Sunday, August 28, 2016

இசை, கவின்கலை, சிற்பக் கல்லூரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்த்தப்படும் !

Image result for இயல் இசை நாடக மன்றம்

அரசு இசைக்கல்லூரி, கவின் கலைக் கல்லூரிகள், மாமல்லபுரம் சிற்பக் கல்லூரியில் ஒப்பந்த ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும் என அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் கீழ் அவர் அறிவித்த தாவது:

500 கலைஞர்களுக்கு..

நலிந்த நிலையில் வாழும் சிறந்த வயோதிகக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், இந்த நிதியாண்டில் கூடுதலாக 500 நலிந்த கலைஞர்களுக்கு இயல் இசை நாடகமன்றம் மூலம் நிதியுதவி வழங்கப்படும். இதற்காக ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் சமுத்திரம் கிராமத்தில், 0.20.5 ஹெக்டேர் நிலத்தில் அரசு இசைப்பள்ளிக்கு ரூ.85 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டப்படும்.

தமிழகத்தில் உள்ள 4 அரசு இசைக்கல்லூரிகள், 2 கவின் கலைக் கல்லூரிகள் மற்றும் மாமல்லபுரம் அரசினர் கட்டிட மற்றும் சிற்பக் கலைக்கல்லூரி ஆகிய 7 கல்லூரிகளில் 43 ஒப்பந்த ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களது தொகுப்பூதியம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும்.

சென்னை, மதுரை மற்றும் கோவையில் உள்ள மாலை நேர அரசு இசைக்கல்லூரிகளில் பணியாற்றும் பகுதி நேர முதன்மை விரிவுரையாளர்கள், தலைமை பயிற்றாசிரியர், முதன்மை பயிற்றாசிரியர் களுக்கு வழங்கப்படும் தொகுப் பூதியம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தப்படும். பகுதி நேர விரிவுரையாளர்கள், பயிற்றாசிரி யர்களுக்கு தொகுப் பூதியம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாகவும், அலுவலக உதவியாளர்கள், காவலர்களுக்கு ரூ.750 லிருந்து ரூ.2 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

‘வானவில்’ எனும் இயல், இசை, நாடக, நாட்டியம் மற்றும் கிராமியக்கலை அடங்கிய கலை மற்றும் இசைவிழா ரூ.15 லட்சம் செலவிலும், உலக நாடக தினத்தை முன்னிட்டு நாடக கலைவிழாக்கள் ரூ.15 லட்சம் செலவிலும் நடத்தப்படும்.

பயிற்சிப் பொருட்கள்

நான்கு அரசு இசைக்கல் லூரிகள், 17 மாவட்ட அரசு இசைப்பள்ளிகளுக்கு ரூ.18.50 லட்சத்தில் புதிய இசைக்கருவிகள் வாங்குதல், பழுதடைந்த இசைக் கருவிகள் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். ஜவகர் சிறுவர் மன்ற கலைப் பயிற்சிகளுக்கு ரூ.10 லட்சம் செலவில் பயிற்சிப் பொருட்கள் வாங்கப்படும்.

இவ்வாறு அவர் அறிவித் துள்ளார்.

நன்றி : தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.