Monday, October 24, 2011

தொல்தமிழர் வரலாற்றை யுனெஸ்கோ தொகுத்திடல் வேண்டும்


http://www.vallamai.com/archives/9208/



வல்லமையின் நிறுவனர் அண்ணா கண்ணன்


அச்சில் வெளிவரும் இதழ்களில் இல்லாத பல அரிய செய்திகள் இணைய இதழ்களில் வந்து கொண்டிருக்கின்றன. ஒரே ஆண்டு நிறையப் பெற்ற வல்லமை இணைய இதழ் வியக்கத்தக்க எண்னிக்கை உடைய வாசகர்களைப் பெற்றிருக்கின்றது. வல்லமை இணைய இதழில் வெளிவந்த ஓர் தகவலை மீள் பதிவு செய்துள்ளேன். தமிழின் பெயரைச் சொல்லி வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொண்டோருக்கு இல்லாத அக்கறையை மீண்டும் மீண்டும் சொல்லத்தானே வேண்டும். எப்படியாவது பலித்துவிடாதா என்ற ஆசைதான் காரணம்.


சென்னைத் தெருக்களின் பெயர் தெளிவாகத் தெர்ந்துகொள்ளும்படி எழுதி வைத்திட அறுபத்து மூன்று ஆண்டுகள் ஆகி இருக்கின்றன. தமிழர் வரலாறு முழுமையாக எழுதிட இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ? கடல் கொண்ட தென்னாடு/ லெமூரீயா, பொதிகை, பூம்புகார் இன்னோரன்ன பிற இடங்கள் அகழ்வாராய்ச்சிக்குட்படுத்தப்பட்டால்தானே தமிழருக்கான வாழ்வாதாரங்கள் கிடைக்கும். அதற்கான பொருட்செலவினை சர்வதேச சஙகம் ஏற்றுக் கொள்வதுதானே சரியான வழிமுறை. ஆப்பிரிக்காவை எழுதி முடித்துள்ளபோது தமிழரைப்பற்றி எழுத முடியாதா? எதற்கெடுத்தாலும் திராவிடத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளும் கட்சிகள், இதர தென் மாநிலங்களில் காலூன்ற முடியவில்லயே, ஏன்? திராவிட மாயை வெளிப்படுமல்லவா?

பேரா.பெஞ்சமின் லெபோ

அன்பு நண்பர்களே!

தமிழகத்தில் இருந்து முனைவர் ம. சொ. விக்டர் என்னும் ஆராய்ச்சி அறிஞர் அண்மையில் பாரீஸ் வந்திருந்தார். எங்கள் ‘ இலக்கியத் தேடல்’ அமைப்பில் பேச அழைத்திருந்தோம்.

பைபிளில் வரும் பல சொற்கள் நம் தமிழ்ச் சொற்களே என்பதைத் தெளிவு படுத்தினார்.

அவர், ஆப்பிரிக்க வரலாற்றைத் தொகுத்து வெளியிட்ட யுனெஸ்கோ நிறுவனமே, தமிழர் வரலாற்றையும் தொகுத்து வெளியிட்டால், அது பொருத்தமாகவும் இருக்கும்’


என்று கூற, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டோம் இந்தியாவில் இருந்து அவர் தயார் செய்து கொண்டுவந்திருந்த ஆவணத்தை யுனெஸ்கோ பாரீஸ் நிறுவனத்தில் சேர்த்து வந்தோம். இந்த விவரங்களைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

தொல்தமிழரின் வரலாறு தொகுக்கப்பட்டு வெளியிடுதல் தொடர்பாக

பாரீசு, யுனெஸ்கோ நிறுவனத்திடம் தமிழர்கள் விண்ணப்பம். 08.09.2011 பாரீசு:

பழம்பெரும் கண்டமான ஆப்பிரிக்கா பற்றியும் அதன் தொன்மக்குடிகள் பற்றியும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட யுனெஸ்கோ நிறுவனம் 1970 ஆம் ஆண்டில், ஆப்பிரிக்கா வரலாற்றைத் தொகுத்து வெளியிட்டது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட அவ்வாய்வு நூல், 13 தொகுதிகளாக வெளியிடப்பட்டன. அவை 52 உலகமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, உலகின் அனைத்துப் பலகலைக் கழகங்களிலும் இடம் பெற்றுள்ளது. ஆப்பிரிக்கர்களிலும் மூத்த குடியாகிய தமிழ் இனம் மற்றும் தமிழ்மொழி பற்றிய வரலாறுகள் இதுவரையிலும் முறையாகத் தொகுத்து வெளியிடப்படவில்லை. தமிழ் நாட்டிலும் அதற்கான முயற்சிகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழ் அறிஞர்களும் அதுபற்றிச் சிந்திக்கவுமில்லை. உலகின் முதல் குடியான தமிழ்க்குடியின் வரலாறு வெளியிடப்படுமேயானால், இதுவரையிலும் கூட தெளிவுபடுத்த இயலாமல் உள்ள சுமோரிய, பாபிலோனிய, மெசபத்தோமிய, எபிறேய இனத்தின் வரலாறுகளும் வெளிப்படும். எவ்வாறெனில், இவ்வினங்களுக்கும் தமிழ் இனத்துக்கும் உள்ள இனம், மொழி, பண்பாடு, நாகரீகம் பற்றிய நெருங்கிய தொடர்புகள் அண்மையில் வெளிவந்துள்ள ஆய்வுகளால் மெய்ப்பிக்கப்பட்டுள்ளன.

ஆப்பிரிக்க வரலாற்றை யுனெஸ்கோ சார்பில் தொகுத்து வெளியிட்ட நூல்களில், பல்வேறு அறிஞர்கள், ஆப்பிரிக்க மக்களின் இனம், மொழி, வழக்குகள், வழக்காறுகள் ஆகியவை தமிழர்களோடும், தமிழ்மொழியோடும் தொடர்பு கொண்டுள்ளனவென்பதைக் குறிப்பிடுகின்றனர். பிரான்சு நாட்டின் வரலாறு மற்றும் மொழியியல் அறிஞரான மதாம் பிளாவட்ஸ்கி என்பார், ஆப்பிரிக்க மொழிகளின் மூலமும் வேரும் தமிழ்மொழியோடு தொடர்பு கொண்டுள்ளதை, ஆப்பிரிக்க வரலாற்று நூலில் தெளிவுபடுத்தியிருக்கிறார். எனவே, ஆப்பிக்க வரலாற்றைத் தொகுத்து வெளியிட்ட யுனெஸ்கோ நிறுவனமே, தமிழர் வரலாற்றையும் தொகுத்து வெளியிட்டால், அது பொருத்தமாகவும் இருக்கும்.

சென்னையில் செயல்பட்டு வரும் ‘தமிழ் வளர்ச்சிப் பேராயம்” என்ற நிறுவனத்தின் தலைவர் திரு டாக்டர் ம.சோ.விக்டர் யுனெஸ்கோ நிறுவனத்திடம் அளிப்பதற்கென விரிவான விண்ணப்பம் ஒன்றினை எடுத்துவந்தார். அதில் தமிழர் வரலாறு யுனெஸ்கோ நிறுவனத்தால் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவ்விண்ணப்பத்தினை, பாரீசு நகரில் செயல்பட்டுவரும் பதினைந்துக்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள், குழுவாகச் சென்று, யுனெஸ்கோவிடம் அளிப்பதென முடிவு செய்தனர்.

அதன்படி, பாரீசு பல்கலைக் கழகத்தின் அரசியல் மற்றும் வரலாற்றுத்துறை பேராசிரியர் டாக்டர் திரு.தேவகுமரன் தலைமையில், பாரீசு முத்தமிழ்ச்சங்க அமைப்பாளரும் தமிழ் இலக்கிய உலகநாட்டின் தலைவருமான பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பாரீசு முத்தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. கோவி.செயராமன், திரு. டாகடர் ம. சோ. விக்டர் மற்றும் தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர்கள், யுனெஸ்கோவின் பொதுச்செயலாளர் நாயகம் செல்வி. இரீனா பெகோவா அவர்களிடம் விண்ணப்ப மனுவை அளித்தனர். யுனெஸ்கோவிற்கான செனகல் நாட்டுத்தூதர் திரு. புளோனண்டின் தியோப், தமிழ்க் குழுவினருக்குப் பல்வேறு நிலைகளில் உதவிகள் புரிந்தார்.

டாக்டர் ம.சோ.விக்டர் – தமிழியக்கன் தேவகுமரன் , தலைவர், தமிழ் வளர்ச்சிப் பேராயம், சென்னை. இந்திய – பாரீசு தமிழியக்கச்சங்கம்

கோவி செயராமன் – பேராசிரியர் பெஞ்சமின் லெபோ , தலைவர் முத்தமிழ்ச்சங்கம், பாரீசு தலைவர், தமிழ்இலக்கிய மாநாடு, பாரீசு

எல்லோருடனும் சேர்ந்து தமிழர் வரலாற்றை யுனெஸ்கோ ஆரர்ய்ந்து வெளியிட பேரியக்கமே நடத்துவோம்.

ஓர் நற் செய்தி. தென்பொதிகைப் புதையல் மூன்றாண்டுகால அவகாசத்திலும், ஏராளமான பொருட் செலவிலும் ஆவணப்படமாக்கப்பட்டுள்ளது. 24-10-2011தினமணியில் ”குரங்குகள் நடத்திய பொதுக்கூட்டம்” என்னும் தலைப்பில் கட்டுரையாக வந்துள்ளது. பின்வரும் வலைப்பூவிலும் சில தகவல்கள், படங்கள் உள்ளன.

http://rssairam.blogspot.com/2011/10/blog-post_19.html


2 comments:

  1. Anna Kannan to me
    show details 7:48 PM (1 hour ago)
    இதைத் தங்கள் வலைப்பதிவில் பகிர்ந்தமை, நன்று.

    /வல்லமையின் நிறுவனர் மற்றும் ஆசிரியர்: அண்ணா கண்ணன்/

    இப்போதைக்கு நான், வல்லமையின் நிறுவனர் மட்டுமே. பவளசங்கரி திருநாவுக்கரசு, நிர்வாக ஆசிரியராகச் செயல்புரிகிறார்.

    அன்புடன் என்றும்,
    அண்ணாகண்ணன்.

    ReplyDelete
  2. உடனுக்குடன் பதில் எழுதும்/ பேசும் அண்னா கண்ணனுக்கு நன்றி. வல்லமையின் நிறுவனர் என்று தற்பொழுது மாற்றப்பட்டு விட்டது. நன்றி

    ReplyDelete

Kindly post a comment.