Friday, August 12, 2011

சமூகப் புரட்சிக்கு வித்திடும் இளைஞர்கள்


இவர்களைப் போன்றோர்தான் மெய்யான தேசாபிமானிகள். மனித தெய்வங்கள். ஈரோடு புத்தகத் திருவிழாவை இணையத்தில் தேடியபோது, பத்ரி சேஷாத்ரி, வைரமுத்து பெயர்கள் பார்வையில் பட்டன. உட்புகுந்தபோது, ட்வீட்ஸ் பிரிவில் “புன்னகையை விதைக்கும் இளைஞர்கள்” ௧௭ மணி நேரத்திற்கு முன்பு பதிவாகி இருந்தது. ஒரு தொண்டு நிறுவனத்தின் ஏழாம் ஆண்டு விழாவில் பங்கேற்ற அனுபவங்களையும், அந்த தொண்டு நிறுவனத்தின் சிறப்பியல்புகளையும் பத்ரி சேஷாத்ரி பதிவு செய்திருந்தார்.
http://thoughtsintamil.blogspot.com/2011/08/blog-post_9446
http://bseshadri.wordpress.கம
http://kizhakkupathippagam.blogspot.கம
http://www.tamilpaper.நெட்
http://blog.tamilheritage.in/

ஆங்கிலத்தில் புத்தகம் எழுதிட விரும்புவோரையும், தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் மொழியாக்கம் செய்யும் திறன் படைத்தோரையும் வலைத் தளம் மூலமாக அழைத்திடும் அன்பர் அவர். புதிய தகவல்களத் தெரிந்து கொள்ள வேண்டும் என்போர் புறக்கணிக்க முடியாத வலைத்தளங்கள் சிலவற்றிற்கும் படைப்பாளி அவர். ஆம் மேற்கண்ட அனைத்தும் பத்ரி சேஷாத்ரியின் கை வண்ணமே. கிழக்கு பதிப்பகம் பதிப்புலகில் புதுமை படைத்து வருவது ஊரறிந்த உண்மை.

மேற்படி தொண்டு நிறுவன இளைஞர்கள் ஏழைமையை ஒரே வாரத்தில் ஒழித்துவிடுவோம் என்று மார்தட்டும் அரசியல் ஆரவாரத் தன்மையுடையவர்கள் அல்லர். முன்கூட்டியே திட்டமிட்டு, இப்படித்தான் செல்லப்போகிறோம் என்று பாதையைத் தீர்மானித்து இவர்கள் ஆரம்பிக்கவில்லை. நம்மால் என்ன செய்யமுடியுமோ, முயன்று பார்க்கலாம் என்று ஆரம்பித்துள்ளனர். ஒவ்வொரு கட்டத்திலும் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதற்கான பாதை தெளிவாகத் தெரிய ஆரம்பித்துள்ளது என்று அறிமுகப் படுத்துகின்றார் பத்ரி சேஷாத்ரி.

அவர்களது செயல்முறையில் பத்ரி சேஷாத்ரிக்குப் பிடித்த சிறப்புத் தன்மைகளைப் பின்வருமாறு பட்டியலிடுகின்றார்.

1. அரசு அமைப்புகளுடன் வேலை செய்தல். ஆனால் அதே நேரம் அரசின் பணத்தை நம்பியிருக்காமை.

2. பணம் எப்படியும் சேர்த்துவிடலாம் என்ற அதீதமான நம்பிக்கை. இந்த பாசிடிவிசம் ஒன்றுதான் அவர்களை தைரியமாக முன்செல்ல வைக்கிறது. இந்தியாவில் இருந்துகொண்டு ஏதோ ஒரு மேற்கத்திய மத நிதியமைப்புக்கு புரபோசல் எழுதிப் பணம் சேர்த்து, எஸ்.யு.வி வாங்கிக்கொண்டு சமூக சேவை செய்யும் அமைப்பல்ல இவர்களது.

3. முழுமையான ஒரு தொலைநோக்கு இவர்களிடம் உள்ளது. அடிப்படைத் தேவைகளைத் தருகிறது அட்சயா திட்டம். படிப்பை வெறுக்கும் மாணவர்களுக்கு விளையாட்டாகக் கல்வியை அறிமுகப்படுத்துகிறது சிக்‌ஷா. ஆனால் அதே நேரம் பள்ளி இறுதி வகுப்பை நல்ல மதிப்பெண்களுடன் கடக்க உதவுகிறது புன்னகைப் பாலம். அங்கிருந்து கல்லூரிக்கு இட்டுச் செல்கிறது சாதனா; பின் வேலையும் பெற்றுத்தர உதவுகிறது.

4. ஸ்மைல் தன்னார்வலர்களுக்கும் உதவி பெறுபவர்களுக்கும் இடையில் சகோதர பாசம் நிலவுகிறது. நான் கொடுக்கிறேன், நீ பெறுகிறாய் என்ற இறுமாப்பு இல்லை. நிஜமான மனிதநேயத்தைக் காண முடிகிறது.

5. இது ஒரு செகுலர் அமைப்பு. சாதி, மதங்களற்ற ஒரு பார்வையை முன்வைக்கிறது.

இவ்வாறு பாராட்டியவர், மேற்படி இளைஞர்கள் பெரிதாக வளரவேண்டும். பல இளைஞர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கவேண்டும். ஆதரவற்ற ஆனால் பெரும் திறமைகொண்ட இந்திய இளைஞர்கள், தம் உண்மையான திறமையைப் பறைசாற்ற இவர்கள் உதவவேண்டும் என்றும் வாழ்த்துகின்றார்.

நாலைந்து நோட்டுப்புத்தகங்களை இலவசமாகத் தருவதற்கு, அவற்றை விட அதிகமான செலவில் போட்டோ, வீடியோ எடுத்துக்கொள்ளும் சமூகத் தொண்டு நிறுவனங்கள் சற்று யோசிக்க வேண்டும்.

கன், பல், சர்க்கரநோய் என்று தனித்தனியாக மருத்துவ முகாம்கள் நடத்துவோர், அந்தச் செலவிலேயே, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களைத் தேர்ந்தெடுத்து, சென்னை இராயப்பேட்டை மற்றும் அரசு மருத்துவ மனைகளுக்கு அனுபுவித்தாலே போதும்.

முழு உடற் பரிசோதனையே நடத்திவிடலாம். தங்கள் பட்ஜெட்டிலேயே நிறைந்த பலன் பெறலாம்.

இந்த இளஞர்களைப் பின்பற்றினால் அரசு இலவசத் திட்டங்களுக்குப் பட்ஜெட்டில் பணம் ஒதுக்க வேண்டியதில்லை. குறிப்பாக மாணாக்கர்களுக்குரிய மதிய உணவை அரசின் தயவின்றியே வழங்கிட முடியும். இத்தகைய இளஞர்கள் கைவசம் ஒப்படைத்துவிட்டுத் துணை நின்றால் போதும். வெற்றி நிச்சயம்.

லட்சக்கணக்கான இணயதளஙகளில் நல்லனவற்றை மட்டும் பார்ப்பது என்பது அரிது எனவேதான் இந்த மீள்பதிவு. இந்த மெய்யான மானுடத்தை நேசிக்கும் அன்பு நெஞ்சங்களின் முயற்சிகள் என்றென்றும் வெற்றிபெற்றிட வாழ்த்துவோம். உதவியும் செய்வோம்.

இவர்களை அறிமுகப்படுத்திய பத்ரி சேஷாத்ரி அவர்களுக்கு நன்றி.


For any information on SMILE and its activities please contact the following members of SMILE.

SMILE Registered Address

SMILE WELFARE FOUNDATION
C/O A Nithiyanandhan
#4, Vivekanandha Street
Annai Indira Nagar, Velachery
Chennai, TamilNadu - 600 042
India.
Email: smilefoundation@gmail.com
Blog: smilewelfarefoundation.blogspot.com
WebSite: www.smile.org.in


P G Rajesh Nair
Mailing Address:
# 60, 2nd Cross Sanjay Nagar
Marthahalli
Bangalore, Karnataka - 560 037
India.
Phone: +91-9845661616
Email: rajesh.nair@ni.com


A Nithiyanandhan
Mailing Address
#4, Vivekanandha Street
Annai Indira Nagar, Velachery
Chennai, TamilNadu - 600 042
India.
Phone: +91-9840964892
Email:mailtonitu@gmail.com


A Gunasekaran
Mailing Address:
# 51/2,Subramaniasamy Koil Street
West Saidapet
Chennai, TamilNadu - 600 015
India.
Phone: +91-9840726843
Email: gunasekaran.apr19@gmail.com








0 comments:

Post a Comment

Kindly post a comment.