Tuesday, October 9, 2012

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மழைப்பொழிவு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன் மக்களின் அன்றாடத் தேவையான குடிநீருக்கும் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.

சராசரியாக நிலத்தில் பெய்யும் மழையில், 40 சதவீதம் நிலத்தின் மேல் ஓடி கடலில் கலப்பதாகவும், 35 சதவீதம் வெப்பத்தால் ஆவியாகிவிடுவதாகவும், 15 சதவீதம் மட்டுமே பூமியால் உறிஞ்சப்படுவதாகவும், 10 சதவீதம் மண்ணின் ஈரப் பதத்திற்கு உதவுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

மணற்பாங்கான அல்லது படிவப் பாறைகள் உள்ள பகுதிகளில் மழைநீரில் 12 முதல் 15 விழுக்காடும், பாறைப் பாங்கான பகுதிகளில் 4 முதல் 6 விழுக்காடும், நிலத்தினுள் இறங்குகிறது. நிலத்திற்குள் இறங்கும் நீரின் ஒரு பகுதியால் தாவரங்கள் பயனடைகின்றன.

மீதியுள்ள பகுதி வேர்மட்டத்துக்கு கீழேயுள்ள நுண்துளைகள் வழியாக இறங்கி, பின்னர் ஊடுருவ இயலாத கடினப்பாறை வரை சென்று தேங்குகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு 30 முதல் 40 மீட்டர் ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் இன்று 100 மீட்டர் முதல் 200 மீட்டருக்குக் கீழே உள்ளது.

ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடை மழையாலும், ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் தென்மேற்குப் பருவ மழையாலும், அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவ மழையாலும் ஓராண்டுக்கு ஏறத்தாழ 45 நாள்களில் பெய்யும் சராசரி மழை 65 சென்டி மீட்டர் மட்டும்தான்.

இந்த மழை நீர் நிலப்பரப்பின் மீது வழிந்தோடும்போது, அதைத் தேக்கி நிறுத்தும் நீர்நிலைகளும் குறைவு. கசிவுநீர்க் குட்டைகள், மிகுதியான மழையால் பெருக்கெடுத்து வழியும் நீரைத் தடுத்து நிறுத்தித் தேக்கி, நிலத்தடி நீரைப் பெருக வைப்பவை. பாசனக் குட்டைகளில் தேங்கும் நீர் நீண்ட நாள்கள் நிலைத்து வாய்க்கால்கள் மூலம் ஆயக்கட்டுப் பாசனத்துக்கு பயன்படுத்தப்படும்.

கசிவுநீர்க் குட்டைகளில் நிரம்பிய நீர், நிலத்தடி நீராகப் படிப்படியாக இறங்கும். இதனால் மண் - பாறைகளின் அமைப்பைப் பொருத்தும் நிலத்தடி நீர்மட்டத்தைப் பொருத்தும் கிணறுகளில் நீர் பெருகும். நிலத்தடி நீரைப் பெருக்கக் குளங்கள், குட்டைகள், ஏரிகள் இன்றியமையாதவை. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள், நீர்வரத்துக் கால்வாய்கள் பல ஆண்டுகளாக தூர் எடுக்கப்படாத நிலையில் உள்ளன.

குளங்களில் உள்ள மடைகள் பழுதால் மழைக் காலங்களில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் தொடர்ந்து வெளியேறி ஓரிரு மாதத்திற்குள்ளேயே குளம் வறண்டு விடுகிறது.

பெரும்பாலான குளங்களின் நீர்வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி குடியிருப்புகள் பெருகியுள்ளன.

அடுக்கு மாடிக் கட்டடங்கள் மற்றும் வீடுகளைச் சுற்றியுள்ள தெருக்களில் திறந்த வெளிகளை சிமென்ட் தளங்கள், தார்ச்சாலைகள் அமைத்தும் மூடி விடுவதால், இங்கு பெய்யும் மழைநீர் முழுவதும் பயனில்லாமல் சாலைக்கு ஓடி, கால்வாய்கள் மூலமாக சாக்கடையுடன் கலக்கிறது.

இதைத் தவிர்த்து நிலத்தடி நீரைப் பாதுகாக்க கட்டடங்களைச் சுற்றி ஆங்காங்கு 3 அடி ஆழமும், 12 அங்குல விட்டமும் கொண்ட குழிகள் அமைத்து அவற்றை கூழாங்கல், மணல் முதலியவற்றால் நிரப்பி துளைகள் இடப்பட்ட "சிலாப்'களைக் கொண்டு மூடி விடலாம்.

மழைப் பொழிவு குறைவாக உள்ள சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை நீரை நம்பியே வேளாண்மை உள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன்பே காரைக்குடி, கானாடுகாத்தான், தேவகோட்டை மற்றும் செட்டிநாட்டு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தங்களின் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளைக் கட்டி வைத்துள்ளனர்.
 
நிலத்தடி நீர் மட்டம் உயர மழைநீர் சேகரிப்புத் திட்டம் பயனுள்ளதாக இருக்கிறது. நிலத்தடித் தொட்டி, கிணறு, தெப்பக்குளம், குட்டைகளில் சேமிக்கப்படும் மழைநீர் நிலத்தடிக்கு உறிஞ்சிக் கொள்ளப்படுகிறது.
 மழைநீர் சேகரிப்புத் திட்டம் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், மழை வெள்ளத்தை மட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.

ஒரு கிணற்றுக்கும், மற்றொரு கிணற்றுக்கும் அமைப்பைப் பொருத்து 100 மீட்டர் முதல் 150 மீட்டர் இடைவெளி இருத்தல் வேண்டும். உறிஞ்சி எடுக்கப்படும் நீரின் அளவும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஆறுகள், ஓடைகள் உற்பத்தியாகும் மலைகளிலும் மலைச்சாரல்களிலும் உள்ள காடுகளை அழிப்பதைத் தடுத்து, காடுகள் பேணப்பட வேண்டும்.

கிராமங்களைச் சுற்றியுள்ள புறம்போக்கு நிலங்களில் மரங்கள் நடப்பட்டுக் காடுகள் வளர்க்கப்பட வேண்டும். குளங்கள், ஏரிகள் ஆகியவற்றில் தூர் எடுத்து, அவற்றைப் புதுப்பிக்க வேண்டும். பயன்படாத கிணறுகளில், மழைப் பெருக்கால் வழிந்தோடும் நீரைச் செலுத்தி நீர்மட்டத்தை உயர்த்தலாம். கட்டடங்களின் மேற்கூரைகளில் இருந்தும், சாலைகளிலும் வழிந்தோடும் மழைநீர் சாக்கடையில் கலக்காமல் நிலத்தடி நீரகத்தில் சேருமாறு திட்டமிடல் வேண்டும்.

மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அனைத்து வீடுகள், அனைத்து கட்டடங்களில் அமைக்க அரசு ஊக்குவிக்க வேண்டும். 

விண்ணின் மழைத்துளி - மண்ணின் உயிர்த்துளி, இன்றைய மழைநீர் - நாளைய குடிநீர், மழைநீர் காப்போம் என்ற முழக்கங்கள் யாவும் வெற்று முழக்கங்கள் ஆகிவிடக் கூடாது.                

”மழை நீரைச் சேகரிப்போம்” Oct 9, 2012 5:13 AM நன்றி :- தினமணி.

விண்ணின் மழைத்துளி - மண்ணின் உயிர்த்துளி - சு.இராமையா

+918376977756 எண்ணிலிருந்து  07-10-2012 அன்று எனக்கு வந்த செய்தி -  

வலைப்பூ அன்பர்களின்  

பார்வைக்கும்- இழப்பைத் தவிர்த்திடும் எச்சரிக்கை அறிவிப்பிற்கும் !

 INTERNATIONAL MONITARY FUND CERTIFIED YOUR BSNL NUMBER THE WINNER OF      1,000,000 EMAIL YOUR NAME, BSNL NUMBER, ADDRESS,  TO UNITED BANK LIMITED VIA UBLTD@LIVE.COM

1,000, 000/- 

அறிமுகமற்ற அந்நிய அழைப்புக்கள் வரும்பொழுது அவற்றை எதிர்கொள்ளச் சம்மத்தித்து விட்டால், சம்மதித்தவர் கணக்கிலிருந்து ரூபாய் 15/- தானாகவே எடுத்துக்கொள்ளப்படும்.

அறிமுகமற்றோர் அழைப்பை ஏற்றோருக்கு இழப்பு ரூபாய் 15/- நிச்சயம் !

யாழி நாவல் மறுபதிப்புக் குறித்து விவாதிக்க நாகர்கோவிலிலிருந்து  சென்னைக்கு வந்த அந்நூலின் படைப்பாளி மணி தணிகை குமார்.

யாழி நாவல் தொடர்பிற்கு :- 9443177764

ஆசைக்கு இடம் கொடுக்காதீர்! அந்நிய அழைப்பையும் ஏற்காதீர் !

Thursday, October 4, 2012

http://www.indiaeveryday.in/tamilnadu/fullnews-------1245-4508109.htm  

vebthuniyaa udpada anaiththiRkum wanRi :-

குவாலியரிலிருந்து 50,000 நிலமற்ற மக்கள் டெ‌ல்‌லி நோக்கி நீண்ட பேரணியை மேற்கொண்டனர்.

மத்திய பிரதேசத்தின் பழங்குடி உள்ளிட்ட கிராமப்புற சமூகங்களின் நிலமற்ற மற்றும் சிறு விவசாயிகள் சார்பாக நிலம் மற்றும் வன உரிமைகளை தங்களுக்கு வழங்க கோரி நிலம் மற்றும் வன உரிமைகள் சமூக இயக்கம் ஒன்று இந்த பேரணியை மேற்கொண்டது.

மத்திய பிரதேசத்தின் 25 மாவ‌ட்ட‌ங்களை‌ச் சேர்ந்த சுமார் 50,000 பொது மக்கள் தங்கள் கைகளில் ''ஜன சத்தியாகிரகம் "என்ற பதாகைகளை ஏந்தி குவாலியரிலிருந்து புது தில்லி நோக்கி நீண்ட பேரணியாக சென்றனர்.
வறுமை குறைப்பு, நிலம் மற்றும் வாழ்வாதார உரிமைகள் அனைத்து மக்களின் சுதந்திர‌ம் என்ற கருத்துக்களை மத்திய அரசுக்கு முன்வைத்து அவர்கள் பேரணியயை அறவழியில் மேற்கொண்டனர்.

மேலும் படிக்க

டெல்லி: கடத்தப்பட்ட இன்ஜினியர் கொலை
தீவிரவாத முகாம்களை அழிக்குமாறு பாகிஸ்தானை வற்புறுத்த வேண்டும்-அத்வானி
டெல்லி : மாநகராட்சி தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி
ஐ.‌ஜி. ‌பிரமோ‌த்குமா‌ர் டெ‌ல்‌லி‌யி‌ல் கைது?
ஏர் இந்தியா விமானிகள் ஸ்ட்ரைக் சட்டவிரோதமானது-கோர்ட்
நிலமற்ற மக்கள் பேரணி, டெல்லி  

டெசொ தீர்மானமும் கருனாநிதியும் :-

டெசோ தீர்மான‌த்தை இ‌ந்‌தியா ஆத‌ரி‌க்க வே‌ண்டு‌ம் - கெ‌‌ஞ்சு‌ம் கருணா‌நி‌தி
''டெசோ மாநாட்டின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்'' என தி.மு.க தலைவர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.

டெசோ தீர்மான‌த்தை இ‌ந்‌தியா ............கெ‌‌ஞ்சு‌ம் கருணா‌நி‌தி !

80 கி.மீ.தூரத்தில் மதுரை விமான நிலையக்.

80 லி.மீ. தூரச்த்தில் பழனி இரயில் நிலையம்.

திண்டுக்கல்- பழநி மார்க்க்த்தில் உள்ள ஒட்டன் சத்திரம் ரயில் ,நிலையம் 23 கி.மீ.தூரம்.

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் வழியில் 25 கி.மீ. தூரத்தில் அம்பாத்துரை, 

திண்டுக்கல் ஆத்தூர் வழித்தடத்தில் 34 கி.மீ. கொடைக்கானல் ரோடு ரயில் நிலையம்

திண்டுக்கல். நிலக்கோட்டை 36 கி.மீ. மதுரை ரயில் நிலையம்

Tamil Nadu,Madurai,Madurai East
75 KM near.
Major Near By Railway Station that connects to Maximum Number of Main stations in India. 

இயற்கையை நேசிக்கும் அன்பர்களுக்காக ஒரு பதிவு ! நன்றி சொல்வோம் தினமலருக்கு !

ஆண்டுதோறும் பூத்துக் குலுங்கும் “பிராமிலோ “ தடியங்குடி எங்கே உள்ளது ? “

80 கி.மீ.தூரத்தில் மதுரை விமான நிலையக்.

80 லி.மீ. தூரச்த்தில் பழனி இரயில் நிலையம்.

திண்டுக்கல்- பழநி மார்க்க்த்தில் உள்ள ஒட்டன் சத்திரம் ரயில் ,நிலையம் 23 கி.மீ.தூரம்.

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் வழியில் 25 கி.மீ. தூரத்தில் அம்பாத்துரை, 

திண்டுக்கல் ஆத்தூர் வழித்தடத்தில் 34 கி.மீ. கொடைக்கானல் ரோடு ரயில் நிலையம்

திண்டுக்கல். நிலக்கோட்டை 36 கி.மீ. மதுரை ரயில் நிலையம்

Tamil Nadu,Madurai,Madurai East
75 KM near.
Major Near By Railway Station that connects to Maximum Number of Main stations in India. 

இயற்கையை நேசிக்கும் அன்பர்களுக்காக ஒரு பதிவு ! நன்றி சொல்வோம் தினமலருக்கு !

வண்டலூர் பி.எஸ்.அப்துர் ரகுமான் பல்கலைக்கழக கணினி பயன்பாடு துறையின் சார்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்க குறுந்தகடு வெளியீட்டு விழாவில் (இடமிருந்து) பி.ஷேக் அப்துல் காதர், துணைவேந்தர் வி.சங்கரநாராயணன், திரிசீ டெக்னாலஜி இயக்குநர் கோகுல் விஸ்வேஸ்வரன், உதவி பேராசிரியர் ஏ.முகமது அப்பாஸ்.

சென்னையை அடுத்த வண்டலூர் பி.எஸ்.அப்துர்ரகுமான் பல்கலைக்கழகத்தின் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் மொபைல் போன் தொழில்நுட்பத்தில் இன்றைய வளர்ச்சி குறித்த தேசியக்கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கில் அன்ட்ராய்ட் மொபைல் போன் தொழில்நுட்பத்தில் மூன்று வகை அதிநவீன செயல்பாடுகளை உருவாக்கிய மாணவர் பங்கஜ்குமார் மிஸ்ராவைப் பாராட்டி ரொக்கப்பரிசும்,சான்றிதழும் வழங்கப்பட்டது.

சாம்சங் மொபைல் கையாண்டுவரும் அன்ட்ராய்ட் தொழில்நுட்பச் செயல்பாடு முறைப்படி, அவசர உதவிக்காக அருகில் உள்ள காவல்நிலையம், தீயணைப்பு நிலையம், மருத்துவமனைகள் உள்ளிட்ட தகவல்களையும்,வாடிக்கையாளர் சேவை மூலம் செல்லும் இடங்கள் பற்றிய வரைபடத் தகவல்களும், வணிகச் சேவை மூலம் கூரியர் சேவை, ஓட்டல் சேவை உள்ளிட்ட தகவல்களையும் உள்ளடக்கிய மூன்று வகை செயல்பாடுகளை தனது ஆய்வின் மூலம் மாணவர் பங்கஜ்குமார் உருவாக்கி இருந்தார்.

கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவர் பி.ஷேக்அப்துல் காதர், திரிசீ டெக்னாலஜீஸ் இயக்குநர் கோகுல் விஸ்வேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நன்றி :-தினமணி

அன்ட்ராய்ட் மொபைல் போன் தொழில்நுட்பத்தில் மூன்று வகை அதிநவீன செயல்பாடுகளை உருவாக்கிய மாணவர் பங்கஜ்குமார் மிஸ்ரா ! !

Wednesday, October 3, 2012

மெய்தீண்டாக்காலம் என்று ஒரு வர்மம் உள்ளது. இந்த வர்மம் மூலம், எதிரியின் உடம்பில் அடி, இடி, குத்து, தாக்கு, இவை ஒன்று கூடச் செய்யாமல் எதிரியை வீழ்த்த முடியும்.

ஆகவே, தற்காலத்தில் காணப்படும்,” மெஸ்மெரிசம் “  என்ற கலையானது இந்தக் கலையிலிருந்து வளர்ந்த ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.

அறுவை மருத்துவத்திற்கும், வர்மத்திற்கும் இடையே முக்கியத்துவம் உள்ளது. எவ்வாறெனில், அமுத நிலைகளை வர்மம் குறிக்கும்.

இந்த வர்மத்தைப்பற்றிய ஞானமில்லாமல் அறுவை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்வது நல்லதல்ல. இதனால், வர்மஸ்தானத்தில் காயம்பட்டால் உடல் நிலைக்காது. அப்படியே பிழைத்தாலும் பிற்காலத்தில் அவன் குறுகிய காலத்தில் உயிரிழக்கக்கூடும் என்கின்றனர்.

இதனால், அறுவை மருத்துவருக்கு வர்மம் பற்றிய அறிவு தேவை என்று கூறுகின்றனர்.                                             

நவீன மருத்துவம் ஓங்கி வளர்ந்துவிட்ட போதிலும், இதை அவர்கள் அறியாதவர்களாகவே உள்ளனர். இதனால் நாட்பட்ட வர்மத்தினால் ( வர்மத்தை இளக்காமல் முற்ற விட்டால் ) வாதம், சூலை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இவற்றை நவீன மருத்துவ வல்லுநர்கள் சிகிச்சையளித்துக் குணப்படுத்த முடியாமல், இது இறைவன் சோதனை எனக் கைவிட்டு விடுகிறார்கள். ஆனால், வர்ம மருத்துவம் வர்மத்தினால் ஏற்படும் ஒவ்வொரு நோயையும் குணப்படுத்துகிறது.

அடிபடக்கூடாத வர்மப்பகுதிகளில் அடிப்[அட்டவுடன் சிறந்த வர்மக் கலை தெரிந்த மருத்துவரிடம் சென்று, வர்ம இளக்குமுறை செய்யாததினால் எத்தனையோ மனிதர்கள் கால், கை விளங்காமல் நடைப்பிணமாய் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.    

ஆகவே, இவ்வளவு ம்சிறப்புடைய முன்னோர்கள் கூறிய வர்ம மருத்துவ நூல்களை எல்லாம் ஒன்று திரட்டி, அவற்றின் செய்திகளை ஆராய்ந்து, தொகுத்து வெளி உலகுக்குக் கொண்டு வந்தோமானால் இவ்வாறு நடைப் பிணமாகக் காணப்படும் மனிதர்களை வாழவைக்க முடியும்.

அதோடு மட்டுமல்லாமல் எதிர் வரும் காலங்களில் சித்த மரிஉத்துவத்தில் அவசரகாலச் சிகிச்சை போதுமான அளவு இல்லை மென்ற நிலையை மாற்றி,  
சித்த மருத்துவத்திற்குப் பெருமை சேர்க்கலாம்.
.......................................................................................................................................................................................                  வெள்ளி விழா ஆண்டுமலர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை

வர்ம மருத்துவம் ஓர் அறிமுகம்- டாக்டர்.பி. முருக கணபதி, சுவடி இயல் மாணவர்.
    
-------------------------------------------------------------------------------------------------------------------

--அந்தக்கால சினிமாவில் சில காட்சிகள் இடம் பெற்றிருக்கும். சாகக் கிடக்கும் தொண்டு கிழமான அரசன், பாட்டுப்பாடிக்கொண்டே வரும் பித்தரைப் போன்ற சித்தர் சில மூலிகைகளத் தன் துணி மூட்டையிலிருந்து எடுத்து கசக்கிப் பிழிந்து சாறாக்கி அந்த அரசனின் வாயில் சொட்டுச் சொட்டாக ஊற்றிவர, அரசன் துள்ளி எழுந்து இளவரசனாகிவிடுவான். இவை வெறும் கற்பனை மட்டுமல்ல, நடந்த, நடைபெற்ற உண்மையும் கூடத்தான். !

பாலச்சந்தர் ஒரு படத்தில் கணவனே, மனைவியை உயர் அதிகாரி வீட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டு வந்து, மீண்டும் அழைத்து வருகையில் அவன் விரும்பிய வண்ணம் காண்ட்ராக்ட் கையொப்பமிடப்பட்டிருக்கும்.. நடந்த-நடக்கும் உண்மைகள்தானே திரைப்படமாகவும் பிறப்பெடுக்கின்றன./

.............................................................................................................................................................................

சித்தமருத்துவம் மீண்டும் சிகரத்தைத் தொடும் காலம் வெகு தொலைவில் இல்லை!.

............................................................................................................................................................................

மெய்தீண்டாக் காலத்தின் வளர்ச்சியே மெஸ்மெரிசம்- அமிர்த நிலைகளின் புரிதலே சித்த மருத்துவத்தின் புதுப்பிறப்பு !.......? பகுதி --2.

சித்தர்கள் நோய்களின் மூல காரணங்களைக் கண்டறிந்து , அவற்றைப் பல பகுதிகளாகப் பிரித்து , பரிகாரம் செய்தனர்.

அவற்றில் ஒன்றுதான் வர்ம பரிகாரம் ஆகும்.

வர்ம மருத்துவம் சித்த மருத்துவத்தில் தனித்தன்மை பெற்றதோடல்லாமல் ஒரு சில அவசர காலச் சிகிச்சையில் உதவும் சிறப்புடையது.

 “அரும்பு கோணிடில் அதுமணம் குன்றுமோ
  கரும்பு கோணிடில் கட்டியும் பாகுமாகும்
  இரும்பு கோணிடில் யானையை வெள்ளலாம்
  நரம்பு கோணிடில் நாமதற்கென் செய்வோம் “  இதற்கும் பதிலளிக்கின்றது
 சித்த மருத்துவம்.

வர்மம்

நம் உடலில் இருக்கின்ற உயிர்நிலை இடங்களாக இருக்கும் குறிப்பிட்ட இடங்களுக்கு வர்மம் எனப்பெயர். இவ்விடங்கள் இரகசியமாகவே வைக்கப்பட வேண்டியவை. ஆகவே, இதனை மர்மம் எனவும் கூறுவர். இதனைக் காலம், அடக்கம், சூட்சம், வன்மம், ஏமம் என்ற வேறு பெயர்களாலும் வழங்குவர்.

வர்மத்தைப் பல்வேறு வர்மானிய நூல்கள், பலவகையாகக் கூறினும், படு வர்மம் 12, தொடுவர்மம் 96 ஆக மொத்தம் 108 வர்மங்களையே முக்கியமாகக் கருதுகின்றனர். இவ்வாறு உள்ள வர்மம் எவ்விதங்களிலெல்லாம் உண்டாகிறது என்பதை

“ முறிவுசாரி “ என்ற நூலில்,

 “கேளப்பா தடியடிகள் படுத லாலும்
        கெடியான எறிவிசைகள் கொள்ள லாலும்
 வாளப்பர் கட்டை குற்றி தட்ட லாலும்
        மாற்றானின் கைப்பிடிகள் படு தலாலும்
 மேலப்பா ஆகாச மதிலே நின்று
        மெய்மறந்து கைமறந்து விழுத லாலும்
 தாளப்பா பற்பலவாம் விதத் தினாலே
             சங்கையில்லாக் காலமது சாருந் தானே.”

 -எனக்  கூறப்பட்டுள்ளது.
       
ஆகவே, வர்மம் உள்ள இடங்களில் தாக்கு, காயம், குத்து, வெட்டு, தட்டு, இடி, உதை ஆகையவற்றில் ஏதேனும் ஒன்று படும்போது வலி, விதனம், வீக்கம், இரத்தம் வெளிப்படுதல், மறத்துப் ,போதல், உறுப்புகள் செயலிழத்தலோடு மரணமும் சம்பவிக்கும். இதனையே வர்மம் கொண்டிருக்கிறது எனக் கூறுகிறோம்.      

வர்மமும் அவசர கால சிகிச்சை வர்மமும்

வர்மம் கொண்ட ஒருவர்க்கு  “ இளக்கு முறை “ எனும் பரிகாரம் செய்யவும். ஒவ்வொரு வர்மத்திற்கும் ஒவ்வொருவகையான பரிகாரம் உண்டு. இருப்பினும், எல்லா வர்மங்களுக்கும் பொதுப்பரிகாரம், வர்மம் கொண்டவரை தரையில் கால் மடக்கி இருக்கச் செய்து ( சம்மணம் போட்ட நிலையில் ) பதமாக உச்சியில் மூன்று தட்டுத் தட்டிச் சிரசினை முன்பின் அசைத்துத் திருப்பி, நரம்பெல்லாம் தடவி, பின்னி மார்போடணைத்துத் த்கூக்கி உதறிவிட உணர்வு பெற்று விடுவர். பெரும்பாலும் நோயாளிகள் இதில் நலம் பெற்று விடுவார்கள்.

பின்னர் அவர்களுக்குரிய மருந்துகளாக எண்ணெய், நெய், தைலம், பொடி, மாத்திரை, நசியம் என்பவற்றைக் கொடுக்கலாம்.

இவற்றிற்குச் சரியாகாவில்லையெனில், அடங்கல் புள்ளிகளைத் தூண்டிச் சரி செய்யலாம். அடங்கல் என்பது வர்மங்களில் அடிபட்டு உயிர் உடல் பூராவும்  சமச்சீராகப் பரவிநில்லாமல், உள்ளடங்கி நிற்கின்றபோது, அடங்கி நிற்கும் அவ்வுயிரை உடல்பூராவும் சலித்து நிற்கும்படிச் செய்வதற்காஜ்கத் தூண்டப்படும் சில ஸ்தலங்கள் ஆகும். இவர்களை உடலின் திறவு கோல்கள் என்று கூடக் கூறலாம்..                   

அடங்கல் புள்ளிகள் பலவகையாகக் கூறப்படினும், அதில் நாம் முக்கிய 9 புள்ளிகளை மட்டும் கூறுகின்ரோம். இவற்றில் ஏதேனும் ஓர் அடங்கல் புள்ளியைத் தூண்டிவிட மயக்கமுற்ற ஆள் நிச்சயம் தெளிவடைவான்.

இவை செய்வதற்குமுன், சாத்தியக்குறிகுணங்கள் உள்ளனவா ? சாத்திய வர்மத்தில் அடிபட்டுள்ளதா என்பதை அறிய வேண்டும்.

சாத்தியக் குறி குணங்கள்

1. கை, கால், பெருவிரல், நகக் கண்ணின் கை கொண்டு பலமாய் நசுக்கினால் உணர்வு உண்டாகும்.

2. விலாக்கடை வயிற்றெலும்பு கடைசிக் கொழுந்தருகில் ( வீமனொளி ) கை கொண்டு பிடித்து பிடித்துக் குலுக்கினால் சத்தம் கொடுக்கும். கண் விழிக்கும்.

3.  காது பொன் தண்டருகில் ( வாலி ஒலி ) கைப் பெருவிரல் கொண்டு ஊன்றி இருத்தித் தூக்கினால் கண் விழிக்கும். சத்தம் கொடுக்கும்.                    

சாத்திய வர்மங்கள்

கை கால்களில் உள்ள எல்லா தொடுவர்மங்களுமே இவ்வகையாகும். இவற்றில் உள்ள வர்மப் பகுதியில் அடிபட்டால் ஆளை எழுப்பி உயிர் பிழைக்க வைத்து விடலாம்.

இளக்கு முறை செய்யக்கூடாத அறிகுறிகள்

1.அடிபட்டதும், கண் விழி பிதுங்கிப் பார்வை நிலைகுத்திக் காணப்பட்டாலும்,

2. அடிபட்டுச் சுக்கிலம் ( விந்து ) வெளியே சிதறினாலும்,

3. அடிபட்டவனின் வாய்வழியே நீருய்ம், இரத்தமும் கசிந்தாலுஇம், அவனை இளக்குமுறை ம்செய்து எழுப்புதல் கூடாது.                           

அசாத்திய வர்மங்கள்

சில வர்மப் பகுதியில் அடிபட்டால் அவற்றிற்குரிய குறிப்பிட்ட நாழிகைக்குள் இளக்கு முறை ம்செய்து எழுஒப்பாவிடில் ஆள் மரணமடைவான். மற்றும், அவ்வர்மங்களில் மிகக் கடினமான ( மாத்திரைக்கு மிஞ்சி ) அடிபட்டால், நாடிகை கூடப் பார்க்க வேண்டாம். ஏனெனில் உயிர் பிழைக்காது.

படு வர்மம்- 12, தொடு வர்மத்தில் வயிறு, மூக்கு,,பெரு மூளை, மார்புகிய பகுதிகளில் உள்ள வர்மங்கள் , ஆகிய இவையே அசாத்திய வர்மங்களாகும்.

நாடியும் மாத்திரையும்

இளக்குமுறை செய்யுமுன் அடிபட்டவனின் நாடியையும், மாத்திரையும் காண வேண்டும். நாடியானது உடலில் ஏற்படும் உட்புற, வெளிப்புற அதிர்ச்சிகளையும் அந்த அதிர்ச்சிகளின் காரணமாக உடல்நிலை எப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நாடி மூலம் அறிந்து  அதற்கேற்றால்போல் இளக்குமுறை செய்யலாம். வர்மம் பட்டபிறகு வாத நாடி பம்மிப் போகும்.                                                                                

இதேபோல் மாத்திரையையும் அறியவும், மாத்திரை என்பது வரெமப் பகுதியில் தாக்கப்படும் அளவினைப் பொறுது, அதன் அளவு மாறுபடும். இதனால் வர்மப் பகுதியில் தாக்கப்படும் அளவினை அற்ந்துகொள்ளலாம். இது 1/4, 1/2, 1 உச்சி என நான்காகக் கூறலாம். உதாரணமாகத் திலர்த வர்மப்
( நெற்றிப்பொட்டு ) பகுதியில் ஒரு குன்றிமணி  பதியும் அளவு தாக்குதல் ஏற்படின் அது முழு மாத்திரை வர்மம் கொண்டதாகக் கொள்ளவேண்டும்.

ஆகவே, மாத்திரை அளவுகளில் வன்ம அடிபட்டால் இளக்குமுறை செய்யலாம். மாத்திரை அளவுகளுக்கு மிஞ்சி அடிபட்டால் இளக்குமுறை செய்தல் கூடாது. எனவே, இவற்றை இளக்குமுறை செய்தல் கூடாது. எனவே, இவற்றை இளக்குமுறை செய்வதற்கு முன் நன்றாகப் பார்க்கவேண்டும்.     

வன்மத்தால் வரும் நோய்கள்

படு வர்மத்தில் அடிபட்டாலே குறிகுணங்கள் தோன்றும். ஆனால், தொடு வர்மப் பகுதியில் அடிபட்டால் அவ்விடத்தில் அடிபட்ட ஒன்றிரண்டு நாட்களில் வேட்6ஹனை குறைந்துவிடும். ஆனால், குறிகுணங்கள் இராது. ஆகவே, எந்த இடத்தில் அடிபட்டாலும் உடனே வர்ம மருத்துவரிடம் காட்டிச் சிகிச்சை செய்யவும். இல்லையேல் வர்மம் இளக்கப்படாமல் இருந்தால் பல நோய்கள் வரும். அவை:_

இளைப்பு, நீரிழிவு, எடு ரோகம், நீர் செறுப்பு, எலும்புருக்கி, நெடுஞ்செரிப்பு, ஏங்கிளைப்பு, பக்கவாதம், காசம், பைத்திய ரோகம், காய்ச்சல் மண்டையிடி, மார்தடுப்பு, மந்த காசம், முற்றின ஈளை, நரம்புத் திமிர், மூளை ரோகம், மூலச் சூடு. --- ஆகியவை வரும். இவை வராமல் தடுக்க அடிபட்டவுடன் தக்க சிகிச்சை செய்யவேண்டும்.                                                

குணமாகும் நோய்கள்  

சகன வாதம், சந்தவாதசூலை, பக்க வாதம், பூட்டு ந்நழுவல், இளம்பிள்ளை வாதம், என்பு முறிவு ( எலும்பு முறிவு ) போன்ற நோய்களில் வர்ம சிகிச்சை சிறப்பாகச் செயல்படும்.. இதில் உள்ள “ தடவல் முறை  ( தொக்கணம் ) “  மிகவும் நல்ல பலனை அளிக்க வல்லது.

இதனைச் சித்தர் அறுவை மருத்துவம்.,

“ தொக்கணத்தினாலிரத்தந் தோல் ஊனிவைகட்கு
 மிக்க செளக்கியஞ்ச மீரதும்போ - மெய்க்கதிக
 புட்டியுறக்கம் புணர்ச்சி யிவை கதிக்கும்
 பட்ட அலைக்கல்லும் பார் “  என்ற பாடல் வரிகளால் அறிவிக்கின்றது..

வர்மமும் சித்த மருத்துவமும்

வர்மமானது சித்த மருத்துவத்துடன் இணந்தே உள்ளது. சித்தர்கள் கூறிய ஆறு ஆதாரங்களிலும் வர்மப்புள்ளிகள் அமைந்துள்ளன.  

1. மூலாதாரம்               - கல்லிடை வர்மம்

2. சுவாதிட்டானம்       - அன்னக்காலம்.

3. மணிப்பூரகம்            -  உறுமிக்கால வர்மம்.

4. அனாகதம்                   - நிவளைக்காலம்

5. விசுத்தி                          - தும்மிக்காலம்

6. ஆக்கினை                    - திலர்த காலம்    என அமைந்துள்ளன.      

மற்றும், ஒவ்வொரு குறிப்பிட்ட திதியில், உடலில் அட்டை விழக்கூடாத இடங்கள் உள்ளன. அந்த இடங்களில் கீழ்க்கண்டவாறு வர்ம நிலைகள் அமைந்துள்ளன. அவை:-

கால் பெருவிரல்       -பூழிக்காலம்
உள்ளங்கால்           -வெள்ளைவர்மம்
முழங்கால்            -சன்னி வர்மம்
தொடை              - ஆமைக்காலம்
நாபி                  - அன்னக்காலம்
மார்பு                 - தூகிகவர்மம் எட்டு
கழுத்து               - சங்கு திரிக்காலம்
நெற்றி               -  மூர்த்தி வர்மம்
புருவம்              -  மேல்மந்திரக்காலம்
பிடரி                -  பிடரி வர்மம்
உச்சி                -  கொண்டைக் கொள்ளி வர்மம்.                  

என அமைந்த்குள்ளதால் குறிப்பிட்ட திதிகளில் ஒவ்வொரு வர்மத்தையும் சுற்றியுள்ல துணை வர்மங்கள் ( அமிர்த நிலைகள் ) மேலெழுந்த வாரியாகக் காணப்படும். ஆகையால், அக்குறிப்பிட்ட திதிகளில் அவ்விடங்களில் அட்டைவிடில் மிகுந்த உதிரப்போக்கையும் ஏற்படுத்தும். இவ்வகையில் வர்ம மருத்துவம், சித்த மருத்துவத்தில் இணத்து அதற்குச் சிறப்பை உண்டாக்குகின்றது.

நம் உடலில் அமைந்துள்ள வர்ம நிலைகளை, நவீன அறிவியலுடன் ஒப்பிடும்பொழுது சில வர்ம நிலைகள் அமைந்துள்ள பகுதிகள்  முக்கியமான்ம பகுதிகளாகவே காணப்படுகின்றன. இதனால்தான் வர்மமானது இரகசியமாகவே வைக்கப்பட்டிருப்பது தெரிகின்றது.       

நம் வாழ்வில் வர்மம்

வர்ம மருத்துவ மட்டுமில்லாமல், நம் அன்றாட வாழ்விலும் நற்பயனுக்காகப் பயன்படுத்துகிறோம்.

1.நடு விரலில் மோதிரம் மணிவதால் நுரையீரல்களையும்,

2. மோதிர விரலில் மோதிரம் அணிவதால் இதயத்தையும்,

3. சிறு விரலில் மோதிரம் அணிவதால் மூளையையும் பலப்படுத்திக் கொள்கிறோம்

4. காதில் காதணி, காலில் மெட்டி அணிவதும், சில நன்மைகளைக் கருதியே ஆகும்.

பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கலோ, வீட்டில் பெற்றோரோ குழந்தைகளைக் கோபத்தில் பிரம்பால் தலையில் தட்டுவது, கன்னத்திலே அறைவது, உச்சியில் குட்டுவது போன்ற செயல்களால் அக்குழந்தைகளுக்குப் பிற்காலத்தில் பல நோய்கள் ஏற்பட அடிப்படைக் காரணங்களாகி விடுகின்றன.

வீட்டில் சண்டைய், கைகலப்போ ஏற்படும்போது, “ படக்கூடாத இடத்தில் பட்டு விடப் போகிறது “ எனப் பெரியவர்கள் எச்சரிப்பது, வர்மம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே இருப்பதை உணர்த்துகின்றன.

மருந்துகள்

வர்ம பரிகாரத்திற்கு உதவும் ம்சில முக்கிய மருந்துகள்

வர்ம நெய்                  வசவெண்ணெய்
வர்ம இளக்கத்திற்கு         சின்னத் திருமேனி எண்ணெய்  
வல்லாரை நெய்
அமுக்கிரா கஷாயம்         திருமேனி எண்ணெய்
செந்தெங்குக் கஷாயம்       வில்வ வேர்த் தைலம்
வர்மாணிக் குளிகை          வர்ம கருமுனித் தைலம்
வர்ம சந்தி மெழுகு       ---ஆகியவை ஆகும்.     

...............................................................................................................................................................................
 நன்றி :-உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. வெள்லி விழா மலர் 

டாக்டர்-அ.முஇருக கணபதி, சுவடி இயல் மாணவர், 1998.                                 

வர்மம்-சித்த மருத்துவம்- நம் வாழ்வில் வர்மம் -மருந்துகள் பகுதி-1

Tuesday, October 2, 2012

மூலநோயும் மருத்துவ முறைகளும்

உலக மக்கள்  தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ  ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

உடம்பில் ஏற்படும் எல்லாவிதமான வெப்பமும் வெளியேறும் இன்றியமையாட்த ஆசனத்துளை ( Anus)  இந்த இடத்திற்கு மூலாதாரம் என்று பெயர். எனவே, இங்கு ஏற்படும் நோயை மூலநோய் என அழைக்கின்றனர்.  ( சோமசுந்தரன் 18829 )

 மூல நோய் என்பது வாத, பித்த, கப மாறுபாட்டால் உடலிலில் உள்ள  தோலும் மாமிசக் கொழுப்புத் தாதுக்களும் திறந்து ஆசன வாயிலுள்ளும் வெளியிலும் மாமிச முளைகள் கண்டு குத வாயிலை அடைத்துத் துன்புறுத்துவக்கூடியது. மூல நோயானது தொற்று நோயன்று. மலச் சிக்கலாலும் மரபு வழியாகவும் தோன்றக் கூடியது. ( சிதம்பர தாணுப்பிள்ளை என். 198263 )   ,

மூல நோயை வகைப்படுத்துவதில்  பல்வேறு மருத்துவ நூல்களும் ,  ஆறு, எட்டு, ஒன்பது, இருபத்தொன்று எண்ணிக்கையில் வேறுபட்டு நிற்கின்றன. ஆனால் அலோபதி ( Allopathy )  மருத்துவ நூல்கள்  உள்மூலம், ( Internal piles ) , வெளிமூலம் ( External piles ) , பவுத்திர மூலம் ( Fistula ) என்னும் மூன்று முறைகளையே குறிப்பிட்டு  விளக்கமளிக்கின்றன.

மூலநோய் குறித்துப்   சித்த, யுனானி, ஆயுர்வேதம் ஆகியவற்றினின்றும், அல்லோபதி  மருத்துவ முறை எவ்வாறு வேறுபட்டு நிற்கின்றது என்பதைக்  குறித்து  மருத்துவ நூல்களின்  வழி ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது. .

மூல நோய் தோன்றுவதற்கான அறிகுறிகள் -

 அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுதல், எப்பொழுதும் மலங் கழிக்கவேண்டும் என்பது போன்ற உணர்வு, மலமானது அதிகவலியுடன்  சிறிது சிறிதாக வெளியேறுதல், நாவின் சுவை குறைதல், காரச் சுவையில் மிகுந்த நாட்டம், தாகம்,  தலைவலி, ஆசனப்பகுதியில்  இரவு நேரத்தில் அரிப்பு, வாயில் புளிப்புச் சுவை, உடம்பு நாளுக்கும்நாள் இளைத்தல்,  ( தியாகராசன், இரா. பதி : 1976:141 ) போன்றவை மூல நோய் தோன்றுவதற்கான அறிகுகுறிகளாகும் .

மூலநோயும், பிற மருத்துவ முறைகளும் ( சித்த, யுனானி, ஆயுர்வேதம் ) 
சிலநூல்கள், பிற மூலம், ஆணி  மூலம், கதிர் மூலம், சீழ்மூலம், வாதமூலம், அல்லது இரத்த மூலம் என ஆறு வகையான மூல நோய்கள் உண்டு .                    (சுப்புலட்சுமி,  மு.     ( 1985.39 )       எனவும், சிலநூல்கள் உள்மூலம் வெளிமூலம், செண்டு மூலம், சீழ் மூலம், சீழ் மூலம், இரத்த மூலம், சலமூலம், ஆணிமூலம் கிரந்தி மூலம் ( சூசைஉராஜா , ஏ. 1981: 105 ) எனவும் குறிப்பிடுகின்றன.

இவ்வகைப்பாட்டில் உள்ளவை அனைத்தும் பெரும்பாலான மருத்துவ நூல்கள் குறிப்பிடும் இருபச்த்தோருவகையான மூல நோய்கள்  என்ற வகைப்பாட்டில் அடங்குவனவாக உள்ளன.    
21 வகையான மூலநோய்கள் :-

 1. நீர் மூலம். தொப்புளில் வலி உண்டாதல். மலம் வருதல். ஆசனவாய் வழியாக நீர் பெருகுதல் பொன்றவை காணப்படும்.

2. செண்டு மூலம் . ஆசனப் பகுதியில் கருணைக் கிழங்கு முளையைப் போல் உண்டாகி, இரத்தமும் நீரும் கசிந்து வலி ஏற்பட்டு ஆசனவாய் சுருங்கும். 

இவைகள் குணமாக முள்லிவேர், பிரண்டைவேர், கற்றாழை வேர், கடுக்காய், சுக்கு, மிளகு, வெள்ளைப் பூண்டு ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து அரைத்துப் புளித்த மோரில் கரைத்துக் கொடுக்கவேண்டும். ( தியாகராசன், பதி, 1876 : 142 )

3: முளை மூலம் :- ஆசனப் பகுதியில் மஞ்சளின் முளையைப்போல் ஒரு முளை உண்டாகி ஆசனவாய் சுருங்கி இரச்சலுடன் இரத்தம் இறங்கும். இதற்கு ஈருள்ளியைப் பன்றி நெய்யில் வறுத்து ஐந்து நாள் கொடுத்து வர குணம் காணலாம்.

21 வகையான மூலநோய்கள்

 1. நீர் மூலம் :- தொப்புளில் வலி உண்டாதல். மலம் வருதல். ஆசனவாய் வழியாக நீர் பெருகுதல் பொன்றவை காணப்படும்.

2. செண்டு மூலம் :- ஆசனப் பகுதியில் கருணைக் கிழங்கு முளையைப் போல் உண்டாகி, இரத்தமும் நீரும் கசிந்து வலி ஏற்பட்டு ஆசனவாய் சுருங்கும். 

இவைகள் குணமாக முள்ளிவேர், பிரண்டைவேர், கற்றாழை வேர், கடுக்காய், சுக்கு, மிளகு, வெள்ளைப் பூண்டு ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து அரைத்துப் புளித்த மோரில் கரைத்துக் கொடுக்கவேண்டும்.
 ( தியாகராசன், பதி, 1876 : 142 )

3 முளை மூலம் :- ஆசனப் பகுதியில் மஞ்சளின் முளையைப்போல் ஒரு முளை உண்டாகி ஆசனவாய் சுருங்கி இரச்சலுடன் இரத்தம் இறங்கும். இதற்கு ஈருள்ளியைப் பன்றி நெய்யில் வறுத்து ஐந்து நாள் கொடுத்து வர குணம் காணலாம்.                                          

4. சிற்று மூலம்.  ஆசன்ப்பகுதியில் சிறுமுளைகள் உண்டாகும்.                 

5. வறள் மூலம். அதிக வெப்பத்தாள்   உடல் உலர்ந்து ஆசனவாயினின்று இரத்தம் வெளிப்படும். வாழப் பழத்தில் சீரகப் பொடிஉஐக் கலந்து உண்டுவரக் குணமாகும்.      

6.இரத்த மூலம். ஆசன வாயிலிருந்து இரத்தம் வெளிப்பட்டுச் சோகையினால் கண்கள் மஞ்சளாகத் தோன்றும்/ வாழைப்பழச் சாற்றில் சீரகப் பொடியைக் கலந்துண்ணச் சரியாகும்.

7.சீழ் மூலம். உடல் வெளுத்து ஆசனவாயிலிருந்து சீழூம் நீரும் வெளிப்படும்.

8. ஆழிமூலம். ஆசனவாயில்  வள்ளிக்கிழங்குபோல் ஒருமுளைதோன்றிச் சீழும் இரத்தமும் வெளிப்படும்.

9. வாதமூலம். ஆசனவாயில் வாதுகைப் பூ போன்ற  முளை வளர்ந்து குடல் வலி , தலைவலி ஆகியவற்றுடன் வெண்மையான மலம் வெளிப்படும்.

10. தமரக மூலம். ஆசன வாயில் தாமரைப்பூ  போன்று தோன்றி இரத்தம் வெளிப்படும்.               

11. ஆசன வாயில் நெல் அல்லது பருத்து விதை போன்ற முளை உண்டாகி  மலகம் இறுகி இரத்தத்துடன் சிறிது சிறிதாக வெளிப்படும்.

12. சிலேத்தும மூலம். உடல் வெளுத்து ஆசனவாயில் வெண்மையான முளை தோன்றும்.

13. தொந்த மூலம். ஆசனவாய் குறுகிச் சிவந்து விரிந்து முளை தோன்றும் 

14. வினைமூலம். உணவு செரிக்காமல் அடி வயிற்றில் வலி ஏற்படும்.  புளியங்கொட்டையின் மேல்தோலை அரைத்துப் ப்பசுவின் பாலில் ஐந்து நாள் கொடுக்கக் குணமாகும்.

15.மேக மூலம். ஆசனவாயிலிருந்த்கு இரத்தமும் , சிறுநீரில் சர்க்கரையும், வெளிப்படும். வட்டத் துத்தியிலைச் சாற்றை நல்லெண்ணெயில் கலந்து கொடுக்கக் குணமாகும்.

16. பவுத்திர மூலம். ஆசனவாயில் கட்டி உண்டாகி சிறுநீர் அடிக்கடி வெளியேறும். 

17. கிரந்தி மூலம். மலம் வறண்டு இரத்தத்துடன் ஆசனவாய் வெடிக்கும்படி வெளியேறும். ஈருள்ளிச்சாறு , பசுவின்பால், ந்ய் ஆகியவற்றில் அதிமட்குரத்தக் கலந்து கொடுக்கக் குணமாகும்.

18. குத மூலம். ஆசன வாயில் மூங்க்லில் குருத்துப்போல ஒரு முளை வெளிப்பட்டு இரத்தம் வெளியாகும்  

19. புற மூலம். ஆசன வாயில் சீழும் பருப்புப் போனேஅ முளையும் உடலெங்கும் சிறங்கும் தோன்றும்.

20.கருக்கு மூலம். மலவாய் சுருங்கி, உடல்வெளுத்துக் குடல்வலியுடன் இரத்தமும் சீழும் வெளிஒப்படும்.

21.சவ்வு மூலம். அடிவயிற்றில் மூலம் மிகுதியாகி ஆசன வாயில் சவ்வுபோலச் சுற்றிச் சீழும் நீரும் கசியும்.  ( முல்லை. பி.எல். 1990 : 38 )

ஆவாரங்கொழுந்து , பூ, பட்டை, அறுகம் வேர் இவைகளைச் சம அளவில் எடுத்து நிழலில் உலர்த்தித் தூள் செய்து  பசுவின் நெய்யில் 48  நாட்கள் உட்கொள்ள ஆசனவாயுள் கரைந்துபோகுஇம். 

குறிப்பு :- 

 மேற்குறிப்பிடப்பட்டுள்ள 21 வகை மூலநோய்களுக்கும் தனித்தனியான மருத்துவ முறைகள் கூறப்பட்டுள்ளன. என்றாலும், கட்டுரையின் சுருக்கம் கருதி எளிமையான சில முறைகள் மட்டுமே இங்கு இடம் பெற்றுள்ளன.

மூல நோய்க்குரிய பொதுவான சில மருந்துகள்.

பிரண்டைக் கொளுந்தை அல்லது நாயுருவி இலையை அரைத்தது நல்லெண்ணெயைக்  கலந்து ஏழு நாட்கள் இருமுறை உட்கொள்ள மூல நோய் குணமாகும். ( தியாகராசன், இரா. பதி. 1978:155 )  

மூல நோயும் அல்லோபதி மருத்துவ முறையும் .

மூல நோயானது அல்லோபதி மருத்துவ முறையில் உள்மூலம், வெளிமூலம், பெளத்திர மூலம் என மூன்றாக வகைப்படுத்தப் பட்டுள்ளது.

1.உள் மூலம். ( Internal Piles )       

ஆசனத் துளையின் உட்பகுதியில் சவ்வு படர்ந்து மலம் கழிக்கும்போது உட்புறம் உள்ள தசைகள் உப்பி வெளிப்புறம் நீட்டும். இதனால் மலம் வெளிப்படுதல் சிக்கலாகி இரத்தம் வெளியேறும். இவ்வகை மலநோயினால் ஏற்படும் வலையினைப் போக்க எஹடன்ஸா, மெடித்தேன் போன்ற களிம்புகள் பயன்படுத்தப் படுகின்றன.  ( சோமசுந்தரன், அரு., 1988 - 11 )     

2.வெளி மூலம் ( External Piles )    

ஆசனத் துவாரத்தின் அருகில் சிறிது சதை வளர்ந்து தொங்கும். இதற்கு வெளி மூலம் என்று பெயர். இப்பகுதியில் அடிக்கடி அரிப்ப ஏற்படுவதோடு மலம் வெளியேறும்போது இரத்தமும் கடுப்பும் தோன்றும்.

3. பவுத்திர மூலம். ( Fistula Piles )     

உள் மூலமானது முதிர்ந்து பவுத்திரமாக மாறுகிறது. ”பவுத்” என்ற வட சொல்லுக்குத் துளை என்பது பொருள். பவுத்திர நோய் தோன்றுகையில் ஆசனத் துளையைச் சுற்றிக் கண்ணுக்குத் தெரியாத சிறிசிறு துளைகள் தோன்றி  அதனின்று தூய்மையற்ற  நீர் வெளிவரும்.

இதற்குரிய மருத்துவம் செய்யாவிடில் ஆசனத் துளையின் உட்புறம் சவ்வு போலவும், பலூன் போலவும், ஏராளமாகச் சதை வளர்ச்சி தோன்றி அவற்றில் துளைகள் ஏற்படும். பிறகு ஆசனத் துளை அருகில்  வலியற்ற ஒரு கொப்புளம் ஏற்படும். இது நாட்பட்ட நிலையில் உடந்து  ( PUS ) வெளியேறும். மீண்டும் இது கொப்புளமாக மாறும். பவுத்திர நோய் முதிர்ந்த நிலையில் இத்துளை வழியாகச் சீழுடன் இரத்தமும் வெளிப்படும். இதற்கு அறுவை மருத்துவ முறை ஒன்றே ஏற்றதாகும். 

இதில் ஆசனத் துளைக்கும் பவுத்திர நோய்த் துளைக்கும் இடையில் உள்ள சதைகள் தோண்டப்பட்டுப்  பவுத்திர நோயின் வேர் எவ்வளவு ஆழத்திற்குச் சென்றிருக்கிறதோ  அவ்வளவு ஆழம் வரை தோண்டிக் கருணைக் கிழங்கு போன்ற  வேர்ப் பகுதி நீக்கப் படுவதால்  இந்நோய் குணமாகிறது.  ( சோமசுந்தரம், அரு ( 1982-27 )

மேலும், அல்லோபதி முறையில் அறுவை முறையினால் அகற்றப்பட்ட மூலநோய் மீண்டும் வருவதாகவும் மூலிகை மருத்துவத்தால் மட்டூமே  முழுமையான குணம்பெற முடியும் என்றும் பரவலான கருத்து இடம்பெற்றுள்ளது. 

மூல நோயாளருக்கான உணவு முறைகள் ;-

காரமான உணவுகளை உட்கொள்ளக்கூடாது. பழங்கள், கருணைக்கிழங்கு, வெங்காயம், கீரை முதலியவற்றை உணாவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குளிர்ச்சிதரும் பொருட்களை அதிகம் உண்ண வேண்டும்.  ( சோமசுந்தரன், அரு., ( 1982-12 ),.  தேங்காய், சப்போட்டா, பால் பொருட்கள், குளிர்ந்த நீரில் நீராடுதல் போன்றனவும் மூலநோயைத் தவிர்க்க வல்லன . ( தமிழ்வாணன், லேனா, (பதி) 1962-67 )    

முடிவுரை :-

 1. மூலநோய் தோன்றுவதற்குரிய அடைப்படைக் காரணங்களாகத் திகழ்வது மரபும், மிகுந்த வெப்பமும். மலச் சிக்கலுமுமாகும். எனவே, மூலநோய் மரபில் வந்தோர் ப்மலச்சிக்கலை ஏற்படுத்தும் உணவு முறைகளைக் கைவிடுவதோடு மிகுந்த வெப்பத்தினின்றும் தம்மைக் காக்க வேண்டும்.

2. பெரும்பாலான மருஇத்துவ நூல்கள் 21 வகையான மூல நோய்களையும், அல்லோபதி மருத்துவ நூல்கள் மூன்று  வகையான மூலநோய்களையும் எடுத்துக் கூறுகின்றன.

3. மூல நோயைக் குணப்படுத்துவதற்கான மருத்துவ முறைகளில் பிற மருந்துவ முறைகள் மூலிகைகளையும் அல்லோபதி மருத்துவ முறை அறுவை மருத்துவத்தையும் மேற்கொள்ளுகின்றன.

4. மூல நோய் வராமல் தடுப்பதிலும், வந்தபின் குணப்படுத்துவதிலும் பிற மருத்துவ்ப முறைகளும் , அல்லோபதி மருத்துவ முஇறையும் பெரும்பாலும் ஒரேவகையான உணவு முறைகளையே வலியுறுத்துகின்றன.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சிதம்பர தாணுப்பிள்ளை, எஸ்,
நோய் விளக்கம், முதற்பதிப்பு, சென்னை.
சித்த மருத்துவ நூல் ஆராய்ச்சி நிலையம், 1982.

சுப்புலட்சுமி, மு.
வைத்திய நூல் ( சுவடியியல் பட்ட ஆய்வேடு ) சென்னை.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம். 

சூசைராஜா, எஸ்.ஏ. பயங்கர வியாதிகளும் பயனுள்ள சிகிச்சை முறையும். முதற் பதிப்பு, சாந்தி நிலையம்.

சோமசுந்தரன், அரு.
அ பவுத்திர நோய், முதற்பதிப்பு, காரைக்குடி, பொன்முடி பதிப்பகம்.

தியாகராசன், இரா.
( பதி ) யூனி. முனிவர் வைத்திய சிந்தாமணி ( பெருநூல் 800 ) ( முதல் பாகம் ) முதற் பதிப்பு, சென்னை, சித்த மருத்துவ நூல் வெளியீட்டுக் குழு. 1976.

முத்தையா.முல்லை. பி.எல்.
வீரமாமுனிவர் இயற்றீய தமிழ் மருத்துவ நூல், முதற் பதிப்பு, சென்னை, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேடெ லிமிடெட், 1990

தமிழ்வாணன், லேனாஃ ( பதி ) ,
நாட்டு வைத்தியம், இரண்டாம் பதிப்பு,
சென்னை, மணிமேகலைப் பிரசுரம்.

..........................................................................................................................................
நன்றி :- ( 1998 )
வெள்ளி விழா மலர் 1970-1995- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 6000 113

மூல நோயில் இத்தனை வகைகளா? பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )

Monday, October 1, 2012

இன்றையக் கொடுமணல் சங்ககாலக் கொடுமணம் ஆகும். பதிற்றுப்பத்தில் கொடுமணம் பற்றிய செய்திகள் இரு இடங்களில் வருகின்றன.

1979-ல் ஒரு மாதிரி அகழாய்வ்வுக் குழி ஒன்று தோண்டப்பெற்றது. அந்த அகழாய்வில் உரோமானிய ஓடு ஒன்று கிடைக்கப் பெற்றது. 1985-ல் மூன்று பருவங்களில் அகழாய்வுகள் செய்யப்பட்டன. இவற்றின் மூலம் கொடுமணம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து நிலை பெற்றிருந்த ஊர் என்று கூறலாம்.

வேளிர் நகரமாக உருவான கொடுமணம், நாளடைவில் வடநாட்டாரும், வெளிநாட்டாரும் வந்து செல்ல்லும் வணிக மையமாக எழுச்சிபெற்றது. கபிலர், “கொடுமணம் பட்டவினை மாண் நன்கலம் “ என்று நான்கு சொற்களால் குறிப்பிடுவார்,.

சங்க காலத்தைக் காலவரையறை செய்திடக் கொடுமணல் அகழ்வாய்வுகள் பல சான்றுகளை அளித்துள்ளன. மேலும் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தொழில் துறையில் முன்னேறியிருந்தார்கள் எப்பதையும் இந்த அகழ்வாய்வுகள் நமக்கு உறுதிப்படுத்துகின்றன.

தமிழ்நாடு அரசு தொல்லியக்துறை சென்னை-8 2-011-திருவள்ளுவர் ஆண்டு 20-42-ல் வெளியீட்டு வரிசையில், எண் 242 ஆக ஆயிரம் பிரதிகளை வெளியிட்டள்ளது. 

ஆசிரியர்களாகப் பரிணமிப்போர் :- முனைவர்.ர. பூங்குன்றன், முனைவர். தி.சுப்பிரமணியன், முனைவர் சீ.வசந்தி, வெ,இராமமூர்த்தி, இரா. செல்வராஜ்.

அகழாய்வில் தலைமை ஏற்றோர்:-

முனைவர்.இரா.நாகசாமி, நடன.காசிநாதன், அ.அப்துல் மஜீத்  

அகழ்வாய்வில் பங்கேற்றவர்கள் :- 

முனைவர்.ர.பூங்குன்றன். வெ.இராமமூர்த்து. கி.ஸ்ரீதரன், முனைவர். தி.சுப்பிடமணியம், இரா.செல்வராசு, பெ.கெளதமபுத்திரன், வே.மகுடேஸ்வரன், மு.த. ஸ்ரீதரன், நா.பாலகிருஷ்ணன்.

நன்றி :-தமிழக அரசு தொல்லியல் துறை வெளியீடு எண்:-242.

12 புள்ளிகள், 44 பக்கங்கள், 1000 பிரதிகள், விலை ரூபாய் 22.

www.tnarch.gov.in

tnarch@tn.nic/archommissioner@gmail.com
\
HALLS ROAD, EGMORE, CHENNAI-6000 008

28290020  ,  28190023

கொடுமணம் -கொடுமணல் ஆன கதை! -அரசு தொல்லியல்துறை ஆய்வு !