Thursday, October 29, 2015

தமிழகத்தில் 49% வீடுகளில் கழிப்பறை இல்லை: தணிக்கை துறை அறிக்கையில் தகவல்

கோப்புப் படம்

தமிழகத்தில் 49 சதவீத வீடுகளில் கழிப்பறைகள் இல்லை என்று இந்திய கணக்கு தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில், கூறியுள்ளதாவது:

2014-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி மாநிலத்தில் இருந்த 95.4 லட்சம் வீடுகளில் 46.29 லட்சம் வீடுகளில் கழிப்பறைகள் இல்லை. அதாவது 49 சதவீத தனி வீடுகளில் கழிப்பறைகள் இல்லை. 2009 முதல் 2014 வரை மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் 30,122 கழிப்பறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 12 ஆயிரத்து 811 கழிப்பறைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன.

அரசு முதலீடு

பொதுத்துறை நிறுவனங்களின் கணக்குகளில் அரசின் மூலதனம் மற்றும் நிலுவைத் தொகை ஆகியவற்றின் விவரம் நிதித்துறை கணக்கோடு ஒப்பிடும்போது ஒன்றாக இருக்க வேண்டும். கடந்த 2014 மார்ச் மாத நிலவரப்படி, பொதுத்துறையில் தமிழக அரசின் பங்கு மூலதனம் ரூ.14,336.94 கோடி என்று நிதித்துறை கணக்குகள் தெரிவிக்கின்றன. ஆனால், பொதுத்துறை நிறுவனங்களின் கணக்குகளில் அது ரூ.14,435 கோடி என உள்ளது. இதன் வித்தியாசத் தொகை ரூ.98 கோடியாகும்.
மேலும் உத்தரவாத தொகையின்படி பார்த்தால் ரூ.9,177.96 கோடி வித்தியாசம் உள்ளது. இந்த வகையில் 7 பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு மூலதனமும், 9 நிறுவனங்களின் உத்தரவாதத் தொகையிலும் வித்தியாசங்கள் உள்ளன. இதை சரி செய்யும் வகையில் இசைவு ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நன்றி ;- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.