Wednesday, October 3, 2012

வர்மம்-சித்த மருத்துவம்- நம் வாழ்வில் வர்மம் -மருந்துகள் பகுதி-1


சித்தர்கள் நோய்களின் மூல காரணங்களைக் கண்டறிந்து , அவற்றைப் பல பகுதிகளாகப் பிரித்து , பரிகாரம் செய்தனர்.

அவற்றில் ஒன்றுதான் வர்ம பரிகாரம் ஆகும்.

வர்ம மருத்துவம் சித்த மருத்துவத்தில் தனித்தன்மை பெற்றதோடல்லாமல் ஒரு சில அவசர காலச் சிகிச்சையில் உதவும் சிறப்புடையது.

 “அரும்பு கோணிடில் அதுமணம் குன்றுமோ
  கரும்பு கோணிடில் கட்டியும் பாகுமாகும்
  இரும்பு கோணிடில் யானையை வெள்ளலாம்
  நரம்பு கோணிடில் நாமதற்கென் செய்வோம் “  இதற்கும் பதிலளிக்கின்றது
 சித்த மருத்துவம்.

வர்மம்

நம் உடலில் இருக்கின்ற உயிர்நிலை இடங்களாக இருக்கும் குறிப்பிட்ட இடங்களுக்கு வர்மம் எனப்பெயர். இவ்விடங்கள் இரகசியமாகவே வைக்கப்பட வேண்டியவை. ஆகவே, இதனை மர்மம் எனவும் கூறுவர். இதனைக் காலம், அடக்கம், சூட்சம், வன்மம், ஏமம் என்ற வேறு பெயர்களாலும் வழங்குவர்.

வர்மத்தைப் பல்வேறு வர்மானிய நூல்கள், பலவகையாகக் கூறினும், படு வர்மம் 12, தொடுவர்மம் 96 ஆக மொத்தம் 108 வர்மங்களையே முக்கியமாகக் கருதுகின்றனர். இவ்வாறு உள்ள வர்மம் எவ்விதங்களிலெல்லாம் உண்டாகிறது என்பதை

முறிவுசாரி என்ற நூலில்,

 “கேளப்பா தடியடிகள் படுத லாலும்
        கெடியான எறிவிசைகள் கொள்ள லாலும்
 வாளப்பர் கட்டை குற்றி தட்ட லாலும்
        மாற்றானின் கைப்பிடிகள் படு தலாலும்
 மேலப்பா ஆகாச மதிலே நின்று
        மெய்மறந்து கைமறந்து விழுத லாலும்
 தாளப்பா பற்பலவாம் விதத் தினாலே
             சங்கையில்லாக் காலமது சாருந் தானே.”

 -எனக்  கூறப்பட்டுள்ளது.
       
ஆகவே, வர்மம் உள்ள இடங்களில் தாக்கு, காயம், குத்து, வெட்டு, தட்டு, இடி, உதை ஆகையவற்றில் ஏதேனும் ஒன்று படும்போது வலி, விதனம், வீக்கம், இரத்தம் வெளிப்படுதல், மறத்துப் ,போதல், உறுப்புகள் செயலிழத்தலோடு மரணமும் சம்பவிக்கும். இதனையே வர்மம் கொண்டிருக்கிறது எனக் கூறுகிறோம்.      

வர்மமும் அவசர கால சிகிச்சை வர்மமும்

வர்மம் கொண்ட ஒருவர்க்கு  “ இளக்கு முறை “ எனும் பரிகாரம் செய்யவும். ஒவ்வொரு வர்மத்திற்கும் ஒவ்வொருவகையான பரிகாரம் உண்டு. இருப்பினும், எல்லா வர்மங்களுக்கும் பொதுப்பரிகாரம், வர்மம் கொண்டவரை தரையில் கால் மடக்கி இருக்கச் செய்து ( சம்மணம் போட்ட நிலையில் ) பதமாக உச்சியில் மூன்று தட்டுத் தட்டிச் சிரசினை முன்பின் அசைத்துத் திருப்பி, நரம்பெல்லாம் தடவி, பின்னி மார்போடணைத்துத் த்கூக்கி உதறிவிட உணர்வு பெற்று விடுவர். பெரும்பாலும் நோயாளிகள் இதில் நலம் பெற்று விடுவார்கள்.

பின்னர் அவர்களுக்குரிய மருந்துகளாக எண்ணெய், நெய், தைலம், பொடி, மாத்திரை, நசியம் என்பவற்றைக் கொடுக்கலாம்.

இவற்றிற்குச் சரியாகாவில்லையெனில், அடங்கல் புள்ளிகளைத் தூண்டிச் சரி செய்யலாம். அடங்கல் என்பது வர்மங்களில் அடிபட்டு உயிர் உடல் பூராவும்  சமச்சீராகப் பரவிநில்லாமல், உள்ளடங்கி நிற்கின்றபோது, அடங்கி நிற்கும் அவ்வுயிரை உடல்பூராவும் சலித்து நிற்கும்படிச் செய்வதற்காஜ்கத் தூண்டப்படும் சில ஸ்தலங்கள் ஆகும். இவர்களை உடலின் திறவு கோல்கள் என்று கூடக் கூறலாம்..                   


அடங்கல் புள்ளிகள் பலவகையாகக் கூறப்படினும், அதில் நாம் முக்கிய 9 புள்ளிகளை மட்டும் கூறுகின்ரோம். இவற்றில் ஏதேனும் ஓர் அடங்கல் புள்ளியைத் தூண்டிவிட மயக்கமுற்ற ஆள் நிச்சயம் தெளிவடைவான்.

இவை செய்வதற்குமுன், சாத்தியக்குறிகுணங்கள் உள்ளனவா ? சாத்திய வர்மத்தில் அடிபட்டுள்ளதா என்பதை அறிய வேண்டும்.

சாத்தியக் குறி குணங்கள்

1. கை, கால், பெருவிரல், நகக் கண்ணின் கை கொண்டு பலமாய் நசுக்கினால் உணர்வு உண்டாகும்.

2. விலாக்கடை வயிற்றெலும்பு கடைசிக் கொழுந்தருகில் ( வீமனொளி ) கை கொண்டு பிடித்து பிடித்துக் குலுக்கினால் சத்தம் கொடுக்கும். கண் விழிக்கும்.

3.  காது பொன் தண்டருகில் ( வாலி ஒலி ) கைப் பெருவிரல் கொண்டு ஊன்றி இருத்தித் தூக்கினால் கண் விழிக்கும். சத்தம் கொடுக்கும்.                    

சாத்திய வர்மங்கள்

கை கால்களில் உள்ள எல்லா தொடுவர்மங்களுமே இவ்வகையாகும். இவற்றில் உள்ள வர்மப் பகுதியில் அடிபட்டால் ஆளை எழுப்பி உயிர் பிழைக்க வைத்து விடலாம்.

இளக்கு முறை செய்யக்கூடாத அறிகுறிகள்

1.அடிபட்டதும், கண் விழி பிதுங்கிப் பார்வை நிலைகுத்திக் காணப்பட்டாலும்,

2. அடிபட்டுச் சுக்கிலம் ( விந்து ) வெளியே சிதறினாலும்,

3. அடிபட்டவனின் வாய்வழியே நீருய்ம், இரத்தமும் கசிந்தாலுஇம், அவனை இளக்குமுறை ம்செய்து எழுப்புதல் கூடாது.                           


அசாத்திய வர்மங்கள்

சில வர்மப் பகுதியில் அடிபட்டால் அவற்றிற்குரிய குறிப்பிட்ட நாழிகைக்குள் இளக்கு முறை ம்செய்து எழுஒப்பாவிடில் ஆள் மரணமடைவான். மற்றும், அவ்வர்மங்களில் மிகக் கடினமான ( மாத்திரைக்கு மிஞ்சி ) அடிபட்டால், நாடிகை கூடப் பார்க்க வேண்டாம். ஏனெனில் உயிர் பிழைக்காது.

படு வர்மம்- 12, தொடு வர்மத்தில் வயிறு, மூக்கு,,பெரு மூளை, மார்புகிய பகுதிகளில் உள்ள வர்மங்கள் , ஆகிய இவையே அசாத்திய வர்மங்களாகும்.

நாடியும் மாத்திரையும்

இளக்குமுறை செய்யுமுன் அடிபட்டவனின் நாடியையும், மாத்திரையும் காண வேண்டும். நாடியானது உடலில் ஏற்படும் உட்புற, வெளிப்புற அதிர்ச்சிகளையும் அந்த அதிர்ச்சிகளின் காரணமாக உடல்நிலை எப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நாடி மூலம் அறிந்து  அதற்கேற்றால்போல் இளக்குமுறை செய்யலாம். வர்மம் பட்டபிறகு வாத நாடி பம்மிப் போகும்.                                                                                


இதேபோல் மாத்திரையையும் அறியவும், மாத்திரை என்பது வரெமப் பகுதியில் தாக்கப்படும் அளவினைப் பொறுது, அதன் அளவு மாறுபடும். இதனால் வர்மப் பகுதியில் தாக்கப்படும் அளவினை அற்ந்துகொள்ளலாம். இது 1/4, 1/2, 1 உச்சி என நான்காகக் கூறலாம். உதாரணமாகத் திலர்த வர்மப்
( நெற்றிப்பொட்டு ) பகுதியில் ஒரு குன்றிமணி  பதியும் அளவு தாக்குதல் ஏற்படின் அது முழு மாத்திரை வர்மம் கொண்டதாகக் கொள்ளவேண்டும்.

ஆகவே, மாத்திரை அளவுகளில் வன்ம அடிபட்டால் இளக்குமுறை செய்யலாம். மாத்திரை அளவுகளுக்கு மிஞ்சி அடிபட்டால் இளக்குமுறை செய்தல் கூடாது. எனவே, இவற்றை இளக்குமுறை செய்தல் கூடாது. எனவே, இவற்றை இளக்குமுறை செய்வதற்கு முன் நன்றாகப் பார்க்கவேண்டும்.     


வன்மத்தால் வரும் நோய்கள்

படு வர்மத்தில் அடிபட்டாலே குறிகுணங்கள் தோன்றும். ஆனால், தொடு வர்மப் பகுதியில் அடிபட்டால் அவ்விடத்தில் அடிபட்ட ஒன்றிரண்டு நாட்களில் வேட்6ஹனை குறைந்துவிடும். ஆனால், குறிகுணங்கள் இராது. ஆகவே, எந்த இடத்தில் அடிபட்டாலும் உடனே வர்ம மருத்துவரிடம் காட்டிச் சிகிச்சை செய்யவும். இல்லையேல் வர்மம் இளக்கப்படாமல் இருந்தால் பல நோய்கள் வரும். அவை:_

இளைப்பு, நீரிழிவு, எடு ரோகம், நீர் செறுப்பு, எலும்புருக்கி, நெடுஞ்செரிப்பு, ஏங்கிளைப்பு, பக்கவாதம், காசம், பைத்திய ரோகம், காய்ச்சல் மண்டையிடி, மார்தடுப்பு, மந்த காசம், முற்றின ஈளை, நரம்புத் திமிர், மூளை ரோகம், மூலச் சூடு. --- ஆகியவை வரும். இவை வராமல் தடுக்க அடிபட்டவுடன் தக்க சிகிச்சை செய்யவேண்டும்.                                                


குணமாகும் நோய்கள்  

சகன வாதம், சந்தவாதசூலை, பக்க வாதம், பூட்டு ந்நழுவல், இளம்பிள்ளை வாதம், என்பு முறிவு ( எலும்பு முறிவு ) போன்ற நோய்களில் வர்ம சிகிச்சை சிறப்பாகச் செயல்படும்.. இதில் உள்ள “ தடவல் முறை  ( தொக்கணம் ) “  மிகவும் நல்ல பலனை அளிக்க வல்லது.

இதனைச் சித்தர் அறுவை மருத்துவம்.,

“ தொக்கணத்தினாலிரத்தந் தோல் ஊனிவைகட்கு
 மிக்க செளக்கியஞ்ச மீரதும்போ - மெய்க்கதிக
 புட்டியுறக்கம் புணர்ச்சி யிவை கதிக்கும்
 பட்ட அலைக்கல்லும் பார் “  என்ற பாடல் வரிகளால் அறிவிக்கின்றது..

வர்மமும் சித்த மருத்துவமும்

வர்மமானது சித்த மருத்துவத்துடன் இணந்தே உள்ளது. சித்தர்கள் கூறிய ஆறு ஆதாரங்களிலும் வர்மப்புள்ளிகள் அமைந்துள்ளன.  

1. மூலாதாரம்               - கல்லிடை வர்மம்

2. சுவாதிட்டானம்       - அன்னக்காலம்.

3. மணிப்பூரகம்            -  உறுமிக்கால வர்மம்.

4. அனாகதம்                   - நிவளைக்காலம்

5. விசுத்தி                          - தும்மிக்காலம்

6. ஆக்கினை                    - திலர்த காலம்    என அமைந்துள்ளன.      

மற்றும், ஒவ்வொரு குறிப்பிட்ட திதியில், உடலில் அட்டை விழக்கூடாத இடங்கள் உள்ளன. அந்த இடங்களில் கீழ்க்கண்டவாறு வர்ம நிலைகள் அமைந்துள்ளன. அவை:-

கால் பெருவிரல்       -பூழிக்காலம்
உள்ளங்கால்           -வெள்ளைவர்மம்
முழங்கால்            -சன்னி வர்மம்
தொடை              - ஆமைக்காலம்
நாபி                  - அன்னக்காலம்
மார்பு                 - தூகிகவர்மம் எட்டு
கழுத்து               - சங்கு திரிக்காலம்
நெற்றி               -  மூர்த்தி வர்மம்
புருவம்              -  மேல்மந்திரக்காலம்
பிடரி                -  பிடரி வர்மம்
உச்சி                -  கொண்டைக் கொள்ளி வர்மம்.                  


என அமைந்த்குள்ளதால் குறிப்பிட்ட திதிகளில் ஒவ்வொரு வர்மத்தையும் சுற்றியுள்ல துணை வர்மங்கள் ( அமிர்த நிலைகள் ) மேலெழுந்த வாரியாகக் காணப்படும். ஆகையால், அக்குறிப்பிட்ட திதிகளில் அவ்விடங்களில் அட்டைவிடில் மிகுந்த உதிரப்போக்கையும் ஏற்படுத்தும். இவ்வகையில் வர்ம மருத்துவம், சித்த மருத்துவத்தில் இணத்து அதற்குச் சிறப்பை உண்டாக்குகின்றது.

நம் உடலில் அமைந்துள்ள வர்ம நிலைகளை, நவீன அறிவியலுடன் ஒப்பிடும்பொழுது சில வர்ம நிலைகள் அமைந்துள்ள பகுதிகள்  முக்கியமான்ம பகுதிகளாகவே காணப்படுகின்றன. இதனால்தான் வர்மமானது இரகசியமாகவே வைக்கப்பட்டிருப்பது தெரிகின்றது.       


நம் வாழ்வில் வர்மம்

வர்ம மருத்துவ மட்டுமில்லாமல், நம் அன்றாட வாழ்விலும் நற்பயனுக்காகப் பயன்படுத்துகிறோம்.

1.நடு விரலில் மோதிரம் மணிவதால் நுரையீரல்களையும்,

2. மோதிர விரலில் மோதிரம் அணிவதால் இதயத்தையும்,

3. சிறு விரலில் மோதிரம் அணிவதால் மூளையையும் பலப்படுத்திக் கொள்கிறோம்

4. காதில் காதணி, காலில் மெட்டி அணிவதும், சில நன்மைகளைக் கருதியே ஆகும்.

பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கலோ, வீட்டில் பெற்றோரோ குழந்தைகளைக் கோபத்தில் பிரம்பால் தலையில் தட்டுவது, கன்னத்திலே அறைவது, உச்சியில் குட்டுவது போன்ற செயல்களால் அக்குழந்தைகளுக்குப் பிற்காலத்தில் பல நோய்கள் ஏற்பட அடிப்படைக் காரணங்களாகி விடுகின்றன.

வீட்டில் சண்டைய், கைகலப்போ ஏற்படும்போது, “ படக்கூடாத இடத்தில் பட்டு விடப் போகிறது “ எனப் பெரியவர்கள் எச்சரிப்பது, வர்மம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே இருப்பதை உணர்த்துகின்றன.

மருந்துகள்

வர்ம பரிகாரத்திற்கு உதவும் ம்சில முக்கிய மருந்துகள்

வர்ம நெய்                  வசவெண்ணெய்
வர்ம இளக்கத்திற்கு         சின்னத் திருமேனி எண்ணெய்  
வல்லாரை நெய்
அமுக்கிரா கஷாயம்         திருமேனி எண்ணெய்
செந்தெங்குக் கஷாயம்       வில்வ வேர்த் தைலம்
வர்மாணிக் குளிகை          வர்ம கருமுனித் தைலம்
வர்ம சந்தி மெழுகு       ---ஆகியவை ஆகும்.     


...............................................................................................................................................................................
 நன்றி :-உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. வெள்லி விழா மலர் 

டாக்டர்-அ.முஇருக கணபதி, சுவடி இயல் மாணவர், 1998.                                 
1 comments:

 1. sir enaku varmam iruku sir.
  enna pananum nu solunga sir.
  varmam rombha aapatha sir.
  1 varusham aagi2 sir.
  enaku cal pani solunga sir.
  ungaluku puniyama pogum
  sir.
  7200262756 ithan en num sir.
  en name selvarajan sir.
  plz sir

  ReplyDelete

Kindly post a comment.