் தினர் சோழர்கள். அவர்கள் தற்காலிக பாத்திகளாக அல்லாமல் நொய்யல் ஆற்றின் இரு கரைகளிலும் 30-க்கும் மேற் பட்ட குளங்களை வெட்டினர். அவை இன்றளவும் நிலைத்து நிற்பதே சோழர் களின் கட்டுமான திறமைக்கு சாட்சி. இந்தக் குளங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. நொய்யலின் தண்ணீர் ஒவ்வொரு குளமாக நிரப்பி விட்டு மீண்டும் ஆற்றுக்கே சென்றது.

கி.மு. 3000-ம் ஆண்டில் நைல் நதியில் அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பேரழிவுகள் ஏற்பட்டன. ஊரெங் கும் வெள்ளம் ஓடியதால் பஞ்சங்கள் ஏற்பட்டன. இதனால், நைல் நதியின் கரையெங்கும் வரிசையாக நீர் மட்டத்தை அளக்கும் அளவுகோல்களை நட்டார்கள். தவிர, ஆறுகளின் சில இடங்களில் படித்துறைகளை கட்டி நீர்மட்டத்தை படிகள் மூலம் அளந்தார்கள். ஆற் றோரக் கரைகளில் கோயில்களை கட்டி கோயில் சுவர்களிலும் அளவு கோலை செதுக்கினார்கள். இந்த அளவுகோல்கள் ‘நைலோ மீட்டர்’ (Nilo meter) என்றழைக்கப்பட்டன. கி.பி. 715 ரோடா என்கிற இடத்தில் அமைக்கப் பட்ட நைலோ மீட்டரில் கி.பி.1890 வரை நைல் நதியின் நீர்மட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்படி நைல் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடிப்படையாக கொண்டு உருவானது தான் இப்போது நாம் பயன்படுத்தும் 365 நாட்கள் கொண்ட நாள்காட்டி.

‘நைலோ மீட்டர்’ போலவே 2000 ஆண்டுகளுக்கு முன்பு பழந்தமிழர்களும் ஆறு மற்றும் ஏரிகளின் கரைகளில் பல்வேறு அளவுகோல் களை அமைத்தார்கள். தாமிரபரணி யில் அமைக்கப்பட்ட பல்வேறு படித் துறைகள், கோயில் சுவர்கள் ஆற்றின் வெள்ள அபாயங்களை கணக்கிட உதவும் கருவிகளாகவும் பயன்பட்டன. இன்றும் தென்மாவட்டங்களில் இருக்கும் பல ஏரிகளின் மதகுகளில் ‘ஃ’ வடிவத்தில் இருக்கும் துளைகள் நீர்மட்டத்தை அளக்க உதவுகின்றன.

படித்துறைகள் மூலம் நீர்மட்டத்தை கணக்கிடும் நைலோ மீட்டர்.
தொன்மையான அணை

எகிப்து தலைநகர் கெய்ரோவில் ‘காராவி’ (Garawi) ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ‘சாத் எல் - காஃபாரா’ (Sadd El-Kafara) அணைதான் உலகிலேயே மிகத் தொன்மையான அணை. இதன் நீளம் 348 அடி. இதன் அடிப்பாகம் 265 அடி அகலம் கொண்டது. ஆற்றின் ஆழமான இடத்திலிருந்து அணையின் மேல்மட்டம் 37 அடி உயரம் கொண்டது. இது சுவர்கள் அமைத்து கட்டப்பட்ட அணை அல்ல. ஆற்றின் குறுக்கே 37 அடி உயரமும் அடிப்பகுதி 78 அடி பருமனும் கொண்ட பெரும் கற்கள் 120 அடி இடைவெளி விட்டு பெரும் கற்சுவர்களை போல எழுப்ப பட்டன. அந்த இடைவெளியின் அடிப் பாகம் 60 ஆயிரம் டன் எடை கொண்ட கூழாங்கற்களால் நிரப்பப் பட்டன. அணையைக் கட்ட எந்த காரைப் பொருட்களும் பயன்படுத்தப் படவில்லை. வெறும் கற்களை ஆற்றில் அடுக்கியே கட்டப்பட்ட இந்த அணையில் கலிங்குகள், வெள்ளப்போக்கிகள் எதுவும் கிடையாது. கரிமப் படிவ ஆய்வு (Carbon dating) மற்றும் தொல் லியல் ஆய்வுகள் இந்த அணையின் வயது சுமார் 4600 ஆண்டுகள் என்று தெரிவிக்கின்றன. ‘இயற்கையை வழிபடு வோரின் அணை’ என்று அழைக்கப் படும் இந்த அணை கி.மு.2650-களில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப் படுகிறது. ஆனால், இந்த அணை இன்று இல்லை, அதன் எச்சங்கள் மட்டுமே பொக்கிஷங்களாக பாதுகாக்கப் படுகின்றன.

அழிந்துபோன தங்கள் அணையின் தொழில்நுட்பம் உலகில் வேறெங்கேனும் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள பிற்காலத்தில் எகிப்தின் நீரியல் வல்லுநர்கள் உலகெங்கும் தேடி அலைந் தார்கள். எங்கு தேடியும் ‘சாத் எல் - காஃபாரா’வின் சாயலைகூட அவர் களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக இந்தியா வந்தார்கள். மிகுந்த சிரமங்களுக்குkf பிறகு ஓர் அணையை கண்டுபிடித்து ஆச்சர்யத் தில் உறைந்துபோனார்கள். அதுதான் கரிகாலச் சோழன் கட்டிய கல்லணை.
செயற்கையான காரை எதுவும் பூசாமல் கற்களை ஆற்றில் நிரப்பியே கட்டப்பட்ட அணை கல்லணை. ஓடும் நீரில் ஆற்றின் படுகையில் ஒவ்வொரு கல்லாக போட்டு நிரப்பினார்கள். அவை மணலின் அடியாழத்துக்குச் சென்று அகலமான அடிப்பாகமாக சென்று இயற்கையான அடித்தளத்தை உருவாக்கின. அடுத்தடுத்த மேலே போடப்பட்ட கற்கள் இயற்கை சுவர் களாக அமைந்தன. இப்படியாக ஓடும் நீரில் அடியில் மணல்படுகையில் எழுப்பப் பட்ட உறுதியான கருங்கல் தளத்தின் மீது எழுந்து நின்றது கல்லணை. இந்த அணையின் தொழில்நுட்பத்தை பின்பற்றிதான் ஆர்தர் காட்டன் 1874-ல் ஆந்திராவின் கோதாவரியில் தெளலீஸ் வரம் அணையை கட்டினார். ( தவளேஸ்வரம் )

உலகின் தொன்மையான அணை ‘சாத் எல் - காஃபாரா’ இன்று இல்லை. ஆனால், கிட்டத்தட்ட அதே தொழில்நுட்பத்தில் சோழர்களால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை இன்றும் கம்பீரமாக இருக்கிறது. வாருங்கள், நம் முன்னோர்களிடமிருந்து பாடம் கற்போம்.

(நீர் அடிக்கும்)

நன்றி :- தி இந்து 

கம்பீரமாக நிற்கிறது கல்லணை! - டி.எல்.சஞ்சீவி குமார்

தீபங்குடி சமணப்பள்ளி

வீ.அரசுவின் அழைப்பின் பேரில் சில வருடங்களுக்கு முன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் சமண நிகண்டுகள் பற்றி உரையாற்றினேன். வேறு ஏதோ தேடப்போக அந்த உரைக்காகத் தயாரித்த குறிப்புகள் கிடைத்தன.அந்த குறிப்புகளில் சிலவற்றை இங்கே பதிவேற்றுகிறேன்.

 என்னுடைய கேள்விகளெல்லாம் சமண முனிவர்கள் ஏன் அகராதி தயாரிப்பில் ஈடுபட்டார்கள்? சமண மதத்திற்கும் அகராதி தயாரிப்பதற்கும் என்ன சம்பந்தம்? நிகண்டுகளிலிருந்து அவற்றின் தயாரிப்புத் திட்டங்களை அனுமானிக்க இயலுமா? அவ்வாறே அந்த தயாரிப்புத்திட்டங்கள் தெரியவந்தால் அவற்றிலிருந்து எந்த தத்துவ நோக்கு சமண நிகண்டுகளின் உள்தர்க்கத்தைத் தீர்மானிப்பதாக இருந்தது என்று அனுமானிக்க இயலுமா ? இதுவரைக்கும் கல்விபுல ஆய்வாளர்கள் எழுதியவற்றுள் சமண நிகண்டுகள் பற்றிய பொதுவான விவரணைகள், வரலாற்று செய்திகள் இடம் பெற்றிருக்கின்றனவே தவிர என்னுடைய கேள்விகளுக்கான விடைகள் எதுவும் கிடைக்கவில்லை. என் யூகங்கள் சிலவற்றை சுருக்கமாக இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

சரஸ்வதி மகால் வெளியிட்ட பதார்த்தசாரம் என்ற சமண தத்துவ நூல் உயிருள்ள பொருள் உயிரற்ற பொருள் அனைத்துமே அணுக்களால் கட்டமைக்கப்பட்டவை அவை கடவுளின் துணையின்றியே தன் போக்கில் இயங்குகின்றன என்று சொல்கிறது. அதாவது கடவுள் என்றால் இங்கே உலகைப்படைத்து வழி நடத்திச் செல்கிற மனிதனுக்கு மேம்பட்ட சக்தி என்று மட்டுமே பொருள்கொள்ளலாகாது. மனித அறம் சார்ந்து, மனித அறத்திற்கு செவி மடுத்து, மனிதனுக்கு மேல் இயங்குகின்ற இயற்கை சக்தி ஒன்று இல்லை என்றே சமணரின் கடவுள் மறுப்புக்கொள்கையை நாம் பொருள்கொள்ளவேண்டும். பிராகிருதமும் பாலியும் கலந்து பழைய அர்த்தமாகதியில் எழுதப்பட்ட பதார்த்தசாரம், இயற்கையின் மனித அறமற்ற தன்மையை (கடவுள் இல்லாத தன்மையை) அறிவதில் தேவ மூடம், உலக மூடம், பாஷாண்டி மூடம் என்ற மூன்று தடைகள் (சமண மொழியில் மூன்று குற்றங்கள்) ஏற்படுகின்றன என்று சாடுகிறது. தேவ மூடம் கடவுள் நம்பிக்கையைக் குறிக்கிறதென்றால் உலக மூடம் இயற்கையை அளவுக்கு அதிகமாக மனிதன் பயன் படுத்துவதைக் குறிப்பிடுகிறது. சமண சிறு காப்பியங்களான யசோதரகாவியம், உதயணன் கதை ஆகியவற்றில் உலக மூடத்தை கிண்டலடிக்கும் நகைச்சுவை பல இடங்களில் காணக்கிடைக்கிறது. இயற்கையை தேவைக்கதிகமாக பயன்படுத்துவதின் உருவகமாக அதிகம் சாப்பிடுதல் சமண நகைச்சுவையில் அதிகம் காணக்கிடைக்கிறது. பாஷாண்டி மூடம் என்றால் என்னவென்று தெரியவில்லை. இந்தக்கட்டுரைச் சுருக்கமாகக்கூட இருக்கலாம்.

மனிதனுக்கான அறத்தை மனிதன் தான் உருவாக்கவேண்டுமே தவிர இயற்கையோ கடவுளோ மனிதனுக்கான அறத்தைத் தரமாட்டார்கள் என்பதே சமணக்கோட்பாடு. சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுவதற்கான (first prison reform in human history) தர்க்கத்தையும் இந்தக் கோட்பாட்டினை ஒட்டியே இதர சமண பனுவல்களிலும் காணலாம்.

ஆக உயிரற்றது, உயிருள்ளது அனைத்தையுமே மனித அறிவினுள் எனவே மனித அறத்தினுள் மொழியின் மூலமும் கணிதத்தின் மூலமும் கொண்டுவருவதே சமணர்கள் அகராதி தயாரிப்பிலும் வானியல் மற்றும் சோதிட கணிதத்திலும் ஈடுபட காரணம் என்று நினைக்கிறேன்.

ஒன்றைப்பார்த்து வியந்து ஐ என்று ஒலிஎழுப்புகிறோம் என்றால் அவ்வொலியை வியப்புசொல்லாகவே கருதவேண்டும் என்கிறது தொல்காப்பியம். இந்த அடிப்படை சொல்லாக்க முறைமையையே சமண நிகண்டுகளின் ஆசிரியர்கள் பின்பற்றினார்கள் என்று நம்ப இடமிருக்கிறது. சொற்களின் பெருக்கத்திற்கு அவர்கள் பிற மொழிகளையே சார்ந்திருந்தார்கள். பிற மொழி, பிற பண்பாட்டு கலப்பற்று தமிழ் மொழியும் தமிழ் சிந்தனையும் வளர்ச்சிபெற்றது தமிழ் சிந்தனையை இந்த மண்ணின் தூய சிந்தனையாக அடையாளம் காணமுடியும் என்பது மூடங்களில் ஒரு வகை அல்லாமல் வேறு என்ன?

விருப்பமுள்ளவர்கள் Joseph, George Gheverghese. The Crest of the Peacock Non European roots of mathematics. Princeton University Press, 2000. என்ற புத்தகத்தில் சமண கணிதம் பற்றிய அத்தியாயத்தைப் படித்துப்பார்க்கலாம். சமணரின் அறிவியலை குறிப்பாக அணு அறிவைப் பற்றிய விளக்கமான கட்டுரையை புதுவை ஞானம் எழுதியுள்ளார். அவரும் பதார்த்தசாரம் நூலையும் The Crest of Peacockஐயும் குறிப்பிடுகிறார் என்றாலும் சமணர்கள் ஏன் நிகண்டுகளைத் தயாரித்தார்கள் என்பதை ஒட்டிய என் கேள்விகளுக்கான விடைகள் அவர் கட்டுரையில் இல்லை. தன்னளவிலேயே முக்கியமான புதுவை ஞானத்தின் கட்டுரையை இந்தச் சுட்டியில் வாசிக்கலாம்: http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60501068&format=html&edition_id=20050106

சமணர்கள் ஏன் நிகண்டுகளைத் தயாரித்தார்கள்?

Sunday, November 22, 2015

தமிழ் இலக்கண - இலக்கிய மரபில் பல உரையாசிரியர்கள் இருந்தபோதிலும் நச்சினார்க்கினியர்க்கு என்று தனித்த அடையாளம் உண்டு. ஆய்வாளர்களால் அதிகமாகப் பாராட்டப்பட்டவரும் அதிகமான விமர்சனங்களுக்கு உள்ளானவரும் இவர்தான்.

தொல்காப்பியர் செய்யுளியலில் வரையறுத்த "மாட்டு' என்னும் உறுப்பினை அடிப்படையாகக் கொண்டு தமது இலக்கியப் பிரதிகளுக்கு உரை எழுதியவர். "மாட்டு' என்பது இலக்கியத்தில் ஓரிடத்தில் உள்ள ஒரு சொல்லை இன்னொரு இடத்தில் உள்ள சொல்லோடு கொண்டு மாட்டி பொருள் கொள்வதாகும். இம்மாட்டு என்னும் உறுப்பு நீண்ட தொடர்நிலைச் செய்யுள்களைப் பொருள் கொள்வதற்குப் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. நச்சினார்க்கினியர் இம் மாட்டு உறுப்பினை மையமாகக் கொண்டே தமது உரையை வழிநடத்தியுள்ளார்.

இவர், திருமுருகாற்றுப்படைக்கு உரை எழுதும்போது, ""அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும் இயன்று பொருண் முடியத் தந்தனர் உணர்த்தல் மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின் என்னும் மாட்டிலக்கணத்தான் இப்பாட்டுக்கள் பத்தும் செய்தார்களாதலின் இவ்வாறே மாட்டி முடித்தல் யாண்டும் வருமென்றுணர்க.'' (திருமுரு, அடி-43-44) என்று குறிப்பிட்டுள்ளார். இவர் இவ்வாறு தெளிவுபடுத்தி குறிப்பிட்டுச் செல்ல 20ஆம் நூற்றாண்டுப் பதிப்பாசிரியர்கள், இலக்கிய வரலாற்றாசிரியர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் அம்மாட்டு இலக்கணத்தின் வழியான பொருள்கோளைக் கடுமையாக விமர்சித்தனர்.

அதற்குக் காரணம், அம்மாட்டிலக்கணம் செய்யுளைச் சிதைப்பதாக உள்ளது என்று கூறினர். மறைமலையடிகள் தமது முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரையில்,

""பொற்சரிகை பின்னிய நற்பட்டாடையினைத் துண்டு துண்டாகக் கிழித்துச் சேர்த்துத் தைத்து அவம்படுவார் போலச், செய்யுட் சொற்றொடர்களை ஒரு முறையுமின்றித் துணித்துத் துணித்துத் தாம் வேண்டியவாறு சேர்த்துப் பின்னி உரை வரைகின்றார்'' என்று குறிப்பிடுகிறார். ஆனால், மாட்டு என்பது நவீன பொருள் கோடல் முறை என்று தமிழவன், அ.சதீஷ் உள்ளிட்டோர் தமது ஆய்வுகளில் குறிப்பிட்டுச் செல்கின்றனர். இதனை மெய்ப்பிக்கும் விதமாக நச்சினார்க்கினியரின் பத்துப்பாட்டு நூல்களுக்கான உரைப்பகுதியின் இறுதிப்பகுதி அமைகிறது. ஒவ்வொரு நூலின் இறுதியிலும் அந்நூலில் பல்வேறு இடங்களில் உள்ள பல்வேறு சொற்களை ஒருங்கே தொகுத்துத் தருகின்றார். இச்சொற்கள் ஏன் இவ்வாறு ஒவ்வொரு நூலின் இறுதியிலும் உரையாசிரியரால் தொகுத்துத் தரப்பட்டுள்ளது என்று பார்த்தால், அது அந்தப் பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட நூலின் ஒட்டுமொத்த விளக்கத்தை அளிப்பதாக உள்ளது.

 சான்றாக பொருநராற்றுப்படை நச்சினார்க்கினியர் உரையின் இறுதிப்பகுதி: பொருந(3), கோடியர் தலைவ, கொண்டதறிந (57), புகழ் மேம்படுக (60), ஏழின்கிழவ (63), காடுறை கடவுட்கடன் கழிப்பிய பின்றை (52), நெறிதிரிந்தொராஅது (58), ஆற்றெ திர்ப்படுதலும் நோற்றதன் பயனே (59), போற்றிக் கேண்மதி (60) நின்னிரும் பேரொக்கலொடு (61), பசி ஓராஅல் வேண்டின், நீடின்று (62), எழுமதி (63), யானும் (64), இன்மை தீர வந்தனென் (129), உருகெழு குருசிலாகிய (131), உருவப்பஃறே ரிளையோன் சிறுவன் (130), கரிகால் வளவன் (148) நாடுகிழவோன் (248), குருசில், அன்னோன் (231), தாணிழன் மருங்கிற் குறுகி (149), மன்னர் நடுங்கத் தோன்றி (232), வாழியெனத் (231), தொழுது முன்னிற்குவிராயின் (150), நாட்டொடு (170), வேழம் (172), தரவிடைத் தங்கலோ விலன் (173) எனக்கூட்டி வினை முடிவு செய்க.

விளக்கம்: பொருநனே(3), கூத்தர்க்கெல்லாம் தலைவனே (57), பிறர் மனத்தில் உள்ளதைக் குறிப்பால் அறிபவனே (57), அடுத்தவர் புகழை அரசவைகளில் மேம்படுத்துபவனே (60), ஏழிசையின் கண்ணும் உரிமையுடையவனே (63), காட்டின் கண்ணே தங்குகின்ற தெய்வத்திற்கு மன மகிழ்ச்சியாகச் செய்யும் முறைமைகளைச் செய்து விட்ட பின்பு (58), வழியறியாமையினாலே இவ்வழியைத் தப்பி வேறொறு வழியிற் போகாதே, இவ்வழியிலே என்னைக் காண்டலும் நீ முற்பிறப்பிற் செய்த நல்வினைப் பயன் (59), யான் கூறுகின்றவற்றை விரும்பிக் கேட்பாயாக (60). பெரும் பசியோடு இருக்கும் நீயும் உன் சுற்றமும் 61), அந்தப் பசியைக் கைவிடுதல் விரும்புவையாயின் (62), காலநீட்டிப்பின்றி எழுந்திருப்பாயாக(63). செல்வம் பெற்ற யானும் (64), துன்பம் எப்போதும் இல்லை என்று வந்தேன் (129). உட்குதல் பொருந்திய தலைவன் (131), வென்ற வேலினையுடைய அழகினையுடைய பல தேரினையுடைய இளஞ்சேட் சென்னியுடைய புதல்வன் (130), கரிகால் வளவன் (148) காவிரி பாதுகாக்கும் நாடு தனக்கே உரித்தாம் தன்மையுடைய தலைவன் (248), யான் கூறிய அத்தன்மைகளையுடையோன் (231), அருளைத் தன்னிடத்திலே உடைய திருவடிகளை அண்ணிதாக நின்று சேர்ந்து வணங்கி (149), பகையரசர் நடுங்கும் படி விளங்கி (232), (இருக்கும் அவனை) வாழ்வாயாக (231), (எனக் கூறி) நும்முடைய வறுமை தோன்ற முன்னே நிற்பீராயின் (150), நாட்டோடு (170), யானை தருதல் (172), தொழிலிடத்தே நிலைபெறுதலை ஒழிதலின் (173) என்று அந்தச் சொற்களுக்கான உரைப்பகுதியைத் தொகுத்தால் நூலின் பொருள் முழுவதுமாகக் கிடைக்கிறது. ஒரு பிரதியைக் கலைத்துப் போட்டாலும் அது தன்னகத்தே விளக்கத்தை ஒளித்து வைப்பது என்பது மேலைநாட்டுக் கோட்பாடு மட்டும் அல்ல. அது தமிழ் மண்ணிலேயே பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மனப்பாடக் கல்வியின் அவசியத்தை உணர்ந்து பல அடிகளில் உள்ள பல்வேறு சொற்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை ஒருங்கு தொகுத்து அதன் விளக்கத்தை மாணவர்கள் எளிமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நச்சினார்க்கினியர் செய்த முயற்சி அவரை நவீன கோட்பாட்டியலின் முன்னோடியாக அடையாளப்படுத்துகிறது.

-முனைவர் பா. ஜெய்கணேஷ்

நன்றி : - thinamaNi

நவீனக் கோட்பாடுகளின் முன்னோடி - முனைவர் பா.ஜெய்கணேஷ்