Showing posts with label சிறப்புத் த்கவல்கள்i. Show all posts

Tuesday, June 26, 2012
Saturday, June 9, 2012
![]() ![]() | ||||||||||||
| ||||||||||||
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜருகு ஊராட்சியில், அஜ்ஜிப்பட்டி என்ற மலை கிராமம் உள்ளது. இங்கு 800 வீடுகளில் கிட்டத்தட்ட 1,200 பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் 80 சதவீதம் பேர், அரசு பள்ளி வளாகத்தில் தினமும் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இங்கு, குடிமையங்கள், புகையிலைப் பொருட்கள் மற்றும் மாமிசம் ஊர் கட்டுப்பாட்டின்படி, தடை செய்யப்பட்டு உள்ளது.
முதல் அச்சாரம்:இந்த யோகா புரட்சியைத் தொடங்கி வைத்தவர், அஜ்ஜிப்பட்டியை சேர்ந்த, போலீஸ் குற்றப்பரிவு, சப் இன்ஸ்பெக்டர், வெங்கடேஷ். தன் சொந்த பிரச்னைகளைச் சமாளிக்க யோகாவை நாடியவர், அதன் பயனை அனுபவித்த பின், அதை பரப்பத் துவங்கினார்.
இது குறித்து, அவர் கூறுகையில், ""நான் தர்மபுரி காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்தபோது, தினம்தோறும் நூற்றுக் கணக்கானவர்கள் புகார் கொடுக்க வந்ததால், மன உளைச்சல் ஏற்பட்டது. என்னுடன் பிறந்தோர் குடும்பங்களில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாலும் எனக்கு அடிக்கடி மனச்சோர்வு ஏற்படும்,'' என்றார்.
மேலும், ""இதைத் தவிர்க்க, ஆழியாறு வேதாத்ரி மகரிஷியின் மனவளக்கலை மன்றத்தில், யோகா பயிற்சி பெற்று , அதை பின்பற்ற ஆரம்பித்தேன். அதனால், மனதளவில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. பின்னர் இதையே என் குடும்ப பிரச்னைகளுக்கான தீர்வாக எடுத்துக் கொண்டேன். என் உறவினர்களிடம் யோகாவின் அவசியத்தை உணர்த்தினேன். அங்கும் நல்ல மாற்றம் ஏற்பட்டது. இன்று எங்கள் குடும்பம் மட்டும் அல்லாது, ஊரே யோகா மூலமாக நல்வழியில் நிமிர்ந்து நிற்கிறது,'' என்றார்.
காலை எழுந்ததும்...:அஜ்ஜிப்பட்டியில்
திருந்திய குடிகாரர்கள்:இங்கு, ஐம்பதுக்கும் மேற்பட்டோர் குடிப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்து உள்ளனர். முதலில், இவர்களில் ஐந்து பேரை தேர்வு செய்து, யோகா பயிற்சிக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கு மாற்றம் ஏற்பட்டு, குடியை விட்டவர்கள், இன்று அதன் வாடை வந்தாலே காததூரம் ஓடுகின்றனர். அப்படி திருந்தியவர்களில் ஒருவர் வடிவேலு, 74.
அந்த அனுபவம் குறித்து, அவர் கூறுகையில், ""விவரம் தெரியாத 14 வயதிலிருந்து குடித்து வந்தேன். யோகா பயிற்சிக்கு ஐந்து நாட்கள் பொள்ளாச்சிக்கு அனுப்பிச்சாங்க. இப்ப அந்த கருமத்தோட நாத்தம் வந்தாலே அந்த இடத்தில் நிக்க மாட்டேன்,'' என்றார். எட்டு வயதில் இருந்து குடித்து வந்த, பழனி, குடிகாரர்களை கண்டாலே வெறுப்பு வருகிறது என்கிறார்.இப்படி ஒவ்வொருவராக திருந்தி, இங்கு குடி என்ற வார்த்தையைக் கூட கேட்க முடிவதில்லை. கடைகளில் பீடி, சிகரெட் விற்பனையும் இல்லை.
சாதிக்கும் மாணவர்கள்:இங்கு உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஜருகு ஊராட்சியைச் சுற்றி உள்ள, பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள், இங்கு பயிற்சி எடுத்து செல்கின்றனர்.சென்ற முறை பிளஸ் 2 வகுப்பில் 68 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், இந்த முறை 78 சதவீதம் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்.
யோகா பயிற்சியின் மூலம் படிப்பில் முன்னேற்றம் கண்ட மாணவர், பிரபாகரன் கூறுகையில், ""காலை நான்கு மணிக்கு எழுந்து யோகா செய்த பின்னர் படிப்பதால் மனதில் பசுமரத்தாணி போல பதிகிறது. அதிகாலையில் எழுவதால், படிப்பதற்கு நிறைய நேரம் கிடைக்கிறது. அதுவே இம்முறை நான் அதிக மதிப்பெண் எடுப்பதற்கு காரணம்,'' என்றார்.
குற்ற செயல்கள்:கிராமங்களும், தெரு சண்டையும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள். ஆனால் இங்கு ஊரே அமைதிப் பூங்காவாக இருக்கிறது.ஆரம்பத்தில் யோகா பயிற்சி பெற்று, தற்போது, யோகா பயிற்சி ஆசிரியராக இருக்கும், ஸ்ரீதேவி கூறுகையில், ""கிராமத்தில் உள்ள அனைவரும் யோகா செய்வதன் மூலம் எங்களுக்கு விட்டுக் கொடுக்கும் தன்மை வந்து விட்டது. இப்பயிற்சி கடந்த ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடக்கிறது. இதனால் பிரச்னை ஏற்படுவதில்லை. குறிப்பாக குழாயடியிலோ, தெரு முனையிலோ சண்டை போடுவதில்லை,'' என்றார்.
மேலும், ""உங்க மண் வெட்டியையோ, கடப்பாரையையோ இங்கே விட்டு செல்லுங்கள். நாளை அதே இடத்தில் இல்லை என்றால் நீங்கள் எது சொன்னாலும் நாங்கள் கேட்கிறோம்,'' என, ஊரில் தனிநபர் ஒழுக்கம் பற்றி பெருமையாக சவால் விடுத்தார்.
அடிப்படையிலேயே மக்கள் ஒழுக்கமாக இருப்பதால், பெரும்பாலான குற்றச்செயல்கள் நிகழ்வதில்லை என்கின்றனர், இந்த ஊர் மக்கள்.
- அ.ப.இராசா -
குடிகாரர்களும் இல்லை; குற்றவாளிகளும் இல்லை: ஆச்சர்யப்படுத்தும் யோகா கிராமம் !
Posted on by Unknown with No comments

Wednesday, May 9, 2012
சென்ற ஃபெப்ருவரி ( 2012 ) மூன்றாவது வாரத்தில், ஐந்து நாட்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இளைஞர் ஆரோக்கியத் திருவிழா நிகழ்ந்தது.
படத்தில் காணப்படும், 74 வயது முதியவர் , இயற்கை வேளாண் அறிவியலாளர்
டாக்டர் . கோ. நம்மாழ்வார் அவர்களுக்கு,
யூத் ஹெல்த் சேம்பியன்
எனும் விருது வழங்கப் பெற்றது.
“இயற்கை வேளாண்மையின் அதிமுக்கியத்துவம் குறித்தும், செயற்கை உரங்கள், இரசாயன பூச்சிக் கொல்லி உட்பட பல ஈடு செய்ய முடியாத தவறான் வேளாண் கொள்கைகளாலும், செயல்பாடுகளாலும்,
இன்றைய விளைவுப் பொருட்கள் படிபடியாக நச்சாகி வருவதன் ஆபத்து குறித்தும், எல்லாத் தளங்களிலும் தொடர்ந்து பேசியும், எழுதியும், இடைவிடாது செயல்பட்டும் வருகின்றவர், திரு. கோ.நம்மாழ்வார்.
இன்றைக்கு இயற்கை வேளாண்மையிலும், பாரம்பரிய வேளாண்மை முறைம்கைகளைப் பாதுகாப்பதிலும், கணிசமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றார்கள் என்றால் அது முழுக்க முழுக்க திரு.நம்மாழ்வார் தளராது ஏற்படுத்திய தாக்கத்தினால் மட்டுமேதான் என்று கூறினால் அதில் சற்றும் மிகையில்லை.
இன்றைய காலக்கட்டத்தில் இவ்வாறு மக்களிடமும், குறிப்பாக இளைஞர்களிடமும் உண்மையான அக்கறையுடன் உரையாடி , தாக்கத்தை ஏற்படுத்தும் ஆளுமையுடையோர் அரிதிலும் அரிது. திரு நம்மாழ்வார், மண்ணை மட்டுமல்ல, சந்திக்கும் ஒவ்வொரு மனதையும் பண்படுத்தும் பண்பாளர்.
இயற்கையின் மீதும் வருங்கால சந்ததியின் மீதும் பேரன்பு கொண்டு, அறிவியல் பார்வையுடன், குன்றா நீடித்த வளர்ச்சியை மையப்படுத்தும் விதமாகவும், இளைய தலைமுறையைப் பாதுகாக்கும் நூக்குடனும் தொடர்ந்து செயல்பட்டு வருபவர் “
இதுதான் திரு.நம்மாழ்வாருக்கு விருது நிகழ்ச்சியில் வாசித்தளிக்கப்பட்ட பாராட்டுப் பத்திரம். சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை ஐக்கியப்படுத்தி, ஐந்து நாட்கள், எந்த ஒரு அரசியல் கட்சியின் ஆதரவும் இன்றி நிகழ்வினை ஏற்பாடு செய்ததில் மையப்புள்ளியாகத் திகழ்ந்தவர்,
யூத் ஹெல்த் சேம்பியன் 2012 டாக்டர் கோ.நம்மாழ்வார், 74 வயது

Thursday, March 1, 2012
தொடர்புள்ள செய்திகள்
- 28 பெப்ரவரி 2012: நியண்டர்தால் மனிதனின் அழிவு குறித்து அறிவியலாளர்கள் விளக்கம்
- 25 பெப்ரவரி 2012: கனடியப் பழங்குடிச் சிறுவர்கள் தவறாக நடத்தப்பட்டமை குறித்து ஆணைக்குழு அறிக்கை
- 24 ஜனவரி 2012: 1915 ஆர்மேனிய இனப்படுகொலை குறித்த பிரெஞ்சு சட்டமூலத்திற்கு துருக்கி எதிர்ப்பு
- 27 டிசம்பர் 2011: இந்தியாவில் 1 மில். பேரின் பட்டினிச் சாவுக்கு வின்ஸ்டன் சர்ச்சில் காரணம் எனக் குற்றச்சாட்டு
- 23 டிசம்பர் 2011: தஞ்சாவூர் பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா
செவ்வாய், பெப்ரவரி 28, 2012
நவீன கால மனிதன் தோன்றுவதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே ஐரோப்பாவில் நியண்டர்தால் மனிதர் அழிய ஆரம்பித்து விட்டதாக புதிய டிஎன்ஏ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேற்கு ஐரோப்பாவில் வாழ்ந்த பெரும்பாலான நியண்டர்தால்கள் 50,000 ஆண்டுகளுக்கு முன்னரேயே அழிந்து விட்டனர்.
13 நியண்டர்தால்களின் எலும்புகளில் இருந்து பெறப்பட்ட டிஎன்ஏ மூலம் சுவீடன் மற்றும் எசுப்பானிய ஆய்வாளர்கள் குழு இந்த முடிவுக்கு வந்துள்ளது. ஐரோப்பா, மற்றும் ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 100,000 முதல் 35,000 ஆண்டுகள் காலப்பகுதியைச் சேர்ந்தவை எனக் கருதப்படும் எச்சங்களில் இருந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த 48,000 ஆண்டுகள் பழமையான எச்சங்களில் ஆசிய எச்சங்கலும் பார்க்க குறிப்பிடத்தக்க அளவு பிறப்புரிமை வேறுபாடுகள் காணப்பட்டன. ஆனால், 48,000 ஆண்டுகளிலும் குறைந்த வயது எச்சங்களில் இந்த வேறுபாடு குறைந்து காணப்பட்டது.
காலநிலை மாற்றம் போன்ற இயற்கைக் காரணிகளால் மேற்கு ஐரோப்பாவில் இருந்த நியண்டர்தால்கள் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்திருக்கலாம் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். வெப்பமான தெற்குப் பகுதியில் இவர்களின் அழிவு பின்னர் ஏற்பட்டிருக்கலாம்.
தெற்கு எசுப்பானியாவில் நெர்ச்சா என்ற இடத்தில் உள்ள குகைகளில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியங்கள் சில 42,000 ஆண்டுகள் பழமையானது என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இவை நியண்டர்தால்களினால் உருவாக்கப்பட்டவை எனக் கூறப்பட்டாலும் இக்கூற்று உறுதிப்படுத்தப்படவில்லை.
நியண்டர்தால் (Neanderthal) மனிதர் ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் வாழ்ந்திருந்த ஹோமோ வகை இனமாகும். இவற்றின் எச்சங்கள் செருமனியின் நியண்டர்தால் என்னும் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறான். இவன் சமைத்த தாவர உணவை உண்டதாக அவர்களின் எச்சங்களை ஆராய்ந்த வரலாற்றாளர்கள் தெரிவித்துள்ளனர்.
[தொகு] மூலம்
- DNA reveals Neanderthal extinction clues, பிபிசி, பெப்ரவரி 27, 2012
- Scientists find clue to Neanderthal extinction, சீ நியூஸ் இந்தியா, பெப்ரவரி 28, 2012
- Partial genetic turnover in neandertals: continuity in the east and population replacement in the west, மூலக்கூற்று உயிரியல் மற்றும் கூர்ப்பு, பெப்ரவரி 23, 2012
- இப்பக்கம் கடைசியாக 28 பெப்ரவரி 2012, 10:50 மணிக்குத் திருத்தப்பட்டது.
- உள்ளடக்கங்கள் Creative Commons Attribution 2.5 இன் கீழ் கிடைக்கின்றன.
நியண்டர்தால் மனிதனின் அழிவு குறித்து அறிவியலாளர்கள் விளக்கம்

Tuesday, February 21, 2012
2012/2/21 N. Kannan
வளர வேண்டிய இந்தியாவின் மிகப்பெரிய தடங்கல் மனத்தளவிலானது. நானூறு வருடங்களுக்கும் மேலான அடிமைப்படுத்தல் இந்தியரை நிரந்தக் கூலிகளாக ஆக்கிவிட்டது. எப்போதும் கையேந்தும் ஒரு துர்பாக்கிய நிலை. மனத்தளவில்தான் சொல்கிறேன். இவனுக்கு தன்மானமே இல்லாமல் போய்விட்டது. வெளிநாட்டுக்காரர் சொன்னால் ஒசத்தி. நம் நாட்டு சரக்கெல்லாம் தாழ்ச்சி!
நண்பர் முகுந்தன் சொன்னார் வேதத்தில் 700 வகையான பசுக்கள் பற்றிய பேச்சு உள்ளதாம். ஆனால் நாம் ஸெர்சி மாடுகளை ஐரோப்பாவிலிருந்தும், பிரேசில் மாடுகளையும் இங்கு கொண்டு வந்து வெண்மைப் புரட்சி செய்ய முயல்கிறோம். இந்தியப் பசுக்களில் நிரம்ப ஆய்வுகள் செய்ய வேண்டியுள்ளதை முகுந்தன் என்க்குக் காட்டினார்.
--சிந்து சமவெளி முத்திரைகளில் காட்டப்படும் பசுக்கள்.நகரத்தை விட்டு அகன்றால் இந்தியா ஓர் சொர்க்கம்ராஜஸ்தான் மாடுகள் மடிக்கு 7-12 லிட்டர் கறக்கிறதாம்.இன்னொரு வகைப் பசுவினம்மாடுத்தீவனம்மாட்டுப்பண்ணைமண்ணாங்கட்டி என்று ஒரு சிப்பந்தியின் பெயர்!இந்தியாவில் இப்போது எல்லோரிடமும் செல்போன் இருக்கிறது. அது பெரிய வசதிதான். குறிப்பாக வயல்/காடு எனும் வேலை பார்க்கும் போது!முகுந்தன் தண்ணீர் கலக்காத பால் தருகிறார், பன்னீர் தருகிறார். விலை கொஞ்சம் அதிகம்தான். ஆனால் செங்கல்பட்டு மக்கள் விரும்பி வாங்குகின்றனர். முகுந்தன் படித்தவர். வித்தியாசமான சிந்தனைப் போக்கு உள்ளவர். தரம் என்பது பற்றிய விழிப்பு உடையவர். ஏமாற்றித்தான் காசு சேகரிக்க வேண்டுமென்ற எண்ணம் இல்லாதவர். நேரடியாகப் பேசுபவர். தைர்யசாலி. முகுந்தன் போன்றோர் பெருக வேண்டும். தேசாபிமானமும், நேர்மையுமுடைய இந்தியாதான் நம் முன்னோர் கனவு கண்டது!நா.கண்ணன்
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
செங்கல்பட்டில் தண்ணீர் கலக்காத பால் பால் தரும் முகுந்தன் -நா.கண்ணன்

Wednesday, February 15, 2012

வாழ்வின் ‘உண்மையான’ கொண்டாட்டத்தை அனுபவிக்கலாம்!வாருங்கள் வள்ளுவர் கோட்டத்திற்கு. பிப்ரவரி 22 முதல் 26 வரை. இலவசம்.
பொருளாதார வளர்ச்சி கண்டுவரும் இந்தியாவை, பலரும் சீனா, பிரேசில் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். ஆனால், நம்மால், இந்த நாடுகளின் முன்னேற்றத்தில் பாதியைக் கூட எட்டிப்பிடிக்க முடியுமா என்பது சந்தேகமே!
ஏனென்றால், நம் முன்னால் உள்ள சுகாதாரப் பிரச்சனைகள் தான். பெரும்பாலான வளர்ந்த நாடுகள், வாழ்க்கை முறை நோய்களை மட்டுமே சந்தித்து வருகின்றன. மற்ற வளர்ந்த நாடுகளிலும் இதே பிரச்சனை இருந்தாலும், வறுமை ஒழிப்பும், ஓரளவு சமத்துவமும் அங்கெல்லாம் ஏற்பட்டு, காலம் காலமான தொற்று நோய் பிரச்சனைகள் சமாளிக்கப்பட்டு விட்டன. மேலும் அங்கு, மக்கள் தொகையும் கட்டுக்குள் உள்ளது.
ஆனால், வளர்ந்து வரும் மற்ற நாடுகளைக் காட்டிலும், மிக மோசமான விதத்தில், இரண்டு விதமான சுகாதாரப் பிரச்சனைகளின் அழுத்தத்தையும், அதாவது ‘இரட்டை நோய்ப்பளு’ எனும் மிகப்பெரிய சிக்கலுக்குள் நம் நாடு அகப்பட்டிருக்கிறது.
மிக வெகு காலமாகவே, ஊட்டச்சத்துக் குறை பாடு, இரத்தசோகை, மலேரியா, பேதிநோய், காசநோய், பாலியல் நோய்கள், சமீப காலமாக, மிகப் பெரிய அளவில் எச் ஐ வி எய்ட்ஸ் ஆகியவை இந்திய மக்களின் நலவாழ்விற்கு மிகப் பெரிய தடைக்கற்களாக இருந்து வருகின் றன. இந்நோய்களுக்கு, பெரும்பாலும், நம் சமூ கத்தில் நிலவும் பொருளாதார சமூக ஏற்றத் தாழ்வு களும், கல்லாமையும், அவற்றால் ஏற்பட்டுள்ள மூட நம்பிக்கைகளும் முதன்மைக் காரணங்கள். சுருக்கமாகச் சொல்வதானால், இவற்றை ‘ஏழ்மை யினால் ஏற்படும் சுகாதாரப் பிரச்சனைகள்’ என்று கூறலாம். இவற்றில் பல ‘தொற்றும் நோய்கள்’.
இந்நிலையில், இந்தியாவில் நாளுக்கு நாள் எண்ணிக்கையில் பெருகிவரும் நடுத்தரவர்க்க மக்கள், மற்ற மேலை நாட்டு மக்கள் சந்தித்து வந்ததை விட மிகத் தீவிரமான அளவில், வாழ்க்கைமுறை நோய்களால் பீடிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த வாழ்க்கைமுறை நோய்களில் பெரும்பாலானவை, இதய நோய் மற்றும் இதய நாள பாதிப்புகள், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், புற்று நோய், சர்க்கரை நோய், உணவுக்குழாய் நோய்கள், கல்லீரல், சிறுநீரக்ப் பாதிப்புகள், ஆஸ்த்துமா, பல்வேறு விதமான மன அழுத்த நோய்கள் போன்ற ‘தொற்றா நோய் களாகும்’.
சாலை விபத்துக்களால் ஏற்படும் இறப்புகளும், உடல் பாதிப்புகளும் கூட கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்துவருகின்றன. இவற்றிற்கு, வேகமான பொருளாதார வளர்ச்சியின் பக்க விளைவாக ஏற்பட்டுவரும் அதீத நுகர்வுக் கலாச்சாரமும், அதை ஊக்குவிக்கும் சந்தைப் பொருளாதாரமும், பொருளாதார வளர்ச்சி ஏற்பட் டிருந்தாலும், மனித மேம்பாட்டில் இந்தியா பின் தங்கியிருப்பதும் மிக முதன்மையான காரணிகள்.
35 முதல் 64 வயதிலான மக்களிடையே, “நிறைவாக செயல்படும் ஆண்டுகள்’ எனும் அடிப்படையில், 9.2 மில்லியன் ஆண்டுகளை, இந்தியா 2005ம் ஆண்டு மட்டுமே இழந்துள்ளது.
தொற்றாத நோய்களும், வாழ்க்கைமுறை நோய்களும் இப்படியே தொடர்ந்தால், 2030ம் ஆண்டில், இந்த மனிதவள உற்பத்தி இழப்பானது, இரண்டு மடங்காகிவிடும் என்று கணிக்கப் படுகிறது. இந்த இழப்பு, இந்தியாவை விட மூன்றில் ஒரு பங்கு குறைவான மக்கள்தொகை கொண்ட அமெரிக்காவைக் காட்டிலும், 9.4 பங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையான சுகாதாரப் பிரச்சனைகளுக் கான காரணிகளை நான்கு வகையாகப் பிரித்துப் பார்த்து, அணுக வேண்டியுள்ளது.
அவை முறையே,
அ) மது, புகையிலை உட்பட பலவகையான போதைப் பொருள்களின் தவறான நுகர்வு,
ஆ) நுண்ஊட்டச்சத்தும், சரிவிகிதத்தில் உணவும் உட்கொள்ளாமை. அதே நேரத்தில், நொறுக்குத்தீனி, மென்பானங்கள், கொழுப்பு, மாவுப் பொருள் ஆகியவை அதிகமாக உள்ள உணவுகள் ஆகியவற்றை தொடர்ந்து உட்கொள்ளுதல்,
இ) உடலுழைப்பு இல்லாமை, உடல் திறனில் லாமை, அதற்கான சூழல் இல்லாமை
ஈ) பல்வேறு வகையான சுற்றுச்சூழல் மாசு பாடு, தனிமனித சுத்தம், சுகாதாரம் அற்ற தன்மை, ஆகியவை.
மேலே கூறியவற்றினால் தனித்தனியாகவும், இணைந்தும் ஏற்படும் பல் வேறு ஆபத்துகளும், இன்றைய தலைமுறையை யும், அதன்விளைவாக சமூகத்தின் நல்வாழ் வினையும் இப்பொழுதே மிகக்கடுமையாக பாதிப்பதைக் காண முடிகிறது.
வளர்ந்துவரும் இந்தியா, நாளுக்கு நாள் மிக இளமையாகி வரும் இந்தியாவாகவும், மக்கள் தொகை பெருக்கம் உள்ள நாடாகவும் திகழ்கிறது, உலகிலேயே, மிக அதிகமாக இளைஞர்களையும், குழந்தைகளையும் கொண்ட நாடு இந்தியா.
இன்றைய இளைஞர்களிடமும், குழந்தைகளிடமும், மேற்கூறிய சுகாதார ஆபத்துகள் பற்றிய மேலதிக விழிப்புணர்வை ஏற்படுத்தி, உடனடி போர்க்கால நடவடிக்கைகளை மேற் கொள்ளத் தவறிவிட்டால், அடுத்த தலைமுறை இந்தியர்கள் சீர் செய்ய இயலாத நெருக்கடியை சந்திக்க நேரிடும். அதன் விளைவாக, அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் ஈடு செய்ய முடியாத பின்னடைவு ஏற்பட்டு, அவர்கள், முழுக்க முழுக்க, ஒரு நோயாளி சமூகமாக உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிலும், பொருளாதார காரணங்களுக்காக, நகர்ப்புரங்களுக்கு இடப்பெயர்ச்சி நடந்துவரும் தமிழகம் போன்ற மாநில மக்கள்தான், முதலில் இப்பிரச்சனைகளின் தீவிரத்தை சந்திக்க வேண்டிவரும்.
இன்றைக்கு, மருத்துவம் என்பது குடும்பங் களுக்கு மிக அதிகமாக பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும் ஒன்றாக நடைமுறையில் உள்ளது. இந்த உலகமயக்கப்பட்ட பொருளாதாரச் சூழ லில், நுகர்வு நோக்கியே மக்களை இட்டுச்செல் லும் விதமாக சந்தையின் எல்லா செயல் பாடுகளும் உள்ளன. இதனால், வரைமுறையற்ற நுகர்வுக் கலாச்சாரமும் சேர்ந்துகொள்ள, மக்கள், அதிலும் குறிப்பாக இளைஞர்கள், தங்கள் ஆரோக்கியம் சார்ந்த, தெளிவான சரியான முடிவுகளை எடுக்க முடியாத சூழலுக்குள் தள்ளப்பட்டு வருகிறார்கள் என்பதுதான் கவலையளிக்கக் கூடிய உண்மை.
எது நமது முடிவு, எது சந்தை நம் மீது திணிக் கும் முடிவு என்பது பற்றிய தெளிவின்மையே, இன்றைக்கு சமூகத்தின் பெரும்பாலானவர்களிடம் காணப்படும் தடுமாற்றம்.
இப்படிப்பட்ட பின்னணியில், இளைய சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டிய, அவர்களது ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய இந்த நான்கு வகையான காரணிகளைப் பற்றி அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில், சென் னையில், ஒரு ‘யூத் ஹெல்த் மேளா’, அதாவது, இளைஞர் ஆரோக்கியக் கொண்டாட்டம்’ நடந்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பல தன்னார்வ அமைப்பு களும், சமூக ஆர்வலர்களும், பொது மருத்துவர் களும் இணைந்து, இந்தியாவிலேயே முதன்முறை யாக, இப்படிப்பட்ட சிறப்பான, மக்களின் நலவாழ்வு சார்ந்த நிகழ்வு ஒன்றை திட்டமிட்டு நடத்த உள்ளார்கள் என்றால் மிகையில்லை.
முக்கியமாக, மது, சிகரெட், மெல்லும் புகை யிலை போன்ற போதைப்பொருட்கள், செயற்கை பானங்கள், நொறுக்குத் தீனி உணவுகள். பாதுகாக்கப்பட்ட, செயற்கை வேதிப்பொருட்கள் கொண்ட உணவுகள், செயற்கை உரம், நச்சு கலந்த விளைபொருள்கள், கலப்பட உணவுப் பொருள்கள், உடலுழைப்பு இல்லாமை, முறை யான உடற்பயிற்சி இல்லாமை, கழிப்பிடம், சமையலறை, உணவு விடுதிகள் ஆகியவற்றில் உள்ள அசுத்தம், மண், நீர், காற்று ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாசு, சாலை விபத்துக்கள் - இவை யெல்லாம் எப்படி மிக வேகமாகவும், ஆழமாக வும் நமது இன்றைய தலைமுறையினரின் அடிப் படை ஆரோக்கியத்தை அழிக்கும் ஆபத்துக் கொண்டது போன்றவை விளக்கி எடுத்துவைக்கப் படும். அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில், இவை பற்றி அறிந்து கொள்ள, சென்னை நகர இளைஞர்களுக்கும், பள்ளி கல்லூரி மாணவர்க ளுக்கும், இந்த மேளாவின் மூலம் ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதோடு, இவை எல்லாவற்றுக்கும் மாற்றான தீர்வுகளையும், இயற்கையை ஒட்டிய வாழ்வு முறையினாலும், தினசரி பழக்க வழக்கங்களை எளிமைப்படுத்திக் கொள்வதால் ஏற்படும் நன்மைகளையும் சுவாரஸ்யமான முறையில் முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மேளாவை ஒட்டி, கீழ்க்கண்டவற்றை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
1. ஆரோக்கியக் கண்காட்சி அரங்குகள், 2.பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையேயும், பொதுமக்களுக்கு இடையேயும் பல்வேறு விதமான போட்டிகள், 3. அரசுத்துறையினர், மருத்துவர்கள், பள்ளி கல்லூரித் தலைவர்கள் ஆகியோருக்காக கொள்கை தொடர்பான சிம்போசியம், 4. பொதுமக்களுக்கான சிறப்புப் பேச்சாளர்களின் உரைகள், பட்டிமன்றம் ஆகியவை, 5.. மேலும், முன்மாதிரியான, நலம் தரும் உணவு அரங்குகள், ஆரோக்கியமான கையேந்தி பவன்/ தெரு உணவு மாதிரிகள் போன்றவை.

மேலும், இந்த ஐந்து நாட்கள் நடக்கும் நிகழ்வில், நான்கு நாட்கள், மாலைப்பொழுதினில், பொது மக்களுக்களின் நன்மைக்காக, முக்கிய பிரபலங்கள் ஆரோக்கியம் தொடர்பான சொற் பொழிவு ஆற்ற உள்ளார்கள்.
இந்த மேளாவின் குறிக்கோள்கள் என்ன?
1. பள்ளி, கல்லூரிகளுக்கும், பொதுவாக இளைஞர்களுக்கும் ஆரோக்கிய வாழ்வு பற்றி வழிகாட்டுவதோடு, இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவர்களுடைய பங்களிப்பை வேண்டுதல்.
2. வாழ்வுமுறை தொடர்பான நோய்களைத் தடுப்பது குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
3. வாழ்வுமுறை தொடர்பான நோய்களைத் தடுப்பது குறித்து, பல்வேறு அறிவியல் அமைப்புகளுக்குள் தொடர்பு ஏற்படுத்தி, அவர்களை இன்னும் அதிகமாக ஈடுபடுத்துதல்.
4. இன்றைய, எதிர்கால, இளைஞர்களின் நலவாழ்வினை மேம்படுத்தும் விதமாக, அவசரக் கொள்கை மாற்றங்களையும், சுகாதாரத்துறையில் தேவைப்படும் குறுக்கீடுகளையும் எல்லாத்தளங்களிலும் தொடங்குதல்.
இது வணிக நோக்கு அறவே அற்று, தன்னார் வத்துடன் செய்ய முன்வந்திருக்கும் நிகழ்வாகும். சொல்லப் போனால், இந்த மேளாவின் மையக்கருத்துக்கு எதிர் திசையில் செயல்படும் பெரு வணிக நிறுவனங்களுடனும், லாப நோக்கில் மட்டுமே செயல்படும் தனியார் மருத்துவ நிறுவனங்களுடனும் சமரசம் செய்து கொள்ளாமல் இருக்க முடிவெடுத்து செயல்பட்டு வருகிறார்கள் இந்நிகழ்வு ஏற்பாட்டாளர்கள்.
இது, வணிக நோக்கம் அறவே இல்லாத தன்னார்வ நிகழ்வு. அதோடு, சமுகத்தின் எல்லாத் தளங்களிலும் உள்ள மக்களின் நல வாழ்விலும், நோய்த்தடுப்பு மருத்துவத்திலும் அக்கறையும் ஆர்வமும் கொண்ட அமைப்புகள், ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து, சமூகத்தின் அணுகுமுறை மீதும், அரசின் கொள்கைக்கோட்பாடுகள், செயல்பாடுகள் ஆகியவற்றின் மீதும், போதிய அழுத்தம் ஏற்படுத்துவதற்கு, இந்த மேளா ஒரு நல்ல துவக்கமாக இருக்கும் என்று நம்ப இடமுண்டு. பின்வரும் காலங்களில், மக்கள் ஆரோக்கியம் தொடர்பாக ஒரு இயக்கமாக மாறுவதற்கான வாய்ப்பும் இந்த மேளா மூலம் ஏற்படும் சாத்தியக்கூறுகள் உண்டு.
இந்த மேளாவானது, வருகிற ஃபிப்ரவரி மாதம், 22 முதல் 26 வரை, ஐந்து நாட்களுக்கு, சென்னை வள்ளுவர் கோட்ட வளாகத்தில் நடை பெற உள்ளது. இந்த நிகழ்வில், மாணவர்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கு பெற்று, கண்டுகளித்து பயன்பெற வேண்டும் என்பதே, இந்த நல்ல நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் விருப்பம்.
இந்த மேளாவை வெற்றிகரமாக நடத்து வதற்காக இணைந்துள்ளவர்கள்:
இணைந்துள்ளவர்கள் (Partners):
அடையாறு புற்றுநோய் மையம் (CI)
இந்திய நுகர்வோர் சங்கம் (CAI)
சூழல் அறிவியல் ஆய்வு நிறுவனம் (ERF)
இந்திய பல்மருத்துவர்கள் சங்கம் (IDA), சென்னை
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (MHAA)
சென்னை மருத்துவக்கல்லூரி, ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை (MMC & RGGGH)
மேரி அன்னி அறக்கட்டளை (MACT)
பாடம் - குன்றா வளர்ச்சிக்கான தமிழ் மாத இதழ்
சாய் கிரியேசன்ஸ்
ஸ்பார்க் மையம் (SPARRC)
தமிழ்நாடு அரசு பல்மருத்துவமனை மற்றும் கல்லூரி (TNGDC&H)
தமிழ்நாடு தன்னார்வ சுகாதார சங்கம் (TNVHA)
உதவும் உள்ளங்கள் (UU)
நிகழ்வுச் செயலகம்:
அடையாறு புற்றுநோய் மையம்
எண்.38, சர்தார் படேல் சாலை, அடையாறு,
சென்னை - 36. அலைபேசி: 7299960615
E&mail&secretary@youthhealthmela.in
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் YOUTH HEALTH MELA CELEBRATE LIFE இம்மாதம் 22 TO 26.
Posted on by Unknown with 2 comments

Subscribe to:
Posts (Atom)