Tuesday, February 14, 2012

கோச்சடையனா? கோச்சடையானா? தினமணியே தடுமாறுகிறது!! கோச்சடையன் என்பதே சரி!











கோச்சடையன் என்பதே சரி என்று வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் எழுதி வந்தேன். தினமணி கருத்துக்களில் கூட எழுதியுள்ளேன்.ஒற்றெழுத்துக்கள்இல்லாத பககங்களின் பெயர்களை ஏற்றுக் கொண்டுவிட்ட தமிழ் மக்கள் பெயர் மாற்றத்தையும் அனுமதிப்பார்களா என்றும் கேட்டிருந்தேன்.

ராசிக்க்காக தயாரிப்பாளர் நடிகர்கள் இவ்வாறு வைக்கின்றனர் என்பது எல்லோரும் ஏற்றுக் கொண்ட செயலாகிவிட்டது.

அரசனின் கதையைப் ப்டமாக எடுப்பதாக இருந்தால் கோச்சடையன் என்றே பெயர் வைத்திடல் வேண்டும் என்றும் எழுதியிருந்தேன். இன்றைய தினமணியில் முதல் முறையாக கோச்சடையனிலிருந்து ஸ்நேகா வெளியேறினார் என்ற தலைப்புச் செய்தியைக் கண்டு மகிழ்ந்தேன்.

ஆனால், மீண்டும் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளில் கோச்சடையான் என்றே தினமணி குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணியில் உள்ளது உள்ளபடி:
சென்னை, பிப். 11: சூப்பர் ஸ்டார் ரஜினி நடக்கும் 3டி அனிமேஷன் படமான
கோச்சடையான் படத்தில் இருந்து சினேகா விலகிவிட்டார். இது குறித்து பல்வேறு
புரளிகள் வெளிவந்தாலும், தேதி வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினை மட்டுமே
காரணம் என்று சினேகா தரப்பு கூறுகிறது. கண்டிப்பாக கோச்சடையானுக்கு
தான் நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன்.

ஆனாலும், ஏற்கனவே வேறு படங்களுக்கு ஒதுக்கிய தேதிகளை
கோச்சடையானுக்கு கேட்டதால் மட்டுமே அதில் இருந்து விலகுகிறேன்
என்று சினேகா கூறியுள்ளார். இந்தப் படத்தில் இருந்து விலகுவது குறித்து
சௌந்தர்யாவிடம் கூறினேன். அவர் என் நிலைமையை புரிந்து கொண்டு
ஒப்புக் கொண்டார்.

மேலும், எனது பாத்திரத்தில் நடிக்க பொம்மலாட்டம் நாயகி ருக்மிணியைத்
தேர்வு செய்துள்ளனர் என்பதையும் சினேகா தெரிவித்துள்ளார்.
கோச்சடையான் படத்தில் ரஜினிகாந்திற்கு தங்கையாக நடிக்க சினேகா
ஒப்பந்தமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி-தினமணி

ஆர்க்காடு என்பதே சரி, ஆற்காடு என்பது தவறு என்பது எல்லோருக்கும் தெரிந்தாலும், தினமணியில்ல் கூட ஆர்க்காடு என்று சிலசமயங்களும், ஆற்க்காடு என்று பல சமயஙகளிலும் வருகின்றன. எது சரி?

பவழம் என்பதற்கு சைவ சித்தாந்தக் கழக அகராதியில் பவளம் என்று பொருள் தரப்பட்டுள்ளது. பள்ளிகளில் படிக்கும் பொழுது பவளம் என்றுதான் எழுத வேண்டும் என்று தமிழாசிரியர் சொல்லித் தந்திருக்கின்றார். ஆனால் தற்போது பவழம் என்றே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. எது சரி?

இன்றைய சினிமா பகுதியில் தலைப்பில் குறிப்பிடபட்டுள்ள கோச்சடையன் என்று குறிப்பிட்டு விட்டு, பின்னர் விரிவான் செய்திகளில் கோச்சடையான் என்று குழப்புவதன் காரணம் என்ன? எது சரி?

0 comments:

Post a Comment

Kindly post a comment.