அழிவினின்றும் தமிழகத்தை மீட்கப்போகும் பாமக-எஸ்.இராமதாஸ்
காங்கிரஸ் ஆட்சியில் பதினெட்டு மெட்ரிகுலேஷன் பள்ளிகள்தான் இருந்தன. ஆனால், இன்று பதினோறாயிரம் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இருக்கின்றன. காங்கிரஸ் ஆட்சியில் தமிழ் வழிக் கல்விதான் இருந்தது. கல்விக் கொள்ளையர்களை அனுமதித்தது திராவிடக் கட்சிகள்தான்.
சாராயக் கடைகளைத் திறந்துவிட்டு சமூகம் கெடுவதற்கும், இலவசங்களைக் கொடுத்து ஏமாற்றியதற்கும், விவசாயம் பாழ்பட்டுப் போனதற்கும் காரணமான திராவிடக் கட்சிகளை அப்புறப்படுத்துவது வரலாற்றுக் கடமையாகும்.
தமிழ்நாட்டைச் சீரழித்த திராவிடக் கட்சிகளை ஒழிப்பதுதான் பாமகவின் முதல் வேலை. கிராமங்களில் திராவிடக் கட்சிகளின் கொடிகள் பறப்பதைப் பார்த்தால் இளைஞர்கள் கொதித்தெழவேண்டும்.
வேலூர், சத்துவாச்சாரியில், புதனன்று பாமக கூட்டத்தில் பேசியதிலிருந்து.
இனிமேல் திராவிடம் என்ற வார்த்தையைக் கட்சிப்பெயரில் கொண்டுள்ள எந்தக் கட்சிகளுடனும் பாமக சேராது என்பதைக் குறித்து மகிழலாம். எந்தச் சூழலிலும் பாமகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில்லை என்று திராவிடக் கட்சிகள் முடிவெடுத்துச் செயற்படுத்தினால் பெரு மகிழ்வெய்தலாம்.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சாராயக் கடைகள் இருக்கின்றன. அப்படியாயின், காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டுச் சேர முடியாதே, பாமக.
திராவிடக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து பதவிகள் பெற்றபோது இந்தக் குறைகள் எல்லாம் தெரியாதா?
பாமக தன் கட்சித் தொண்டர்களின் உணச்சிகளுக்குத் தீனி போடுவதற்காகப் பேசிய பேச்சுக்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து எழுதுவது பைத்தியக்காரத்தனம் என்று நீங்கள் சொல்வது எனக்குக் கேட்கிறது. இருந்தாலும், தமிழகத்தை திராவிடக் கட்சிகள் சீரழித்துவிட்டன என்ற உண்மையை அவர்களால் பலன் பெற்றதொரு இயக்கமே சொல்வதை ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.