Sunday, August 28, 2016

4 தலைமுறைகளில் வீட்டுக்கு ஒரு ஆசிரியரை உருவாக்கியபள்ளி !




விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் 1882-ம் ஆண்டு திண்ணைப் பள்ளியாக தொடங்கப் பட்டு, தற்போது நடுநிலைப் பள்ளியாகவும், மேல்நிலைப் பள்ளியாக வும் தனித்தனி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் படித்த பெரும்பாலானோர் ஆசிரியர் களாக உள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மானிடவியல் பேராசிரியராக பணி புரிந்து வரும் இக்கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் செல்ல பெருமாள் கூறுகையில், “தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் பள்ளிகளில் இப்பள்ளியும் ஒன்றாக இருக்க வாய்ப்புண்டு” என்கிறார்.

இதுதொடர்பாக இப்பள்ளியின் தற்போதைய தலைமை ஆசிரியர் அறிவழகன் கூறியதாவது: 1882-ம் ஆண்டு திண்ணைப் பள்ளியாக தொடங்கப்பட்டு, பின்னர் பஞ்சா யத்து போர்டு பள்ளியாகவும், அதன் பின்னர் தாலுகா போர்டு பள்ளியாகவும் தரம் உயர்த்தப் பட்டது இந்தப் பள்ளி. 1956-ம் ஆண்டு அப்போதைய தென்னாற் காடு மாவட்ட ஜில்லா போர்டு தலைவராகவும், எம்எல்ஏவாகவும் இருந்த சாமிக்கண்ணு படையாச்சி தலைமையில் இப்பள்ளியின் 75-ம் ஆண்டு விழா நடத்துள்ளது.

அப்போதே இப்பள்ளியில் படித்து வெளிவந்த பெரும்பாலா னோர் ஆசிரியர்களாக பணியாற்றி னார்கள். இன்னும் சொல்லப் போனால் கடந்த 4 தலைமுறை களில் இக்கிராமத்தில் வீட்டுக்கு ஒரு ஆசிரியர் என சுமார் 500 ஆசிரியர்களை இப்பள்ளி உரு வாக்கியுள்ளது.

இக்கிராமத்து மக்கள் வேலை தொடர்பாக சென்னைக்குச் சென்று அங்கேயே நிரந்தரமாக வாழத் தொடங்கினர். சென்னை சென்றவர்களில் சடகோபன் என்பவர் துணை மேயராக இருந்தி ருக்கிறார். கண்ணப்ப முதலியார், ஜெயலட்சுமி போன்றவர்கள் மாமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர் என்றார்.

இப்பள்ளியில் படித்து தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற 94 வயதான ராமகிருஷ்ணனை கேட்டபோது, “முதன்முதலில் 2 ஆசிரியர்களைக் கொண்டு திண்ணைப் பள்ளி துவக்கப்பட்டது. பின்னர் தாலுகா போர்டு பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

அந்த காலத்தில் 8-ம் வகுப்பு படித்தவுடன் விழுப்புரம், கடலூரில் ஆசிரியர் பயிற்சி முடித்து பணியில் சேருவார்கள். நான் பள்ளியில் படிக்கும்போதே என்னுடன் என் மூத்த சகோதரியும் படித்தார். 5-ம் வகுப்பு படித்த அவருக்கு ஆசிரியை பணி கிடைத்தது. ஆனால் அவரது குடும்பத்தார் பணிக்கு அனுப்பவில்லை. 1941 முதல் 1943-ல் ஆசிரியர் பயிற்சி முடித்தேன். மாநில அளவில் முதலிடம் பிடித்தேன். 1.6.1943-ல் ஆசிரியர் பணிக்குச் சேர்ந்தேன்.

1939 முதல் 15.8.1945 வரை இரண்டாம் உலகப் போர் நடந்தது. அப்போது இப்பள்ளியில் பணி யாற்றிய திருவேங்கடம், பழனிச் சாமி, சிவலிங்கம் ஆகிய 3 ஆசிரி யர்கள் பணியைத் துறந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க புறப் பட்டனர். அவர்களுக்கு விழா கொண்டாடி கிராமமே ஒன்றுகூடி வழியனுப்பி வைத்தது. இப்பள்ளி யில் படித்த சுசீலா என்ற பெண் மணியே இப்பள்ளியின் முதல் பெண் ஆசிரியை” என்றார்.



ஓய்வுபெற்ற 80 வயதான ஆசிரியை சுசீலாவிடம் பேசிய போது, “என்னுடன் சில பெண்களே படித்தனர். ஆனால் வேலைக்கு யாரையும் அனுப்பவில்லை. வேலைக்குச் சென்ற சொற்பமான பெண்களில் நானும் ஒருத்தி. தற்போது பெண்களுக்கு விழிப் புணர்வு உள்ளது போல அப்போது இல்லை.

அங்கு படித்த ஒவ்வொருவரும் இது என் பள்ளி என பெருமிதம் கொண்டோம். ஆனால் இன்று ஆங்கிலப்பள்ளி, சிபிஎஸ்சி என தனியார் பள்ளிகளைப் பெற்றோர் நாடுகின்றனர். எங்களுக்கு வாழ்க்கை கொடுத்த பள்ளியில் எங்கள் சந்ததியினர் படிக்காமல் புறக்கணிப்பதைக் காணும்போது துக்கம் தாங்க முடியவில்லை” என்றார்.

நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.