சிறைக்குச் சென்ற முன்னாள் முதல்வர்.
இவர்1979-1984ல் அந்த மாநிலத்தின் முதல்வர். காங்கிரஸ் கட்சியினைச் சேர்ந்தவர். குடி நீர் விநியோகத்திட்டத்தில் ஊழல் நடந்ததாக வழக்கு. 2008ல் ஆறு மாதச் சிறைத் தண்டனைத் தீர்ப்பு. தற்பொழுது ஆறுமாதம் ஒரு மாதமாகக் குறைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு. இதனால் உயர் நீதிமன்றத்தில் அந்த முன்னாள் முதல்வர் சரணடைந்தார். நீதிபதி ஆணைபடி சிறைக்குக் கொண்டு செல்லும் வழியில் நெஞ்சு வலி வந்தது. மருத்துவ மனைக்குப் பயணப்பட்டார்.
அப்பொழுது அவர் செய்தியாளர்களுக்குத் தந்த பேட்டியில் கூறியது. “ மக்களுக்காகச் சிறை செல்கின்றேன். திரும்பிவந்து மீண்டும் அரசியலில் ஈடுபடுவேன்”.
இது நடந்தது, சிக்கிம் மாநிலத்தில்! அந்த முன்னாள் முதல்வர் பெயர், நெர் பகதூர் பண்டாரி.
மாநகராட்சி மட்டத்தில் நடக்கும் ஊழல்போன்றுதான் தெரிகின்றது. அதற்கே ஆறுமாதம், தண்டனை குறைந்து ஒரு மாதம் பின்னர் மருத்துவ மனைக்கு சக்கர நாற்காலிப் பயணம் என்று முதல்வரே திண்டாட வேண்டியிருக்கின்றது. இதோடு ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ்நாட்டில் அடித்த கொள்ளைகளுக்கு ஆயுள் தண்டனை கூடப் போதாது போலும்!
0 comments:
Post a Comment
Kindly post a comment.