அவ்வாறு தேவபிரசன்னத்தில் தெரிந்த விபரங்களை தந்திரிகள் நாராயண ரங்கப்பட், பத்மநாபசர்மா ஆகியோர் நிருபர்களிடம் தெரிவித்தனர்.
அதன் விபரம் வருமாறு:-
பத்மநாபசாமி கோவிலுக்கும், நேபாளத்தில் உள்ள பசுபதிநாத கோவிலுக்கும் பாரம்பரிய தொடர்பு இருக் கிறது. நேபாளத்தில் ஓடும் கண்டகி நதியில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு சாளகிரமங்கள் செய்யப்பட்டுள்ளன.
உத்திராடம்திருநாள் மார்த்தாண்ட வர்மா குடும்பத்திற்கும் நேபாள ராஜகுடும்பத்திற்கும் தொடர்பு உள்ளது. பத்மநாபசாமி கோவிலில் உள்ள நகைகள் அனைத்துமே கோவிலின் மூலவருக்கு பலம் சேர்க்கும் வகையில் ஸ்ரீசக்கரமாக அமைந்து உள்ளது.

இந்த நகைகளை தொடுவது பாவமாகும். மீறி எடுத்தால் மன்னர் குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படும். கோவிலில் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக் கப்படுவார்கள். நாட் டில் இயற்கை சீற்றமும் ஏற் படும். கோவிலில் ஆச்சார, அனுஷ்டானங்கள் முறையாகக் கடைபிடிக்க படவில்லை. கோவில் விக்கிரகம் கீழே விழுந்துள்ளது.
பத்மநாபசாமி கோவிலில் உள்ள நம்பிகள் பிரம்ம சரியத்தை கடைபிடிக்க வேண்டும். கோவிலிலேயே தங்கி இருக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறையை அவர்கள் பின்பற்றவில்லை. பிரம்மசரியம் மீறப்பட்டுள் ளது. இதனால் மூலவர் கோபத்தில் இருக்கிறார்.
கோவிலில் ரத்தம் சிந்தி இருக்கிறது. இதற்குப் பரிகாரம் காணப்படவில்லை. இது போல கோவில் நகைகள் கொள்ளை போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க பாதுகாப்பை பலப் படுத்த வேண்டும். இவ்வாறு தந்திரிகள் தெரிவித்தனர். மேலும் இவற்றை எல்லாம் மீறி ஆறாவது அறை திறக்கபட்டால். திறந்தோர் வம்சம் பாம்பு போன்றவற்றால் தீண்டப்பட்டு பூண்டோடு அழிந்துவிடும் என்றும் கூறியுள்ளனர்.
ஆசார அனுஷ்டானங்களை நம்பூதிரிகள் முறையாகக் கடைப்பிடிக்கவில்லை. குறிப்பாகப் பிரம்மசரியத்தைக் கடைப்பிடிக்கவில்லை. கோவிலில் ரத்தம் சிந்தியுள்ளது. (?) பரிகாரம் காணவேண்டுமாம். இது என்ன கூத்து?
இந்த நம்பூதிரிகள்தான் பக்தர்களை/ பார்வையாளர்களை மேல்சட்டை அணியாமல்தான் வரவேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். தொட்டுவிட்டால் தீட்டு என்று விலகிச் செல்கின்றனர். மேலும். சந்தனம், துளசி இலை போன்றவற்றை பக்தர்களின் கரங்களில் தீட்டுப்பட்டுவிடுமென்று தூக்கிப் போடுவார்கள். இத்தகைய தீண்டாமைத் கொடுமைகளுக்குக் கேரளாவில் இருக்கும் பொதுவுடைமைவாதிகளும், நாரயண குரு போன்ற முற்போக்குச் சிந்தனைவாதிகளின் வாரிசுகளும் சந்தடிச்சாக்கில் முடிவு கட்டவேண்டும்.

0 comments:
Post a Comment
Kindly post a comment.