தமிழ் முனிவர் அகத்தியர் வாழும் மலை பொதிகை என்பது தமிழர்தம் நம்பிக்கை. பொதிகையின் புதையல்கள் சுரண்டை சுப்பிரமணியன் மோகன்ராம் அவர்களால் உள்ளங்கை நெல்லிக்கனி ஆக்கப்பட்டுவிட்டன. ஆம்! பல லட்சம் பொருட் செலவில், மூன்றாண்டுகால உழைப்பில், 2000கிலோ.மீட்டர் மலைப் பயணத்தில், 2000அரிய வகை உயிரினங்கள், தாவரங்கள், மரம், செடி, கொடிகள் என பொதிகையின் சுற்றுச் சூழல் எனும் புதையல் படமாக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தொலைக்காட்சிப் படப்பிடிப்பாளர் வெங்கடாச்சலம், மற்றும் திரைப்படக் கல்லூரி மாணாக்கர் மூவர் கொண்ட குழுவினர் மோகன்ராம் முயற்சிகளுக்குத் துணையாய் செயல்பட்டுள்ளனர். இவர்கள் தமது தயாரிப்பு நிறுவனத்திற்கு வைத்த பெயர் வனபாரதி மீடியா. தயாரித்துள்ள ஆவணப்படத்திற்கு இவர்கள் சூட்டியுள்ள பெயர், ஓர் அருந்தமிழ்க் காடு. இந்த ஆண்டு இறுதிக்குள் சாமான்யர்களும் கண்டு களித்திட வாய்ப்புக் கிடைக்கும் என்று பெருமிதம் பொஙகச் சொல்கின்றார், எஸ்.மோகன்ராம்.
சென்னை வண்ணாரப்பேட்டை பி.ஏ.கே. பழனிச்சாமி பள்ளித் தலைமை ஆசிரியர் பசுபதி, மற்றும் கன்னியாகுமரி தேங்காய்ப் பட்டினத்தச் சேர்ந்தவரும் தற்பொழுது புதுவையில் வாழ்பவருமான வகுப்பாசிரியர் ஜார்ஜ் ஆகியோர் பள்ளியில் படிக்கும்பொழுது ஊட்டிய சுற்றுச் சூழல், மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வுதான் எல்லாவற்றிற்கும் அடிப்படைக்காரணம் என்று நன்றியோடு நினைவு கூர்கின்றார். எண்பத்தாறு வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்த அப்பா வழிப்பாட்டி மாலையம்மாள் லட்சுமணன் சொன்ன இயற்கையைப் பேணிக்காத்திட வேண்டியது குறித்த கதைகளும் இப்பெரு முயற்சிக்கு அடித்தளமாய் அமைந்ததையும் மறக்காமல் சொல்கின்றார்.
தமிழக- கேரள எல்லைப் பகுதியில் வாவதி-சீவதி என்ற உடன்பிறப்புக்களான தமிழ், மலையாள குறியீட்டுக் கோவில்களும் படமாக்கப்பட்டுள்ளன. பொதிகை மலையின் வயது250மில்லியன் ஆண்டுகள் முதல்400 மில்லியன் ஆண்டுகள் வரை இருக்கலாம் என்பது மோகன்ராமின் ஆய்வின் முடிவு. பறவை இயல் நிபுணர் சலீம், எம்.எஸ் இராமசாமி, ஏ.என்.ஹென்றி, ஏ.ஜே.டி.ஜான்கிட், ரால்ப் அலி, ஸ்டீபன், ஜான் ஓட்ஸ் ஆகியோரும் பொதிகையை ஆய்வு செய்துள்ளனர்.
இராஜநாகம் உள்ளிட்ட இருபது வகைப் பாம்புகள், புலிவரிக் கோடுகளுடன் காணப்படும்பத்து வகையான உயிரினங்கள், பறக்கும் பல்லி உள்ளிட்ட இருபது வகையான பல்லி இனங்கள், மனித முகமுடைய பூச்சி, மர்றும் பதினைந்து வகையான எறும்புகள் துல்லியமாகப் படமாக்கப்பட்டுள்ளன.
மிகச் சாதாரண ஈ, தேனீயைப்போன்று150 மடங்கு பெரிதான15 வகையான ஈ,தேனீக்களையும், மிகப் பெரிய மரக் கூட்டுக்குள் கோடிக்கணக்கான எறும்பினங்கள் வசிப்பதையும், அந்த மரங்களுக்குள் மிகப்பெரிய உலகமே படைக்கப்பட்டிருப்பதையும் படமாக்கியுள்ளனர்.
தூக்கணாங்குருவிகள், தஙகள் கூட்டுக்குள் மின் மினிப் பூச்சிகளைக் கொத்திக் கொண்டு வந்து விளக்கொளி பாய்ச்சுவதையும், அழகிய பீ-ஈட்டர் மற்றும் பி ஜே என்னும் பறவை இனங்களையும், இராஜாளி கழுகுகள் வானத்தில் ஒரே இடத்தில் இறக்கையை விரித்து நின்று அழகு காட்டுவதையும், பலவகை வண்ணங் கொண்ட பட்டாம் பூச்சிகளையும், ஹனிபில் என்ற நீர்ப்பறவையையும் படமாக்கியுள்ளனர்.
கருங்குரங்கின் பல்வேறு வளர்ச்சி நிலைகளையும், மொழி உச்சரிப்புடன் செல்போனில் பேசினால், பதில் பேசுகின்ற அரிய வகைப் பறைவைகள், மகிழ்ச்சி மொழிகளைப் பரிமாறி ஜோடி சேரும் பறவைகள் என அரிய காட்சிகளைப் படமாக்கியுள்ளனர்.
11வகையான காடுகளைப்பற்றியும், பொருணைநதியாம் தாமிரபரணி உற்பத்தியாகும் பொதிகைமலை உச்சிப்பகுதி படமாக்கப்பட்டுள்ளது. அதன் வற்றாத கிளை நதிகளான சிற்றாறு, கடனா நதி, ராமா நதி, அனுமன் நதி, சேர்வலாறு, மணிமுத்தாறு, பம்பாறு, க்வுதலை ஆறு, பச்சையாறு, கோதையாறு, குண்டாறு ஆகிய அனைத்தும் வழிப்பாதைகளுடன் படமாக்கப்பட்டுள்ளன. உலகின் மிகப் பெரிய பரப்பளவிலான மழைக் காடுகளையும் மோகன்ராம் குழுவினர் படமாக்கியுள்ளனர்.
”ஓர் அருந்தமிழ்க் காடு” என்ற இந்த ஆவணப்படத்தை டி50, டி55, ௪௫0-௫00 எனும் துல்லியமான லென்ஸ் பொருத்தப்பட்ட கேமிராக்களைப் பயன்படுத்தி எடுத்துள்ளனர். இந்தக் கேமிராக்களைத் தாஙகக் கூடிய “ட்ரைபாட் ஸ்டாண்ட்களை” சிலுவையைப்போல் சுமந்து சென்றதாக படப்பிடிப்புக் குழுவினர் கூறுகின்றனர். பல நாட்களில் மலைக் குகைகளில் முடங்கியும் கிடந்துள்ளனர். ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளச் சமாளிக்க மூக்குப்பொடி, ஓடோமோஸ், விளக்கெண்ணெய் கலந்த நீரை உடலெங்கும் பூசிக்கொண்டும் சமாளிக்க வேண்டியதாயிற்று. வழி மறிக்கும் யானைக் கூட்டங்கள், பாதையில் பரவிடும் பாம்புகள் மலைவாசிகளின் உதவிகளால் படப்பிடிப்புக் குழுவினரின் பயணம் தொடர்ந்தது.
தாராளமாய்க் கிடைத்த மூட்டுப்பழம், தேன், ஆரோக்கியப் பச்சை என்ற அகத்தியர் மூலிகை ஆகியவற்றைச் சாப்பிட்டு இருபது மணி நேரம் படப்பிடிப்பில் சோர்வில்லாமல் ஈடுபடமுடிந்தது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இருஞ்சிக்குடி, பெரியமையிலாறு, சின்ன மயிலாறு, கேரளப் பகுதிகளான தேபாரா மற்றும் பாணாக் காடு எஸ்டேட் பகுதிகளி எல்லாம் படமாகப்பட்டிருக்கின்றது.
ஆதிவாசிகளும், மலை சாதியினரும் மரவள்ளிக் கிழங்கையும், தேனையும் மீன்களையும் உண்டு எழுபது சதவிகிதம் பேர் சாமான்யராகவே வாழ்ந்து வருகின்றனர். மிகச் சிலரே இயற்கையோடு இணந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த ஆதிவாசிகளின் துணையோடுதான் “ஓர் அருந்தமிழ்க் காடு “ ஆவணப்படத்தினை உருவாக்க முடிந்தது என்கிறார் வனபாரதி மீடியா குழுவினரின் அச்சாணியான எஸ்.மோகன்ராம். தமிழக-ஆந்திர அரசுகள் தாரளாமாய் அனுமதி வழங்கியதையும் குறிப்பிட மறக்கவில்லை.
அக்டோபர்18ல் ஜனசக்தியில் இக்கட்டுரையைப் படித்தவுடன் உளம் மகிழ்ந்தது. பொதிகையையும், இலமூரியாவையும் நேரடி ஆய்வுக்குட்படுத்தமாட்டார்களா என்று ஏங்கும் பலருள் நானும் ஒருவன். பொதிகையில் இது ஒரு துவக்கம்தான். பொதிகையும், குமரிக் கண்டமும் முழுமையாக வெளிப்படும் பொழுது தமிழர் பெருமை மேலும் உயரும். அதற்கான ஆதாரங்கள் கிட்டும்.
சுப்பிரமணியன் மோகன்ராமின் மனைவியார் தேன்மொழியும், சுப்பிரமணி பாரதி, திவ்ய பாரதி, பொதிகை பாரதி ஆகிய வாரிசுகளும் பெறும் பேறு பெற்றவர்கள்.
சென்னை பி.ஏ.கே.பள்ளி04425951428
எஸ்.இசைக்கும் மணியை அறிமுகப்படுத்திய கே.ஜீவபாரதிக்கும், ஜனசக்திக்கும் நன்றி.ஜனசக்தியில் இக்கட்டுரையை எழுதியவரின் பெயரும் வித்தியாசமானது. நெல்லை மாவட்டத்தில் எசக்கியம்மன் பெயரினடிப்படையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெயர் சூட்டுவார்கள். இவருக்கும் எசக்கிமணி என்று பெயரிட்டுள்ளார்கள். சென்னைக்குக் குடி பெயர்ந்தது குடும்பம். பெயரை ஆசிரியர் இசைக்கும் மணி என்று மாற்றி விட்டார். பொதிகையின் ஆவணப்படப் புகழை இசைக்கும் முதல் மணி இவர்தான்.
ஜனசக்தியின் தொடர்பிற்கு; 04422502447/48
சுப்பிரமணியன் மோகன்ராமைத் தொடர்புகொள்ள9944814445
சுப்பிரமணியன் மோகன்ராமைத் தொடர்புகொள்ள9944814445
[Available (video enabled)] சீராசை சேதுபாலா
ReplyDeleteபொதிகையின் புகழைப் பாரெங்கும் பரப்பிடும் பாவநாசம் மோகன்ராம்! தமிழ் முனிவர் அக...
3:42 PM (3 hours ago)
ReplyReply
More
annamalai sugumaran amirthamintl@gmail.com to mintamil
show details 6:59 PM (27 minutes ago)
ஐயா ,
அருமையானத் தகவல்களைப் பகிர்த்து கொண்டதற்கு நன்றி .
பொதிகையின் அழகில் மயங்கி அகத்தியர் அருவியிலும் அண்மைப் பகுதிகளிலும் அடிக்கடி வநது குளித்து மகிழ்ததுண்டு .\
பொதிகையின் புகழைப் பாரெங்கும் பரப்பிடும் பாவநாசம் மோகன்ராம்
அவர்களுக்கு வாழ்த்துக்கள் .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
- Show quoted text -
--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948
My goal is simple.
It is complete understanding of the universe, why it as it is and why it exists as all !
- Show quoted text -
Innamburan Innamburan innamburan@gmail.com to mintamil
ReplyDeleteshow details 7:14 PM (15 minutes ago)
கேட்கவே, ஒவ்வொரு வரியும், அவை தரும் தகவல்களும், தட்டி எழுப்பும் ஆவல்களும்,
இனிமையாக அழைக்கும் கூவல்களும் அளிக்கும் மகிழ்ச்சி அளவற்றது. பள்ளி ஆசிரியர் பசுபதி அவர்களையும்
பாட்டிக்கதைகளையும் எந்த அளவு பாராட்டினாலும் போதாது. அவர்களின் பாமரகீர்த்தியை
திரு. மோஹன்ராம் நமக்கு, உங்கள் மூலம் தரவேண்டும்.
இன்னம்பூரான்
Chandrasekaran plasticschandra@gmail.com to mintamil, me
ReplyDeleteshow details 11:49 AM (0 minutes ago)
அரிய பணி. வாழ்த்துக்கள் மோகன்ராம் அவர்களுக்கு
அங்கு காணப் பெற்ற பண்டைய கட்டிடங்கள், கோவில்கள், உடைந்த சிலைகள் எதேனும் இருந்தால் நாங்கள் கட்டாயம் புனரமைப்பு செய்ய, கல்வெட்டுக்கள் இருப்பின் ஆவணப் படுத்தி, படித்து இன்றைய தமிழிலிலும் ஆங்கிலத்திலும் வெளிக் கொணர, நிச்சயம் உதவி புரிவோம்.
சந்திரா
www.conserveheritage.org
nnamburan Innamburan innamburan@gmail.com to mintamil
ReplyDeleteshow details 12:03 PM (7 minutes ago)
ஆர்வமும், அரிய தகவல்கள்உம் பெருகி வருவதை கண்டால் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆக்கம் தொடங்கட்டும்.
இன்னம்பூரான்
இதுவரை தெரிந்திராத தகவல்கள். ஜூலை கல்லிடை போய்வந்தேன் அப்போது அஹஸ்தியர் ஃபால்ஸ் எல்லாம் போன்னேன் பாவனாசமும் போனேன் அதுபற்றி விவரம்மாக மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் என்னும் பதிவில் சொல்லி இருக்கேன். மோகன் ராம் பற்றி இப்போது தான் தெரிந்துகொண்டேன். நன்றி
ReplyDelete