தாய் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டுபிடிக்க அலட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவி பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கருவுற்று 4 1/2 மாதத்துக்கு பிறகே ஆணா, பெண்ணா என்பதை கண்டுபிடிக்க முடியும்.
ஆனால் இப்போது புதிய முறையை பயன்படுத்தி கருவுற்ற 1 1/2 மாதத்திலேயே குழந்தையின் பாலினத்தை கண்டுபிடித்து விடலாம் என்று அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தாயின் ரத்த மாதிரியை எடுத்து அதில் உள்ள மரபணு மூலம் (டி.என்.ஏ.) 1 1/2 மாதத்தில் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக அவர்கள் 57 விதமான ஆய்வுகளை நடத்தியுள்ளனர். 6500 கருவுற்ற பெண்களை இதற்காக அவர்கள் பயன்படுத்தி உள்ளனர். இதில் 1 1/2 மாதத்திலேயே 99 சதவீதம் சரியாக குழந்தைகளின் பாலினத்தை கண்டுபிடித்து இருக்கிறார்கள், வாஷிங்டனில்!
இதன் மூலம் ஆரம்பத்திலேயே குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டு பிடித்து தாய்க்கு தேவையான சிகிச்சைகளை அளிக்க முடியும் என்று கூறுகின்றனர்.
உடல் ஊனம் உள்ளவர்கள், ஆண், பெண், அலி போன்ற பிறப்பிற்கான காரணங்களை திருமூலர் அன்றே எழுதி வைத்து விட்டார்.
தந்திரம் எண் 07:பகுதி எண் 37:பாடல் எண் 03: மொத்தப் பாடல்களின் வரிசை எண் 2104
ஒன்றே குலமும் ஒரு்வனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்க்கதி இல்லுநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்னினைந் து்ய்மினே. 07:37:03:2104
(திராவிடநாடு கோரிக்கையைக் கைகழுவியபின்,பகுத்தறிவுப் பகலவர்கள் தேர்தலில் ஓட்டுச் சேகரி்த்திட ஏற்றுக்கொண்ட "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" திருமூலர் தந்ததுதான்.)
திருமூலர் ஓர் சித்தர். தமிழகத்தில் வாழ்ந்தவர். திருமந்திரம் என்ற நூலை இயற்றியவர். திருமந்திரத்தில் 3000-ம் பாடல்கள் இருக்கின்றன. திரு்மந்திரம் கூறும் உடற்கூறு் வாழ்வியல் தத்துவங்கள் அறிவியல் அறி்ஞர்களால் ஏற்றுக்கொள்ளப் படுகின்றன. திருமூலர், நாகை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை-என்னும் திருத்தலத்தில் ஜீவசமாதி அடைந்தவர்.
மதம் என்பதைவிட, சமயம் என்று சொல்வதே சரியாகத் தோன்றுகின்றது.
சமயம்- என்றால் சமைத்தல் பக்குவப் படு்த்துதல் என்று பொருள் கொள்ளலாம். மனிதனைப் பக்குவப் படுத்துவதற்கு தோற்றுவிக்கப் பட்டவையே சமயங்கள் .அவற்றுள் .சைவமும் ஒன்று. சைவ சமயம் பேணிடப் பாடிய பாடல்களின் தொகுப்பு, பன்னிரு திருமுறைகள் என்று அழைக்கப்படுகின்றன். அவற்றுள் பத்தாவதாக வருவது திருமந்திரம்.
3000-ம் பாடல்களைக் கொண்டது திருமந்திரம்.பாயிரம் மற்றும் ஏழு தந்திரங்களைக் உள்ளடக்கியது. ஒவ்வொரு தந்திரத்திலும் பல தலைப்புக்களில் பாடல்கள் உள்ளன். நாம் இங்கே காணவிருப்பது இரண்டாம் தந்திரம். அதில் 14-வதாக வரு்வது் கர்ப்பக் கிரியை 41 பாடல்களை உள்ளடக்கியது.
கருவுறுதல், பத்துமாத கால வரையறை, ஆண்,பெண்,அலி, குட்டை,நெட்டை, முடம்,கூன்,குருடு, முதலான மனிதப் பிறப்புக்கள் மற்றும் குழந்தயின்மைக்கான காரணங்கள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன். அந்தப் பாடல்களை மட்டும் இங்கே காண்போம்.
இறைவன்,திருமால்,பிரமன்,அரசாள்வோர் போன்ற பிறப்புக்கள் எப்பொழுது தோன்றும்?
ஏற எதிர்க்கில் இறையவன் தானாகும்
மாற எதிர்க்கில் அரியவன் தானாகும்
நேரொக்க வைக்கின் நிகர்போதத் தானாகும்
பேரொத்த மைந்தனும் பேரர சாளுமே. 02:14:08:488
எண்சாண் அளவு உடம்பு குழந்தைக்கு உண்டாவது எப்போது?
சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிர மத்தே தோன்றுமவ் யோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்
அக்கரம் எட்டு்மெண் சாணது வாகுமே. 02:14:14:464
உயிரில் பால் வேறுபாடு இல்லை;உடம்பில்தான் பாலியில் வேற்றுமை தோன்றும்: எப்படி?
மாண்பது வாக வளர்கின்ற வன்னியைக்
காண்பதுஆண்பெண் அலிஎயனும் கற்பனை
பூண்பது மாதா பிதாவழி போலவே
ஆம்பதி செய்தான் அச்சோதிதன் ஆண்மையே. 02:14:27:477
ஆண்,பெண்,அலி உருவாதல் மற்றும் அரசாள் உருவாதல் எவ்வாறு?nt>
ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்
பூணிரண்டு ஒத்துப் பொருந்த்தில் அலியாகும்
தாள்மிகு மாகில் தரணி முழுதாளும்
பாணவம் மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே. 02:14:28:478
ஆயுட்காலம் 100/80 ஆண்டுகள் என்றாக்கிட எப்படிப் பொருந்த வேண்டும்?
(யோகியரால்தான் முடியும் என்கிறர்ர் திருமூலர்).
பாய்ந்தபின் அஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந்து இவ்வகை
பாய்ந்த்திடும் யோகிக்குப் பாய்ச்சலும் ஆமே. 02:14:29:479
குட்டை(குள்ளம்),மூடம்,கூனம் பிறப்பது எப்போது?
பாய்கின்ற வாயுக் கு்றையில் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
காய்கின்ற வாயு நடுப்படில் கூனாகும்
பாய்கின்ற வாயுமா தர்க்கில்லைப் பார்க்கிலே. 02:14:30:480
மந்தபுத்தியுள்ளவரும், ஊமையரும், குருடரும் பிறப்பது எப்போது?
மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வைத்த குழவிக்கே. 02:14:31:481
ஆண், பெண், இரட்டைக்குழந்தை, அலி பிறப்பது எப்போது?
குழவி ஆணாம் வலத்தது ஆகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலியாகும் கொண்டகால் ஒக்கிலே. 02:14:32:482
குழந்தை அழகாய்ப் பிறப்பதும் கருத்தரிக்காமல் போவதும் எப்போது?
கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்
கொண்ட குழவியும் கோமளம் ஆயிடும்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளையாட்கே. 02:14:33:483

கர்ப்பம்- தெய்வப் பிறவி-ஆண்-பெண்-அலி-கூன்-கு்ருடு-முடம் -குள்ளம்- என்ன சொல்கிறார் திருமூலர்?

ஆன்மீகமும் அறிவியலும் பதில் சொல்ல முடியாத இடம் ஒன்று உண்டு..
ReplyDeleteஅங்குதான் உண்மை உள்ளது ( அதை அறிவியல் என்றோ கடவுள் என்றோ அழைக்கின்றனர்)