ஏழு ஆண்டுகளுக்கு முந்தைய படம் இது. இந்த வீடு யாருக்குச் சொந்தம்? உ.பி. முதல்வர் மாயாவதியே இதற்குச் சொந்தக்காரர். தற்பொழுது எல்லாப் பத்திரிக்கைகளிலும், இணைய தளங்களிலும் பேசப்படும் முக்கியச் செய்தி, இந்த வீட்டிற்கு உ.பி. முதல்வர் மாயாவதி செய்துள்ள செலவு குறித்துத்தான். அப்படி என்ன செலவு செய்துவிட்டார்? ஓர் ஆண்டில் மட்டும் வீட்டைப் புதுப்பிப்பதற்காகச் செலவிடப்பட்ட தொகை இருபது கோடிதான். முழுவதும் மக்களின் வரிப் பணம்தான். துண பட்ஜெட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டும் உள்ளதாகப் பத்திரிக்கைகள் கூறுகின்றன.
பதினெட்டு அடி உயரமுள்ள சுற்றுச்சுவர் எழுப்பப் பட்டுள்ளதாம். வீடு முழுவதும் குளிரூட்டப்பட்டுள்ளதாம். அதி நவீன வசதிகள் அனைத்தும் உள்ளனவாம். மாயாவதியின் பதினெட்டு அடி உயரச் சிலை, கான்ஷிராமின் சிலைகளும் வளாகத்திற்குள் உள்ளனவாம். வீட்டின் தரைகளை தோல்பூர் டைல்ஸ் (எனக்குத் தெரியாது) அலங்கரிக்கின்றனவாம். வளாகத்திற்குள் பசுமையான புதிய பூங்காவிற்கும் குறைவில்லை.
2002ஆம் ஆண்டிலிருந்து மேற்படி வீட்டைப் புதுப்பிக்கச் செலவிட்டது51கோடி. 13ஆம் எண்தான் ராசி என்று அண்மையில் இந்த வீட்டிற்குக் குடி புகுந்துள்ளார். லக்னோமால் அவென்யூபகுதியில் உள்ள இந்த வீட்டின் எண்13. இரண்டு ல்ட்சம் சதுர அடியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான பங்களாவிற்குள் யாரும் எளிதில் சென்றுவிட முடியாது என்பதும், பாதுகாப்பிற்கு நிற்கும் போலீசார், நின்று வேடிக்கை பார்க்கக் கூட, யாரையும் அனுமதிப்பதில்லை என்பதும் கொசுறுச் செய்திகள்.
வீடு பழசு. செய்தி புதுசு.
Thursday, August 11, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.