Wednesday, October 28, 2015

'லஞ்சம் வாங்க மாட்டோம்': உறுதிமொழி எடுத்த ஒரு மணி நேரத்தில் அதிகாரி கைது [






கடலூரில், 'லஞ்சம் வாங்க மாட்டோம்' என்று உறுதிமொழி எடுத்த ஒரு மணி நேரத்தில் கடலூர் மாவட்ட சப்-கலெக்டர் லஞ்சம் வாங்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.



கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா (31) என்ற விவசாயி 35 சென்ட் நிலம் வாங்கி அதனை பத்திரப்பதிவு செய்வதற்காக குள்ளஞ்சாவடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு, பத்திரப்பதிவிற்கான முத்திரைதாள் கட்டணத்தை கடலூரில் உள்ள தனித் துணை ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுமாறு தெரிவித்துள்ளனர்.

எனவே, அவர் கடலூர் மாவட்ட ஆட்சியரகம் சென்றுள்ளார். அங்கு தனித் துணை ஆட்சியர் தாஸ் (52) என்பவரை சந்தித்துள்ளார்.

அப்போது, முத்திரைதாள் கட்டணத்தை குறைத்து கட்ட ஏற்பாடு செய்கிறேன். அதற்கு லஞ்சமாக ரூ.11,500 தர வேண்டும் என அவரிடம் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி உதயசங்கரிடம் புகார் அளித்துள்ளார்.

பின்னர் உதயசங்கரின் ஆலோசனைபடி, ரூ.11,500க்கான நோட்டுகளை விவசாயி தனித் துணை ஆட்சியரிடம் கொடுத்துள்ளார்.

ஆனால், அவர் பணத்தை தன் ஓட்டுனர் பிரபாகரனிடம் கொடுக்குமாறு கூறியதால், ராஜா ஓட்டுனரிடம் ரூ.11,500க்கான பணத்தை வழங்கியுள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தனித் துணை ஆட்சியரையும், ஓட்டுனரையும் கைது செய்துள்ளனர்.

லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் நேற்று முன்தினம் தொடங்கியதை முன்னிட்டு கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்க மாட்டோம் என உறுதிமொழி ஏற்றனர்.

இதில் கலந்து கொண்ட தனித் துணை ஆட்சியர் உறுதி மொழி ஏற்றுக் கொண்ட ஒரு மணி நேரத்தில் லஞ்சம் வாங்கியதாக கைதாகியுள்ளார்.

தற்போது 2 பேரும் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


0 comments:

Post a Comment

Kindly post a comment.