Flash news:

  • உலகம்
  • தமிழகச்செய்திகள்
  • கட்டுரைகள்
  • சிறப்பு செய்திகள்
  • அனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.
Showing posts with label சிறப்புத் தகவல்கள். Show all posts

Thursday, June 28, 2012

Read more: http://alaiyallasunami.blogspot.com/2012/06/blog-post_16.html#ixzz1z2ikGCl9

எனது புகைப்படம்

SATURDAY, JUNE 16Read more: http://alaiyallasunami.blogspot.com/2012/06/blog-post_16.html#ixzz1z2ikGCl9

”உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்

உடம்பிலே உத்தமன் கோயில் கொண்டானென்று

உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே"     

                            -   திருமூலரின் திருமந்திரம்
அலையல்ல சுனாமி
கட்டுரைக்கும் படத்திற்கும் சம்பந்தமில்லை என புலம்பக்கூடாது...

  • ஒரு நாளில் சராசரியாக 21,600 முறை சுவாசிக்கிறோமாம். 
  • நமது கட்டை விரலின் அளவும் மூக்கின் அளவும் ஒன்றுபோல் இருக்குமாம். 
  • பெண்ணின் அண்டம்தான் மனித உடலில் மிகப்பெரிய செல்லாகும்.
  • இடதுபக்க சுவாசப்பை இருதயத்திற்கு இடம் ஒதுக்கி கொடுப்பதனால் சிறியதாக இருக்கும். 
  • மிகவும் சக்தி வாய்ந்த தசை நமது நாக்குதானாம் (எப்படி வேண்டுமென்றாலும் பேசும்). 
  • ஆண்களைவிட பெண்கள் வேகமாக கண்சிமிட்டுவார்களாம் (அது உண்மைதான்). கண் இமைகளின் விளிம்பில் 20 - 30 சுரப்பிகள் இருக்கின்றன. 
  • கண் சிமிட்டும்போதெல்லாம் கண்விழியை இவற்றின்மூலம் அலம்புகின்றன. 
  • மிகப்பெரிய உடல் உறுப்பு தோலாகும், அதன் பரப்பளவு கிட்டத்தட்ட 20 சதுர அடியாகும். 
  • மிகப்பலமான பகுதி பல்லின் எனாமல்தான்.
  • தோள்மூட்டு ஒன்றே மனித உடலில் 360 பாகை வரை சுழலக்கூடியதாம் (பொண்ணுங்க வந்துட்டா கண்ணும் சுழலுது). 
  • கண்களைத் திறந்து கொண்டே தும்ம முடியாதாம். 
  • எலும்பிலும் பற்களிலும் அதிகமான (99%) கால்சியம் உள்ளது.
  • சராசரியாக ஆண்களைவிட பெண்கள் உயரம் குறைவு (இதுலையாவது குறைவா இருக்காங்களே). 
  • இருபது வயதான ஆணின் மூளையிலுள்ள மயலின் நரம்பிழைகளின் நீளம் சுமார் 1,76,000 கி.மீ. 
  • ஒவ்வொரு வினாடியும் 80 லட்சம் சிவப்பு ரத்த அணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகின்றன.
  • முதுகெலும்பு கோவை இயக்கம் 400 தசைகளாலும் 1000 தசை நார்களாலும் ஒருங்கிணைக்கப்படுகிறது.  
  • கருப்பையில் தாயுடன் ஒட்டியிருந்தோம் என்பதை நினைவூட்டுவதைத்தவிர தொப்புளுக்கு வேறு பயனில்லையாம் (கதாநாயகியின் தொப்புள் பம்பரம்விடவும் பயன்படுகிறது). 
  • மனித உடம்பு படம் வரையவும் பயன்படும்... 

alaiyallasunami

alaiyallasunami
போட்டிகள் ஆரம்பம்...

கண்ணதாசன் சொன்னதுபோல 

     “பார்த்தா பசுமரம், படுத்துவிட்டா நெடுமரம், சேர்த்தா 
       விறகுக்காகுமா,தீயிலிட்டால் கரியுமிஞ்சுமா” என்பது போல உயிர் இருக்கும்வரைதான் எல்லாமும்.

Read more: http://alaiyallasunami.blogspot.com/2012/06/blog-post_16.html#ixzz1z2hE6ayQ

மானுட உடம்பின் மகத்துவம்-- விச்சு

Mano Ganesan

Mano Ganesan

@ManoGanesan

Leader-Democratic Peoples Front (Political Party) President- Democratic Workers Congress (Trade Union) Convener- Civil Monitoring Commission (HR Org)

இவ்வாறு ஐக்கிய மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் எச்சரிக்கை ! கொழும்பில் நடைபெற்ற தேசிய சர்வமத மாநாட்டில் மனோ கணேசன் பேசியதாவது:-

வட-கிழக்கிலிருந்து இராணுவத்தை அகற்றும்படி உலகம் ராஜபக்சே அரசாங்கத்தை வலியுறுத்துகின்றது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலும் இந்த விவகாரம் பற்றி குறிப்பிடப் பட்டிருக்கின்றது.

தமிழ்ப் பகுதிகளில் இருந்து இராணுவத்தை வாபஸ் வாங்க இலங்கை அரசு பிடிவாதமாக மறுக்கின்றது. இதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அங்கே இலங்கை இராணுவம் சும்மா பாதுகாப்புப் பணியில் ஈடுபடவில்லை. அது தமிழ் மக்களின் சமூக வாழ்க்கை விவகாரங்களில் தலையிடுகின்றது.இது தமிழ் மக்களுக்கு தொல்லை தரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகும்.

வடக்கில் தமிழ் மக்கள் வீடுகளில் நடைபெறும் பிறந்த நாள் விழாக்களுக்குக் கூட இராணுவ அதிகாரிகள் அழையா விருந்தாளிகளாக. இதை நான் சொல்லவில்லை.இலங்கை வந்து சென்ற இந்திய எதிர்க் கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் இந்தியா திரும்பியதும் இதச் சொன்னார். இந்தச் செய்தி உலகத் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றுள்ளன. இதுதான் வடக்கின் உண்மை நிலவரம்.

வட கிழக்கு மாகாணங்களில் ஆளுநர்களாக முன்னாள் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருப்பதே அங்கு இராணுவ ஆட்சி நடைபெறுவதை உறுதிப்படுத்துகின்றது. எனவே, தேவைக்கு அதிகமாக ஒரு நிமிடம் கூட மக்கள் மத்தியில் நடமாடக் கூடாது. இலங்கை அரசாங்கம் தன் சித்து விளையாட்டுக்களை நிறுத்திவிட்டு, இராணுவத்தை வாபஸ் வாங்க வேண்டும். காவல் பணிளை காவல் துறையிடம் ஒப்புவிக்க வேண்டும்.

என் வாயில் துப்பாக்கியை வைத்து, பலவந்தமாக என் கையில் தேசியக் கொடியைக் கொடுத்து பலவந்தமாக தேசியகீதம் பாடு என்று சொன்னால், எனக்குத் த்சிய உணர்வு வராது என்பதை இங்கு வந்துள்ள கனவான்கள் உணர்ந்து கொள்வார்கள் என நான் நம்புகின்றேன்.

தேசிய உணர்வு என்பது உள்ளிருந்து வரவேண்டும்.அப்படி அது வரக்கூடிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.இன்று தமிழ் ம்க்களைச் சுற்ரி அத்தகைய சூழ்நிலை இல்லை.

இலங்கையில் மொழிப் போர் ஆரம்பிக்கப்பட்டு, அது இனப் போராக மாறி, இன்று மதப்போராக உருமாறி வளர்ந்திருக்கின்றது. இதுதான் இலங்கையில் இன்று நாம் காணும் அற்புதமான வளர்ச்சியாகும்.

நன்றி: ஜனசக்தி, 19-06-2012. 

இலங்கையில் மொழிப்போரானது இனப்போராகி மதப்போராக உருவெடுத்திருக்கிறது !

எழுத்தாளர் (Author) - வை. கோவிந்தன் ( வை.கோ )

பதிப்புலகின் தந்தை எனப் போற்றப்படும் வை.கோ. என்ற சக்தி வை.கோவிந்தன் புதுக்கோட்டை மாவட்டம் ராயவரம் என்ற ஊரைச் சேர்ந்தவர். இவர் சுவிகாரப் புத்திரனாக வளர்ந்தவர். இவருடைய தந்தையின் தொழிலைக் கவனிக்க பர்மா சென்றார். அப்போது பர்மாவில் வெளிவந்து கொண்டிருந்த தன வணிகன் என்ற இதழில் சுவாமி சுத்தானந்த பாரதியார் எழுதிய ஏழைபடும்பாடு என்ற நூலின் பகுதிகளை ஒவ்வொரு வாரமும் வெளியிட்டு வந்தது. 

இதை தொடர்ந்து படித்த பிறகு, அதைத் தொகுத்து சில நண்பர்களோடு சேர்ந்து அன்பு நிலையம் என்ற பெயரில் வெளியிட்டார். ஏழைபடும்பாடு என்ற நூலில் தொடங்கும் இவரது பதிப்புலகப் பயணம் சக்தி காரியாலயம் என்ற நிறுவனத்தை 1939ல் தொடங்கி அதன் வழியாக சுமார் இருநூற்றி ஐம்பது நூல்கள் வரை தொடர்ந்தது. தமிழ் புத்தகங்கள் எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் தமது வெளியீட்டு நிறுவனமான சக்தி காரியலாயத்தை விற்பனைக் கூடமாகவும் மாற்றினார். இவர் ஐநூறு பக்கங்கள் கொண்ட பாரதியாரின் கவிதைகளை ஒன்றரை ரூபாய் விலைக்கும். ஐநூற்றி ஐம்பது பக்கங்கள் கொண்ட திருக்குறள் பரிமேலழகர் உரையை ஒன்றறை ரூபாய்க்கும் விற்றார்.

தினமணி ஆசிரியர் டி.எஸ். சொக்கலிங்கம் மொழி பெயர்த்த போரும் அமைதியும் என்ற புதினத்திற்கு பைண்டிங் செய்வதற்குத் தேவைப்படும் துணியைக் தனியாக ஆர்டர் கொடுத்து நெய்தார். ஒவ்வொரு புத்தகத் தயாரிப்பையும் குழந்தையை வளர்ப்பது போல் செயல்பட்டார். பெண்குயின் நிறுவனம் புத்தகங்களை வெளியிடுவது போல் தமிழ் புத்தகங்களும் வரவேண்டும் என்று செயல்பட்டவர். வெளிநாட்டிலிருந்து வெளிவந்த டைம் போன்ற பத்திரிகைகளின் தரத்திற்கு ஏற்ப இங்கு சக்தி என்ற இதழையும், பெண்களுக்காக மங்கை என்ற இதழையும் குழந்தைகளுக்காக அணில், பாப்பா, குழந்தைகள் செய்தி, ஆகிய இதழ்களையும் கதைக் கடல் என்ற இதழையும் நடத்தியவர்.

 இன்றைக்கு சென்னையில் இருக்கும் மியூசிக் அகாடமி இருக்கும் இடம்தான் அன்றைக்கு சக்தி காரியாலயக் கட்டிடம் இருந்தது. அந்தக் கட்டிடத்தில் பல எழுத்தாளர்கள் இரவு பகலாக விவாதித்து உள்ளனர். காகிதத் தட்டுப்பாட்டு காரணமாகவும், புத்தக விற்பனைகளும் எதிர்பார்த்த மாதிரி இல்லாததாலும் நஷ்டம் ஏற்பட்டு சக்தி காரியாலயம் மூடப்பட்டது. தம்முடைய கடைசிக் காலத்தில் வறுமையால் உடல் நலத்திற்குக் கூட சரியாகச் சிகிச்சை செய்ய முடியாமல் இறந்துபோனார்

நன்றிக்குரியோர் :-

Contact Us

04286 – 223233
91-9590430335
ccare@noolulagam.com
news@noolulagam.com
ஜீவா புத்தகாலயம்
4 -வது தளம்,
ஸ்ரீனிவாச காம்ப்ளெக்ஸ்,
மோகனூர் ரோடு,
நாமக்கல் – 637001,
தமிழ்நாடு,
இந்தியா. 
Jeeva Puthakalayam,
4th floor,
Srinivasa Complex,
Mohanur Road,
Namakkal – 637001,
Tamilnadu,
India. 

தமிழ்ப் பதிப்புலகத்தின் தந்தை வை.கோ என்ற வை.கோவிந்தனுக்கு நூற்றாண்டு விழா1

Tuesday, June 26, 2012

ஆங்கில மொழியை குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் சொல்லி கொடுக்க பலதரப்பட்ட இணையதளங்கள் இருந்தாலும் நாம் இன்று பார்க்க இருக்கும் தளம் குவிஸ் போட்டி மூலம் சற்றே வித்தியாசமாக குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை கற்றுக்கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1
நம் குழந்தைகளும் ஆங்கிலத்தில் எழுத அல்லது பேச வேண்டும் என்று எண்ணும் பெற்றோர்களுக்கு உதவுவதற்காக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது எந்த விதமான ஆசிரியரும் தேவையில்லை ஆன்லைன் மூலம் எளிதாக குழந்தைகள் புரிந்து கொள்ளும் வண்ணம் ஆங்கிலத்தை சொல்லி கொடுக்கின்றனர்.
இணையதள முகவரி : http://www.readingbear.org
போட்டி என்றாலே குழந்தைகள் மகிழ்ச்சியாகிவிடுகின்றனர் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தளமும் ஒவ்வொரு பாடத்திற்கும் குவிஸ் போட்டி நடத்தி தன்னுடைய ஆங்கில அறிவில் நிலை என்ன என்று எளிதாக தெரிந்து கொள்ளலாம்.இத்தளத்திற்கு Getting Started என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில் எப்படி குழந்தைகள் எளிதாக ஆங்கிலம் கற்கலாம் என்ற வழிமுறையை தெரிவித்தும் இவர்கள் சொல்லி கொடுப்பதை எப்படி எளிதாக புரிந்து கொள்ளலாம் என்பதை பற்றியும் விவரிக்கின்றனர்.வலது பக்கத்தின் மேல் இருக்கும் Register என்ற பொத்தானை சொடுக்கி புதிய கணக்கு ஒன்று இலவசமாக உருவாக்கி கொள்ளலாம். 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் மூலம் சொல்லி கொடுக்கின்றனர், ஒவ்வொரு பாடமும் நாம் கற்ற பின் உடனடியாக அதன் அருகில் இருக்கும் Take a Quiz என்ற பொத்தானை சொடுக்கி கற்று கொண்டதை சோதித்து கொள்ளலாம். குழந்தைகள் மட்டும் தான் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை நாமும் ஒரு முறை இதைப்பார்த்தால் நம் ஆங்கில அறிவையும் வளர்த்துக்கொள்ளலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
 
குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை புதுமையாக கற்றுக்கொடுக்க உதவும் பயனுள்ள தளம். winmani.wordpress.com

மார்கழி 16 (சனவரி 1) 2012

சென்னை மாநில சட்டமன்ற அவைக் கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது நிதியமைச்சர் திரு. சுப்பிரமணியம் கூறுகையில், திருவிதாங்கூர் - கொச்சி மாநிலத்தில் தமிழர்கள் பெருவாரியாக வாழ்கின்ற தேவிகுளம் - பீர்மேடு பகுதிகளை உள்ளடக்கிய ஒன்பது தாலுகாக்களும் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்று கோரி மாநிலங்கள் புனரமைப்புக் குழுவிடம் தமிழ்நாடு அரசு மனு கொடுத்திருப்பதாகக் கூறியிருக்கிறார். திரு. கொச்சி முன்னாள் முதலமைச்சரான திரு. பட்டம் தாணுபிள்ளை எர்ணாகுளத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் இது குறித்து இவ்வாறு பேசியுள்ளார்.

"இந்தியத் திருநாட்டில் நடுவண் அரசு என்ற ஒரு அமைப்பு இல்லாதிருக்குமேயானால், திரு. காமராஜ் நாடாரும், திரு. சுப்பிரமணியுமாகச் சேர்ந்து திரு.கொச்சி நாட்டின் மீது படையெடுத்திருப்பர்'' என்று குறிப்பிட்டார். திரு.கொச்சியில் தமிழர்கள் பெருவாரியாக வாழ்கின்ற தாலுகாக்கள் அனைத்தையும் தமிழகத்துடன் இணைத்துவிட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டதால் அதன்மீது திரு.கொச்சி அரசின் மனப்போக்கை எடுத்துக்காட்டுவதாக உள்ளது பட்டம் தாணுபிள்ளையின் மேலே எடுத்துரைக்கப்பட்ட பேச்சு.

எங்களது இன்றைய கோரிக்கைதான் என்ன? இக்கோரிக்கையை வரலாறுகளுக்கும், நியதிகளுக்கும் எதிரான ஒரு பூதாகர கோரிக்கையாக விளக்கம் தரப்படுகிறது. இப்பகுதிகள் அனைத்தும் 1889க்கு முன்பு வரையில் திருவிதாங்கூருக்குச் சொந்தமான பகுதிகளாக இருந்ததில்லை. திரு.கொச்சி சட்டமன்றத்தில் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும்போது திரு.நடராஜபிள்ளை அன்று கூறியதற்குத் திரு. எ.எம்.தாமஸ் இவ்வாறு குறிப்பிட்டார். "திருவிதாங்கூர் நாட்டு விவரச்சுவடியை எழுதிய திரு.ற்றி.கே. வேலுப்பிள்ளை, பூஞ்சாற்று அரசர் பாண்டிய மன்னர் பரம்பரையைச் சார்ந்தவர்'' என்று கூறினார்.

பூஞ்சாறு ராஜா திருவிதாங்கூர்காரராவார்.

திரு. நேசமணி :

இக்கூற்று திருவிதாங்கூர் நாட்டு விவரச்சுவடியில் தரப்பட்டுள்ள வரலற்றின் அடிப்படையில் கூறப்பட்டதாகும். ஆனால் திரு.கொச்சியைச் சார்ந்த வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும் பூஞ்சாறு மன்னர் பாண்டிய மரபினர் என்றும், அன்னார் கையொப்பமிடுகின்ற தருணங்களில் "மீனாட்சி சுந்தரம்'' என்றே அவர் ஒப்பமிடுவதாகவும் குறிப்பிடுகின்றனர். மன்னாடியர் என்று அழைக்கப்படுகின்ற நாட்டுப் பிரதானிகளைக் கொண்டு நாட்டில் தீர்வைகள் தண்டினான் என்றும், அத்தகைய தீர்வை வசூலுக்கு அளிக்கப்படுகின்ற பற்றுச்சீட்டில் "மதுரை மீனாட்சி துணை'' என்ற முத்திரை பதிக்கப்பட்டுள்ளதாகக் காணப்படுகிறது. ஆகையால் இந்த தேவிகுளம்-பீருமேடு பகுதிகள் அனைத்தும் பாண்டியர்களின் இறையாண் மைக்கு உட்பட்டு மதுரை நாயக்கர்களின் அதிகார வரம்பிற்குள் 1889 வரையிலும் இருந்துள்ளன. எனவே மேற்படி பகுதிகள் அனைத்தும் 1889-க்கு முந்திய காலம் வரையிலும் திருவிதாங்கூருக்குச் சொந்தமானதாக இருந்ததில்லை என்பதே வரலாறு கள் கூறுகின்ற உண்மை. இன்று, மாடோன் கே.டி.கெச்.பி.தேவன் கம்பெனியாரின் முன்னோடிகள் 1879-ல் பூஞ்சாற்று மன்னருடன் செய்துகொண்ட முதல் உடன்படிக் கையின் அடிப்படையில் இப்பகுதிகள் அவர்களது அனுபவத்திற்கு வந்துள்ளது.

பெரியாறு நீர்த்தேக்கத் திட்டத்திற்காகப் பிரிட்டிஷ் இந்திய நடுவண் அரசின் செயலாளர் திருவிதாங்கூர் மன்னருக்காக நின்று ஆவணத்தில் கையொப்ப மிட்டுள்ளார். 1889இல் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு, குத்தகை உரிமையின் காலக்கெடுவை நீட்டித்த வேளையில், அது திருவிதாங்கூர் மன்னருக்குச் சாசனம் செய்யப்பட்டுள்ளது. எனவே 1879 முதல் 1889 வரையிலான பத்தாண்டு கால இடைவேளையில் மட்டுமே. இப் பரிவர்த்தனங்கள் நடந்திருக்கிறது என்பது தெள்ளத்தெளிவு. தவிரவும், திருவிதாங்கூர் மன்னர் இப்பிரதேசங்களைப் பூஞ்சாறு மன்னரிடமிருந்து நீண்ட காலக் குத்தகையின் அடிப்படையிலேயே பெற்றிருக்கிறார். எது எவ்வாறாயினும், 1935 வரையிலும் திருவிதாங்கூர் பிரதேசங்களிலிருந்து தேவிகுளம்-பீருமேடு பகுதிகளுக்கு வந்து போக எத்தகைய போக்குவரத்து வசதிகளும் இருந்ததில்லை.

இப்பிரதேசங்களுக்கு மதுரை மாவட்டத்திலுள்ள தேவாரம், கூடலூர், போடி நாயக்கனூர், கம்பம் மற்றும் சிவகிரி போன்ற கணவாய்கள் வழியாக மட்டுமே வந்தடைய முடியும் என்று 1951-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த கணவாய்கள் வாயிலாக மட்டுமே அன்று வணிகமும் நடந்து வந்துள்ளது. இவைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப் பட்ட உண்மைகளாகும். எனவே இப்பிரதேசங்கள் அனைத்தும் சென்னை மாநிலத் தின் ஒரு பாகமாக இருந்தமையால் தமிழ் மக்கள் அவ்விடங்களுக்கு எத்தகைய தடங்களுமின்றிக் குடியேறி நிரந்தரமாக அங்கே தங்கியும் விட்டனர். அதனால் இவ்விடங்கள் அனைத்தும் தமிழர்களின் சொந்த நாடாக இன்று காட்சி தருகிறது.

இவ்விடங்களில் வாழ்கின்ற மக்களைக் குடியேறியவர்கள் என்றும், நிரந்தரமாக அங்கு தங்காமல் வந்தும் சென்றும் இருப்பவர்கள் என்றும் மாநிலங்கள் புனரமைப்புக் குழு கூறி யிருக்கிறது. இருப்பினும் இத்தகைய விவரங் களையெல்லாம் அவர்களுக்கு யார் அளித்தனர் என்றோ, அல்லது எங்கிருந்து அவைகளைத் திருடினர் என்றோ குழுவினர் விளக்கம் தரவில்லை. இது போன்ற அனேக காரியங் களைக் குறித்து வேறு சந்தர்ப்பங்களில் இக்குழு கூறும்போது இன்ன மாநிலங்கள் தந்தன என்றோ இன்ன இன்ன அமைப்புகள் தெரிவித்தன என்றோ கூறுவதை அது வழக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் இங்கே அப்படிக் கூறவில்லை. எனவே இவைகளை ஆதாரமின்றிக் கூறியதாகவே கருத வேண்டும். தமிழ்த் தொழிலாளர்களின் கடின உழைப்பால் மட்டுமே செல்வந்தர்களாகிவிட்ட சில மலையாளி முதலாளிகளும், அன்று திருவிதாங்கூர் - கொச்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்த தமிழர் விரோத பிரஷஜாசோஷலிஸ்டு அரசும் இத்தகைய தவறுதலான திசை திருப்புகின்ற விவரங் களையெல்லாம் இக்குழுவுக்கு அளித்திருக்கலாம் என நாங்கள் நம்ப வேண்டி யுள்ளது. தவிரவும், கடலோரப் பகுதி மக்கள் நெருக்கத்தைக் குறைப்பதற்கு இவ்விடங் கள் உதவும் எனவும் கூறியுள்ளனர். இன்று கேரள மாநிலத்தின் பரப்பளவு குறிப்பிடும் அளவுக்குப் பெருகியிருக்கிறது. இன்றைய கேரளம் 14,800 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்டுள்ளது.

ஆனால் திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்தின் பரப்பளவு வெறும் 9.154 சதுர மைல்கள் மட்டுமே. இந்த புணரமைப்பால் கேரள மாநிலத்துக்கு 5000 சதுர மைல்கள் பரப்பளவு கூடுதலாகக் கிடைத்திருக்கிறது. எனவே தேவிகுளம்-பீருமேடு பகுதிகளில் மட்டுமே மக்களைக் குடியேற்றுவதற்கான தேவை எதுவும் எழவில்லை.

தேவிகுளத்தின் வட எல்லையாக அஞ்சநாடு அமைந்திருக்கிறது. அஞ்சநாடு என்பது மறையூர், கிழாந்தூர், கோட்டைக்கோம்பர், வட்டவாடா, காந்தனூர், நாச்சிவயல் போன்ற பல கிராமங்களை உள்ளடக்கிய நாடாகும். அதன் மொத்த பரப்பளவு 112 ச. மைல்கள் ஆகும். தவிரவும்.

1. கண்ணன் தேவன் கம்பெனி 215 ச.மைல்கள்

2. ஏலக்காய் தோட்டப்பகுதிகள் 215 ச. மைல்கள்

3. வனவிலங்குகள் சரணாலயம் 305 ச. மைல்கள்

4. தேயிலை தோட்டங்கள் 97 ச. மைல்கள்

5. பெரியாறு நீர்த்தேக்கப் பரப்பு 13 ச. மைல்கள்

6. பெரியாறு நீர்த்தேக்க நீர்ப்பிடிப்பு பகுதிப்பரப்பு 305 ச. மைல்கள்

(இது வனவிலங்கு சரணாலய பரப்பையும் உள்ளடக்கிய பரப்பளவு ஆகும்.)

இவைகளைத் தவிர இங்கு எஞ்சி நிற்பது சிறு அளவிலான காடுகளும், புல்வெளிகளும் மட்டுமே. எனவே கடலோர மக்களின் நெருக்கத்தைக் குறைப்பதற்கு இப்பகுதிகள் உதவும் எனக் கூறுப்படுகின்ற வாதத்தில் எத்தகைய உண்மைகளோ, ஆதாரங்களோ இல்லையென்பதைத் தெளிவாகக் காணலாம். உண்மைகள் இவ்வாறிருக்க, பிரஜாசோஷலிஸ்டு அரசு அஞ்சு நாட்டில் மறையூர் கிராம வாழ் மக்களான தமிழர்களை வெளியேற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் அப்பகுதிகளில் மலையாளிக் குடியேற்ற காலணிகளை உருவாக்குவதற்கு முயன்று வருகிறது. கல்லாறு - ஏலக்காய் தோட்டப் பகுதிகளிலும் இது போன்ற குடியேற்ற காலணிகளை அரசு அமைத்து வருகிறது. இத்தகையச் செயல்களினால் மண்ணின் மைந்தர்களான தமிழர்களை அவ்விடயங்களிலிருந்து முற்றிலுமாக வெளியேற்றிவிட வேண்டும் என்பதே இன்றைய அரசின் திட்டமாகும்.

திரு.கொச்சி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான திரு.பட்டம் தாணுபிள்ளை அம்மாநில சட்டமன்றத்தில் அன்று தெளிவுபடுத்திக் கூறுகையில், "பிரஜாசோஷலிஸ்டு அரசாங்கத்தின் குடியேற்ற திட்டம் முன்னம்மேயே அமல்படுத் தப்பட்டிருந்தால், காமராஜ் நாடார் இப்பகுதிகளை இன்று கோரியிருக்கமாட்டார்'' என்ற அவருடைய பேச்சு எனது வாதத்திற்கு மேலும் வலுசேர்ப்பதாகவும், அதை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்து உள்ளது. அந்நாட்களில் ஆட்சிக் கட்டிலில் இருந்த சோசலிஸ்டு அரசின் மனநிலை அத்தகையதாக இருந்தது என்பதற்கு இது எடுத்துக்காட்டாக உள்ளது. அத்துடனே அவைகள் முடிந்துவிட்டனவா என்றால் அதுவுமில்லை. மாநில புனரமைப்புக் குழுவின் பரிந்துரை மீது திருவிதாங்கூர் - கொச்சி சட்டமன்றத்தில் அன்று விவாதம் எழுந்தபோது பட்டம் தாணுபிள்ளை கூறியது யாதெனில்:- "மதுரையிலிருந்து வருகின்ற தொழிலாளர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். இன்று மட்டுமல்ல. என்றென்றைக்குமாக தடுத்தாக வேண்டும். ஏனெனில், மலையாளிகளுக்கும், திரு.கொச்சியைச் சார்ந்த மற்றைய மக்களுக்கும் அங்கு வேலை வாய்ப்புகள் அளித்திட வேண்டியுள்ளது'' எனக் கூறினார். இவைகள் அனைத்திற்கும் பின்னால் ஒளிந்து நிற்கின்ற மனப்போக்கு இதுவேயாகும். இத்தகைய மனப்பாங்கே தேவிகுளம்-பீருமேட்டை அவர்கள் கோருவதற்குத் தூண்டுதலாக அமைந்திருக்கின்றது.                                     நன்றி பழமாறனின் தென் ஆசியச் செய்தி மடலிலிருந்து

இடுக்கி மாவட்டம் தமிழருக்கே சொந்தம் 56 ஆண்டுளுக்கு முன்பாக நாடாளுமன்றத்தில் தலைவர் நேசமணி முழக்கம் !

Monday, June 25, 2012

சி. ஜெயபாரதன் jayabarathans@gmail.com
27 May
to tamilmantramதமிழமுதம்தமிழ்vannanIyamperumal

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! 

ஆவியாகித் தூசியாகச் சிதறும்

 ஓர் புதிய கோள் கண்டுபிடிப்பு.

(கட்டுரை : 80)
(Newfound Exoplanet may turn to dust)
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

உப்பி விரியும் பிரபஞ்சத்தில்
புதிய பூமியைத் தேடுது
கெப்ளர் விண்ணோக்கி !
நுண்ணோக்கி ஒளிக்கருவி
விண்மீன் ஒளிமுன்னே
அண்டக் கோள் ஒளிநகர்ச்சி
பதிவாக்கிப்
புதிய கோள் கண்டுபிடிக்கும் !
விண்மீன் பரிதி போல்
தன்னொளி வீசும்
ஒளிமந்தை மீன்களைச் சுற்றும்
உலகங்கள் கோடி !
ஈர்ப்பு விண்வெளியில்
பூமியைப் போல்
நீர்க்கோள் ஒன்றை
நிபுணர் கண்டிலர் இதுவரை !
விண்வெளியில்
இன்றுவரை அண்டக்கோள்
எழுநூறு கண்டாலும்
மித வெப்ப  முடைய
மீறாக் குளிருடைய
நீர்க்கோள் ஒன்றை நிபுணர்
ஆராய வில்லை !
++++++++++++++++
“எப்படி இந்த தெய்வீக விருந்துக்கு (Epiphany) வந்தோம் என்று தெரியவில்லை எனக்கு.   அது அடிப்படை விதியே மாறுவதாகக் காட்டுகிறது.   அந்த அண்டக்கோள் திடப் பிண்டம் இல்லை.   கோளிலிருந்து வருவது தூசியே.   லாஸ் ஏஞ்சலஸ் சூழ்வெளிப் புகைமூட்டம் ஊடே காண்பது போல் இருக்கிறது.   இத்தூசி எப்படி அந்தக் கோளிலிருந்து வெளியாகிறது என்பதற்கு இரு காரணங்கள் உள்ளன.   ஒன்று தூசி முகில் அண்டக் கோளில் எரிமலை வெடிப்பால் வெளி யேறலாம்.    அல்லது கடும் சூரிய  வெப்பத்தால் உலோகங்கள் எரிந்து புகை உண்டாகித் தூசியாய் தணிவுநிலை பெறலாம்.
சௌல் ராப்பபோர்ட்  (Saul Rappaport,  பௌதிகப் பேராசிரியர், MIT)
fig-1c-kepler-telescope-helio-centric-orbit
“புதிய பூதக்கோளின் விட்டம் நமது பூமியைப் போல் ஒன்றை மடங்கு [12,000 மைல்]. அந்த கோள் லிப்ரா நட்சத்திரக் கூட்டத்திலிருந்து 20 ஒளியாண்டு தூரத்தில் இயங்கிச் சுயவொளி வீசும் மங்கிய கிலீஸ்-581 விண்மீனைச் சுற்றி வருகிறது. அதன் சராசரி உஷ்ணம் 0 முதல் 40 டிகிரி செல்ஸியஸ் என்று மதிப்பிடுகிறோம். ஆகவே அங்கிருக்கும் தண்ணீர் திரவமாக இருக்கும் என்று கருதப் படுகிறது. அந்த கோள் பாறைக் குன்றுகளுடனோ அல்லது கடல் நீர் நிரம்பியோ அமைந்திருக்கலாம்.”
ஸ்டெஃபினி உட்றி [Stephane Udry, Geneva Observatory]
இந்தச் சிதைவு எப்படி அண்டக்கோள்கள் இறுதியில் அழியலாம் என்பதைக் காட்டும் முறைகளில் ஒன்று.  அண்டக் கோள்கள் நிரந்தரக் கோள்கள் அல்ல, அவற்றுக்கும் கோர விளைவுகள் நேரும் என்று முடிவுக்கு வர ஓர் ஆதாரமாய் உள்ளது.   இந்தக் கோளின் தலைவிதி இவ்வித வெப்ப மிகையால் எரிந்து ஆவியாகிப் புகையாய், தூசியாய்ச் சிறுத்து எதிர்காலத்தில் ஒன்றும் இல்லாமல் காலியாகப் போகும் என்று தெரிய வருகிறது.
டானியல்   ஃபாபிரிக்கி  (Daniel Fabrycky,  Kepler Observatory Science Team)
“நமது பால்வீதி காலக்ஸி விளிம்பில் நாம் எல்லை அறியாத வேலிகளைக் கெப்ளர் விண்ணோக்கித் தள்ளி வைக்கும் ! கெப்ளர் தொலைநோக்கியின் கண்டுபிடிப்புகள் மனிதன் தன்னைப் பற்றி அறிந்த அடிப்படைக் கருத்துக்களை முற்றிலும் மாற்றிவிடலாம்.”

ஜான் மோர்ஸ் (Jon Morse, Director NASA’s Astrophysics Division) (Feb 19 2009)

fig-1a-kepler-space-view-mission
“அண்டையில் உள்ள சின்னஞ் சிறு சுயவொளி விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியை ஒத்த அண்டக் கோள்களில் உயிரின வாழ்வுக்கு ஏற்ற பகுதிகள் உள்ளதாக இப்போது அறிகிறோம். இச்செய்தி புல்லரிப்பு ஊட்டுகிறது. இப்பணி நாசாவின் அண்டவெளித் தேடல் முயற்சிகளின் முடிவான குறிக்கோளாகும்.”
டாக்டர் சார்லஸ் பீச்மென் [Dr. Charles Beichman, Director Caltech's Michelson Science Center]
“பூதக்கோள் போல பல கோள்களைத் தேடிக் காணப் போகிறோம். பூமியை ஒத்த கோள்களைக் கண்டு அவற்றின் பண்பாடுகளை அறிய விரும்புகிறோம். ஆங்கே வாயு மண்டலம் சூழ்ந்துள்ளதா? அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன? அந்த வாயுக் கலவையில் நீர் ஆவி [Water Vapour] உள்ளதா? அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள்ளனவா? நிச்சயமாக அந்த கோள் எந்த விதமானச் சூழ்வெளியைக் கொண்டது என்பதையும் கண்டு கொள்ள விழைகிறோம்.”
டாக்டர் விக்டோரியா மீடோஸ் [Member, Terrestrial Planet Finder, NASA]
“தற்போது ஒருசில வாரங்களுக்கு ஒருமுறை வியாழக் கோளை ஒத்த புறவெளிக் கோள் ஒன்று கண்டுபிடிக்கப் படுகிறது ! சமீபத்தில் கண்ட புதிய கோள் கிலீஸ் 876 (Gliese 876) எனப்படும் விண்மீனைச் சுற்றி வருகிறது ! மிக்க மகத்தானது ! ஹப்பிள் கண்டுபிடித்துப் படமெடுத்த கோள் இரட்டை விண்மீன்கள் வீசி எறியப்பட்டு 450 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது ! எல்லாவற்றுக்கும் உன்னதமான ஒரு கோள் இனிமேல்தான் தெரியப் போகிறது !”
மிசியோ காக்கு (Michio Kaku, Professor Theoretical Physicist, City College of New York) (2007)
“இந்த இரட்டைப் பரிதிச் சுற்றுக்கோள் அமைப்பாடு மிக்கக் கவர்ச்சி ஊட்டுவது !  இரண்டு பரிதிகள் குறுக்கிடும் கோள் ஆக மூன்று அகிலக் கோளங்கள் ஒன்றை ஒன்று மறைத்து வருவது (Solar Eclipses) விண்வெளியில் மகத்தான காட்சி !”
லாரென்ஸ் டாயில் (அகிலவெளி விண்மீன் உயிரியல் ஆய்வக விஞ்ஞானி)  
“கெப்ளர் விண்ணோக்கியின் உன்னத துல்லிய கணிப்பு இது.  இதில் மெய்யான புல்லரிப்பு ஊட்டுவது எங்களுக்கு : இரட்டைப் பரிதிகளை ஓர் அண்டக்கோள் சுற்றி வருவது !”
அலன் பாஸ் (கார்னகி விஞ்ஞானக் கழகம், வாஷிங்டன். டி.சி.)
“இன்னும் பத்தாண்டுகளுக்குள் மற்ற விண்மீன் குடும்பங்களில் நமது பூமியைப் போல் உள்ள கோள்களையும், உயிரினச் சின்னங்கள் இருப்பையும் கூடத் தேடிக் கண்டுபிடித்து விடலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.”
ரே ஜெயவர்த்தனா (Ray Jayawardhana, Associate Professor of Astronomy, University of Toronto) (2007)
“பூதக்கோளின் விட்டம் நமது பூமியைப் போல் ஒன்றை மடங்கு [12,000 மைல்].  அந்த கோள் லிப்ரா நட்சத்திரக் கூட்டத்திலிருந்து 20 ஒளியாண்டு தூரத்தில் இயங்கிச் சுயவொளி வீசும் மங்கிய கிலீஸ்-581 விண்மீனைச் சுற்றி வருகிறது.  அதன் சராசரி உஷ்ணம் 0 முதல் 40 டிகிரி செல்ஸியஸ் என்று மதிப்பிடுகிறோம். ஆகவே அங்கிருக்கும் தண்ணீர் திரவமாக இருக்கும் என்று கருதப் படுகிறது.  அந்த கோள் பாறைக் குன்றுகளுடனோ அல்லது கடல் நீர் நிரம்பியோ அமைந்திருக்கலாம்.”

“பூதக்கோள் போல பல கோள்களைத் தேடிக் காணப் போகிறோம். பூமியை ஒத்த கோள்களைக் கண்டு அவற்றின் பண்பாடுகளை அறிய விரும்புகிறோம்.  ஆங்கே வாயு மண்டலம் சூழ்ந்துள்ளதா?  அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன?  அந்த வாயுக் கலவையில் நீர்மை ஆவி [Water Vapour] உள்ளதா ?  அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள் ளனவா?  நிச்சயமாக அந்த கோள் எந்த விதமானச் சூழ்வெளியைக் கொண்டது என்பதையும் கண்டு கொள்ள விழைகிறோம்.”

விண்வெளியில் ஆவியாகித் தூசியாகும் அண்டக்கோள் கண்டுபிடிப்பு
அமெரிக்காவின்  MIT  (Massachusetts Institute of Technology) பொறிநுணுக்க ஆய்வாளர்கள், மற்றும் நாசா விண்வெளி நிபுணர்கள் 1500 ஒளியாண்டு தூரத்தில் பரிதி ஒன்றை மிக்க நெருக்கத்தில் சுற்றி ஆவியாகித் தூசியாகும் ஓர் அண்டக்கோளைச் சமீபத்தில் (2012 மே மாதம் 20) கண்டிருப்பதாக வானியல்  பௌதிக இதழில் (Astrophysical Journal) அறிவித்துள்ளார்கள்.    தீக்கொப்புளம் உண்டாக்கும் அந்தக் கடும் வெப்பத்தில் சிதையும் அந்தக் கோள் தன் பரிதியை 15 மணி நேரத்துக்கு ஒருமுறை மிக்க அருகில் சுற்றி வருவதாகக் கணித்துள்ளார்கள்.   தூசி வால் நீண்ட அந்தக் கோள், ஒரு வால்மீன் போல் காணப் படுகிறது.   ஆனால் அந்த நீண்ட தூசி வால் வெளியாக்கும் தூள்கள் அண்டக்கோளின் சிதைவைக் காட்டுகின்றன.    அச்சிறிய கோள் நமது புதக் கோளை விடச் சிறியது.  புதக்கோள் போல அந்த அண்டக் கோளும் தன் சூரியனை மிக நெருக்கத்தில் வெகு வேகமாகச் சுற்றி வருகிறது.  இத்தனை நெருக்கத்தில், இத்தனை வேகத்தில் பரிதியைச் சுற்றும் ஓர் அண்டகோள் இதுவரை கண்டுபிடிக்கப் பட வில்லை.    அத்தனை நெருக்கத்தில் சுற்றும் அந்தக் கோளின் தள வெப்ப உஷ்ணம் சுமார் 3600 டிகிரி பாரன்ஹீட் என்று கணிக்கப் பட்டுள்ளது.   அந்தக் கடும் வெப்பத்தில் கோளின் தளம் பேரளவில் சூடாகி, தள மண் உலோகங்கள் எரிந்து ஆவியாகின்றன.   ஆவியான உலோகங்கள் குளிர்ந்து தூசியாக உலர்ந்து வெளியேறுகின்றன.   இறுதியில்  கோளின் பேரளவு நிறை எரிந்து சாம்பலாகி நீங்கி, நிறை குன்றி ஈர்ப்பு விசை தளர்ந்து தன் சூரியன் தீயில் வீழ்ந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம்.   அண்டக்கோள் சுற்றும் அந்த விண்மீன் : KIC – 12557548 என்று குறிப்பிடப் படுகிறது.   அக்கோள் முற்றிலும் சிதைய 100 மில்லியன் ஆண்டுகள் ஆகலாம் என்று கணிக்கிறார்கள்.
fig-6-habitable-zone-to-hunt-earth-like-planets
“எப்படி இந்த தெய்வீக விருந்துக்கு (Epiphany) வந்தோம் என்று தெரியவில்லை எனக்கு.   அது அடிப்படை விதியே மாறுவதாகக் காட்டுகிறது.   அந்த அண்டக்கோள் திடப் பிண்டம் இல்லை.   கோளிலிருந்து வரும் தூசியே.   லாஸ் ஏஞ்சலஸ் சூழ்வெளிப் புகைமூட்டம் ஊடே காண்பது போல் இருக்கிறது.   இத்தூசி எப்படி அந்தக் கோளிலிருந்து வெளியாகிறது என்பதற்கு இரு காரணங்கள் உள்ளன.   ஒன்று தூசி முகில் அண்டக் கோள் எரிமலை வெடிப்பால் வெளி யேறலாம்.    அல்லது கடும் சூரிய  வெப்பத்தால் உலோகங்கள் எரிந்து புகை உண்டாகித் தூசியாய் தணிவுநிலை பெறலாம்” என்று சௌல் ராப்பபோர்ட்  (Saul Rappaport,  பௌதிகப் பேராசிரியர், MIT) கூறுகிறார்.
இந்தச் சிதைவு எப்படி அண்டக்கோள்கள் இறுதியில் அழியலாம் என்பதைக் காட்டும் முறைகளில் ஒன்று.   இது அண்டக் கோள்கள் நிரந்தரக் கோள்கள் அல்ல, அவற்றுக்கும் கோர விளைவுகள் நேரும் என்று முடிவுக்கு வர ஓர் ஆதாரமாய் உள்ளது.   இந்தக் கோளின் தலைவிதி இவ்வித வெப்ப மிகையால் எரிந்து ஆவியாகிப் புகையாய், தூசியாய் எதிர் காலத்தில் ஒன்றும் இல்லாமல் போகும் என்று தெரிய வருகிறது  என்று  கெப்ளர் விண்ணோக்கி விஞ்ஞானக் குழுவினரில் ஒருவரான டானியல்   ஃபாபிரிக்கி  (Daniel Fabrycky,  Kepler Observatory Science Team) விளக்குகிறார்.
அண்டக்கோள் ஆய்வாளர் பரிதியைத் தூசியோடு சுற்றும் கோளின் ஒரு கணனி   மாடலைத் தயார் செய்து பார்த்த போது, கோளைச் சுற்றியுள்ள தூசிமய வெளி திரட்சியாகவும், வால் புறத்தில் தூசிமயம் மெலிந்ததாகவும் அமையக் கண்டனர்.  அந்தத் தூசிமயத் திரட்சியில் பட்ட ஒளி, கெப்ளர் விண்ணோக்கி கண்ட வெளிச்சத்தைப் போல் இருந்ததைப் பார்த்து வியந்தனர்.
வானியல் விஞ்ஞானிகள் கெப்ளர் விண்ணோக்கியைப் பயன்படுத்தி  விண்வெளி ஒளிமந்தைகளில் இயங்கி வரும் பரிதி மண்டலக் கோள்களைக் கண்டுபிடிக்க முனைந்தார்கள்.    வெளிமண்டலச் சூரியன்களை நோக்கும் போது ஏற்படும் ஒளிமங்கலும், ஒளி மீட்சியும் அதனைச் சுற்றும் புறக்கோளின் நகர்ச்சியைக் காட்டும்.   தற்போது கெப்ளர் விண்ணோக்கி சுமார் 160,000 பரிதிகளை நுட்பமாய்ச் சோதித்து வருகிறது.   ஒளிமங்கும் நேரத்திலிருந்து ஒளி பொங்கும் நேரம் கோள் பரிதியைச் சுற்றும் பாதி நேரத்தைக் குறிப்பிடுகிறது.    ஒளி மிகும் நேரத்தைக் கணக்கிட்டும் கோள் தன் பரிதியைச் சுற்றும் நேரத்தைக் கணிக்கலாம்.   எரிந்து சாம்பலை வெளியாக்கும் அண்டக்கோள் தன் சூரியனை ஒருமுறைச் சுற்ற 15 மணி நேரம் பிடித்தது.

கெப்ளர் விண்ணோக்கி குறிவைக்கும் புறவெளிப் பரிதி மண்டலங்கள்
2012 மே மாதம் 21 வரை கெப்ளர் 767 புறவெளிக் கோள்கள் அல்லது புறப் பரிதிக் கோள்கள் (Exoplanets or Extrasolar Planets)  நோக்கி விபரம் அறிவித்துள்ளது.   ஏறக்குறைய 50% சூரியன்கள் தம்மைச் சுற்றும் ஏதாவது ஓர் அண்டக் கோளைக் கொண்டுள்ளன.   2012 ஆண்டு ஆய்வுப்படி நமது பால்வீதி மந்தையில் உள்ள 100 பில்லியன் பரிதிகளில் ஒவ்வொன்றும் ஒன்று அல்லது இரண்டு கோள்களைப் பிடித்துக் கொண்டுள்ளன.   அவற்றில் பெரும்பான்மையானவை நமது பூதக்கோள் வியாழன் அல்லது நெப்டியூன் போன்றவை என்பது தெரிகிறது.    நமது பூமியை ஒத்த அளவில் இருப்பவை ஒரு சிறிது அளவே.   அவற்றில் வெப்பம், குளிர் மிதமாக இருந்து பூமிபோல் உயிரினம் வாழத் தகுதி உள்ள அரங்கமா (Habitable  zone) என்று அறிதல் அவசியமாகும்.
இரண்டு சூரியன்களைச் சுற்றிவரும் ஓர் அண்டக்கோள் கண்டுபிடிப்பு
2011 செப்டம்பர் 15 ஆம் தேதி நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி வானியல் குழுவினர் முதன் முறையாக இரு பரிதிகளைச் சுற்றிவரும் ஒரு கோளைக் கண்டிருப்பதை மெய்ப்பித்து விட்டதாக அறிவித்தார்.  கெப்ளர் விண்ணோக்கி நோக்கிய அந்த விந்தைக் கோளின் பெயர் : கெப்ளர் -16பி (Kepler -16b).  அந்தப் புதிய கோள் நமது பூமியிலிருந்து 220 ஒளியாண்டு தூரத்தில் இருப்பதாகத் தெரிகிறது.  பெரிய பரிதி ஒன்றை மையமாய் வைத்துச் சுற்றும் ஒரு சிறிய பரிதியின் ஏற்பாடு இது.  இவை “இரண்டை விண்மீன்கள்” (Binary Stars) வகுப்பு வகையைச் சேர்ந்தவை.  இந்த இரட்டை விண்மீன் களைச் சுற்றிவரும் கோளுக்கு “இரட்டைப் பரிதிச் சுற்றுக்கோள்” (Circumbinary Planet) என்று பெயர் அளிக்கப் பட்டுள்ளது,  அதாவது கெப்ளர் -16பி இன் அந்திவானில் மாலைப் பொழுது மங்கி மறையும் போது இரு பரிதிகள் அடுத்தடுத்து அத்தமிக்கும் விந்தை நிகழும் !
நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி விண்வெளியில் 2009 இல் ஏவப் பட்டது.  அதன் முக்கியக் குறிக்கோள் நமது பால்வீதி ஒளிமந்தையில் ஒளிந்து கொண்டுள்ள பூமியைப் போன்ற கோள்களைக் கண்டுபிடிப்பது.  கெப்ளர் -16பி சுற்றிவரும் பரிதிகளில் பெரியது நமது சூரியன் போல் ஒப்பளவில் 69% பரிமாணம் உடையது.  சிறிய பரிதி நமது சூரியன் போல் ஒப்பளவில் 20% பரிமாணம் உடையது.  கெப்ளர் -16பி சுற்றுகோளின் தள உஷ்ணம் : (-73C முதல் -101C வரை) (-100F முதல் -150F வரை).  இரட்டைப் பரிதிகளை ஒருமுறை சுற்ற கோளுக்கு 229 புவிநாட்கள் (Earth days) எடுப்பதைக் கெப்ளர் கணித்தது.  மையப் பரிதியிலிருந்து சுற்றும் தொலைத் தூரம் சுமார் 65 மில்லியன் மைல் (104 மில்லியன் கி.மீடர்).  அந்தத் தூரம் நமது பரிதியை வெள்ளிக் கோள் (Venus) சுற்றும் தூரத்துக்கு நிகரானது.

கெப்ளர் விண்ணோக்கிச் சுற்றுக்கோளை எப்படிக் கண்டுபிடித்தது ?
விண்வெளியில் மின்னும் ஒரு பரிதிக்கும் கெப்ளர் விண்ணோக்கிக்கும் இடையில் ஓர் அண்டக்கோள் குறுக்கிடும் போது சீராக ஒளி மங்கியும் பிறகு பொங்கியும் திரும்பத் திரும்ப வருவதால் பரிதிக்கு அருகில் கோளின் நகர்ச்சி நிச்சய மாகிறது.  இந்தக் கண்டுபிடிப்பில் ஒரு பரிதி அடுத்த பரிதியைக் குறுக்கிடும் போதும் ஒளி மங்குவதும் மீள்வதும் காணப்பட்டது.  மாற்றி மாற்றி இரண்டு பரிதிகளின் ஒளியும் ஓர் ஒழுங்குக் கால நேரத்தில் மங்கலானதை நாசா விஞ்ஞானிகள் கண்டனர்.  இரட்டைப் பரிதிகளின் சுற்றையும், குறுக்கிடும் கோளின் இருப்பையும் விஞ்ஞானிகள் நிரூபித்தார்.  கெப்ளர் விண்ணோக்கி இந்தப் புதிய கண்டுபிடிப்பை நோக்கியது மட்டும் இல்லாமல் பரிதிகளின் நிறை, ஆரம், பாதை, சுற்றும் காலம் ஆகியவற்றையும், கோளின் நிறை, ஆரம், சுற்றுக் காலத்தையும் துல்லியமாகக் கணித்தது.  மையப் பரிதிச் சுற்றும் சிறிய பரிதி “செங்குள்ளி” (Red Dwarf) இனத்தைச் சேர்ந்தது. விண்மீன்  கூட்டத்தில் செங்குள்ளி தளர்ச்சியுற்று மங்கிப் போன ஒரு சிறு விண்மீன் !

புதிய பூமிகளில் உயிரின விருத்திக்கு உள்ள தகுதிகளைத் தேடல்
2009 மார்ச் 7 ஆம் தேதி விண்வெளியில் நமது பால்வீதிப் பரிதியைச் சுற்றி வர அனுப்பிய கெப்ளர் விண்ணோக்கியின் கூரிய ஒளிக்கண் குறைந்தது 500 புதிய பூமிகளைக் கண்டுபிடித்துக் காட்டும் என்று எதிர்பார்க்கப் பட்டது ! அந்த விண்வெளித் தேடல் முடிவுகளை நாசா 2012 ஆம் ஆண்டில்தான் வெளியிடும் என்று தீர்மானமாக அறிவித்துள்ளது !  நாசா கெப்ளர் விண்ணோக்கியை ஏவியிருப்பதின் முக்கியக் குறிக்கோள் பூமியைப் போன்ற நீர்க்கோள்கள் பிரபஞ்ச வெளியில் வேறு சூரியன்களைச் சுற்றி வருகின்றனவா என்பதைக் காண்பதற்கே.  இதுவரை (2011 செப்டம்பர் 19) விண்ணோக்கி 150,000 விண்மீன்களின் ஒளித் திணிவை உற்று நோக்கி வந்துள்ளது.  விண்மீன் ஒளித் திணிவில் ஒளிமங்கி, ஒளிமீட்சி நிகழ்ந்து சுற்றுக்கோள் ஒன்று குறுக்கிடுகிறதா வென்று கெப்ளர் விண்ணோக்கி சோதிக்கிறது.  2012 ஆண்டு மே மாதம் 21 வரை  766 சூரிய ஏற்பாட்டில் ஒற்றைப் பரிதியைச் சுற்றும் 685 அண்டவெளிக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன !   விந்தையாக இரட்டைச் சூரியனைச் சுற்றும் ஓர் அண்டக்கோளை கெப்ளர் விண்ணோக்கி கண்டுள்ளது.
2015 முதல் 2025 ஆண்டு வரை மூன்று முற்போக்கு விண்ணோக்கிகளை நாசா அனுப்பத் திட்டமிட்டுள்ளது. முதலாவது “விண்வெளி நுண்ணோக்கிக் குறிப்பணி” [Space Interferometry Mission (SIM)], இரண்டாவது “பூமியை ஒத்த கோள் நோக்கி” [Terrestrial Planet Finder (TPF)], மூன்றாவது “உயிரினம் நோக்கி” [Life Finder (LF)]. “சிம்” விண்ணோக்கி பல்லடுக்குத் தொலைநோக்கிகளைக் கொண்டு ஒளிமூலம் விண்மீன்களைத் துருவிப் (Multiple Telescopes to Map Stars) புதிய உலகங்களைக் கண்டுபிடிக்கும். “டிபியெஃப்” விண்ணோக்கி புதிய பூமியைக் கண்டுபிடித்து உயிரினம் வாழத் தகுதி உள்ளதா வென்று இரட்டைப் பணிகள் புரியும். இறுதியாக 2025 (?) ஆண்டில் ஏவப்படும் “உயிரினம் தேடி” விண்ணுளவி கண்டுபிடித்த ஒரு புதிய பூமியில் நிகழும் உயிரியல் இயக்கங்களை உளவி அறிந்து பூமிக்குத் தகவல் அனுப்பும்.

++++++++++++
தகவல் :
Picture Credit : NASA Space Center
1.  Astronomy Today Chaisson & McMillan (1999)
2.  Reader’s Digest – The Universe & How We See It  By : Giles Sparrow (2001)
3.  Universe By : Roger Freedman & William Kaifmann III (6th Edition) (2002)
4.  Lightnet :  Planet Orbiting Two Suns ?  (November 5, 1999)
5.  Space Daily : Latest Exoplanet Haul Includes Super Earth At Habitat Zone Edge, Geneva Austria (September 13, 2011)
6.  UCSB Scientist Contributes to First Discovery of a Planet orbiting Two Suns (University of California Santa Barbara) (September 16, 2011)
7.  BBC News : NASA’s Kepler Telescope Finds Planet Orbiting Two Suns (September 15, 2011)
8  Los Angeles Times :  Scientists Find Planet Orbiting Two Suns Like in “Star Wars” (September 16, 2011)
9.  Wikipedia :  Extrasolar planets (September 19, 2011)
10.  Space Daily :  Astronomers Confirm First Planet orbiting Two Suns (September 19, 2011)
11  Wikipedia : http://en.wikipedia.org/wiki/Kepler-16b Kepler-16b Planet (September 19, 2011)
12.  Wikipedia : http://en.wikipedia.org/wiki/Circumbinary_planet (September 19, 2011)
13.  Wikipedia :  http://en.wikipedia.org/wiki/Extrasolar_planet  (May 22, 2012)
14.  Space Daily :  Newfound Exoplanet may turn to dust By Jennifer Chu (MIT News)  (May 20, 2012)
15.   Wikipedia :  http://en.wikipedia.org/wiki/List_of_multiplanetary_systems (May 24, 2012)

++++++++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com)  (May 26, 2012)
http://jayabarathan.wordpress.com/

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! ஆவியாகித் தூசியாகச் சிதறும் ஓர் புதிய கோள் கண்டுபிடிப்பு.

05:49 (1 hour ago)
to anbudanvallamaiதமிழமுதம்தமிழ்
வந்தே மாதரம் எனும் போதினிலே !
சி. ஜெயபாரதன், கனடா.

எந்தையும் தாயும் பூரித் துலவி,
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் நிலவி
சிந்தையில் கோடி எண்ணம் விதைத்த,
தாயக பாரதத்தை
வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று
வாயுற வாழ்த்தும் போதினிலே
எந்த மதவாடை அடிக்குது?
உடன் பிறவா பாரத
பந்துக்களே!
வந்தே மாதர மென்னும் கீதம்
சொந்த வழிபாடா
மதவாதி களுக்கு?
சுதந்திரப் போராட் டத்தில்
மராட்டிய சிவாஜிகள்
முதல் விடுதலை முழக்கம் பாடிப்
பிரிட்டன் வயிற்றைக் கலக்கிய
வந்தே மாதர கீதம்
வடிவ வழிபாடா?
வரலாறு நுகராது
சிறகொடிந்த ஈசல்கள்,
பிறந்த நாட்டை துறக்கின்றன!
அசோகனின் ஆழித் திலகம் ஒளிரும்
மூவர்ணக் கொடிக்கு
முடிவணங்கி மதிப்ப ளிப்பது
வடிவ வழிபாடா?
பெற்ற தாயும், பிறந்த பொன்னாடும்
கற்றவர்க்கு
நற்றவத் தெய்வம்!
மற்றவர்க்கு
வெற்றுத் தோற்றம்!
எம்மதமும் சம்மதம் என்று
பாரதம் வரவேற்றது,
நிம்மதியாய் வாழ!
பெற்ற தாயும் தெய்வந்தான்!
பிறந்த நாடும் தெய்வந்தான்!
நட்ட கல்லும் தெய்வந்தான்!
வெட்ட வெளியும் தெய்வந்தான்!
சக்தி, சிவனும் தெய்வந்தான்!
ஆசிய புத்தன் தேவ தூதனே
ஏசு மகானும் தேவ தூதரே
நபி நாயகம் தேவ தூதரே
குரு நானக் தேவ தூதரே!
கீதையும், குறளும் தேவ நூல் !
பைபிள், குரானும் தேவ நூல் !
தெய்வ முள்ள தெனின் எல்லாம்
தெய்வந்தான்!
தெய்வ மில்லை எனின் எதுவும்
தெய்வ மில்லைதான்!
உலகக் கரங்கள் ஒன்று கோர்த்த
ஐக்கிய நாட்டுப் பேரவை,
ஒலிம்பிக் மேடையில்,
கொடி வணக்கம் செய்வது
வடிவ வழிபாடா?
பிறந்த நாட்டை வணங்கா பிள்ளைகள்
துறப்பர் அடையாள முத்திரை!

************
பெற்ற தாயும் பிறந்த நாடும் நற்றவ வானினும் நனி சிறந்ததுவே !

” இந்த உடம்பை எனக்கு அளித்த பாரதப் பொன்னாட்டை மிகுந்த

மதிப்போடும் மரியாதையோடும் திரும்பிப் பார்க்கின்றேன். பூமியிலே 

புனித நாடான அதில் பிறப்பதற்கு வாய்ப்பளித்த கருணைக்கடலான 

இறைவனை வணங்குகின்றேன்.”

-சுவாமி விவேகானந்தர்.

கனடாவிலிருந்து அணுவியல் விஞ்ஞானி தற்பொழுது

கூறுவதும் அதன் பிரதிபலிப்புத்தானே, வலைப்பூ, அன்பர்களே !

வந்தே மாதரம் எனும் போதினிலே ! -சி.ஜெயபாரதன்

Saturday, June 23, 2012

http://youtu.be/iAfAA9ZNon4

President-Tamilnadu Union of Journalists,Regd. Vice-President_All India Union of Journalists, New Delhi, India - Mr D S Ravindra Doss, M.A.,BL., M.Ed.,

D.S. RAVINDRADOSS, M.A.B.L. MEd.

வேலூரை அடுத்த குடியாத்தம் சேர்ந்தவர். ஆசிரியராகப் பணியாற்றியவர். மக்கட்பணியில் தொண்டாற்றும் நோக்கொடு அரசியலுக்கு வந்தவர்.

 இவரது அரசியல் வாழ்க்கை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து துவங்கியது.ஜனசக்தி பத்திரிக்கையில் ஆசிரியர் குழுவில் பணியாற்றி இருக்கின்றார்.

அதைத் தொடர்ந்து பல்வேறு பத்திரிக்கைகளிலும் பணியாற்றியுள்ளார்.CPI ஆதரவு இயக்கமான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்திலும் பொறுப்பு வகித்துள்ளார். இவரது துணவியார், சசிகலாதேவி, மறைந்த முதுபெரும் தோழர் எம்.கல்யாண சுந்தரத்தின் உதவியாளராகப் பணியாற்றி உள்ளார்.

ஒரு கட்டத்தில் CPI கட்சிப் பணிகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். 1996ல் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தை உருவாக்கினார். ஏறத்தாழ 4000 பத்திரிக்கயாளர்களை ஐக்கியப்படுத்தினார்.

தமிழ்நாடு அரசின் பத்திரிக்கையாளர்களுக்கான குழுவிலும், பத்திரிக்கையாளர் ஓய்வூதியக் குழுவிலும் தமிழக அரசு இவரை நியமித்தது.

பத்திரிக்கையாளர் இறந்தால் ரூபாய் 2 லட்சம் நிதி உதவி, ஓய்வூதியம் ரூபாய் 6000ம், பத்திரிகையாளர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்திற்கு ரூபாய் 6000-ஆகியவை இவரது சாதனையே ஆகும்.

பத்திரிக்கையாளர்களின் குடியிருப்புக்காக அரசு ஒதுக்கீடுகளில் முன்னுரிமை, மாவட்டத்தலைநகரங்களில் வீட்டுமனைத் திட்டம் ஆகியவற்றை எல்லாம் பத்திரிக்கையாளர் சங்கத்தின் மூலம் பெற்றுத்தந்தார்.

ஹிந்து, நக்கீரன் பத்திரிக்கைகள் மீதான நடவடிக்கை, மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல் நடந்திட்டபோதெல்லாம், தமிழ்நாடு பத்திரிக்கையாளர்களை எல்லாம் ஒருங்கிணத்து உரிமைக்குரல் எழுப்பினார்.

மறைந்த தோழர், எம்.கே கல்யாணசுந்தரம், இந்திய ஐக்கியப் பொதுவுடமைக் கட்சியை அமைத்தபோது, சொன்ன வாசகங்கள் இவருக்கு மிகவும் பொருந்தும். ”கட்சி அடையாள அடையை வைத்திருப்பவர்கள் எல்லாம் கம்யூனிஸ்டுகள் அல்லர். அடையாள அட்டைஉ இல்லாதவர்கள் எல்லோரும் கம்யூனிஸ்டுகள் இல்லை என்றும் சொல்ல முடியாது.” என்பது எம்.கே. அவர்களின் கூற்று. தோழர். எம்.கே. தன் இறுதிநாட்களில் படித்துக் கொண்டிருந்தவை எல்லாம் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் நூல்கள்தான்.

இவர் ஆசிரியப் பணியைத் துறந்தபோது இவருடன் சேர்ந்து அதேபோன்று ஆசிரியப் பணியை விட்டு விலகி CPI-யில் இணந்தவர்தான் தற்போதைய இராஜ்ஜியசபை உறுப்பினராகவும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய
செயலராகவும் டெல்லியில்  பணியாற்றிக் கொண்டு , பல்வேறு பிரச்சினைகளுக்கும் நியாயமான தீர்வுகளைச் சொல்லிவரும் D.ராஜா ஆவார்.

தாஸ் கட்சியைவிட்டு விலகியபோதும் தன்னம்பிக்கை ஒன்றையே மூலதனமாக வைத்துப் பல்வேறு சாதனைகள் ஆற்றினார்.

CPI- ஐ விட்டு விலகிப் புதுக் கட்சி கண்ட தோழர். எம். கே. அவர்கள் மறைந்தபோதும் சகலவிதமான மரியாதைகளுடனும் அவரது இறுதிச் சடங்குகள் நடந்தேறியது. அதேபோன்று, இப்பொழுது, டி.எஸ்..ரவீந்திரதாசுக்கும் நிகழவிருக்கின்றது.

இவரது இறுதி ஊர்வலம் பத்திரிக்கையாளர் சங்கத்தின் இறுதி அஞ்சலியோடு, சென்னை, வளரசரவாக்கம், கிருஷ்ணமாச்சாரி நகர், 4-வது தெரு, எண்-162-ல் உள்ள அவரது இல்லத்திலிருந்து மாலை 3 மணிக்குமேல் புறப்படும் என்று தெரிவிக்கப்படுள்ளது.

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் அலுவலகத் தொலைபேசி எண்:
044-25320990 என்ற எண்ணிலும், 9382845866 அலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.

நமது நினைவில் என்றென்றும் வாழப்போகும் டி.எஸ். ரவீந்திரதாஸுக்கு, சசிகலாதேவி என்ற துணைவியாரும், சுபாஷ், கமலஹாசன் ஆகிய புதல்வர்களும், டாக்டர். அஜிதா, எழுத்தாளர் வந்தனா ஆகிய புதல்வியரும் உள்ளனர்.

இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் மேலே குறிப்பிட்ட முகவரிக்கு அஞ்சல் மூலம் ஆறுதல் கடிதங்களையும்  அனுப்பலாம்

இவரை அறிந்தோர், அறியாதோர், ஆகிய வலைப்பூ அன்பர்கள், இணைய இதழ்களின் ஆசிரியர்கள் அனைவருமே இறுதி அஞ்சலி மடலை ,ஒரு போஸ்ட் கார்டில் எழுதி அனுப்பலாம். இது வலைப்பதிவர்களின் கடமை என்றே கருதவேண்டும்.

..

பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர், டி.எஸ். ரவீந்திரதாஸ் மறைந்தார்!