Thursday, November 5, 2015

முதற் திரைப்படத்திலேயே எழுதி இயக்கி உலகப் புகழ்பெற்ற வலைப்பதிவர் தமிழ்மண்ணின் மைந்தன் பிரம்மா !

[noname4.jpg]

பிரம்மா  2009  இலிருந்து  வலைப்பதிவராகத்  திகழ்கின்றார்.  தமது  பதிவுக்கு “நண்டு பிடிச்சான் “  என்று  தலைப்பிட்டுள்ளார்.  உடும்புப்பிடி  என்பது  சகஜமான  வார்த்தை.  நண்டுப்பிடி  என்பதும் அப்படி  இருக்கக்கூடும். ஆனால்  ஒரு  நண்டு  குடியிருந்த  வீட்டில்  மற்றொரு  நண்டு  குடியிருக்க  இயலாது. விடவும் விடாது. தனகென்று ஒருகொள்கை. விடாப்பிடியான  கொள்கை. எப்படியும்  இயக்குநராக வெற்றிபெற்றே தீரவேண்டும். என்ற  விடாப்பிடியான  கொள்கை.



பிரம்மாவின்  கண்களைப்  பார்க்கும்போது ஒரு வசீகரம். எண்ணற்ற விளம்பரப் படங்கள், குறும்படங்கள். பயணித்த அனுபவம் தந்த வாய்ப்பு ”குற்றங்கடிதல்”  திரைப்பட  வாய்ப்பு. படத்தின்  தலைப்பே  திருக்குறளின் ஒரு அதிகாரத்தைக் கொண்டிலங்குகின்றது. ஓர்  ஆசிரியை  மாணாக்கனைக்  கன்னத்தில்  அடிக்க  அவன்  மயங்கிக்  கீழே விழுகின்றான்.
இதையே கருவாகக்  கொண்டு திரைக்கதை  தொடர்கின்றது. இயல்பாகவே  அந்த மாணாக்கனுக்கு  மூளையில் பிரச்சினை  உள்ள  உண்மையை  வெளிப்படுத்துகின்றார்.  இறுதியில் . படத்தின் கதையில்  தொய்வு என்பதே இல்லை. ஜெட் வேகம்தான். எழுத்தும் இயக்கமும் இயக்குநர் பிரம்மாதான்.



பிரம்மாவை  புதுக்கோட்டை  வலைப்பதிவர்  5 ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்கவைக்க முயற்சி  காலமின்மையால்  வெற்றிபெற இயலவில்லை.
ஒரே படத்தை  இயக்கி உலகப்புகழ் பெற்றுள்ளார், பிரம்மா.  உலகமே  புகழ்ந்தபிறகு  இந்தியாவில் தேசீய விருது பெறுவது ஒன்றும் பெரிதல்லவே?

பாரதிராஜா  ஒரு மேடையில்  என்னையே மிஞ்சிவிட்டான்  பிரம்மா  என்றும்  பாராட்டிவிட்டார்.  வேறென்ன  வேண்டும் ?

வலைப்பதிவர்களின்  பாராட்டுமழை  பொழியட்டும்.

bramma23@gmail.com

0 comments:

Post a Comment

Kindly post a comment.