சென்ற ஃபெப்ருவரி ( 2012 ) மூன்றாவது வாரத்தில், ஐந்து நாட்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இளைஞர் ஆரோக்கியத் திருவிழா நிகழ்ந்தது.
படத்தில் காணப்படும், 74 வயது முதியவர் , இயற்கை வேளாண் அறிவியலாளர்
டாக்டர் . கோ. நம்மாழ்வார் அவர்களுக்கு,
யூத் ஹெல்த் சேம்பியன்
எனும் விருது வழங்கப் பெற்றது.
“இயற்கை வேளாண்மையின் அதிமுக்கியத்துவம் குறித்தும், செயற்கை உரங்கள், இரசாயன பூச்சிக் கொல்லி உட்பட பல ஈடு செய்ய முடியாத தவறான் வேளாண் கொள்கைகளாலும், செயல்பாடுகளாலும்,
இன்றைய விளைவுப் பொருட்கள் படிபடியாக நச்சாகி வருவதன் ஆபத்து குறித்தும், எல்லாத் தளங்களிலும் தொடர்ந்து பேசியும், எழுதியும், இடைவிடாது செயல்பட்டும் வருகின்றவர், திரு. கோ.நம்மாழ்வார்.
இன்றைக்கு இயற்கை வேளாண்மையிலும், பாரம்பரிய வேளாண்மை முறைம்கைகளைப் பாதுகாப்பதிலும், கணிசமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றார்கள் என்றால் அது முழுக்க முழுக்க திரு.நம்மாழ்வார் தளராது ஏற்படுத்திய தாக்கத்தினால் மட்டுமேதான் என்று கூறினால் அதில் சற்றும் மிகையில்லை.
இன்றைய காலக்கட்டத்தில் இவ்வாறு மக்களிடமும், குறிப்பாக இளைஞர்களிடமும் உண்மையான அக்கறையுடன் உரையாடி , தாக்கத்தை ஏற்படுத்தும் ஆளுமையுடையோர் அரிதிலும் அரிது. திரு நம்மாழ்வார், மண்ணை மட்டுமல்ல, சந்திக்கும் ஒவ்வொரு மனதையும் பண்படுத்தும் பண்பாளர்.
இயற்கையின் மீதும் வருங்கால சந்ததியின் மீதும் பேரன்பு கொண்டு, அறிவியல் பார்வையுடன், குன்றா நீடித்த வளர்ச்சியை மையப்படுத்தும் விதமாகவும், இளைய தலைமுறையைப் பாதுகாக்கும் நூக்குடனும் தொடர்ந்து செயல்பட்டு வருபவர் “
இதுதான் திரு.நம்மாழ்வாருக்கு விருது நிகழ்ச்சியில் வாசித்தளிக்கப்பட்ட பாராட்டுப் பத்திரம். சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை ஐக்கியப்படுத்தி, ஐந்து நாட்கள், எந்த ஒரு அரசியல் கட்சியின் ஆதரவும் இன்றி நிகழ்வினை ஏற்பாடு செய்ததில் மையப்புள்ளியாகத் திகழ்ந்தவர்,
0 comments:
Post a Comment
Kindly post a comment.