Saturday, June 23, 2012

பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர், டி.எஸ். ரவீந்திரதாஸ் மறைந்தார்!

http://youtu.be/iAfAA9ZNon4


President-Tamilnadu Union of Journalists,Regd. Vice-President_All India Union of Journalists, New Delhi, India - Mr D S Ravindra Doss, M.A.,BL., M.Ed.,

D.S. RAVINDRADOSS, M.A.B.L. MEd.

வேலூரை அடுத்த குடியாத்தம் சேர்ந்தவர். ஆசிரியராகப் பணியாற்றியவர். மக்கட்பணியில் தொண்டாற்றும் நோக்கொடு அரசியலுக்கு வந்தவர்.

 இவரது அரசியல் வாழ்க்கை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து துவங்கியது.ஜனசக்தி பத்திரிக்கையில் ஆசிரியர் குழுவில் பணியாற்றி இருக்கின்றார்.

அதைத் தொடர்ந்து பல்வேறு பத்திரிக்கைகளிலும் பணியாற்றியுள்ளார்.CPI ஆதரவு இயக்கமான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்திலும் பொறுப்பு வகித்துள்ளார். இவரது துணவியார், சசிகலாதேவி, மறைந்த முதுபெரும் தோழர் எம்.கல்யாண சுந்தரத்தின் உதவியாளராகப் பணியாற்றி உள்ளார்.

ஒரு கட்டத்தில் CPI கட்சிப் பணிகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். 1996ல் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தை உருவாக்கினார். ஏறத்தாழ 4000 பத்திரிக்கயாளர்களை ஐக்கியப்படுத்தினார்.


தமிழ்நாடு அரசின் பத்திரிக்கையாளர்களுக்கான குழுவிலும், பத்திரிக்கையாளர் ஓய்வூதியக் குழுவிலும் தமிழக அரசு இவரை நியமித்தது.


பத்திரிக்கையாளர் இறந்தால் ரூபாய் 2 லட்சம் நிதி உதவி, ஓய்வூதியம் ரூபாய் 6000ம், பத்திரிகையாளர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்திற்கு ரூபாய் 6000-ஆகியவை இவரது சாதனையே ஆகும்.


பத்திரிக்கையாளர்களின் குடியிருப்புக்காக அரசு ஒதுக்கீடுகளில் முன்னுரிமை, மாவட்டத்தலைநகரங்களில் வீட்டுமனைத் திட்டம் ஆகியவற்றை எல்லாம் பத்திரிக்கையாளர் சங்கத்தின் மூலம் பெற்றுத்தந்தார்.

ஹிந்து, நக்கீரன் பத்திரிக்கைகள் மீதான நடவடிக்கை, மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல் நடந்திட்டபோதெல்லாம், தமிழ்நாடு பத்திரிக்கையாளர்களை எல்லாம் ஒருங்கிணத்து உரிமைக்குரல் எழுப்பினார்.

மறைந்த தோழர், எம்.கே கல்யாணசுந்தரம், இந்திய ஐக்கியப் பொதுவுடமைக் கட்சியை அமைத்தபோது, சொன்ன வாசகங்கள் இவருக்கு மிகவும் பொருந்தும். ”கட்சி அடையாள அடையை வைத்திருப்பவர்கள் எல்லாம் கம்யூனிஸ்டுகள் அல்லர். அடையாள அட்டைஉ இல்லாதவர்கள் எல்லோரும் கம்யூனிஸ்டுகள் இல்லை என்றும் சொல்ல முடியாது.” என்பது எம்.கே. அவர்களின் கூற்று. தோழர். எம்.கே. தன் இறுதிநாட்களில் படித்துக் கொண்டிருந்தவை எல்லாம் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் நூல்கள்தான்.

இவர் ஆசிரியப் பணியைத் துறந்தபோது இவருடன் சேர்ந்து அதேபோன்று ஆசிரியப் பணியை விட்டு விலகி CPI-யில் இணந்தவர்தான் தற்போதைய இராஜ்ஜியசபை உறுப்பினராகவும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய
செயலராகவும் டெல்லியில்  பணியாற்றிக் கொண்டு , பல்வேறு பிரச்சினைகளுக்கும் நியாயமான தீர்வுகளைச் சொல்லிவரும் D.ராஜா ஆவார்.

தாஸ் கட்சியைவிட்டு விலகியபோதும் தன்னம்பிக்கை ஒன்றையே மூலதனமாக வைத்துப் பல்வேறு சாதனைகள் ஆற்றினார்.

CPI- ஐ விட்டு விலகிப் புதுக் கட்சி கண்ட தோழர். எம். கே. அவர்கள் மறைந்தபோதும் சகலவிதமான மரியாதைகளுடனும் அவரது இறுதிச் சடங்குகள் நடந்தேறியது. அதேபோன்று, இப்பொழுது, டி.எஸ்..ரவீந்திரதாசுக்கும் நிகழவிருக்கின்றது.

இவரது இறுதி ஊர்வலம் பத்திரிக்கையாளர் சங்கத்தின் இறுதி அஞ்சலியோடு, சென்னை, வளரசரவாக்கம், கிருஷ்ணமாச்சாரி நகர், 4-வது தெரு, எண்-162-ல் உள்ள அவரது இல்லத்திலிருந்து மாலை 3 மணிக்குமேல் புறப்படும் என்று தெரிவிக்கப்படுள்ளது.

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் அலுவலகத் தொலைபேசி எண்:
044-25320990 என்ற எண்ணிலும், 9382845866 அலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.

நமது நினைவில் என்றென்றும் வாழப்போகும் டி.எஸ். ரவீந்திரதாஸுக்கு, சசிகலாதேவி என்ற துணைவியாரும், சுபாஷ், கமலஹாசன் ஆகிய புதல்வர்களும், டாக்டர். அஜிதா, எழுத்தாளர் வந்தனா ஆகிய புதல்வியரும் உள்ளனர்.

இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் மேலே குறிப்பிட்ட முகவரிக்கு அஞ்சல் மூலம் ஆறுதல் கடிதங்களையும்  அனுப்பலாம்

இவரை அறிந்தோர், அறியாதோர், ஆகிய வலைப்பூ அன்பர்கள், இணைய இதழ்களின் ஆசிரியர்கள் அனைவருமே இறுதி அஞ்சலி மடலை ,ஒரு போஸ்ட் கார்டில் எழுதி அனுப்பலாம். இது வலைப்பதிவர்களின் கடமை என்றே கருதவேண்டும்.


..

1 comments:

  1. Thank you so much for remembering such a great person.

    ReplyDelete

Kindly post a comment.