Tuesday, February 14, 2012

சீனாவின் சித்தர்கள் எழுவரும் முதல்வரின் கவிதை ஒன்றும்!


தமிழகத்தில் பதினெண் சித்தர்கள் சர்வ வல்லமை படைத்தவர்களாகக் கருதப்படுகின்றனர். அதே போன்று சீனத்தில் எழுவரைக் குறிப்பிடுகின்றனர். அவர்கள் மக்கள் நல் வாழ்வுக்கான வழி வகைளைக் கண்டறியத் தங்களை வருத்திக் கொண்டனர். மகிழ்ச்சியோடு வாழத் தாம் கண்டறிந்தவற்றைப் போதித்தனர்.

RUAN JI, XI KANG, SHAN TAO, LIU LING, RUAN XIAN, XIANG XIU, WANG.ராங்

ஆகிய எழுவர் ஆவர்.. இந்த எழுவரும் மூங்கில் காட்டு ஞானிகள் என்று

அழைக்கப் படுகின்றனர்.

இதயத்தின் ஓசை--RUAN JI


தூக்கமற்ற நடுநிசியில்
துள்ளி எழுந்தேன் யாழினை மீட்டிட்
ஜன்னல்திரை வழியே பார்வையில் சந்திரன்
வண்டுகள் இங்குமங்கும் ப்றந்து கயிறுபோல் கட்டின உடலை
காட்டு வாத்தின் அழுகை முழங்கின
முரசமாய்
பறவைகளின் சத்தம் எதிரொலிக்கின்றது சங்கொலியாக மரங்களில் மோதி
புகையாய் வட்டம் என்னைச் சூழ்ந்து
ஊடுருவிப் பரவின தனிமைத் துயரிலும்!


RUAN JI மூங்கில் காட்டு சீனச் சித்தர்கள் எழுவருள் முதவராகக் கருதிப் போற்றப்படுகின்றார். FROM MY HEART EXPRESS என்பதும் அவர் எழுதிய நூல்களில் ஒன்று. அதில் உள்ள முதல் கவிதையைத்தான் மேலே காண்கின்றோம்.

உதவியவர்:- Micheal bullock.


மூங்கில் காட்டுச் சித்தர்களின் நினைவுத்தூண், மூங்ல் காடு, மூங்கில் காடுகளில் சித்தர்கள், சித்தர்களின் படங்கள், முதல் சித்தரின் தோற்றம்.

தெய்வத் தமிழ் வளர்க்கும் சைவ திருமடங்களில் முதலாவதாகத் திகழும், திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சென்றிருந்தேன். ஆதீன ஸ்தாபகர் நமச்சிவாய மூர்த்திகள் சந்நிதியை அடுத்து கருவூர்த் தேவர் சந்நிதி உள்ளது அதற்கு அருகில் உள்ள சுவரில் முந்தைய குரு மகாசந்நிதானங்களின் படங்கள் வண்ணங்களால் வரயப் பட்டிருந்தன். இந்தக் காலத்து ள், அன்றைய ஓவியர்கள் வரைந்து வைத்திருந்ததன் அடிப்படையில் தீட்டப்பட்டவையா என்று வினவினேன்.

திருவள்ளுவர் படம் எப்படி உருவாக்கப்பட்டதோ அப்படித்தான் இவையும் என்ற பதில் சிரித்துக்கொண்டே வந்தது.

மகா கவி பாரதியின் அசல் தோற்றம்வயது முதிந்து விடினும்-எந்தை
வாலிபக் களையொன்றும் மாறுவதில்லை;
துயரில்லை; மூப்பு மில்லை-என்றும்
சோர்வில்லை; நோயொன்றும் தொ டுவதில்ல;
பயமில்லை; பரிவொன்றில்லை-எவர்
பக்கமும்நின் றெதிர்ப்பக்கம் வாட்டுவதில்லை
நயமிகத் தெரிந்தவர் காண்-தனி
நடுநின்று விதிச் செயல் கண்டு மகிழ்வான்.
-மகா கவி சுப்பிரமணிய பாரதியார்

(கண்ணன் என் தந்தை ஒன்பதாவது பாடல்)

திருவள்ளுவர் படம் கற்பனையே.திருவாவடுதுறை ஆதின அன்பரின் நியாயத்தின் படி ஏற்றுக் கொள்ளலாம்.

பாரதி
படமும் கற்பனையே.
வீட்டில் நம் தாத்தா பாட்டி சுருங்கிய முகத்துடன் காணப்பட்டால் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையா செய்து கொள்கிறோம். பாரதி படத்தை மாற்றியயது முறையா?

தமிழ்க் கவிதைகளில் புகுந்து விளையாடும் விக்கிர மாதித்தன் தாடியோடுதான் நடமாடுகின்றார். அவரை நாம் ஏற்றுக் கொள்ளவில்லயா?

வலைப்பூ அன்பர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.2 comments:

 1. Innamburan Innamburan
  16 February 2012 12:01
  Reply-To: mintamil@googlegroups.com
  To: mintamil
  Reply | Reply to all | Forward | Print | Delete | Show original

  அருமையான, திட்டமிட்டு வழங்கிய பழைய, ஆனலும், முற்றும் புதிய தகவல், திரு.சீராசை சேதுபாலா. ஆனால், 'Posted 6 days ago by சீராசை சேதுபாலா' 4 மணி முன்னால் வருகிறது, திரு முத்து மோகன்? திரு. இரத்தின புகழேந்தியை பற்றிய விவரம் என்ன? வலைப்பூ அன்பர்கள் குழப்பத்தில்!
  இன்னம்பூரான்.

  ReplyDelete
 2. குழப்பமே வேண்டாம், பெரியவ்ரே! எல்லோரும் ஒருவரே. பொத்தாம் பொதுவில் என்று விமர்சித்த நீதிபதியின் கண்ணீர் புத்தக மாகின்றது. இரத்தின புகழேந்தி இன்னொரு வலைபதிவர். அவரது வலைப்பூவிற்குச் செல்ல வழி செய்துள்ளேன், எனது பதிவிலேயே. வேறு யாரும் குழம்பியதாகத் தெரியவில்லை. பழைய ஆனாலும் முற்றிலும் புதிய தகவல் என்ற வார்த்தை பிரயோகங்களே குழப்புகின்றன. பாராட்டியமைக்கு நன்றியும் வணக்கமும்.

  ReplyDelete

Kindly post a comment.