Wednesday, August 10, 2011

பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவை தூக்கிலிட மத்திய அரசு சிபாரிசு


கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்துக்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட காஷ்மீர் தீவிரவாதி அப்சல் குருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அப்சல் குருவின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு அவருடைய மனைவி அனுப்பிய கருணை மனுவை உள்துறை அமைச்சகத்துக்கு ஜனாதிபதி அனுப்பி வைத்தார். ஆனால் பல ஆண்டுகளாக அம்மனு மீது மத்திய உள்துறை அமைச்சகம் எந்த முடிவும் எடுக்காததால், எதிர்க்கட்சிகள் இதுதொடர்பாக மத்திய அரசை குற்றம்சாட்டி வந்தன.

இந்நிலையில், அப்சல் குருவின் கருணை மனுவை நிராகரித்து, அவரை தூக்கில் போடுமாறு ஜனாதிபதிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சிபாரிசு செய்துள்ளது. இத்தகவலை மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சிபாரிசின் அடிப்படையில், அப்சல் குருவின் கருணை மனு மீது ஜனாதிபதி பிரதீபா பட்டீல் இறுதி முடிவு எடுப்பார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.