Thursday, October 4, 2012

அன்ட்ராய்ட் மொபைல் போன் தொழில்நுட்பத்தில் மூன்று வகை அதிநவீன செயல்பாடுகளை உருவாக்கிய மாணவர் பங்கஜ்குமார் மிஸ்ரா ! !


வண்டலூர் பி.எஸ்.அப்துர் ரகுமான் பல்கலைக்கழக கணினி பயன்பாடு துறையின் சார்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்க குறுந்தகடு வெளியீட்டு விழாவில் (இடமிருந்து) பி.ஷேக் அப்துல் காதர், துணைவேந்தர் வி.சங்கரநாராயணன், திரிசீ டெக்னாலஜி இயக்குநர் கோகுல் விஸ்வேஸ்வரன், உதவி பேராசிரியர் ஏ.முகமது அப்பாஸ்.

சென்னையை அடுத்த வண்டலூர் பி.எஸ்.அப்துர்ரகுமான் பல்கலைக்கழகத்தின் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் மொபைல் போன் தொழில்நுட்பத்தில் இன்றைய வளர்ச்சி குறித்த தேசியக்கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கில் அன்ட்ராய்ட் மொபைல் போன் தொழில்நுட்பத்தில் மூன்று வகை அதிநவீன செயல்பாடுகளை உருவாக்கிய மாணவர் பங்கஜ்குமார் மிஸ்ராவைப் பாராட்டி ரொக்கப்பரிசும்,சான்றிதழும் வழங்கப்பட்டது.

சாம்சங் மொபைல் கையாண்டுவரும் அன்ட்ராய்ட் தொழில்நுட்பச் செயல்பாடு முறைப்படி, அவசர உதவிக்காக அருகில் உள்ள காவல்நிலையம், தீயணைப்பு நிலையம், மருத்துவமனைகள் உள்ளிட்ட தகவல்களையும்,வாடிக்கையாளர் சேவை மூலம் செல்லும் இடங்கள் பற்றிய வரைபடத் தகவல்களும், வணிகச் சேவை மூலம் கூரியர் சேவை, ஓட்டல் சேவை உள்ளிட்ட தகவல்களையும் உள்ளடக்கிய மூன்று வகை செயல்பாடுகளை தனது ஆய்வின் மூலம் மாணவர் பங்கஜ்குமார் உருவாக்கி இருந்தார்.

கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவர் பி.ஷேக்அப்துல் காதர், திரிசீ டெக்னாலஜீஸ் இயக்குநர் கோகுல் விஸ்வேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



நன்றி :-தினமணி











1 comments:

  1. மாணவனுக்குப் பாராட்டு. இதுபோன்ற செய்திகள் உங்களுக்கு எப்படி கிடைக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Kindly post a comment.