Wednesday, October 3, 2012

மெய்தீண்டாக் காலத்தின் வளர்ச்சியே மெஸ்மெரிசம்- அமிர்த நிலைகளின் புரிதலே சித்த மருத்துவத்தின் புதுப்பிறப்பு !.......? பகுதி --2.


மெய்தீண்டாக்காலம் என்று ஒரு வர்மம் உள்ளது. இந்த வர்மம் மூலம், எதிரியின் உடம்பில் அடி, இடி, குத்து, தாக்கு, இவை ஒன்று கூடச் செய்யாமல் எதிரியை வீழ்த்த முடியும்.

ஆகவே, தற்காலத்தில் காணப்படும்,” மெஸ்மெரிசம் “  என்ற கலையானது இந்தக் கலையிலிருந்து வளர்ந்த ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.

அறுவை மருத்துவத்திற்கும், வர்மத்திற்கும் இடையே முக்கியத்துவம் உள்ளது. எவ்வாறெனில், அமுத நிலைகளை வர்மம் குறிக்கும்.

இந்த வர்மத்தைப்பற்றிய ஞானமில்லாமல் அறுவை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்வது நல்லதல்ல. இதனால், வர்மஸ்தானத்தில் காயம்பட்டால் உடல் நிலைக்காது. அப்படியே பிழைத்தாலும் பிற்காலத்தில் அவன் குறுகிய காலத்தில் உயிரிழக்கக்கூடும் என்கின்றனர்.

இதனால், அறுவை மருத்துவருக்கு வர்மம் பற்றிய அறிவு தேவை என்று கூறுகின்றனர்.                                             


நவீன மருத்துவம் ஓங்கி வளர்ந்துவிட்ட போதிலும், இதை அவர்கள் அறியாதவர்களாகவே உள்ளனர். இதனால் நாட்பட்ட வர்மத்தினால் ( வர்மத்தை இளக்காமல் முற்ற விட்டால் ) வாதம், சூலை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இவற்றை நவீன மருத்துவ வல்லுநர்கள் சிகிச்சையளித்துக் குணப்படுத்த முடியாமல், இது இறைவன் சோதனை எனக் கைவிட்டு விடுகிறார்கள். ஆனால், வர்ம மருத்துவம் வர்மத்தினால் ஏற்படும் ஒவ்வொரு நோயையும் குணப்படுத்துகிறது.

அடிபடக்கூடாத வர்மப்பகுதிகளில் அடிப்[அட்டவுடன் சிறந்த வர்மக் கலை தெரிந்த மருத்துவரிடம் சென்று, வர்ம இளக்குமுறை செய்யாததினால் எத்தனையோ மனிதர்கள் கால், கை விளங்காமல் நடைப்பிணமாய் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.    

ஆகவே, இவ்வளவு ம்சிறப்புடைய முன்னோர்கள் கூறிய வர்ம மருத்துவ நூல்களை எல்லாம் ஒன்று திரட்டி, அவற்றின் செய்திகளை ஆராய்ந்து, தொகுத்து வெளி உலகுக்குக் கொண்டு வந்தோமானால் இவ்வாறு நடைப் பிணமாகக் காணப்படும் மனிதர்களை வாழவைக்க முடியும்.

அதோடு மட்டுமல்லாமல் எதிர் வரும் காலங்களில் சித்த மரிஉத்துவத்தில் அவசரகாலச் சிகிச்சை போதுமான அளவு இல்லை மென்ற நிலையை மாற்றி,  
சித்த மருத்துவத்திற்குப் பெருமை சேர்க்கலாம்.
.......................................................................................................................................................................................                  வெள்ளி விழா ஆண்டுமலர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை

வர்ம மருத்துவம் ஓர் அறிமுகம்- டாக்டர்.பி. முருக கணபதி, சுவடி இயல் மாணவர்.
    

-------------------------------------------------------------------------------------------------------------------

--அந்தக்கால சினிமாவில் சில காட்சிகள் இடம் பெற்றிருக்கும். சாகக் கிடக்கும் தொண்டு கிழமான அரசன், பாட்டுப்பாடிக்கொண்டே வரும் பித்தரைப் போன்ற சித்தர் சில மூலிகைகளத் தன் துணி மூட்டையிலிருந்து எடுத்து கசக்கிப் பிழிந்து சாறாக்கி அந்த அரசனின் வாயில் சொட்டுச் சொட்டாக ஊற்றிவர, அரசன் துள்ளி எழுந்து இளவரசனாகிவிடுவான். இவை வெறும் கற்பனை மட்டுமல்ல, நடந்த, நடைபெற்ற உண்மையும் கூடத்தான். !

பாலச்சந்தர் ஒரு படத்தில் கணவனே, மனைவியை உயர் அதிகாரி வீட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டு வந்து, மீண்டும் அழைத்து வருகையில் அவன் விரும்பிய வண்ணம் காண்ட்ராக்ட் கையொப்பமிடப்பட்டிருக்கும்.. நடந்த-நடக்கும் உண்மைகள்தானே திரைப்படமாகவும் பிறப்பெடுக்கின்றன./

.............................................................................................................................................................................

சித்தமருத்துவம் மீண்டும் சிகரத்தைத் தொடும் காலம் வெகு தொலைவில் இல்லை!.

............................................................................................................................................................................


0 comments:

Post a Comment

Kindly post a comment.