Wednesday, February 15, 2012

சாராய சுனாமி, சத்தமில்லாத மரணங்கள் உள்ளிட்ட 5 குறும்படங்கள் !

இந்த நான்கு டிவிடிக்களும் ஐந்து உண்மைக் கதைகளச் சொல்லுகின்றன. இவை ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டியவை. எத்தனையோ முறை இவற்றைப் பற்றி எழுதிவிட்டேன். இருந்தாலும் மீண்டும் எழுதுகின்றேன்.

இவற்றைப் பார்ப்பவர்களுக்குக் குடிக்கத் தோன்றாது. டாஸ்மாக் சமாச்சாரங்களைத்தான். சாராய சுனாமி அந்தப் பாடத்தக் கற்றுத் தரும்.

சத்தமில்லாத மரணங்கள் என்றொரு படம். அதனைப் பார்த்தவர்கள் பீடி, சிகரட் பக்கம் போக மாட்டார்கள். புகைப்பவர்களைக் கண்டால் காத தூரம் (காதம்-10மைல் பழைய கதைகளில் வரும்). போதைப் பொருட்களை நாட மாட்டார்கள்.

அவற்றை பயன்படுத்தியவர்கள் அதற்கான விலையை வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் எதிர் கொள்ளத்தான் வேண்டும். இப்படத்தைப் பார்த்துத் திருந்தி விட்டால் படப்போகும் துன்பங்களின் அளவு குறையும்.

அந்த அளவிற்கேனும் தன்னையும் காத்துக்கொண்டு, குடும்பத்தினரையும் எஞ்சிய நாட்களுக்கேனும் மகிழ்ச்சிப்படுத்தலாம் அல்லவா?

தாய்ப்பாலையும் நஞ்சாக்கும் பிளாஸ்டிக் இன்னொரு படம். விவரிக்கத்தேவை இல்லை.பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள்.

கடைகளுக்குப் போகும் பொழுது துணிப்பை அவசியம் கையில் இருக்கும். பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டிருக்கும் பானங்களைக் கண்ணால் கூடப் பார்க்க மாட்டார்கள். பிளாச்டிக் குறித்து ஆய்வுக் கட்டுரை எழுதி முனைவர் பட்டமே பெற்று விடலாம்.

பிளாஸ்டிக்கில் இவ்வளவு தகவல்களா என்று வியப்படையச் செய்யும்.வாழ்க்கை முறைகளையே தலைகீழாகப் புரட்டிவிடும்.

ம்வுனத்தைத் தகர்ப்போம் மற்றொரு படம். இது பாலியல் விவகாரம். பன்முகத்திறன் படைத்த ஞாநி பத்திரிக்கைகளில் எழுதியபோது முகஞ்சுழித்தனர் பலர். ஆனால் அவர்களின் அந்தரங்கங்கள் அசிங்கமானவவை.

சின்னஞ் சிறுமிகளையே விட்டு வைக்காதவர்கள். விதவைகள் வேலைக்கு வந்தால் தொட்டு விடத் துடிப்பவர்கள். விதவை இல்லை என்பதைக் காட்டினாலாவது பாதுகாப்புக் கிடைக்கும் என்று பொட்டு வைத்து வந்தால் அதற்கும் ஆயிரம் பேசுவார்கள். பொட்டின் நிறம் கருப்பாக இருந்தாலும் சரி; கலராக இருந்தாலும் சரி.

ஓஇந்த லட்சணத்தில் ஓரினச்சேர்க்கை என்ற கூத்து வேறு. திருநங்கைகள் திருந்தி வந்தாலும் விட்டு வைக்க மாட்டார்கள்.எல்லோருமே பாதுகாப்பாக இருக்கப் பாடம் புகட்டுகின்றது இப்படம்.

பெற்றால்தான் பிள்ளயா? இன்னொரு படம். அநாதைச் சிறுவர்கள் காப்பகம் சென்று பார்த்தால் தெரியும் வேதனை. சிங்கிள் பேரண்ட் குழந்தைகள், பெற்றோர் உற்றார், உறவினர் யாருமற்றவர்கள், தாத்தா-பாட்டி-மாமா யாராலாவது வளர்க்கப்படும் குழந்தைகள், தவறான உறவால் பூமியை வந்தடைந்து தூக்கி எறியப்பட்டவர்கள், கொத்தடிமையிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள், வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

இதோடு விவாகரத்துப் பெற்ற பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டோர் பட்டியலும் நீண்டு கொண்டே போகின்றது.அவர்களில் ஒருவரைத் ததெடுக்கலாம், அடைக்கலம் தரலாம், செலவு தொகையினை ஏற்றுக் கொள்ளலாம் எல்லாம் சொல்லித் த்ருகின்றது. இந்தப் படத்தை பார்த்தவர்கள் பண உதவி எதுவும் செய்யாவிட்டாலும் , ஓய்வு நேரங்களை அவர்களுடன் சில மணி நேரங்கள் செலவிட்டாலே பெரிய விஷ்யம்.

ஐந்து படங்களின் விலை ரூபாய் 75/-தான். ஒரு சினிமாடிக்கட்டுக்கு ஆகும் செலவினை விடக் குறைவுதான். வாங்கி வைத்தால் தப்பில்லை. வீட்டில் எல்லோருமே பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் நிறைய உள்ளன.
பார்த்தாலும் தப்பில்லை. பிறருக்குப் பரிசளித்தாலும் தப்பில்லை.

வேறு என்ன சிறப்பாகச் சொல்லிவிட முடியும்? இந்த டிவிடிக்களை வாங்கியோ / ஓசியிலோ பார்த்து விடாதீர்கள் தப்புக்கள் செய்ய முடியாமற் போய்விடும் நிலைமை ஏற்பட்டு விடுவதால்!


தமிழகத்தில் பல இடங்களில் செயல்படும் ஆல்ஹாலிக் அனானிமஸ் (A A) குழுக்களத் தொடர்பு கொண்டால் குடிப்பழக்கத்திலிருந்து மீளும் வாய்ப்பு இருக்கின்றது. மீண்டவர்கள் அனுபவங்கள் பரிமாறிக் கொள்ளப்படும்.இரகசியமாகவே இருக்கும்

விரும்பியோர் தொடர்பு கொள்ளத் தொலை பேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன, ஊர்ப்பெயருடன். விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம். பாடத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதில் உறுப்பினரானால் ஆல் அனான் உதவி கிடைக்கும். குடி நோயாளிகளின் குடும்பத்தினருக்கான தன்னார்வக் குழு. சென்னை தொடர்பு எண் 8939183594



0 comments:

Post a Comment

Kindly post a comment.