- தமிழகப் பெற்றோர்களும், மாணாக்கர்களும் நன்றி சொல்லலாம், கலைஞருக்கு!
அனைத்து வகுப்புக்களுக்குமான தமிழ்ப் புத்தகஙளில் இடம்பெற்றுள்ள செம்மொழிப்பாடல்மீது ஸ்டிக்கர் ஒட்டவேண்டும்.
செம்மொழி மாநாட்டுக் காட்சிகள், கலை நிகழ்வுகள், ஊர்வலக் காட்சிகள் மற்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனப் படங்கள்- இரண்டு, மூன்றாம் வகுப்பு தமிழ்ப் புத்தகங்களில் உள்ளன. ஸ்டிக்கர் ஒட்டுவதன் மூலம் இவை மறைக்கப் படவேண்டும்.
நான்காம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள செம்மொழி மாநாடு செய்திகளின்மீது கருப்புமைபூசிட வேண்டும்.
7ஆம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கருணாநிதி குறித்த குறிப்பின் மீது கருப்புமை பூசிட வேண்டும்.
எட்டாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுச் சிறப்புகள் மூன்று தாள்களில் இடம் பெற்றுள்ளன. அவை கிழிக்கப் படவேண்டும். மேலும், தன்மான இயக்கம்........ புத்துயுரூட்டி வருகின்றன என்ற இரண்டு பத்திகள்மீது கருப்புமை பூசப்படவேண்டும்.
9ஆம் வகுப்புப் புத்தகத்தில், செம்மொழி தமிழ் வாழ்த்து மூன்று மற்றும் நான்காம் பக்கங்கள் கிழிக்கப்படவேண்டும். ஐந்தாம் பக்கம் கருப்புமை பூச வேண்டும். தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான பகுதியிலும் கருப்புமை பூசவேண்டும்.
10ஆம் வகுப்புப் புத்தகத்தில் முதல்வர் கருணாநிதி முயற்சியால்... என்ற வரி, .......... முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி என்ற பகுதி.........கலஞரின் இனிய நடையைப் படித்து அறிக என்ற பகுதி,.....செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தொடர்பான குறிப்புகள் இவ்ற்றின் மீதெல்லாம் கருப்புமை பூச வேண்டும். ஆங்கிலப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள செம்மொழி மாநாடு தொடர்பான பகுதிகள் மீதும் கருப்பு மை பூச வேண்டும்.
நான்காம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் ஆங்கிலம், தமிழ்ப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ள சென்னை சங்கமம் குறித்த பகுதிகளின் மீது ஸ்டிக்கர் ஒட்டப்படவேண்டும்.
ஐந்தாம் வகுப்பு நூலில் முதல்வர் கருணாநிதி, புதிய தலைமைச் செயலகக் கட்டிடம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான பகுதிகள் மீது ஸ்டிக்கர் ஒட்டிடல் வேண்டும்.
10ஆம் வகுபு ஆங்கிலம், தமிழ் வழி பாடப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள திமுக பற்றிய குறிப்புகள் மீதும் கருப்பு மை பூசிட வேண்டும்.
தார் பூசுவதும், கிழிப்பதும், எரிப்பதும் திராவிடக் கட்சிகளின் பண்பாடுதானே? கல்வித் துறைக்கும் அந்தக் கலாச்சாரத்தைப் பரப்பியுள்ளனர். இரண்டு லட்சம் ஆசிரியர்கள் இப்பணீயில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். எக்காரணத்தைக் கொண்டும் மாணாக்கர்களைப் பயன்படித்திடக் கூடாது என்றும் கட்டளை. கலைஞர் சுய புராணம் பாடியது தவறு. உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப்பின் செய்யும் வேலையை முதலிலேயே செய்து மாணாக்கருக்கும் பெற்றோருக்கும் உதவி இருக்கலாம், இன்றைய முதல்வர்.
எல்லோருக்கும் ஒரே பாடத்திட்டம் என்றுதான் வந்திருக்கின்றது. இதே பாடத் திட்டத்தில் தனியாரால் எழுதப்பட்ட வேறு புத்தகங்களைத்தான் மெட்ரிகுலேஷன் நிர்வாகங்கள் பயன்படுத்தும். அப்பொழுதுதானே அவர்களது தனித்துவத்தைக் காட்ட இயலும். பொருளாதார ரீதியிலும் லாபகரமானதாகவும் இருக்கும். தமிழ்ப் பாடப் புத்தகம் மட்டும் அரசுடையாதாக இருக்கும். அதனையும் இலவசமாகக் கேட்கின்றனர்.
மெட்ரிகுலேஷசன் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்- மாணாக்கர் விகிததைப் போன்று அரசுப் பள்ளிகளில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. ஒரு ஆசிரியருக்கு மிக அதிகமாகப் போனால்30 மாணவர்கள் இருக்கக் கூடும். இது கூட நான் அதிகமாகக் குறிப்பிட்டுள்ளேன். அரசுப் பள்ளிகளில் எழுபது - எண்பது என எகிறும். அதுவும் ஆங்கிலவழி வகுப்புகளில் நூறு நூற்றிஐம்பது என்று கூட இருக்கக் கூடும்.
மெட்ரிகுலேஷன் நிர்வாகம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாறிவிடுவதும் சாத்தியமானதுதான். பல பள்ளிகள் மாற்றத்திற்கு விண்ணப்பித்து, தமிழக அரசின் பரிந்துரைக்காகக் காத்திருப்பதாகவும் கேள்வி.
நடந்துமுடிந்த போராட்டம் ஒரே பாடத்திட்டத்திற்கான ஆரவாரப் போராட்டம்தான். சமச்சீர்க் கல்விக்கான போராட்டம் அல்ல. சமமான வாய்ப்பு வசதிகளுடைய பள்ளிகளும், தகுதியும் திறமையும் உடைய ஆசிரியப் பெருமக்களும் தமிழக மாணாக்கருக்கு எப்பொழுது கிடைக்கின்றதோ அன்றுதான் “சமச்சீர்க் கல்வி” என்று சொல்ல முடியும்.
ட்யூசன் என்ற பெயரில் கற்றதை திரும்பத் திரும்ப ஆண்டுதோறும் பேக்கேஜ் கட்டணத்தில் அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைக்கும் ஆசிரியர்களும், அவர்களைத் தேடித் திரியும் பெற்றோர்களும் உடையதுதானே இன்றையத் தமிழகம். புதிய கல்வித் திட்டம் சுய ஆளுமைத் திறனை வளர்க்கும். மனப்பாடம் செய்யத் தேவை இல்லை என்றெல்லாம் கூறுகின்றனர், ஒரே பாடத் திட்டக் கல்வி ஆதரவாளர்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆனால், மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் வாரிசுகளைச் சேர்த்துள்ள பெற்றோர்கள், சிபிஎஸ்இ எப்பொழுது வரும் என்றே ஏங்குகின்றனர்.
அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாகிச் சீரழியும் கல்விமுறை சமூக முன்னேற்றத்திற்கு முற்றிலுமாகப் பயன்படும் வண்ணம் மாறுவது எப்பொழுது என்பதே சமூக ஆர்வலர்களின் ஒரே கேள்வி!
சென்னை நகரில் தெளிவான தெருப்பெயர்கள் எழுதப்பட அறுபத்திரண்டு ஆண்டுகளுக்குமேல் ஆகி இருக்கின்றன். கல்வி என்பதெல்லாம் பெரிய விஷயம். இன்னும் ஓரிரு தலைமுறை கூட ஆகக் கூடும் . மூன்று வேளை வேண்டாம் ஒரு வேளையாவது உணவு தவறாமல் கிடைத்தாற் போதும் என்கின்றார் ஆண்டிப் பண்டாரம்.
L. Dorai Raj eldiaar@gmail.com to illam
ReplyDeleteshow details 12:15 AM (4 hours ago)
கலைஞர் கருணாநிதி ஊரைக் கெடுத்து, வட்டத்தைக் கெடுத்து, மாவட்டத்தைக் கெடுத்து கடைசியில், மாநிலம், நாடு இவையெல்லாவற்றையும் கெடுத்துக் குட்டிச்சுவர் பண்ணிவிட்டுச் சென்று விட்டார். இவருடைய பேரக் குழந்தைகளை மட்டும் அயல் நாடுகளில் படிக்க வைக்கிறார் அல்லவா? இங்கு இருப்பவன் எந்த 'இலவை' படித்தாலென்ன, அதற்கு மேல் அவைவரும் தரமான கல்வி பெற்றால் பின்னால் தம் மக்கள் செய்யும் தவறுகளைத் தட்டிக் கேட்கத் துநிதுவிடுவார்கள். எனவே யாரும் தரமான கல்வி கற்கக் கூடாது என்ற ஒரே எண்ணத்தில் சமச்சீர்க் கல்வியை அமல்படுத்திவிட்டுச் சென்றுவிட்டார் என்பதே உண்மை.
C.P. Venkat venkateshsrm@gmail.com to illam
ReplyDeleteshow details 9:15 AM (49 minutes ago)
he made worst education system and school childrens...
Thangamani Rajamanickam rtmanis@yahoo.co.in to illam
ReplyDeleteshow details 2:27 PM (50 minutes ago)
dEAR Sir,
Karunanithi is a selfish. We know. But this samacheer kalvi is a an efficient lesson at this time. Noone will agree that this is the best. But it is better than previous one. That is all. Anybody thought that the judges has given wrong judgement? We have to analyse the judgement points.
Warm regards,
Thangamani
C.P. Venkat venkateshsrm@gmail.com to illam
ReplyDeleteshow details 2:19 PM (7 hours ago)
i agree in this. but, my point of view i thought some demerits in this
1. subjects is not having sufficent syllabus.
2. the judges or judgement is not pointed the to the government delayed last 3 months for the education system changes to suffered the students.
3. students & teachers heavy work to going to handle. upcoming day particularly 10 & 12th
4. the judges did not any pointed or noticed to karunanithi printed self ads(it is very bad thought ) in all class books and tamil semmoli and all..
5. then no comments to school tution fees raising in private schools.
6.மேலும், அரச்யயலுக்காக கல்வியை பயன்படுத்துவது ரொம்ப கேவலமான ஓன்று...