Thursday, June 28, 2012

இலங்கையில் மொழிப்போரானது இனப்போராகி மதப்போராக உருவெடுத்திருக்கிறது !


Mano Ganesan

Mano Ganesan

@ManoGanesan

Leader-Democratic Peoples Front (Political Party) President- Democratic Workers Congress (Trade Union) Convener- Civil Monitoring Commission (HR Org)









இவ்வாறு ஐக்கிய மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் எச்சரிக்கை ! கொழும்பில் நடைபெற்ற தேசிய சர்வமத மாநாட்டில் மனோ கணேசன் பேசியதாவது:-

வட-கிழக்கிலிருந்து இராணுவத்தை அகற்றும்படி உலகம் ராஜபக்சே அரசாங்கத்தை வலியுறுத்துகின்றது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலும் இந்த விவகாரம் பற்றி குறிப்பிடப் பட்டிருக்கின்றது.

தமிழ்ப் பகுதிகளில் இருந்து இராணுவத்தை வாபஸ் வாங்க இலங்கை அரசு பிடிவாதமாக மறுக்கின்றது. இதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அங்கே இலங்கை இராணுவம் சும்மா பாதுகாப்புப் பணியில் ஈடுபடவில்லை. அது தமிழ் மக்களின் சமூக வாழ்க்கை விவகாரங்களில் தலையிடுகின்றது.இது தமிழ் மக்களுக்கு தொல்லை தரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகும்.




வடக்கில் தமிழ் மக்கள் வீடுகளில் நடைபெறும் பிறந்த நாள் விழாக்களுக்குக் கூட இராணுவ அதிகாரிகள் அழையா விருந்தாளிகளாக. இதை நான் சொல்லவில்லை.இலங்கை வந்து சென்ற இந்திய எதிர்க் கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் இந்தியா திரும்பியதும் இதச் சொன்னார். இந்தச் செய்தி உலகத் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றுள்ளன. இதுதான் வடக்கின் உண்மை நிலவரம்.


வட கிழக்கு மாகாணங்களில் ஆளுநர்களாக முன்னாள் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருப்பதே அங்கு இராணுவ ஆட்சி நடைபெறுவதை உறுதிப்படுத்துகின்றது. எனவே, தேவைக்கு அதிகமாக ஒரு நிமிடம் கூட மக்கள் மத்தியில் நடமாடக் கூடாது. இலங்கை அரசாங்கம் தன் சித்து விளையாட்டுக்களை நிறுத்திவிட்டு, இராணுவத்தை வாபஸ் வாங்க வேண்டும். காவல் பணிளை காவல் துறையிடம் ஒப்புவிக்க வேண்டும்.

என் வாயில் துப்பாக்கியை வைத்து, பலவந்தமாக என் கையில் தேசியக் கொடியைக் கொடுத்து பலவந்தமாக தேசியகீதம் பாடு என்று சொன்னால், எனக்குத் த்சிய உணர்வு வராது என்பதை இங்கு வந்துள்ள கனவான்கள் உணர்ந்து கொள்வார்கள் என நான் நம்புகின்றேன்.

தேசிய உணர்வு என்பது உள்ளிருந்து வரவேண்டும்.அப்படி அது வரக்கூடிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.இன்று தமிழ் ம்க்களைச் சுற்ரி அத்தகைய சூழ்நிலை இல்லை.

இலங்கையில் மொழிப் போர் ஆரம்பிக்கப்பட்டு, அது இனப் போராக மாறி, இன்று மதப்போராக உருமாறி வளர்ந்திருக்கின்றது. இதுதான் இலங்கையில் இன்று நாம் காணும் அற்புதமான வளர்ச்சியாகும்.

நன்றி: ஜனசக்தி, 19-06-2012. 

0 comments:

Post a Comment

Kindly post a comment.