Tuesday, August 30, 2016

பெங்கால் பெயர் மாற்றத்துக்கு சட்டப்பேரவை ஒப்புதல் !






கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் பெங்கால் என மாற்றும் தீர்மானத்துக்கு அம்மாநில சட்டப்பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவையில் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி நேற்று விதி எண் 169ன் கீழ் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். மேற்கு வங்கம் என்ற மாநிலத்தின் இப்போதைய பெயரை பெங்கால் என்று மாற்றும் அத்தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. இதில் கலந்து கொண்ட முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘பங்களா என்ற பெயர் கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியம் மிக்கது. ஆங்கிலத்தில் பெங்கால் என்று மாநிலம் அழைக்கப்படும்’ என்றார்.

இந்த பெயர் மாற்றத்தை காங்கிரஸ், பாஜ, மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் எதிர்த்தன. இதைத்தொடர்ந்து, மசோதா நிறைவேற்றப்பட்டது. மேற்குவங்க மாநிலம் ஆங்கில எழுத்து வரிசைப்படி, கடைசியாக வந்ததால், எல்லா கூட்டங்களிலும் கடைசியில்தான் பேச வேண்டிய நிலை அம்மாநிலத்துக்கு இருந்தது. இப்போது ‘பெங்கால்’ என்று மாற்றப்பட்டுள்ளதால், ‘பி’ என்ற எழுத்துடன் பெருமளவில் முன்னே வந்துவிடும். எனினும், வங்கமொழியில் மேற்குவங்கம், ‘பங்களா’ என்று அழைக்கப்படும்.

நன்றி :- தினகரன்

0 comments:

Post a Comment

Kindly post a comment.