Wednesday, February 15, 2012

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் YOUTH HEALTH MELA CELEBRATE LIFE இம்மாதம் 22 TO 26.







வாழ்வின்
‘உண்மையான’ கொண்டாட்டத்தை அனுபவிக்கலாம்!வாருங்கள் வள்ளுவர் கோட்டத்திற்கு. பிப்ரவரி 22 முதல் 26 வரை. இலவசம்.

பொருளாதார வளர்ச்சி கண்டுவரும் இந்தியாவை, பலரும் சீனா, பிரேசில் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். ஆனால், நம்மால், இந்த நாடுகளின் முன்னேற்றத்தில் பாதியைக் கூட எட்டிப்பிடிக்க முடியுமா என்பது சந்தேகமே!

ஏனென்றால், நம் முன்னால் உள்ள சுகாதாரப் பிரச்சனைகள் தான். பெரும்பாலான வளர்ந்த நாடுகள், வாழ்க்கை முறை நோய்களை மட்டுமே சந்தித்து வருகின்றன. மற்ற வளர்ந்த நாடுகளிலும் இதே பிரச்சனை இருந்தாலும், வறுமை ஒழிப்பும், ஓரளவு சமத்துவமும் அங்கெல்லாம் ஏற்பட்டு, காலம் காலமான தொற்று நோய் பிரச்சனைகள் சமாளிக்கப்பட்டு விட்டன. மேலும் அங்கு, மக்கள் தொகையும் கட்டுக்குள் உள்ளது.

ஆனால், வளர்ந்து வரும் மற்ற நாடுகளைக் காட்டிலும், மிக மோசமான விதத்தில், இரண்டு விதமான சுகாதாரப் பிரச்சனைகளின் அழுத்தத்தையும், அதாவது ‘இரட்டை நோய்ப்பளு’ எனும் மிகப்பெரிய சிக்கலுக்குள் நம் நாடு அகப்பட்டிருக்கிறது.


மிக வெகு காலமாகவே, ஊட்டச்சத்துக் குறை பாடு, இரத்தசோகை, மலேரியா, பேதிநோய், காசநோய், பாலியல் நோய்கள், சமீப காலமாக, மிகப் பெரிய அளவில் எச் ஐ வி எய்ட்ஸ் ஆகியவை இந்திய மக்களின் நலவாழ்விற்கு மிகப் பெரிய தடைக்கற்களாக இருந்து வருகின் றன. இந்நோய்களுக்கு, பெரும்பாலும், நம் சமூ கத்தில் நிலவும் பொருளாதார சமூக ஏற்றத் தாழ்வு களும், கல்லாமையும், அவற்றால் ஏற்பட்டுள்ள மூட நம்பிக்கைகளும் முதன்மைக் காரணங்கள். சுருக்கமாகச் சொல்வதானால், இவற்றை ‘ஏழ்மை யினால் ஏற்படும் சுகாதாரப் பிரச்சனைகள்’ என்று கூறலாம். இவற்றில் பல ‘தொற்றும் நோய்கள்’.

இந்நிலையில், இந்தியாவில் நாளுக்கு நாள் எண்ணிக்கையில் பெருகிவரும் நடுத்தரவர்க்க மக்கள், மற்ற மேலை நாட்டு மக்கள் சந்தித்து வந்ததை விட மிகத் தீவிரமான அளவில், வாழ்க்கைமுறை நோய்களால் பீடிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த வாழ்க்கைமுறை நோய்களில் பெரும்பாலானவை, இதய நோய் மற்றும் இதய நாள பாதிப்புகள், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், புற்று நோய், சர்க்கரை நோய், உணவுக்குழாய் நோய்கள், கல்லீரல், சிறுநீரக்ப் பாதிப்புகள், ஆஸ்த்துமா, பல்வேறு விதமான மன அழுத்த நோய்கள் போன்ற ‘தொற்றா நோய் களாகும்’.

சாலை விபத்துக்களால் ஏற்படும் இறப்புகளும், உடல் பாதிப்புகளும் கூட கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்துவருகின்றன. இவற்றிற்கு, வேகமான பொருளாதார வளர்ச்சியின் பக்க விளைவாக ஏற்பட்டுவரும் அதீத நுகர்வுக் கலாச்சாரமும், அதை ஊக்குவிக்கும் சந்தைப் பொருளாதாரமும், பொருளாதார வளர்ச்சி ஏற்பட் டிருந்தாலும், மனித மேம்பாட்டில் இந்தியா பின் தங்கியிருப்பதும் மிக முதன்மையான காரணிகள்.

35 முதல் 64 வயதிலான மக்களிடையே, “நிறைவாக செயல்படும் ஆண்டுகள்’ எனும் அடிப்படையில், 9.2 மில்லியன் ஆண்டுகளை, இந்தியா 2005ம் ஆண்டு மட்டுமே இழந்துள்ளது.

தொற்றாத நோய்களும், வாழ்க்கைமுறை நோய்களும் இப்படியே தொடர்ந்தால், 2030ம் ஆண்டில், இந்த மனிதவள உற்பத்தி இழப்பானது, இரண்டு மடங்காகிவிடும் என்று கணிக்கப் படுகிறது. இந்த இழப்பு, இந்தியாவை விட மூன்றில் ஒரு பங்கு குறைவான மக்கள்தொகை கொண்ட அமெரிக்காவைக் காட்டிலும், 9.4 பங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த வகையான சுகாதாரப் பிரச்சனைகளுக் கான காரணிகளை நான்கு வகையாகப் பிரித்துப் பார்த்து, அணுக வேண்டியுள்ளது.

அவை முறையே,

அ) மது, புகையிலை உட்பட பலவகையான போதைப் பொருள்களின் தவறான நுகர்வு,

ஆ) நுண்ஊட்டச்சத்தும், சரிவிகிதத்தில் உணவும் உட்கொள்ளாமை. அதே நேரத்தில், நொறுக்குத்தீனி, மென்பானங்கள், கொழுப்பு, மாவுப் பொருள் ஆகியவை அதிகமாக உள்ள உணவுகள் ஆகியவற்றை தொடர்ந்து உட்கொள்ளுதல்,

இ) உடலுழைப்பு இல்லாமை, உடல் திறனில் லாமை, அதற்கான சூழல் இல்லாமை

ஈ) பல்வேறு வகையான சுற்றுச்சூழல் மாசு பாடு, தனிமனித சுத்தம், சுகாதாரம் அற்ற தன்மை, ஆகியவை.

மேலே கூறியவற்றினால் தனித்தனியாகவும், இணைந்தும் ஏற்படும் பல் வேறு ஆபத்துகளும், இன்றைய தலைமுறையை யும், அதன்விளைவாக சமூகத்தின் நல்வாழ் வினையும் இப்பொழுதே மிகக்கடுமையாக பாதிப்பதைக் காண முடிகிறது.

வளர்ந்துவரும் இந்தியா, நாளுக்கு நாள் மிக இளமையாகி வரும் இந்தியாவாகவும், மக்கள் தொகை பெருக்கம் உள்ள நாடாகவும் திகழ்கிறது, உலகிலேயே, மிக அதிகமாக இளைஞர்களையும், குழந்தைகளையும் கொண்ட நாடு இந்தியா.

இன்றைய இளைஞர்களிடமும், குழந்தைகளிடமும், மேற்கூறிய சுகாதார ஆபத்துகள் பற்றிய மேலதிக விழிப்புணர்வை ஏற்படுத்தி, உடனடி போர்க்கால நடவடிக்கைகளை மேற் கொள்ளத் தவறிவிட்டால், அடுத்த தலைமுறை இந்தியர்கள் சீர் செய்ய இயலாத நெருக்கடியை சந்திக்க நேரிடும். அதன் விளைவாக, அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் ஈடு செய்ய முடியாத பின்னடைவு ஏற்பட்டு, அவர்கள், முழுக்க முழுக்க, ஒரு நோயாளி சமூகமாக உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



அதிலும், பொருளாதார காரணங்களுக்காக, நகர்ப்புரங்களுக்கு இடப்பெயர்ச்சி நடந்துவரும் தமிழகம் போன்ற மாநில மக்கள்தான், முதலில் இப்பிரச்சனைகளின் தீவிரத்தை சந்திக்க வேண்டிவரும்.

இன்றைக்கு, மருத்துவம் என்பது குடும்பங் களுக்கு மிக அதிகமாக பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும் ஒன்றாக நடைமுறையில் உள்ளது. இந்த உலகமயக்கப்பட்ட பொருளாதாரச் சூழ லில், நுகர்வு நோக்கியே மக்களை இட்டுச்செல் லும் விதமாக சந்தையின் எல்லா செயல் பாடுகளும் உள்ளன. இதனால், வரைமுறையற்ற நுகர்வுக் கலாச்சாரமும் சேர்ந்துகொள்ள, மக்கள், அதிலும் குறிப்பாக இளைஞர்கள், தங்கள் ஆரோக்கியம் சார்ந்த, தெளிவான சரியான முடிவுகளை எடுக்க முடியாத சூழலுக்குள் தள்ளப்பட்டு வருகிறார்கள் என்பதுதான் கவலையளிக்கக் கூடிய உண்மை.



எது நமது முடிவு, எது சந்தை நம் மீது திணிக் கும் முடிவு என்பது பற்றிய தெளிவின்மையே, இன்றைக்கு சமூகத்தின் பெரும்பாலானவர்களிடம் காணப்படும் தடுமாற்றம்.

இப்படிப்பட்ட பின்னணியில், இளைய சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டிய, அவர்களது ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய இந்த நான்கு வகையான காரணிகளைப் பற்றி அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில், சென் னையில், ஒரு ‘யூத் ஹெல்த் மேளா’, அதாவது, இளைஞர் ஆரோக்கியக் கொண்டாட்டம்’ நடந்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பல தன்னார்வ அமைப்பு களும், சமூக ஆர்வலர்களும், பொது மருத்துவர் களும் இணைந்து, இந்தியாவிலேயே முதன்முறை யாக, இப்படிப்பட்ட சிறப்பான, மக்களின் நலவாழ்வு சார்ந்த நிகழ்வு ஒன்றை திட்டமிட்டு நடத்த உள்ளார்கள் என்றால் மிகையில்லை.

முக்கியமாக, மது, சிகரெட், மெல்லும் புகை யிலை போன்ற போதைப்பொருட்கள், செயற்கை பானங்கள், நொறுக்குத் தீனி உணவுகள். பாதுகாக்கப்பட்ட, செயற்கை வேதிப்பொருட்கள் கொண்ட உணவுகள், செயற்கை உரம், நச்சு கலந்த விளைபொருள்கள், கலப்பட உணவுப் பொருள்கள், உடலுழைப்பு இல்லாமை, முறை யான உடற்பயிற்சி இல்லாமை, கழிப்பிடம், சமையலறை, உணவு விடுதிகள் ஆகியவற்றில் உள்ள அசுத்தம், மண், நீர், காற்று ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாசு, சாலை விபத்துக்கள் - இவை யெல்லாம் எப்படி மிக வேகமாகவும், ஆழமாக வும் நமது இன்றைய தலைமுறையினரின் அடிப் படை ஆரோக்கியத்தை அழிக்கும் ஆபத்துக் கொண்டது போன்றவை விளக்கி எடுத்துவைக்கப் படும். அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில், இவை பற்றி அறிந்து கொள்ள, சென்னை நகர இளைஞர்களுக்கும், பள்ளி கல்லூரி மாணவர்க ளுக்கும், இந்த மேளாவின் மூலம் ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதோடு, இவை எல்லாவற்றுக்கும் மாற்றான தீர்வுகளையும், இயற்கையை ஒட்டிய வாழ்வு முறையினாலும், தினசரி பழக்க வழக்கங்களை எளிமைப்படுத்திக் கொள்வதால் ஏற்படும் நன்மைகளையும் சுவாரஸ்யமான முறையில் முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.



இந்த மேளாவை ஒட்டி, கீழ்க்கண்டவற்றை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

1. ஆரோக்கியக் கண்காட்சி அரங்குகள், 2.பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையேயும், பொதுமக்களுக்கு இடையேயும் பல்வேறு விதமான போட்டிகள், 3. அரசுத்துறையினர், மருத்துவர்கள், பள்ளி கல்லூரித் தலைவர்கள் ஆகியோருக்காக கொள்கை தொடர்பான சிம்போசியம், 4. பொதுமக்களுக்கான சிறப்புப் பேச்சாளர்களின் உரைகள், பட்டிமன்றம் ஆகியவை, 5.. மேலும், முன்மாதிரியான, நலம் தரும் உணவு அரங்குகள், ஆரோக்கியமான கையேந்தி பவன்/ தெரு உணவு மாதிரிகள் போன்றவை.










மேலும், இந்த ஐந்து நாட்கள் நடக்கும் நிகழ்வில், நான்கு நாட்கள், மாலைப்பொழுதினில், பொது மக்களுக்களின் நன்மைக்காக, முக்கிய பிரபலங்கள் ஆரோக்கியம் தொடர்பான சொற் பொழிவு ஆற்ற உள்ளார்கள்.


இந்த மேளாவின் குறிக்கோள்கள் என்ன?

1. பள்ளி, கல்லூரிகளுக்கும், பொதுவாக இளைஞர்களுக்கும் ஆரோக்கிய வாழ்வு பற்றி வழிகாட்டுவதோடு, இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவர்களுடைய பங்களிப்பை வேண்டுதல்.

2. வாழ்வுமுறை தொடர்பான நோய்களைத் தடுப்பது குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

3. வாழ்வுமுறை தொடர்பான நோய்களைத் தடுப்பது குறித்து, பல்வேறு அறிவியல் அமைப்புகளுக்குள் தொடர்பு ஏற்படுத்தி, அவர்களை இன்னும் அதிகமாக ஈடுபடுத்துதல்.

4. இன்றைய, எதிர்கால, இளைஞர்களின் நலவாழ்வினை மேம்படுத்தும் விதமாக, அவசரக் கொள்கை மாற்றங்களையும், சுகாதாரத்துறையில் தேவைப்படும் குறுக்கீடுகளையும் எல்லாத்தளங்களிலும் தொடங்குதல்.

இது வணிக நோக்கு அறவே அற்று, தன்னார் வத்துடன் செய்ய முன்வந்திருக்கும் நிகழ்வாகும். சொல்லப் போனால், இந்த மேளாவின் மையக்கருத்துக்கு எதிர் திசையில் செயல்படும் பெரு வணிக நிறுவனங்களுடனும், லாப நோக்கில் மட்டுமே செயல்படும் தனியார் மருத்துவ நிறுவனங்களுடனும் சமரசம் செய்து கொள்ளாமல் இருக்க முடிவெடுத்து செயல்பட்டு வருகிறார்கள் இந்நிகழ்வு ஏற்பாட்டாளர்கள்.



இது, வணிக நோக்கம் அறவே இல்லாத தன்னார்வ நிகழ்வு. அதோடு, சமுகத்தின் எல்லாத் தளங்களிலும் உள்ள மக்களின் நல வாழ்விலும், நோய்த்தடுப்பு மருத்துவத்திலும் அக்கறையும் ஆர்வமும் கொண்ட அமைப்புகள், ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து, சமூகத்தின் அணுகுமுறை மீதும், அரசின் கொள்கைக்கோட்பாடுகள், செயல்பாடுகள் ஆகியவற்றின் மீதும், போதிய அழுத்தம் ஏற்படுத்துவதற்கு, இந்த மேளா ஒரு நல்ல துவக்கமாக இருக்கும் என்று நம்ப இடமுண்டு. பின்வரும் காலங்களில், மக்கள் ஆரோக்கியம் தொடர்பாக ஒரு இயக்கமாக மாறுவதற்கான வாய்ப்பும் இந்த மேளா மூலம் ஏற்படும் சாத்தியக்கூறுகள் உண்டு.

இந்த மேளாவானது, வருகிற ஃபிப்ரவரி மாதம், 22 முதல் 26 வரை, ஐந்து நாட்களுக்கு, சென்னை வள்ளுவர் கோட்ட வளாகத்தில் நடை பெற உள்ளது. இந்த நிகழ்வில், மாணவர்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கு பெற்று, கண்டுகளித்து பயன்பெற வேண்டும் என்பதே, இந்த நல்ல நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் விருப்பம்.



இந்த மேளாவை வெற்றிகரமாக நடத்து வதற்காக இணைந்துள்ளவர்கள்:

இணைந்துள்ளவர்கள் (Partners):

அடையாறு புற்றுநோய் மையம் (CI)

இந்திய நுகர்வோர் சங்கம் (CAI)

சூழல் அறிவியல் ஆய்வு நிறுவனம் (ERF)

இந்திய பல்மருத்துவர்கள் சங்கம் (IDA), சென்னை

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (MHAA)

சென்னை மருத்துவக்கல்லூரி, ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை (MMC & RGGGH)

மேரி அன்னி அறக்கட்டளை (MACT)

பாடம் - குன்றா வளர்ச்சிக்கான தமிழ் மாத இதழ்

சாய் கிரியேசன்ஸ்

ஸ்பார்க் மையம் (SPARRC)

தமிழ்நாடு அரசு பல்மருத்துவமனை மற்றும் கல்லூரி (TNGDC&H)

தமிழ்நாடு தன்னார்வ சுகாதார சங்கம் (TNVHA)

உதவும் உள்ளங்கள் (UU)

நிகழ்வுச் செயலகம்:

அடையாறு புற்றுநோய் மையம்

எண்.38, சர்தார் படேல் சாலை, அடையாறு,

சென்னை - 36. அலைபேசி: 7299960615

E&mail&secretary@youthhealthmela.in

2 comments:

  1. ] Comment: "யூத் மேளா!"
    Inbox
    x
    Vallamai Editor editor@vallamai.com

    05:30 (4 hours ago)

    to me
    New comment on your post "யூத் மேளா!"
    Author : இன்னம்பூரான் (IP: 82.30.106.173 , cpc2-pmth6-0-0-cust684.6-1.cable.virginmedia.com)
    E-mail : innamburan@gmail.comn
    URL : http://olitamizh.com
    Whois : http://whois.arin.net/rest/ip/82.30.106.173
    Comment:
    மேளாவுக்கு என் வாழ்த்துக்கள்.

    You can see all comments on this post here:
    http://www.vallamai.com/news-cat/16385/#comments

    Permalink: http://www.vallamai.com/news-cat/16385/#comment-3746
    Trash it: http://www.vallamai.com/wp-admin/comment.php?action=trash&c=3746
    Spam it: http://www.vallamai.com/wp-admin/comment.php?action=spam&c=3746

    ReplyDelete
  2. Vallamai Editor editor@vallamai.com

    09:54 (11 minutes ago)

    to me
    New comment on your post "யூத் மேளா!"
    Author : sankaranarayanan balasubramanian (IP: 117.193.247.139 , 117.193.247.139)
    E-mail : sbalu.geetha@gmail.com
    URL :
    Whois : http://whois.arin.net/rest/ip/117.193.247.139
    Comment:
    அனைவருக்கும் உபயோகமான செய்தி செய்தியினை பகிர்ந்தமைக்கு நன்றி.மேளா
    சிறக்க வாழ்த்துக்கள்...!

    You can see all comments on this post here:
    http://www.vallamai.com/news-cat/16385/#comments

    Permalink: http://www.vallamai.com/news-cat/16385/#comment-3748
    Trash it: http://www.vallamai.com/wp-admin/comment.php?action=trash&c=3748
    Spam it: http://www.vallamai.com/wp-admin/comment.php?action=spam&c=3748

    ReplyDelete

Kindly post a comment.