Monday, June 25, 2012

வந்தே மாதரம் எனும் போதினிலே ! -சி.ஜெயபாரதன்



சி. ஜெயபாரதன் jayabarathans@gmail.com
05:49 (1 hour ago)
to anbudanvallamaiதமிழமுதம்தமிழ்
வந்தே மாதரம் எனும் போதினிலே !
சி. ஜெயபாரதன், கனடா.



எந்தையும் தாயும் பூரித் துலவி,
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் நிலவி
சிந்தையில் கோடி எண்ணம் விதைத்த,
தாயக பாரதத்தை
வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று
வாயுற வாழ்த்தும் போதினிலே
எந்த மதவாடை அடிக்குது?
உடன் பிறவா பாரத
பந்துக்களே!
வந்தே மாதர மென்னும் கீதம்
சொந்த வழிபாடா
மதவாதி களுக்கு?
சுதந்திரப் போராட் டத்தில்
மராட்டிய சிவாஜிகள்
முதல் விடுதலை முழக்கம் பாடிப்
பிரிட்டன் வயிற்றைக் கலக்கிய
வந்தே மாதர கீதம்
வடிவ வழிபாடா?
வரலாறு நுகராது
சிறகொடிந்த ஈசல்கள்,
பிறந்த நாட்டை துறக்கின்றன!
அசோகனின் ஆழித் திலகம் ஒளிரும்
மூவர்ணக் கொடிக்கு
முடிவணங்கி மதிப்ப ளிப்பது
வடிவ வழிபாடா?
பெற்ற தாயும், பிறந்த பொன்னாடும்
கற்றவர்க்கு
நற்றவத் தெய்வம்!
மற்றவர்க்கு
வெற்றுத் தோற்றம்!
எம்மதமும் சம்மதம் என்று
பாரதம் வரவேற்றது,
நிம்மதியாய் வாழ!
பெற்ற தாயும் தெய்வந்தான்!
பிறந்த நாடும் தெய்வந்தான்!
நட்ட கல்லும் தெய்வந்தான்!
வெட்ட வெளியும் தெய்வந்தான்!
சக்தி, சிவனும் தெய்வந்தான்!
ஆசிய புத்தன் தேவ தூதனே
ஏசு மகானும் தேவ தூதரே
நபி நாயகம் தேவ தூதரே
குரு நானக் தேவ தூதரே!
கீதையும், குறளும் தேவ நூல் !
பைபிள், குரானும் தேவ நூல் !
தெய்வ முள்ள தெனின் எல்லாம்
தெய்வந்தான்!
தெய்வ மில்லை எனின் எதுவும்
தெய்வ மில்லைதான்!
உலகக் கரங்கள் ஒன்று கோர்த்த
ஐக்கிய நாட்டுப் பேரவை,
ஒலிம்பிக் மேடையில்,
கொடி வணக்கம் செய்வது
வடிவ வழிபாடா?
பிறந்த நாட்டை வணங்கா பிள்ளைகள்
துறப்பர் அடையாள முத்திரை!


************
பெற்ற தாயும் பிறந்த நாடும் நற்றவ வானினும் நனி சிறந்ததுவே !


” இந்த உடம்பை எனக்கு அளித்த பாரதப் பொன்னாட்டை மிகுந்த

மதிப்போடும் மரியாதையோடும் திரும்பிப் பார்க்கின்றேன். பூமியிலே 

புனித நாடான அதில் பிறப்பதற்கு வாய்ப்பளித்த கருணைக்கடலான 

இறைவனை வணங்குகின்றேன்.”

-சுவாமி விவேகானந்தர்.


கனடாவிலிருந்து அணுவியல் விஞ்ஞானி தற்பொழுது

கூறுவதும் அதன் பிரதிபலிப்புத்தானே, வலைப்பூ, அன்பர்களே !

0 comments:

Post a Comment

Kindly post a comment.