Tuesday, February 21, 2012

செங்கல்பட்டில் தண்ணீர் கலக்காத பால் பால் தரும் முகுந்தன் -நா.கண்ணன்

2012/2/21 N. Kannan
வளர வேண்டிய இந்தியாவின் மிகப்பெரிய தடங்கல் மனத்தளவிலானது. நானூறு வருடங்களுக்கும் மேலான அடிமைப்படுத்தல் இந்தியரை நிரந்தக் கூலிகளாக ஆக்கிவிட்டது. எப்போதும் கையேந்தும் ஒரு துர்பாக்கிய நிலை. மனத்தளவில்தான் சொல்கிறேன். இவனுக்கு தன்மானமே இல்லாமல் போய்விட்டது. வெளிநாட்டுக்காரர் சொன்னால் ஒசத்தி. நம் நாட்டு சரக்கெல்லாம் தாழ்ச்சி!

நண்பர் முகுந்தன் சொன்னார் வேதத்தில் 700 வகையான பசுக்கள் பற்றிய பேச்சு உள்ளதாம். ஆனால் நாம் ஸெர்சி மாடுகளை ஐரோப்பாவிலிருந்தும், பிரேசில் மாடுகளையும் இங்கு கொண்டு வந்து வெண்மைப் புரட்சி செய்ய முயல்கிறோம். இந்தியப் பசுக்களில் நிரம்ப ஆய்வுகள் செய்ய வேண்டியுள்ளதை முகுந்தன் என்க்குக் காட்டினார்.
Inline image 1

சிந்து சமவெளி முத்திரைகளில் காட்டப்படும் பசுக்கள்.

Inline image 2
நகரத்தை விட்டு அகன்றால் இந்தியா ஓர் சொர்க்கம்

Inline image 3
ராஜஸ்தான் மாடுகள் மடிக்கு 7-12 லிட்டர் கறக்கிறதாம்.

Inline image 1
இன்னொரு வகைப் பசுவினம்

Inline image 2

மாடுத்தீவனம்

Inline image 3

மாட்டுப்பண்ணை

Inline image 4
மண்ணாங்கட்டி என்று ஒரு சிப்பந்தியின் பெயர்!

இந்தியாவில் இப்போது எல்லோரிடமும் செல்போன் இருக்கிறது. அது பெரிய வசதிதான். குறிப்பாக வயல்/காடு எனும் வேலை பார்க்கும் போது!

முகுந்தன் தண்ணீர் கலக்காத பால் தருகிறார், பன்னீர் தருகிறார். விலை கொஞ்சம் அதிகம்தான். ஆனால் செங்கல்பட்டு மக்கள் விரும்பி வாங்குகின்றனர். முகுந்தன் படித்தவர். வித்தியாசமான சிந்தனைப் போக்கு உள்ளவர். தரம் என்பது பற்றிய விழிப்பு உடையவர். ஏமாற்றித்தான் காசு சேகரிக்க வேண்டுமென்ற எண்ணம் இல்லாதவர். நேரடியாகப் பேசுபவர். தைர்யசாலி. முகுந்தன் போன்றோர் பெருக வேண்டும். தேசாபிமானமும், நேர்மையுமுடைய இந்தியாதான் நம் முன்னோர் கனவு கண்டது!

நா.கண்ணன்



--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

0 comments:

Post a Comment

Kindly post a comment.